நவம்பர் 16, 2016

லேவியர் - LEVITES

Image result for levi - in the bible

லேவியர்

Levites

1.   இவர்கள் ஆசாரியருக்குக் கீழானவர்கள். ஆராதனை வழிபாட்டு அமைப்பிலுள்ள தாழ்வான பணிகளைச் செய்தனர்:


எண்ணாகமம்: 1:50,51 – “லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும்ஈ அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக் அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளையமிறங்கக்கடவர்கள். வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கி வைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்…”.

எண்ணாகமம்: 3:28, 32 – “… பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளை காக்கிறவர்கள் …” மற்றும் “… லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய் பரிசுத்த ஸ்தலத்தை காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்க வேண்டும்”.
எண்ணாகமம்: 8:15 – “… லேவியர் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்ய பிரவேசிக்கக்கடவர்கள்”.

2.   ஆசாரியனுக்கு துணையாக நின்று மக்களுக்குச் சேவை செய்தனர்:


எண்ணாகமம்: 1:50 – “லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளையமிறங்கக்கடவர்கள்”.

எண்ணாகமம்: 3:6,8 – “நீ லேவி கோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து. அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள்”

எண்ணாகமம்: 16:19 – “அவர்களுக்குக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; …” – எப்படி இது சாத்தியமானது? லேவியர்களுடைய வேலைகளில் ஜனத்தை கூட்டிச்சேர்ப்பதுவும் ஒன்று. அதில் கோராகும் ஒருவன் என்பதினால்… மக்கள் அவன் குரல் கேட்டு கூடி வந்தார்களே ஒழிய … விஷயம் தெரிந்து கூடி வரவில்லை.

எண்ணாகமம்: 18:2 – “உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்”.

1நாளாகமம்: 23:27,28 – “… லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிரகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்,”. (வாசித்துப் பார்க்கவும்: 1நாளாகமம்: 23:29-32).

எஸ்றா: 3:8,9 – “லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்”.

3.   ஆலயப் பணிமுட்டுகளைப் பாதுகாத்தனர்:


1நாளாகமம்: 23:27-32 – வாசித்தறியலாம்.

4.   சிலர், சுமை தூக்குவோராக, காவல் காப்போராக, நிதி காப்பாளராக இருந்தனர்:


1நாளாகமம்: 9:19 – “… கர்த்தருடைய பாளையத்திலே வாசஸ்தலத்திற்குப் போகிற வழியைக் காவல் காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்து வந்தார்கள்”.

1நாளாகமம்: 26:1,19 – “வாசல் காக்கிறவர்களின் வகுப்புகளாவன: … “

1நாளாகமம்: 26:20 – “மற்ற லேவியரான அகியா என்பன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்”.

2நாளாகமம்: 8:14 – “… லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்துச் சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைமைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல் காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்”.

எஸ்றா: 3:10 – “… இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்”.

நெகேமியா: 12:27 – “எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டை பண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்”.

5.   சில இடங்களில் பாடகர், சுமை தூக்குவோர் – லேவியரிலிருந்து வேறுபட்டவர் என குறிப்பிடப்படுகிறது:


எஸ்றா: 2:40-42; 10:23,24; நெகேமியா: 7:43-45; 7:7; நெகேமியா: 12:47 – ஆகியவற்றை வாசித்தறிந்து கொள்ளலாம்.

நெகேமியா: 12:47 – “ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டை பண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டை பண்ணிக் கொடுத்தார்கள்”.

6.   லேவியருக்கு போதிக்கும் பொறுப்பும் உண்டு:


நெகேமியா: 8:7,9 – “யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும் நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்”. “ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: …”

2நாளாகமம்: 17:7-9 –“அவன் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்பண்ணும்படிக்கு, அவன்தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும், நெதனெயேலையும், மிகாயாவையும், இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபேத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடே கூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான். இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்”.

