ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள்
Keep walking by spirit
திறவுகோல் வசனம்: கலாத்தியர்:
5:16,17 – “பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள்
செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு,
இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது”
மாம்சம் × ஆவி
; ஆவி × மாம்சம்
நாம் ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்; வாழ வேண்டும் என்பது
கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது. அப்படி நாம் ஆவிக்கேற்றபடி வாழ வேண்டுமானால் மாம்ச
இச்சையை நிறைவேற்றக் கூடாது. மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்தவர்களாய்
காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், நாம் கர்த்தருக்காவோ, நமக்காவோ … செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச்
செய்யாதபடிக்கு மாம்சமும் ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாக செயல்பட்டு – நமது செயல்பாட்டை
தடுத்து விடும்.
எனவே, நாம் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளவும், நாம் கர்த்தருக்காக
செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளை முழுமையாக செய்திடவும் வேண்டுமானால் கீழ்க்கண்ட சில
காரியங்களை நம் வாழ்வில் செய்யாதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க பிரயாசமெடுக்க வேண்டும்.
வேதத்தில் பல இடங்களில் பல காரியங்களை நாம் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக
இருக்க வேண்டும் என புத்தி சொல்கிறது. அதில் சில முக்கியமானவைகளை மட்டும் இப்பகுதியில்
தியானித்து ஆவிக்கேற்றபடி நடக்க அர்ப்பணிப்போமாக.
செய்யத்தகாதவைகளை செய்யாதபடிக்கு ...
1. பிறருடைய இரத்தப்பழிகளுக்கு ஆளாகும்படி செய்யாதபடிக்கு
…
1நாளாகமம்: 11:19 – “நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள்
பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டு வந்த இந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிப்பேனோ என்று
சொல்லி அதைக் குடிக்க மாட்டேன் என்றான்”
2. அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு விரோதமன காரியங்களை
செய்யாதபடிக்கு …
1சாமுவேல்: 24:6 – “அவன் தன் மனுஷரைப் பார்த்து:
கர்த்தர் அபிஷேகம் பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு,
கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை பண்ணினான்”.
3.
தீமைக்கு தீமை
செய்யாதபடி … (ரோமர்: 12:17,21)
1சாமுவேல்: 25:39 – “நாபால் செத்துப்போனான் என்று
தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய
அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத்
தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்…”
4. ஆராதனைக்கு விரோதமாக கிரியை செய்யாதபடி …
எரேமியா: 17:22 – “ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டு போகாதபடிக்கும்,
ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து,
நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று
கர்த்தர் சொல்லுகிறார்”.
5. நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு ….
எசேக்கியேல்: 3:21 – “நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்த பின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால்,
அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய்
என்றார்”.
6. தகப்பன் செய்த பாவங்களின்படி செய்யாதபடி …
எசேக்கியேல்: 18:14-17 – “பின்னும், இதோ, அவனுக்கு
ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த
எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து…”.
7. மனுஷர் காண வேண்டுமென்று உங்கள் தர்மத்தை செய்யாதபடி
…
மத்தேயு: 6:1 – “மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற
உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை”.
8. நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு
…
ரோமர்: 6:6 – “நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு,
பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று
அறிந்திருக்கிறோம்”
9. கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு
…
2தீமோத்தேயு: 2:14 – “இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும்
பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான
வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு”.
10. மனுஷர், தூதரின் கால்களில் விழ செய்யாததபடிக்கு
….
வெளிப்படுத்தல்: 19:10 – “அப்பொழுது அவனை வணங்கும்படி
அவனுடைய பாதத்தில் விழுந்தேன், அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக் குறித்துச் சாட்சியிட்ட
உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்…”