ஒரு சபையின் வளர்ச்சிக்கு சில காரணங்கள்
"என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்கு சுதந்திரமாகவும், பு+மியின் எல்லைகளை உமக்கு சொந்தமாகவும் கொடுப்பேன்" (சங்கீதம்: 2:8)
உயிருள்ள யாவும் வளரும். ஆகவே, வளர்ச்சிக்கு வேண்டியவைகளை சபைக்குள் கொண்டு வருவது சபை வளர்ச்சியல்ல. அதற்கு மாறாக, வளர்ச்சிக்குரிய தடைகளை நீக்குவதாகும்.
தடைகள் ஊழியத்தை தடுக்காதபோது, சபை தானாக வளரும். கிறிஸ்து சபையில் இருந்தால் வளர்ச்சியின் விதைகள் ஏற்கனவே உண்டு.
1. அதிக ஊக்கமான ஜெபம். ஒழுங்குபடுத்தப்பட்ட வேத தியானம்
2. உறுதியான சுவிசேஷ ஊழியங்கள்
3. சபையின் போதனைகள் வெறும் பாரம்பரியமும் தத்துவமும் அல்ல. வசனத்தின்படி செய்ய வைப்பது
4. உறுதியான விசுவாச வாழ்வு
5. சபையை கட்டுகிற கிளை ஊழியங்களை ஸ்தாபிக்கிற தரிசனமுள்ள செல் குழுக்கள்
6. சபைப் பெருக்கத்திற்கான தலைமைத்துவப் பயிற்சி
7. விசுவாசிகளை வரங்களுக்கேற்ப ஊழியத்தில் பயன்படுத்துதல்
8. உறுதியான தரிசனங்களுடன் கூடிய நிலையான செயல்மறைகள்
9. திடமான கொண்டாட்ட நிகழ்ச்சிகள்
சபை: சீஷர்களை ஏற்படுத்தும்
இயேசு கிறிஸ்து: தம் சபையை கட்டுகிறார்
பரிசுத்தாவி: உணர்த்துகிறார்
தேவன்: தம்முடைய ராஜ்யத்தை வளர்க்கிறார்
ஒரு சபையின் வீழ்ச்சிக்கு காரணங்கள்... சில....
1. சபை தன் தரிசனத்தை, நோக்கத்தை, இலக்கை விட்டு விடுதல் அல்லது தவற விடுதல் அல்லது வேலை நிறுத்தம் செய்தல்
2. ஜெபக்குறைவு: ஜெபிக்கிறவர்கள் இல்லாமை அல்லது உருவாகாமை. ஜெபம் பற்றிய போதனையின்மை
3. சபை வாழ்க்கையில் அதாவது தேவ பிள்ளைகளோடு உள்ள ஐக்கியத்தில் குறைவுபடுதல்
4. பரிசுத்தத்தில் கவனமின்மை அல்லது கண்டிப்பின்மை
5. சுவிசேஷம் அறிவியாமை: மக்கள் இருக்குமிடத்திற்கு சென்று அறிவியாமை, அனுப்பாமை
6. சீஷத்துவப் பயிற்சி இல்லாமை - அர்ப்பணிப்பில்லாமை
7. ஊழிய அர்ப்பணிப்பிற்கு நடத்தாமை
8. மக்களின் திறமைகளை உபயோகப்படுத்த அறியாத தலைமை
9. ஊழியருக்கும் விசுவாசிக்குமிடையே உள்ள பிளவு
தோல்வியை இருவிதமாக பிரிக்கலாம்: 1. செய்ய நினைத்து செயல்படாமல் போவது 2. ஒரு போதும் நினையாமல் செயல்படுதல் - நான்ஸ்
"நீங்கள் திட்டமிட்டு செயல்படாவிட்டால், நீங்கள் செய்தவை தோல்வியே"