செப்டம்பர் 27, 2014

ஏனிந்த தனிமையின் அனுபவம்?


ஒரு கருவி பயன்பட வேண்டுமானால் அதற்கு முன்பு அது ஒரு பொருளாக கருவியாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். அதுபோல நாமும் தேவனால் பயன்படுத்தப்பட வேண்டுமானால் கர்த்தரால் உருவாக்கப்பட வேண்டியது மிக அவசியம். ஆமென்! அல்லேலூயா!

ஏசாயா: 43:1 - "இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது:..."  - தேவன் யாக்கோபை சிருஷ்டித்தார். ஆனால், அவன் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற தகுதியற்றவனாகக் காணப்பட்டான். எனவே, தேவன் அவனை உருவாக்க விரும்பினார்.  

புமிக்கடியில் கிடைக்கும் கனிம வளங்கள் அனைத்தும் நாம் விரும்பும் வகையில் உடனடியாக நமக்குக் கிடைப்பதில்லை. தங்கம், வைரம், ரத்தினம் ஆகிய எதுவானாலும் அதன் சுத்திகரிப்புக்குப் பின்னர் தான் பட்டை தீட்டிய பின்பு பயன்பாட்டிற்கு வருகிறது. 

அதுபோல, தேவனால் பயன்படுத்தப்படப்போகிற எவராயிருந்தாலும், தேவனால் உருவாக்கப்பட்டப் பின்பே கர்த்தருடைய வேலைக்கும், அவரின் ஆசீர்வாதங்களுக்கும் தகுதி பெறுகின்றனர்.

கர்த்தர் தம்முடையவர்களை  மூன்றுவிதங்களில் புடமிட்டு உருவாக்க விரும்புகிறார்.   எப்படி என்பதைப் பற்றி இப்பகுதியில் தியானிப்போம்.

1. தனிமையின் அனுபவம்:

கர்த்தரால் உருவாக்கப்பட முதலில் தேவன் நம்மை தனிமையின் அனுபவத்திற்கு கொண்டு செல்கிறார். தனிமையின் அனுபவம் மிக அவசியமானது.இவ்வித தனிமையில்தான் தேவநடத்துதலை நாம் தெளிவாக பெற இயலும்.


ஆதியாகமம்: 28:10,11 - யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு  ஆரானுக்குப் போகப் பிரயாணம் பண்ணி, ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக் கொண்டான்" என்று வாசிக்கிறோம்.

யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தை ஏமாற்றியதாலும், தகப்பனுடைய ஆசீர்வாதத்ததை பெறுவதற்கு ஏசாவைப்போல வேடந்தரித்து வந்து, தகப்பனாகிய ஈசாக்கிடம் பிதாக்களின் ஆசீர்வாதத்தை பெற்றதாலும் கோபங்கொண்ட ஏசா, யாக்கோபை பழிவாங்க சமயம் பார்ப்பதை அறிந்த ஈசாக்கும், ரெபேக்காளும் அவன் கைக்கு தப்புவிக்க, பதான் ஆராமிலிருக்கிற தன் உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததை வேதத்தில் வாசிக்கிறோம்.

**யாக்கோபு பெற்றோரை விட்டு தனித்து விடப்பட்டான். பதான் ஆராமிற்கு தனித்து போகவேண்'டும். அதுவும் இளவயதில். ஒரு மைல், இரண்டு மைல் அல்ல. நூற்றுக்கணக்கான மைல்கள் வனாந்திர வழியாய் பிரயாணம் பண்ண வேண்டும். பாதை மாறி, திசை மாறி போய் விடக் கூடாது. காட்டு மிருகங்களுக்கு இரையாகி விடக்கூடாது. கள்ளர் கையில் அகப்படக் கூடாது. இயற்கை சேதங்களுக்கு சிக்கி சின்னபின்னமாகி விடக்கூடாது. எதிரிகள் கையில் சிக்கி அடிமையாகி விடக்கூடாது. ஏசாவின் கைகளில் சிக்கி மரணமடையக்கூடாது. நடுவழியில் நோய்வாய் படக் கூடாது. முழுசாக ஊர்போய்ச் சேர வேண்டும். முடியுமா?!

முடியும். எப்படி? "அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே" என்று எபிரெயர்: 4:23 ல் வாசிக்கிறோம். இதுபோன்று யாக்கோபு தன் தேவன்மேல் நம்பிக்கையுடையவனாக தன் பிரயாணத்தில் தொடர்ந்து வெற்றி கண்டான்.

அறியாத தேசத்திற்கு பட்டணத்திற்கு ஊருக்கு தனிமையில் விடப்பட்டான். தனிமைதான் நமக்கு பல்வேறு அனுபவங்களுக்கு வழி நடத்தும் ஆசான். புதுபுது சிந்னைகள், புதிய தரிசனங்கள், தேவனோடு நெருங்கிச் சேரும் அனுபவம், கர்த்தருடைய சித்தம் உணர்ந்து கீழ்படியும் அனுபவம் இதெல்லாம் குழுவாக இருக்கும்போது கிடைக்காது.

**சங்கீதம்: 25:16 - "...நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்" என்றான் தாவீது. சவுலுக்கு பயந்த தாவீது வனாந்திரத்தில் தேவனால் உருவாக்கப்படும்படி தனித்து விடப்பட்டான்.

**வெளிப்படுத்தல்: 1:9 - அப்போஸ்தலனாகிய யோவான்  தேவதரிசனங்கள் கடைசிகால வெளிப்படுத்தல்களை பெற்றுக் கொள்ள பத்மு என்னும் தீவில் தனித்து விடப்பட்டான் என வேதத்தில் வாசிக்கிறோம்.

தேவனால் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு தேவபிள்ளையும் தன் குடும்பத்தை விட்டு, நேசிக்கப்படுகிறவர்களை விட்டு, நண்பர்கள், உறவுகளை விட்டு வெகுதூரம்  கர்த்தரால் தனித்து விடப்படுவதை இதன் மூலம் அறிய முடிகிறது.

அருமையான தேவஜனமே!  இன்று நீ வெகுதூரம் உன் குடும்பத்தை விட்டு ஏதோ ஒரு காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டு வேறுபிரிக்கப்பட்டிருக்கலாம் கவலைப்பட வேண்டாம். ஏதோ ஒரு தேவநோக்கத்திற்காக அவ்விதம் உனக்கு நேரிட்டிருக்கலாம். தேவசித்தம், தேவநோக்கம் இல்லாமல் நம்வாழ்வில் எதுவும் நடந்துவிடுவதில்லை. நம்வாழ்வு தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு வாழ்வு என்றால் நிச்சயம் நம் தனிமை ஒரு தேவ நோக்கம் நிறைவேறவே இதெல்லாம் நடக்கிறது என விசுவாசியுங்கள். தனிமை எப்போதும் நிரந்தரமாக நீண்டகாலங்கள் நீடித்திருப்பதில்லை. நிச்சயம் முடிவு உண்டு. முடிவில் மேன்மையைக் காண்பீர்கள். அதுவரை தேவசித்தம் நிறைவேற பொறுமையோடு காத்திருங்கள்.

"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்" (நீதிமொழிகள்: 13:12).

நாம் ஆராதிக்கும் தேவனாகிய இயேசுவும் தனிமையில் விடப்பட்டவர்தான். உங்களின் தனிமையை நிச்சயம் மாற்றுவார். தனிமை என்பது நாம் அவரால் உருவாக்கப்படுவதற்கு தெரிந்துகொள்ளப்பட்ட காலமே. உருவாக்கப்பட்டதும் தனிமைப்படுத்தினவரே வெளியெ கொண்டு வருவார். கன்மலையின் மேல் நிறுத்துவார்.

