நவம்பர் 08, 2016

ஒரு போதகரின் சாட்சி

Image result for pastor appreciation

ஒரு போதகர் தன் சாட்சியை இவ்விதமாக எழுதினார்.

பிறப்பு: சங்கீதம்: 51:5 – “இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”.

வளர்ப்பு: எபேசியர்: 2:12 – “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்”

நடப்பு: எபேசியர்: 2:2 – “அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப்பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள்”.

வாழ்க்கை: எபேசியர்: 2:2 – “அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்”. ஆனால், கிருபையினாலே …

நடத்தப்படுதல்: எபேசியர்: 2:1 – “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்”.

சரியில்லாத சொத்து (இருந்தபடியால் …): ரோமர்: 3:20 – “இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை”. – இளைப்பாறுதலுக்கு அழைக்கப்பட்டேன் …

அழைப்பு: மத்தேயு: 11:28 – “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” – இங்கேயிருந்து …

தேவனுடைய ராஜ்யம்:  கொலோசெயர்: 1:13 – “இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம்”. – இதன் வழியாக …

தேவாலயம்:  சங்கீதம்: 84:10 – “ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரேநாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்”. - இங்கே வந்து சேர்ந்தேன்.

மகாபிரதான ஆசாரியர்:  எபிரெயர்: 4:14 – “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்” பரலோகத்தில் இருக்கிறவர் …

வீடு: யோவான்: 14:2 – “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்”. – எனக்காக ஒரு வீடு கட்டுவதாக கண்டு பிடித்தேன். அந்த வீட்டை …

நித்திய வீடு: 2கொரிந்தியர்: 5:1 – “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு  அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்”. என்று இங்கு கண்டு பிடித்தேன். அந்த வீட்டிற்கு …

வாசல்:  யோவான்: 10:9 – “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” – ஒரே வாசல் தான் உண்டு … அதன் முகவரி …

இப்பொழுதுள்ள எனது முகவரி:  எபேசியர்: 2:6,7 – “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்”. என்னை பார்க்க விரும்பினால் …

காத்திருக்கும் இடம்:  நீதிமொழிகள்: 8:34 – “என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்”. – இந்த எண்ணில் என்னை கூப்பிடுங்கள். அங்கே வரும்போது …

ஆயத்தம்: லூக்கா: 14:17 – “விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்”. – ஊழியக்காரர் கூறுவதை கவனித்துக் கொள்ளுங்கள்.

தங்குமிடம்:  1தெசலோனிக்கேயர்: 4:16,17 – “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்”. – இந்த வசனம் நிறைவேறும்போது … எனது தங்குமிடம்

அரசாளுவேன்:  வெளிப்படுத்தல்: 22:3-5 – “இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமூகத்தை தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்”. – மாற்றலாகும். – அன்றைக்கு மனமகிழ்ச்சியுடன் …

புதுப்பாடல்:  வெளிப்படுத்தல்: 14:3 – “அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக் கொள்ளக்கூடாதிருந்தது”. – இந்தப் பாடலைப் பாடுவேன். ஆமென்.

தேவபிள்ளையே, உன்னுடைய வாழ்க்கையை வேத வசனங்களின் அடிப்படையில் நடத்துகிறாயா? உன் சாட்சியின் ஜீவியம் வேதத்தோடு இணைந்து இருக்கிறதா?

நாம் வேதத்தை வாசிப்பது மாத்திரமல்ல, அப்பியாசப்படுத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும். வேதவசனங்களை உங்களுடைய வாழ்க்கைக்கு சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். வேத புத்தகம் ஒரு ஏட்டுச் சுரக்காய் அல்ல. அது ஆவியும் ஜீவனுமானது. அது நித்தியமான ஆசீர்வாதங்களை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வருகிறது.



  Thanks: Selceted