மத்தேயு: 13:3 முதல் 9 வரை விதைவிதைக்கிறவன் உவமையை நமது ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்து கூறுவதை வாசிக்கிறோம்.
வசனம் : 4 - வழியருகே விழுந்த விதை
வசனம்: 5 - கற்பாறை இடங்களில் விழுந்த விதை
வசனம்: 7 - முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதை
வசனம்: 8 - நல்ல நிலத்தில் விழுந்த விதை
விதைக்கிறவன் விதைத்த விதையில் பழுதில்லை. விழுந்த இடம்தான் விதையின் தன்மையையே மாறச் செய்து விடுகிறது.
1. வழியருகே: இதன் தன்மை: "தெரியாதது"
1. வழியருகே: இதன் தன்மை: "தெரியாதது"
- தரிசனம் இல்லாத பகுதி. எவ்வித எண்ணங்களும் இல்லாத இடம்.
- அக்கறையின்மை - அழிவுக்கு இட்டுச் செல்லும்
- மிதிபடக் கூடியது
2. கற்பாறை: இதன் தன்மை: "மறைந்தது"
- நமக்கு எல்லாம் தெரியும்
- எனக்கு எல்லாம் தெரியும்
- ஒத்து வந்தால் செய்வேன்; இல்லையென்றால்... போட்டுட்டு போயிட்டே இருப்பேன்
3. முள்: இதன் தன்மை: "மூடிய பகுதி"
- பலமும் பலவீனமும் தெரியாது
- நடக்குமா? நடக்காதா? என தெரியாது
- வருகிற பதிலனைத்தும் 'முடியாது...முடியாது...' - முடக்க நிலை
- எனவே, மீதம் இருப்பது தாழ்வு மனப்பான்மை
4. நல்ல நிலம்: இதன் தன்மை: "திறந்த பகுதி"
- பலம் என்ன? பலவீனம் என்ன?
- சவால் என்ன? வாய்ப்புகள் என்ன?
- கருத்து கேட்பது - விருப்பம் அறிதல்
- இவையிருந்தால் 100 மடங்கு பலன் தருவோம்
நமக்குள் நாம் பார்ப்பது: (+ , - பாய்ண்ட்)
- கனவு - கற்பனை - முட்டை போன்றது. நமது கனவுகளை அடைகாத்தால் ஏற்ற காலத்தில் பலனடைவோம்.
- தரிசனம் - தொலை நோக்குப் பார்வை தேவை. கோழியைப்போல. 21 நாட்கள் பொறுமையோடு அடைகாத்தால்... பெற்றுக் கொள்ளலாம்.
- ஆதியாகமம்: 12:1-3 - காண்பிக்கும் தேசத்திற்கு சென்றால்... ஆசீர்வாதம். எபிரேயர்: 11:8 - "...கீழ்படிந்து, தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்".
- ஆதியாகமம்: 37:5-11 - யோசேப்பு கண்ட சொப்பனம் நிறைவேற சுமார் 16 ஆண்டுகாலம் பொறுமையோடு காத்திருந்தான். (ஆதி:42:6; 47:1-12)
- ஆபகூக்: 2:3 - "குறித்தக் காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை".
நம்மிடம் பார்ப்பது: (+, - பாயிண்ட்)
- அளவிட வேண்டும்
- சரியான திட்டம்
- சரியான இலக்கு
- நாம் என்ன செய்யப் போகிறோம்?
- எப்படி நாம் அதை செய்யப் போகிறோம்?
- எப்படி நாம் அதை செய்ய பழகப் போகிறோம்?
- எப்பொழுது நாம் அதை செய்யப் போகிறோம்? (காலசூழ்நிலை)
- யாருடன் நாம் இணைந்து இதை செய்யப் போகிறோம்?
நமது திறன்: (அதிகரிக்கப்பட வேண்டியவை)
- மனதை படிக்க வேண்டும்
- உற்சாகப்படுத்த வேண்டும்
- விட்டுக் கொடுக்க வேண்டும்
- முரண்பாடுகளைப் பார்த்து அதை களைய வேண்டும்
இவைகளிருப்பின் 100 மடங்கு பலன் தரவும் பெறவும் முடியும்.