2. விரும்பாத அனுபவம்:

ஆதியாகமம்: 29:25 - "காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர் என்றான்".

**யாக்கோபு  விரும்பியது அவனுக்கு கிடைக்கவில்லை.

நம்மை உருவாக்க தேவன் நமக்குப் பிரியமான வழியில் அல்ல; தமக்குப் பிரியமான வழியில் நடத்துகிறார்.
  • விரும்பினது கிடைக்கவில்லையா? கிடைத்ததை விரும்புங்கள். 
  • கேட்டது கிடைக்கவில்லையா? கொடுத்ததை பெற்றுக் கொள்ளுங்கள். 
  • தேடியது கிடைக்கவில்லையா? கிடைத்ததை பயன்படுத்துங்கள்
எதையும் மகிழ்ச்சியோடு பெறவும், ஏற்றுக் கொள்ளவும் ஆயத்தமாயிருங்கள்.

1சாமுவேல்: 18:19 - "சவுலின் குமாரத்தியாகிய மோராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்" என்று வாசிக்கிறோம்.

**தாவீதுக்கும் அவன் விரும்பியது கிடைக்கவில்லை.

** யோசேப்பு விரும்பாத இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டான். யோசேப்பு விருப்பமும் நிறைவேறவில்லை.

எனக்கருமையான தேவஜனமே!  இந்நாளில் நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைக்காமல் கைநழுவி வேறொருவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். தந்திரமாகவோ அல்லது நயமாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ பிடுங்கப்பட்டிருக்கலாம். அதற்காக வருந்த வேண்டாம். அதை தேவசித்தம் என கருதி ஆறுதல் அடையுங்கள். நீங்கள் இழந்ததைப் பார்க்கிலும் மிகச் சிறப்பானதை பின்னாட்களில் பெறப்போகிறீர்கள்.  நீங்கள் இப்பொழுது அடைந்த மனதுக்கம், மனவேதனை அனைத்தும் அப்பொழுது மாறிப்போய் உங்கள் புலம்பல் ஆனந்தக் களிப்பாய் மாறியிருப்பதைக் காண முடியும்.

விரும்பாத இடங்களில், அடையாத துன்பத்தை காரணமின்றி அனுபவித்து வருகிறீர்களா? எனக்கு ஏன் இது நேரிடுகிறது என ஒன்றுமே புரியாத நிலையில் திகைத்துப்போய் கலங்கி நிற்கிறீர்களா? பயப்படாதீர்கள்!

சங்கீதம்: 34:19 - "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" என வேதம் கூறுகிறதே. ஆகவே, கலங்காதீர்கள்.

நம்மை உருவாக்க தேவன் நமக்குப் பிரியமான வழியில் அல்ல; தமக்குப் பிரியமான வழியில் நடத்துகிறார் என்பதை அறியுங்கள்.

3. பகைக்கப்படும் அனுபவம்:

ஆதியாகமம்: 31:2 - "லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்".


யாக்கோபு தன் மாமானார் வீட்டில் சுமார் 20 ஆண்டுகாலம்  கடினமாக உழைப்பு உழைத்தான். பலன் - அவன் மூலம் நன்மையை பெற்றவர்கள் அவனை பகைத்தனர்.

1சாமுவேல்: 18:9-13 - தாவீது சவுலுக்கு நன்மை செய்தான். ஆனால், சவுல், தாவீதை கொலை செய்ய வகை தேடினான்.

நாம் வாழும் உலகமானது - நன்மைக்கு நன்மையல்ல ; நன்மைக்கு தீமைசெய்கிற உலகமாக உள்ளது. இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? மக்கள் தீமையாளர்களாக மாறி விட்டார்களா? அல்ல... சாத்தான் ஜனங்களை தீமை செய்கிறவர்களாக மாற்றியிருக்கிறான் என்பதை நாம் அறிய வேண்டும். வேதம் கூறுகிறது: 2தீமோத்தேயு: 3:1 - 7 - வரை வாசிக்கும்போது... எந்தளவிற்கு இவ்வுலகம் கொடிதாக மாறியுள்ளது என்பதனை நம்மால் அறிய முடிகிறது.

இப்படிப்பட்ட உலகத்தில் தேவன் தம்முடையவர்களை பகைக்கப்படும் அனுபவத்திற்கு கொண்டு சென்று பக்குவப்பட வைத்து தமது சித்தத்திற்கேற்றவாறு உருவாக்க விரும்புகிறார்.

நீதிமானை எவ்வளவுதான் துன்பப்படுத்த சத்துரு, எதிராளி நினைத்தாலும் அது தேவன் அனுமதிக்கும் காலம் வரைக்கும் மட்டும்தான். பகைக்கப்பட்ட இடத்தில் தேவன் விரும்புகின்ற பக்குவம், முதிர்வு நிலை வந்ததும் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வந்து விடும். அதற்கு மேல் அவனால் நம்மேல் ஆதிக்கம் செலுத்த எதிராளிக்கு அதிகாரமில்லை.

தனிமையின் அனுபவம், விரும்பாத அனுபவம், பகைக்கப்படும் அனுபவம் இம்மூன்றும் உங்கள் வாழ்வில் அனுமதிக்கப்பட்டு, கடந்து வந்துள்ளீர்களா? கவலைப்பட வேண்டாம். இவைகளை கடந்துவந்த உங்களுக்கு இனிமேல் உயர்வும், ஆசீர்வாத மேன்மையும் பின்தொடரும். தேவனால் இப்படிப்பட்ட வழிகளில் பண்படுத்தப்பட்ட நீங்கள் உங்கள் விசுவாச வாழ்வில் இனிவரும் சோதனைகள் மற்றும் இனிமேல் சத்துருவினால் வரும் அனைத்துவித போராட்டங்களையும் வெல்ல வலிமை பெற்றுவிட்டீர்கள். ஆவிக்குரிய வாழ்வில் இனி ஜெயமே.

யாக்கோபை எவ்வளவாய் பகைத்தனரோ அவ்வளவாய் அவன் ஆசீர்வாதம் பெருகியது. இஸ்ரவேலர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் பலுகிப் பெருகினார்கள் (யாத்திராகமம்: 2:12) என்று வேதம் கூறுகிறது.

பகைக்கப்படுகின்ற இடத்தில் பலுகிப்  பெருகி பெருக்கமடைகிற ஆசீர்வாதம்தான் தேவன் தம்முடையவர்களுக்கு கொடுக்கும் மாபெரும் ஆசீர்வாதம் - என்பதை அறிந்து, சத்தமாக ஆண்டவருக்கு ஒரு அல்லேலூயா சொல்லுங்கள்.

தாவீதை சவுல் பகைக்க பகைக்க அவன் நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள் (2சாமுவேல்: 3:1) என்று வேதம் கூறுவதை கவனியுங்கள். கர்த்தருடைய பிள்ளையே... நீ பகைக்கப்படும் அனுபவத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாயா? கலங்காதே. கர்த்தர்மேல் விசுவாசமாயிரு. மேற்கண்ட மூன்று அனுபவங்களும் உன்னை மேன்மைப்படுத்தி, பலப்படுத்தி, உயர்த்திடவே என்பதை மறந்துபோகாதே.


உலகில் வீசிய வேதாகமக் காற்றுகள்

காற்றுக்கு பெயர்கள் !!!

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்

வடக்கிலிருந்து வீசினால் --வாடை

கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்

மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று

(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று

(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று

(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

காற்றின் வேகத்தை வைத்தே காற்றின் தன்மை மதிப்பிடப்படுகிறது.