7.   நியாயவிசாரணையில் ஆசாரியனுக்குத் துணை நின்றார்கள்:


1நாளாகமம்: 23:3,4 – “… முப்பது வயது முதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டு… கர்த்தருடைய அலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், … தலைவரும் மணியக்காரருமாயிருக்க வேண்டும்”.
1நாளாகமம்: 26:29 – “இத்சாகாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசரிப்புக்காரரும் மணியக்காரருமாயிருந்தார்கள்”.

2நாளாகமம்: 19:8-11 – “அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாதவிஷயங்களைக் குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து, … நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள். இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும், உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்”.

ஆக … தேவாலயத்தில் வேலை பார்த்தவர்களின் எண்ணிக்கை: 


(எஸ்றா: 2 ஆம் அதிகாரம்; நெகேமியா: 7 அதிகாரம்)

ஆசாரியர் – 4289 பேர்
லேவியர் – 74    பேர்
பாடகர்   - 128   பேர்
வாசல் காவலர் – 139 பேர்
தேவாலயத்து வேலையாட்கள் நிதனீமியர் மற்றும் சாலமோனுடைய வேலையாட்களின் புத்திரர் (சந்ததி) 392 பேர். (எஸ்றா: 2:58)

ஆசாரிய பாரம்பரியத்தின் மூன்று பிரிவுகள்


ஆசாரிய பாரம்பரியம் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது என வரலாற்று வேதாகம அறிஞர்கள் கருதுகின்றனர்.

முதல் பிரிவு:  பழைய ஏற்பாட்டு ஆசாரிய அமைப்பு கர்த்தரால் மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒன்று.

 யாத்திராகமம்: 28:1 – “உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, … உன்னிடத்தில் சேர்த்துக் கொள்வாயாக”.

 மோசேயே முதலாவது ஆசாரியன் – யாத்திராகமம்: 29:35 – “இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக…” (லேவியராகமம்: 8:13-15).

மோசே, ஆரோனின் குடும்பத்தைப் பிரத்தியேகப்படுத்துகிறான். லேவியர் ஆரோனுக்கு உதவியாளர்களாக ஏற்படுத்தப்பட்டனர். 

எண்ணாகமம்: 8:6,19,22 – “நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக”. “லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லெவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்”. “அதற்குப் பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக் குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்”. (வாசித்துப் பாருங்கள்: எண்ணாகமம்: 18:2-6).

இரண்டாவது பிரிவு: இஸ்ரவேலரின் ஆசாரிய அமைப்பானது – பரிணாம முறையில் படிப்படியாக வந்தது என ஒருசில வேதஅறிஞர்கள் கூறுகின்றனர். ஆதிகாலத்தில் குடும்பத்தலைவர்களும், கோத்திரப்பிதாக்களும், பிரதானிகளும் பலிகளைச் செலுத்தி வந்தனர். அடுத்ததாக, பலி செலுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் (லேவியர்) தெரிந்து கொள்ளப்பட்டனர். அதற்குப்பின், லேவியருக்குள்ளேயே ஒரு குடும்பத்தார் (ஆரோன்) முக்கியத்துவப்படுத்தப்பட்டனர்.

முடிவில், ஆரோன் குடும்பத்திற்குள்ளேயே ஒரு பிரிவு (சாதோக்) விசேஷமாகக் கொள்ளப்பட்டது.

மூன்றாவது பிரிவு: சிறையிருப்பிற்குப் பிந்தின காலத்திலேயே பிரதான ஆசாரியன், ஆசாரியன், லேவியன் என்னும் தனித்தனி பாகுபாடு ஏற்பட்டது என்பாரும் உண்டு. இதை நாம் ஏற்க இயலாது. அனைவராலும் முதல் மற்றும் இரண்டாம் பிரிவே நியாயமானது அல்லது சரியானது என இதுவரை ஆராய்ந்த முடிவுகளின் உண்மைகளை முன்வைத்துக் காணும்போது, அடிப்படையில் அனைவராலும் ஏற்கத்தக்கதாய் இருக்கிறது.