1. மணிக்கு 5 கி.மீ.வரை வீசுவது  -  மென் காற்று

2. மணிக்கு 6 முதல் 11 கி.மீ வரை வீசுவது  -  இளம் தென்றல் காற்று

3. மணிக்கு 12 முதல் 19 கி.மீ. வரை வீசுவது -  தென்றல் காற்று

4. மணிக்கு 20 முதல் 29 கி.மீ.வரை வீசுவது -  புழுதிக் காற்று

5. மணிக்கு 30 முதல் 39 கி.மீ.வரை வீசுவது -  ஆடிக் காற்று

6. மணிக்கு 40  முதல்  100 கி.மீ வரை வீசுவது -  கடும் காற்று

7. மணிக்கு 101 முதல் 120 கி.மீ.வரை வீசுவது -  சூறைக் காற்று

என வல்லுனர்கள் வகுத்துள்ளனர். - நன்றி: தினத்தந்தி - இளைஞர் மலர்.



  உலகில் வீசிய வேதாகமக்  காற்றுகள்:

ஒரே பெயரில் உள்ள காற்றுகள் பலமுறை சொல்லப்படுகிறதே என அலுத்துக் கொள்ளாதீர்கள். ஒரே பெயருடைய காற்றுகளாயிருந்தாலும் அது வீசிய இடத்தைப் பொறுத்து அதன் தன்மை, வல்லமை வித்தியாசமாக இருப்பதை காணலாம். ஏனென்றால், அவைகள் கர்த்தரால் அவரது சித்தத்தின்படி செய்ய தேவஜனத்திற்காக பல்வேறு சூழ்நிலைகளில் அனுப்பப்பட்ட காற்றுகள் என்பதை நாம் அறிய வேண்டும். 

அது மட்டுமல்ல... காற்றுகள் இரண்டு வகை உண்டு. அவை:

 1. கர்த்தருடைய அநாதி தீர்மானத்தின்படி, இவ்வுலகில்  இயற்கையாக  வீசுகின்ற காற்றுகள் -  மற்றும் இனிமேல் வீசப்போகின்ற இயற்கையான காற்றுகள்.

2. தேவ ஜனத்திற்காகவே, தேவபிள்ளைகளின் ஜெபத்திற்கு பதில்தரும் விதமாக தேவனால்  அனுப்பப்படுகிற காற்றுகள் மற்றும் நியாயத்தீர்ப்பு அல்லது சிட்சிப்பதற்காக தரப்பட்ட காற்றுகள்.

- என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

இனி வேதத்தின் வழியே வீசிய காற்றுகளை காண்போம்....


1. ஆதியாகமம்: 8:1 - ஆழிப் பேரலைகளின் - ஜலத்தை அமர்த்திய காற்று

2. யாத்திராகமம்: 10:13 - கீழ் காற்று

3. யாத்திராகமம்: 14:21 - சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளக்க செய்த - பலத்த கீழ் காற்று

4. எண்ணாகமம்: 11:31 - கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட - ஒரு காற்று

5. 1இராஜாக்கள்: 19:11 - பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான - பலத்த பெருங் காற்று

6. 2இராஜாக்கள்: 2:11 - எலியாவை  பரலோகத்திற்கு கொண்டு சென்ற - சுழல் காற்று

7. யோபு: 1:19 - வனாந்திர வழியாய் வந்த - பெருங் காற்று

8. யோபு: 27:20 - தீயோனை அடித்துச் செல்லும் - பெருங் காற்று

9. யோபு: 27:21 - தீயோருக்கு வரும் - கொண்டல் காற்று

10. யோபு: 30:22 - மனிதனையே பறக்கச் செய்யும் - காற்று

11. சங்கீதம்: 48:7 - கப்பல்களை உடைக்கும் - கீழ்க்காற்று

12. சங்கீதம்: 77:18 - கர்த்தருடைய குமுறலின் சத்தத்தினால் உண்டாகும் - சுழல் காற்று

13. சங்கீதம்: 104:4 - தூதர்களின் காற்று

14. சங்கீதம்: 107:23-25 - கடலின் அலைகளை கொந்தளிக்கச் செய்யும் - பெருங்காற்று

15. சங்கீதம்: 135:7 - கர்த்தருடைய பண்டக சாலையிலிருந்து வரும் - காற்று

16. சங்கீதம்: 148:8 - அவர் சொற்படி செய்யும் - பெருங் காற்று

17. நீதிமொழிகள்: 10:25 - துன்மார்க்கனை பறக்கடிக்கும் - சுழல் காற்று

18. நீதிமொழிகள்: 25:23 - மழையை கொண்டு வரும் - வட காற்று

19. நீதிமொழிகள்: 25:14 - மழையில்லாத காற்று

20. ஏசாயா: 21:1 - தென் திசையிலிருந்து எழும்பி வரும் - சுழல் காற்று

21. எரேமியா: 4:11 - வனாந்திர உயர்நிலங்களிலிருந்து வரும் - தீக் காற்று

22. எரேமியா: 4:12 - கர்த்தரால் வரும் - பலமான காற்று

23. எரேமியா: 4:13 - பாழாக்க வரும் - பெருங் காற்று

24. எரேமியா: 13:24 - வனாந்திரக் காற்று

25. எரேமியா: 49:36 - நாலு திசைகளிலிருந்து வரும் - நாலு காற்று

26. எரேமியா: 51:1 - அழிக்கும் காற்று

27. எசேக்கியேல்: 1:4 - வடக்கேயிருந்து வரும் - புசல் காற்று

28. எசேக்கியேல்: 13:13 - புசல் காற்று

29. தானியேல்: 7:2 - வானத்தின் நாலு காற்று

30. ஓசியா: 8:7 - சூறைக் காற்று

31. யோனா: 4:8 - உஷ்ணமான  கீழ்க்காற்று

32. நாகூம்: 1:3 - சுழல் காற்றும் பெருங்காற்றும்

33. மத்தேயு: 11:7 - நாணலை அசைத்த காற்று - தென்றல் காற்று

34. மத்தேயு: 14:24 - எதிர்க்காற்று

35. அப்போஸ்தலர்: 2:2 - பலத்த காற்று

36. அப்போஸ்தலர்: 27:14 - யுரோக்கிலிதான் என்னும் கடுங்காற்று

37. எபேசியர்: 4:14 - பலவித காற்று

38. வெளிப்படுத்தல்: 7:1 - புமியின் நாலு காற்றுகள்

வால்பேப்பர் - 4








வால்பேப்பர் - 3











வால்பேப்பர் - 2











செப்டம்பர் 25, 2014

இவர்களுக்காக ஜெபிப்போம் - 5


உங்களுக்குத் தெரிந்த வர்த்தகர்களின் பெயர்களை எழுதி வைத்து ஜெபியுங்கள். இது ஒரு மாடல் காப்பி மட்டுமே. தேவைப்பட்டால் பிரதி நகல் எடுத்து ஜெபியுங்கள். கர்த்தர் மகிமையானவைகளைச் செய்வாராக.

செப்டம்பர் 23, 2014

நம்மை விட்டு அகற்ற வேண்டியவைகள்

கலாத்தியர்: 5:19 - "மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன..." என வேதம் சொல்கிறது. 

ரோமர்: 8:6 - "மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமும்"

ரோமர்: 8:8 - "மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு பிரியமாயிருக்க மாட்டார்கள்"

ரோமர்: 8:13 - "மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்"

எனவே, மாம்சத்தின் கிரியைகளை நம்மை விட்டு அகற்றுவோம்.  அநேக வேளைகளில் நம்மிடம் உள்ள இத்தகைய சுபாவங்கள் நம்மில் இருப்பதே அறியாமல் அல்லது உணராமல் அல்லது தெரியாமல் அல்லது அது சரியென்றே நினைத்து - இதுவரை வாழ்ந்து வந்திருப்போம். இனி நம்மில் ஆவிக்குரிய மாறுதல்கள் ஏற்பட அர்ப்பணிப்போம்.

உன்னதப்பாட்டு: 2:15 - "திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பு+வும் பிஞ்சுமாயிருக்கிறதே" என வேதம் கூறுகிறது. 

நாம் தேவனுடைய தோட்டத்தில் நடப்பட்டவர்கள். நம்மை உள்ளிருந்தே கெடுக்கக்கூடிய இவ்வித மாம்ச சுபாவங்களை நம்மில் வளராதபடி மாம்சத்தின் கிரியைகள் அழிக்கப்பட வேண்டும். 

இதைப்பற்றி நமதாண்டவர் இயேசுகிறிஸ்து கூறும்போது: மாற்கு: 7:20 - 23 - "மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்"

மாம்சத்தின் கிரியைகள் பற்றி வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மாம்ச சுபாவத்தை கட்டுப்படுத்த வேண்டி பழைய ஏற்பாட்டில் பல கட்டளைகள் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளதை வேதத்தில் வாசிக்கிறோம். நியாயப்பிரமாணக்கட்டளைகள் எல்லாம் அதற்காகத்தானே எழுதப்பட்டுள்ளது. மாம்சத்தின் கிரியைகள் பட்டியலை வேதத்திலிருந்து தொகுத்து வழங்கியுள்ளேன். அவைகளை ஜெபத்தில் அறிக்கையிட்டு விரட்டியடியுங்கள். பரிசுத்தமாகுதலை நிறைவேற்றுங்கள். உங்கள் நடுவே தேவன் அற்புதங்களை செய்ய வல்லவர். தனிமனித பரிசுத்தமே எழுப்புதலை கொண்டு வரும்.





ஓட... ஓட... துரத்த வேண்டியவைகள்

மனிதனுடைய வாழ்வில் ஆவிக்குரிய முன்னேற்றம் வராதபடி தடை செய்பவன் பிசாசு. தேவனோடு உறவாடாதபடி தடுப்பதும், தேவசாயலாக மாற வேண்டியவனை மாறவிடாதபடி தடுப்பதுமே அவனது பிரதானமான வேலை. நித்தியத்தை அடையவிடாமல் தடுப்பவன் அவனே. இரட்சிப்பை ஜனங்கள் சுதந்தரிக்காதபடி, சுவிசேஷத்தை கேளாதபடி செவியை அடைக்கச் செய்பவன் ஈனச்சாத்தானும், அவனது சேனையுமே. எனவே, அவனை நித்தமும் துரத்த வேண்டியது நம் கடமை.

தென்கொரிய எழுப்புதல் போதகர்.பால்யாங்கி சோ அவர்கள் தன் ஜெபக்குழுவினரை மலைக்கு அழைத்துச் சென்று தென் கொரியா தேசத்தின் மேலும், சீயோல் பட்டணத்தின்மேலும் வானமண்டலத்தில் உலாவிக்கொண்டிருக்கும் பொல்லாத ஆவிகளின் சேனைகளை துரத்துவார்களாம். அதற்கு பின்புதான் தேசத்தில் எழுப்புதல், ஆத்தும அறுவடை பலமாய் வந்தது என அவர் கூறுகிறார். நான் நினைக்கிறேன்.... அவர்கள் துரத்திய அசுத்த அவிகளெல்லாம் நம் தேசத்திற்கு தஞ்சமடைய வந்து விட்டதோ என?! நாமும் அதை இங்கு அண்ட விடாமல் துரத்த வேண்டும். வெறும் நம்முடைய ஆசீர்வாதத்திற்கு மட்டும் நாம் ஜெபித்துக் கொண்டிராமல் தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபிக்க முன் வர வேண்டும்.

தென் கொரியாவில் ஏற்பட்ட அதே போன்றதொரு எழுப்புதல் நம் தேசத்திற்கு வர வேண்டுமானால் நாமும், நம் தேசத்தின் மேல் உலாவிக்கொண்டிருக்கும் அந்தாகார வல்லமைகளை, வான மண்டல லோகாதிபதிகளை, அசுத்த வல்லமைகளை விரட்டியடிக்க வேண்டும். தேவஜனங்கள் ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது இந்திய தேசத்தின்மேல் உள்ள அவனது ஆதிக்கம் ஒழிந்துபோகும். தேசத்தின்மேல் ஆவியானவர் அசைவாடும்படி ஒன்று கூடி துரத்துவோம்..





செப்டம்பர் 22, 2014

நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்க இருக்க தேவன் விரும்புகிறார்?


நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர்,  தம்முடையவர்கள் தம்மைப்போலவே இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.  அவர் நடந்தபடியே நாமும் நடக்க வேண்டும். அவரது அடிச்சுவடுகளை பின்பற்றி நாமும் நடக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார்.(1பேதுரு: 2:21).

நாம் அவருக்குச் சொந்தமானவர்கள். எனவே, அவர் என்ன சொல்லுகிறாரோ? அல்லது அவர் நம்மில் எதை எதிர்பார்க்கிறாரோ? அதை கேட்கவும், கேட்டு கீழ்படியவும், கீழ்படிந்து அதன்படி செய்யவும், அவரது எதிர்பார்ப்பினை நிறைவேற்றவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். (யோவான்: 2:5). அதுதான் ஒரு உண்மை கிறிஸ்தவனின்  வாழ்க்கை முறையாகும்.

1. 1பேதுரு: 1:16 - "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்..."



முதலாவது, நாம் ஆராதிக்கும் தேவன் பரிசுத்தமானவர். அவரில் எவ்வளவேனும் பழுதில்லை. பாவத்தைப் பாராத சுத்தக் கண்ணர். பாவத்தை வெறுக்கிற தேவன். பாவியையோ நேசிக்கிறவர். பாவியை பாவத்திலிருந்து விடுவிக்கிறவர். அவரே பரிசுத்தமுள்ள தேவனாகிய கர்த்தர். 

பாவியை மீட்க மனிதனாக வந்த இயேசு சொல்கிறார்: யோவான்: 8:36 - "என்னிடத்தில் பாவமுண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?" என்றார். அக்காலகட்டத்தில் வாழ்ந்த, குற்றம் கண்டு பிடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த பரிசேயர், சதுசேயர்களால் கூட ஆண்டவர் இயேசுவிடம் எதையும் காண இயலவில்லை.

ஆயிரக்கணக்கான பேரை சிலுவை மரத்திலேற்றிய கவர்னர் பிலாத்து, ஆண்டர் இயேசுவை நியாய விசாரணையில் விசாரித்து பார்த்து " இவரிடத்தில் ஒரு குற்றத்தையும் காணேன்" என சாட்சி  கொடுத்தான்.(லூக்கா: 23:14,15).

தேவனாக இருக்கின்ற போதும், மனிதனாக வந்த போதும் பாவமற்றவராக, பரிசுத்தராக இருக்கின்ற ஒரே தெய்வம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே.

எபேசியர்: 5:26,27 - சபை பரிசுத்தமாயிருக்க வேண்டும் என விரும்புகிறார்.

1தெசலோனிக்கேயர்: 3:13 - அவர் வரும்போது நாம் பரிசுத்தமாய் காணப்பட வேண்டுமென்று விரும்புகிறார்.

1தெசலோனிக்கேயர்: 4:3 - நாம் பரிசுத்தமாக வேண்டுமென்பதே தேவ சித்தமாயிருக்கிறது என வேதம் கூறுகிறது.

சாத்தான் இன்றைக்கு அநேகரை இதில்தான் அதிகம் சோதிக்கிறான். இரட்சிக்கப்பட்டவனையும் சரி.... இரட்சிக்கப்படாதவனையும்சரி... தினந்தோறும் செய்தி தாள்களில் வாசிக்கும்போது இவ்விஷயத்தில் பாகுபாடின்றி அனைவரையும் பிசாசு இதிலே விழத்தள்ளுகிறதை காண முடிகிறது. இதிலே ஊழியர்களும் விதிவிலக்கல்ல.

எனவே, நம்மிடம் பாவம் அணுகாதபடி அணுதின வாழ்வில் நம்மைக் காத்துக் கொள்வதில் கவனம் அவசியம்.

இரகசிய பாவம், மறைவான பாவம், பகிரங்க பாவம், துணிகர பாவம் என்று எந்த பெயரிலும் பாவம் அணுகாது காத்துக் கொள்வதில் ஒரு விழிப்புணர்வு நமக்கு மிக அவசியம். சில சமயங்களில்... இதெல்லாம் பாவமில்லை... இதெல்லாம் நடைமுறையில் இருப்பதுதானே... என பாவத்தோடு எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருங்கள். எதிராளியாகிய சாத்தான் நம்மை விட புத்திசாலி என்பதை அறியுங்கள்.

தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும்போது... அந்நாட்டு கலாச்சாரத்தை மதிக்கிறேன் என கூறி வேதத்திற்கு புறம்பானதை, ஒவ்வாததை சிலவற்றை புசிப்பதும் குடிப்பதும் கூடாது. தாய்நாட்டை விட்டு பாபிலோன் சென்ற தானியேலை நினைத்துக் கொள்ளுங்கள். பாபிலோனிய பழக்க வழக்கங்களுக்கு அவன் அடிமையாகிப் போய் விடவில்லை. (தானியேல்: 1:8).

திரள் கூட்ட மக்கள் ஒரு பாவத்தை செய்யும்போது, அல்லது அநீதியை செய்யும்போது அது தேவநீதியாகி விடாது. நாடு விட்டு நாடு போனாலும், ஊருவிட்டு ஊரு போனாலும் வேதத்தின் சத்தியம், தேவநீதி மாறி விடாது. ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம், தீவுக்கு தீவு வேதம் ஒருபோதும் மாறுவதில்லை. சத்தியம் மாறாதது. வசனம் மாறாதது.

இனத்திற்கு தகுந்தார்போலவோ, மக்களுக்கு தகுந்தார்போலவோ, ஆதிவாசிகளுக்கு தகுந்தார்போலவோ வசனமோ சத்தியமோ ஒருபோதும் மாறாது. எனவே, தெய்வபயத்தோடு பரிசுத்தத்தை நிறைவேற்றுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். வருகையில் எடுத்துக் கொள்வார்.

எந்த நாட்டு சட்டப்புத்தகமும், புராணங்களும் நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்ல முடியாது. எந்த நாட்டில் குடியிருக்கிறோமோ... அந்த நாட்டுச் சட்டத்தை மதிப்பதில் தவறில்லை. சட்டத்தின்படி வாழ வேண்டியது அவசியம். ஆனால், அதேவேளையில் கர்த்தருக்கு விரோதமான சட்டங்களுக்கு உடன்படுவதில் பிரச்சினையுள்ளது என்பதை நினைவில் கொள்க. நியாத்தீர்ப்பின் நாளில்... எந்த நாட்டில் வசித்தோமோ... அந்த நாட்டு சட்டத்தை வைத்து நாம் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. முழு உலகத்திற்கும் நியாயத் தீர்ப்பைக் கொடுக்கிற ஒரே புத்தகம் - "பரிசுத்த வேதாகமம்" மட்டுமே என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. (யோவான்: 12:48; பிரசங்கி: 12:14).

கர்த்தருக்கு விரோதமான சட்டங்கள் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வரத்தான் செய்தது. ஆனால், பரிசுத்தவான்கள் எவரும் அவைகளுக்கு பணிந்ததில்லை என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகள் எங்கிருப்பினும் கர்த்தருக்கு பரிசுத்தமாயிருப்பதில் கவனமாயிருக்க வேண்டும்.

எபிரெயர்: 12:14 - "...பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே" என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் பரிசுத்தம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறியுங்கள்.


2.  லூக்கா: 6:36 - "ஆகையால், உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்"


இரண்டாவதாக, கர்த்தருடைய பிள்ளைகள் இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார்.

சங்கீதம்: 145:8 - "கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்" என வேதம் கூறுகிறது.

மத்தேயு: 9:36 - "அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி"

மத்தேயு: 20:34 - "இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்"

மாற்கு: 1:41 - "இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்".

லூக்கா: 7:13 - "கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி".

நமதாண்டவர் இயேசு இரக்கமும் மனவுருக்கமுமுடையவர். அதேபோல நாமும் இரக்கமும் மனதுருக்கமும; உடையவர்களாய் இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார்.

மத்தேயு: 9:13 - "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்..." என்று கூறுகிறார். இப்படி இயேசு கூற காரணம் என்னவாக இருக்கும்?

ஆதாமிலிருந்து இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்து, பரிசுத்தாவி பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்தாவியின் அபிஷேகம் ஊற்றப்பட்டு சபை நிறுவப்படுகிறதற்கு முதல் நாள் வரை நடந்த அனைத்து சம்பவங்களும், நிகழ்ச்சிகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டு காரியங்கள்தான் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிற்பாடு நடக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுகள் அனைத்தும் புதிய ஏற்பாடு. எனவே, ஆண்டவர் இயேசு வாழ்ந்த உபதேசித்த அக்காலகட்டம் பழைய ஏற்பாட்டு காலம் என்பதை மனதிற் கொண்டு இதை தியானிக்க வேண்டும். அப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்ல வரும் சத்தியம்  விளங்கிக்கொள்ள ஏதுவாகும்.

"இரக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்" என வலியுறுத்த காரணங்கள்:


பழைய ஏற்பாட்டு கால மக்கள் இருதய கடினமுள்ளவர்கள் என வேதம் பல இடங்களில் கூறுகிறது. ஆண்டவர் இயேசுவும் அதை அவ்வாறே வலியுறுத்துகிறதை காண முடியும். (மத்தேயு: 19:8; மாற்கு: 10:5; 3:5; 16:14). நியாயப்பிரமாணக் கட்டளைகள் கடினமானதாக கொடுக்க காரணமே இஸ்ரவேல் மக்களின் கடினத்தினால்தான் என கருதுகிறேன்.

அநேக வேளைகளில் தேவஜனங்கள் சத்தியத்தை பிடித்துக் கொண்டு - இரக்கத்தை விட்டு விடுகிறார்கள்.  கர்த்தருடைய ஜனத்திற்கு சத்தியத்தை அறிய அறிய வாழ்வில் ஒருவித கடினத்தன்மை வருகிறதை பரவலாக காணலாம். ஆழமாக ஆராய்ந்து இருளுக்குள் போய் விடுகிறார்கள். ஏனெனில், "ஆழத்தின்மேல் இருள் இருந்தது" (ஆதி: 1:2) என்று வேதம் கூறியுள்ளதே.

அ)  தேவனிடம் சேர இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும்:

மாற்கு: 7:1-8 - சீஷர்கள் கழுவாத கைகளினால் போஜனம் பண்ணுவதில் குற்றம் கண்டு பிடித்து குற்றம் சாட்டினார்கள். மனுஷருடைய பாரம்பரியத்தை கைக்கொண்டு தேவனுடைய கட்டளையை புறந்தள்ளினார்கள். எனவே, அவர்கள் தேவனுக்கு வீணாய் ஆராதனை செய்கிறார்கள் என்றும், உதடுகளால் கனம் பண்ணி, இருதயத்தால் தேவனுக்கு தூரமாய் விலகிப் போனதை இயேசு கிறிஸ்து அவர்களின் கடினத்தை கடிந்து கொள்கிறதை பார்க்கிறோம்.

மத்தேயு: 26:7 - 13 - பரிமள தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றியதைக் கண்டு விசனப்படுகிற இருதயத்தை கடிந்து கொண்டார். "யானை போகிறது தெரியாதாம்; பூனை போகிறது தான் தெரியுமாம்" என்பது கிராமத்துப் பழமொழி. அதுபோல... விசனப்படுகிறவர்களின் பணத்தால் வாங்கப்பட்டதல்ல இந்த  பரிமள தைலம். இவர்கள் எதற்கு வீணாக பரிதாபப்பட வேண்டும். இவர்களுடைய மனம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்? இவர்களுக்கு எந்தவிதத்தில் நஷ்டம் ஏற்பட்டது? அல்லது ஏற்படப்போகிறது?

தங்கள் சுயநலத்திற்காக, ஆடம்பரத்திற்காக, சொகுசிற்காக அணுதினமும் எவ்வளவு  வீண் செலவாகிறது என்பது இப்படிப்பட்டவர்களுக்கு தெரியாது. ஆனால், தேவனுக்கு மற்றும் ஊழியங்களுக்கு செலவிடப்படும் ஒவ்வொரு தொகைக்கும் இப்படிப்பட்டவர்கள் சதாகாலமும் வருவோர் போவோரிடம் முறுமுறுத்துக் கொண்டு புலம்பி திரிவார்கள். கர்த்தருக்கு கொடுக்க முன்வர மாட்டார்கள். கொடுத்து தாங்குபவர்களின் ஈகை குணத்தை பார்த்து முறுமுறுப்பார்கள். இக்குணம் எல்லா காலகட்டத்திலும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையான ஒன்று.

கர்த்தருடைய ஊழியத்தை சிக்கனமாக செய்தால்தான் என்ன? என்பார்கள். இப்படிப்பட்டவர்களின் விசேஷங்கள் மற்றும் பார்ட்டிகள் கொடுக்கும் போது இவர்களுடைய ஆடம்பர படோடாபங்களைப் பார்க்க வேண்டுமே.... படு அமர்க்களமாக இருக்கும். ஒரு விசேஷத்திற்கு மற்றும் பெயர் பிரஸ்தாபத்திற்காக பல லட்சங்கள் என்ன பல கோடிகளைக்கூட செலவிடுவார்கள். அதில் பல சுவிசேஷ கூட்டங்களை நடத்தி விடலாம். பல சபைகளுக்கு இடங்கள் வாங்கி விடலாம். பல சபைகளை கட்டி கொடுத்து விடலாம் என்கின்ற அளவிற்கு தங்கள் சுயமேன்மைக்கு செலவழித்திருப்பார்கள் என்பதுதான் நிதர்சணமான உண்மை. இதை யாரும் மறுக்க இயலாது.

இதையெல்லாம் விட்டுவிடுவார்கள்... கர்த்தருக்கு ஆகிற செலவுகள் மட்டுமே பிரதானமாக கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட கடினத்தன்மையை நம்மை விட்டு அகற்றப்பட  வேண்டும். கர்த்தரிடம் சேர தகுதிப்பட வேண்டும். தேவனுடைய இராஜ்யம் பேச்சிலல்ல. பெலத்திலே என்பதை உணருங்கள்.

ஆ) வயதான பெற்றோர்கள் மேல் இரக்கப்பட வேண்டும்:

மாற்கு: 7:10 - 13 - கொர்பான் காணிக்கையை பற்றி கடிந்து கொள்கிறார். பழைய ஏற்பாட்டு மக்கள் மோசேயின் கட்டளையான தாயும் தகப்பனையும் கனம் பண்ணுகிற விஷயத்தில் பாரம்பரியத்தைப் புகுத்தி மாய்மாலம் பண்ணுகிறதை இயேசு கடிந்து கொண்டதை பார்க்கிறோம்.

அதாவது, வயதான பெற்றோருக்கு  ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் அந்திய காலத்திற்கு ஜீவனாம்ச தொகை போன்று ஒருமுறை டோட்டலாக கொடுத்து (தங்களை விட்டு பிரித்து ஒதுக்கி தனித்து விட்டுவிடுவதற்கு) நாசூக்காக விலகி விடுவதற்கு "கொர்பான்" என்று பெயர். இது அவர்களுடைய இருதய கடினத்தை வெளிப்படுத்துகிறது.

வயதான பெற்றோருக்கு பணம் மட்டுமே அவசியம் இல்லை. பெற்ற பிள்ளைகளின் பாசம், அரவணைப்பு, அருகாமை இதைத்தான் விரும்புவார்கள். இதை பிள்ளைகள் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பொருளீட்டும் வேகம், ஆர்வம் அவர்களை பெற்றோரை விட்டு தூரப்படுத்துகிறது. அந்நியப்படுத்தி விடுகிறது. இந்த நிலை அன்றும் சரி... இன்றும் சரி... மாறாத தன்மையோடு இன்றும் தொடருவதுதான் மிக வேதனையான ஒன்று. இதுவே நிதர்சணமான உண்மையுங்கூட. இந்நிலை மாறவும், இப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி பெற்றோரின் உணர்வுகளை புரிந்து நடக்கவும், கடினத்தன்மை மாறவும் ஜெபிப்போம்.

இ) மனைவியின்மேல் இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும்:

மத்தேயு: 19:8 - மோசே தள்ளிவிடுதலை குறித்து கொடுத்த கட்டளையை பழைய ஏற்பாட்டு தேவஜனங்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்தார்கள். அவர்களின் இருதயக்கடினத்தினிமித்தம் இவ்வாறு கட்டளை கொடுத்தான் என்று இயேசு கூறுகிறதைக் காண்கிறோம்.

1பேதுரு: 3:7 - "அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களோடு வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்".  மனைவிக்குரிய கனத்தை மட்டும் உண்மையாக உணர்ந்து  கொடுத்துப் பாருங்கள். அதன்பின்பு அவர்கள் நடந்து கொள்ளும் விதமே தனி அலாதிதான். வாழ்க்கை ருசிக்க ஆரம்பித்து விடும். ஆவிக்குரிய வாழ்வும்தான்.

ஏனென்றால், ... "அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள்..." (ஆதியாகமம்: 3:12) என்று கூறுகிறார். ஆம். மனைவியானவள் தேவன் நமக்குத்தந்த நல்லதொரு பரிசு. நம்மோடுகூட இருக்கும்படி தேவனால் கொடுக்கப்பட்ட ஏற்ற துணை - என்பதை விசுவாசியுங்கள்.

குற்றங்குறைகளை மன்னியுங்கள். சகிப்புத்தன்மையோடு விட்டுக் கொடுத்து வாழ பழகுங்கள். வியாதிப்பட்ட நேரத்தில் அனுசரணையாய் இருந்து உதவி செய்யுங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களையே நம்பி வந்து உங்களையே சார்ந்திருந்து வாழும் அவளை நேசியுங்கள். இரக்கமாயிருங்கள். என்ன நடந்தாலும், எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் மனம் விட்டுப்பேசி பயனில்லை என்ற நிலை வந்தாலும்கூட, நீங்களே விட்டுக் கொடுத்தாவது சகிப்புத்தன்மையோடு வாழ  முயற்சியுங்கள். கசப்புத்தன்மை, கடினத்தன்மையை உங்களை விட்டு அகற்றிப் போடுங்கள்.  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்.

ஈ) ஏழைகள் மேல் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்: 

நீதிமொழிகள்: 19:17 - "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்"

பழைய ஏற்பாட்டுகாலங்களில் ஏழை எளியவர்கள் பிரபுக்களால், அதிகார வர்க்கத்தினால் ஒடுக்கப்பட்டதை வேதத்தில் வாசிக்கிறோம். அதை பல தீர்க்கதரிசிகளைக் கொண்டு எச்சரித்ததையும், கடிந்து கொண்டதையும் வேதத்தில் வாசிக்கிறோம். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் எளியவர்கள் மேல் அக்கறையின்றி இருப்பதை ஐசுவரியவான் - லாசரு உவமையில் இயேசு கூறுவதை வாசிக்கிறோம். (லூக்கா: 16:19-31). இன்று இந்த நிலை இல்லாமல் இல்லை.

இன்றும் என்றும் ஏழை எளியவர்கள் நலனில் அக்கறையும் கரிசனையும் உள்ள தேவன் நம் ஆராதிக்கும் தேவனாகிய இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே.

உபாகமம்: 15:7-11 - எளியவனுக்கு இருதயத்தை கடினப்படுத்தாதே, என்றும் கொடுப்பதற்கு கையை மூடாதே என்றும், கொடுப்பதற்கு விசனப்படக்கூடாது என்றும் கட்டளை கொடுத்திருக்கிறார்.

உபாகமம்: 24:14,15 - ஒடுக்கக்கூடாது என்றும் பொழுது சாயுமுன்னே கூலியை கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

லேவியராகமம்: 23:22 - சிந்திக்கிடக்கிற கதிர்களை பொறுக்காமல் எளியவர்கள் பரதேசிகளுக்கு விட்டுவிட வேண்டும்.

உபாகமம்: 24:19 - பயிரை அறுக்கையில் வயலிலே மறதியாக விட்டு வந்தால் அதை எடுக்க திரும்ப போகாமல், அதை எளியவர்களுக்கு விட்டுவிட வேண்டும்

நீதிமொழிகள்: 14:21 - "... தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்".

2தீமோத்தேயு: 1:9 - அவர் நம்முடைய கிரியைகளின்படி இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகால முதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட  கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்". நம்முடைய நல்ல நடக்கையை பார்த்து, அல்லது நம்முடைய நல்ல ஒழுக்கத்தைப் பார்த்து நம்மை இரட்சியாமல் அவர் நம்மேல் வைத்த இரக்கத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று வேதம் கூறுகிறது.

நாம் தேவனிடம் இரக்கத்தை பெற்றுக் கொண்டதைப்போல மற்றவருக்கு நாமும் அதேபோல இரக்கத்தைக் காண்பிக்க கடமைப்பட்டுள்ளோம். இதைத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நல்லசமாரியன் உவமையில் காண்கிறோம். (லூக்கா: 10:30-37).

ஆண்டவர் இயேசு தன் மலைப்பிரசங்கத்தில் கூறும்போது: "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" (மத்தேயு: 5:7) என்று கூறியபடி இரக்கமுள்ளவர்களாயிருந்து இரக்கத்தைப் பெற்றுக் கொள்வோம்.

உ)  அதையும் இதையும் விடாதிருக்க இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும்: 

மத்தேயு: 23:23 - தசமபாகம் செலுத்தி விட்டு, இரக்கத்தை விட்டுவிட்டார்கள் பழைய ஏற்பாட்டு விசுவாசிகள். அக்கால பரிசுத்தவான்கள் தசமபாகத்தை உண்மையாக செலுத்தினால் போதும். நாம் நீதிமான்கள் என நினைத்திருந்தனர். ஆனால், இயேசு வந்தபோதோ... அது மட்டும் போதுமானதல்ல. நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டு விட்டார்கள். எனவே, இயேசு அவர்களது அந்த கடினத்தை கடிந்துகொண்டார். "இவைகளையும் செய்ய வேண்டும்; அவைகளையும் விட்டுவிடாதிருக்க வேண்டும்" என்று கூறினார்.

புதிய ஏற்பாட்டுகாலத்தில் வாழும் நாம் தசமபாகம் செலுத்தினால் மட்டும் போதுமானதல்ல. இரக்கத்தை விட்டுவிடக்கூடாது என வலியுறுத்தப்படுகிறோம்.

நாம் ஏன் இரக்கப்பட வேண்டியது அவசியம் என வேதம் வலியுறுத்துகிறது?

"ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்" (யாக்கோபு: 2:13).

"மனுஷனே, நன்மை இன்னதென்று, அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாகமனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" (மீகா: 6:8)

"ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" (எபிரெயர்: 4:16)

பரிசுத்தமும் இரக்கமும் பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையில் இணைபிரியாதிருப்பதாக.


தேவசமாதானம் உங்களில் நிலைத்திருப்பதாக! ஆமென்! அல்லேலூயா!

இவர்களுக்காக ஜெபிப்போம் - 4

மேலே கண்ட அட்டவனையின்படி உங்களுக்குத் தெரிந்த தொழிலாளிகளின் பெயர்களை எழுதி வைத்து அவர்களின் மீட்பிற்காக ஜெபியுங்கள். தேவன் இப்படிப்பட்டவர்களை இரட்சித்து சபைக்கு கொண்டு வருவாராக...


செப்டம்பர் 21, 2014

வேதாகமத்தின் அவசியம்

வேதாகமத்தின் அவசியம்

பிலாத்து என்ற ரோம தேசாதிபதி (கவர்னர்) இயேசுவிடம் வந்து “சத்தியமாவது என்ன?” என்று கேட்டான். (யோவான்: 18:38).

தேவனைப்பற்றியும், மனிதனைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் அதிகாரப்பூர்வமான வழிகாட்டியாக இருப்பதே இந்த சத்திய வேதாகமம். இந்த பரிசுத்த வேதாகமம் - “இயேசுவே சத்தியம் ” என தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

யோவான்: 14:6 -     “நானே சத்தியம்”           -  இயேசு

யோவான்: 15:26 -   “சத்திய ஆவியாகிய”  -  பரிசுத்த ஆவி

யோவான்: 17:17 -   “வசனமே சத்தியம்”     -  பரிசுத்த வேதாகமம்

எனவே, வேதாகமமானது ...

- ஒரு மனிதனுக்கு அவனது பாவத்தை உணரச் செய்கிறது.

- மனிதனுக்காக உலகிலே வந்து, இரத்தம் சிந்தி, மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவை ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

- அதிகதிகமாய் ஆவிக்குரிய (ஆன்மீக) வாழ்வில் வளர வேதாகமம் உதவுகிறது.

- ஆவிக்குரிய (ஆன்மீக) மனிதன், வேதாகமத்திலுள்ள ஆழமான சத்தியங்களை, இரகசியங்களை, தேவனுடைய வழி நடத்துதலை பெற உதவுகிறது.

- சிருஷ்டிப்பின் மூலமாகவும், இயற்கையின் மூலமாகவும் - தேவனுடைய கிரியைகளை நாம் அறிந்து கொள்ள ஆதாரமாக வேதாகமம் விளங்குகிறது.

வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை -       “இயேசு”

எழுதப்பட்ட வார்த்தை -                         “பரிசுத்த வேதாகமம்” 

அறிவிக்கப்படும் வார்த்தை -                “சபை”

வேதாகமம் எழுதப்பட்டதின் நோக்கம்:

“இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவை எழுதப்பட்டிருக்கிறது” (யோவான்: 20:31).


- Selected

செப்டம்பர் 20, 2014

ஜெபத்தில் வளர... ஜெபிக்கப்பழக...

ஜெபம் - ஒவ்வொரு  உண்மை கிறிஸ்தவர்களின் தாகம். வாஞ்சை. அடித்தளம்.
கிறிஸ்தவ ஜீவியத்தின் அஸ்திபாரம். வலிமை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அநேக கிறிஸ்தவர்களின் நிலையோ ஜெபத்தில் உறுதியாக இல்லை என்பது கசப்பான உண்மை. 

 ஜெபத்தில் வளர... ஜெபிக்கப்பழக... 

இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே வழி -  முதலில் ஒரு சபைக்கு ஒழுங்காக போக வேண்டும். போகிற சபையில் நிலைத்து  இருக்க வேண்டும். ஸ்தல சபை போதகரிடம் மற்றும் விசுவாசிகளிடம் நல்ல ஐக்கியமாக இருக்க வேண்டும். சபையில் ஆசரிக்கப்படும் அனைத்து ஜெபக்கூட்டங்களிலும் கூடுமானவரை அல்லது சமயமும் வாய்ப்பும் கிடைக்கும்பொழுதெல்லாம் பங்குபெற வேண்டும்.

சபைகளில் நடக்கும் ஒவ்வொரு ஜெபக்கூடுகையும் ஒவ்வொருவித ஆசீர்வாதத்தையும், எழுப்புதலையும் கொண்டு வரச் செய்யும் என்பதை நாம் அறிய வேண்டும்.

சபையில் நடக்கும் ஜெபங்களில் பங்குபெறும்போது...

1. எரிகிற விறகோடு பச்சை விறகும் சேர்ந்தால் பத்திகிட்டு எரியும் - என்று கிராமத்தில் ஒரு பழமொழி  சொல்வார்கள். அதுபோல ஜெபிக்கத் தெரியதவர்கள்... ஜெபிக்க கற்றுக் கொள்ள சபையில் நடக்கும் ஜெபக்கூட்டங்களுக்கு செல்லும்போது ஜெபிக்கக் கற்றுக் கொள்வார்கள்.

2. ஜெபத்தை நடத்துகிற போதகர் அல்லது ஜெபக்குழுத் தலைவர்கள் சொல்லும் ஜெபக்குறிப்புகளும் அதற்கேற்ற வேதவசன விளக்கங்களும் ஒப்பீடுகளும், நடைமுறை சாட்சி அனுபவங்களும், உதாரணங்களும் தொடர்ந்து ஜெபத்தில் ஊக்கமடைய நமக்கு உதவியாக இருக்கும். எனவே, நாம் ஜெபக்கூடுகைக்கு போகும்பொழுதெல்லாம் கூடவே, ஒரு குறிப்பேடும் பேனாவும் கொண்டு சென்று குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது.

3. ஜெபத்தில் நம்மேல் தேவமகிமை இறங்குவதை தேவபிரசன்னத்தை நாம் உணரலாம். ஜெபநேரத்தில் அநேகர் விடுதலையும், சுகமும் பெறுவதை பார்க்க முடியும். அற்புதங்களை பெற்றவர்கள் ஞாயிறு ஆராதனைகளில் சாட்சிபகருவதை நாம் பார்க்கிறோமே! இப்படி அநேகம் நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

4. நாம் எதற்கெல்லாம் எப்படியெல்லாம் ஜெபிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வோம். அநேக ஜெபக்குறிப்புகள் நமக்கு கிடைக்கும். ஜெபபாரம் அடைவோம். எழுப்புதல் உண்டாகும். சோர்வு நீங்கி உற்சாகமடைவோம்.

5. ஜெபத்தினால் வரும் ஆசீர்வாதங்களை நாம் பட்டியலிட்டால் இந்த பதிவு போதாது. எனவே, நாம் இதை கடந்து செல்வோம்.

 நம் வாழ்வில் ஜெபம் இல்லாவிட்டால்...

1. ஜெபமில்லாமை ஒரு மோசமான பாவம். அது ஒரு பேரழிவு.

2. ஜெபமில்லாமை வேறுபல பாவங்கள் செய்ய வழி திறக்கும். பின்மாற்றத்திற்கு  வழிவகுக்கும்.

3. ஜெபமில்லாமை தேவசித்தத்தை அறிய முடியாமல் தவிக்கும். தேவசித்தத்தை செய்ய மறுக்கும்.

4. ஜெபமில்லாமை தரிசனத்தை இழந்து போகச் செய்யும். 

5. ஜெபமில்லாமை நோக்கத்தை சிதறடிக்கும்.

6. ஜெபமில்லாமை தேவபெலனை நம்மில் அற்றுப்போகச் செய்யும்.

7. ஜெபமில்லாமை தேவ ஒத்தாசையை தடுத்து விடும்.

8. ஜெபமில்லாமை நம்மை சோதனையில் விழச் செய்து விடும்.

9. ஜெபமில்லாமை மாம்சீகமான வார்த்தைகளை கொண்டு வரும்.

10. ஜெபமில்லாமை விசுவாசத்தை அழித்து அவநம்பிக்கையை தோற்றுவிக்கும்.

இப்படிப்பட்ட நிலையை நாம் தவிர்க்க நம்மை நாம் தற் பரிசோதனை செய்து பார்த்து, ஜெபத்தில் நாம் வளர நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். 

மூன்று மாதத்திற்கொருமுறை நம்மைநாம் தற்பரிசோதனை செய்து பார்த்து கொள்வது - நம்மை ஜெபத்தில் மேம்படுத்திக் கொள்ள உதவி செய்யும். மேலும் தேவ ஆலோசனைகளுக்கு போதகரிடம் தொடர்பு கொண்டு அல்லது தனித்து தேவ ஆலோசனை பெறுவது உசிதமானது.

கீழே வரும் அட்டவணையை பிரிண்ட் அவுட் எடுத்து தற்பரிசோதனை செய்து பார்க்கலாம்


ஆவிக்குரிய வரங்கள் தாலந்துகள் பட்டியல்




ஒரு சபையின் வளர்ச்சிக்கு சில காரணங்கள்

ஒரு சபையின் வளர்ச்சிக்கு சில காரணங்கள்

"என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்கு சுதந்திரமாகவும், பு+மியின் எல்லைகளை உமக்கு சொந்தமாகவும் கொடுப்பேன்" (சங்கீதம்: 2:8)

உயிருள்ள யாவும் வளரும். ஆகவே, வளர்ச்சிக்கு வேண்டியவைகளை சபைக்குள் கொண்டு வருவது சபை வளர்ச்சியல்ல. அதற்கு மாறாக, வளர்ச்சிக்குரிய தடைகளை நீக்குவதாகும்.

தடைகள் ஊழியத்தை தடுக்காதபோது, சபை தானாக வளரும். கிறிஸ்து சபையில் இருந்தால் வளர்ச்சியின் விதைகள் ஏற்கனவே உண்டு.

1. அதிக ஊக்கமான ஜெபம். ஒழுங்குபடுத்தப்பட்ட வேத தியானம்

2. உறுதியான சுவிசேஷ ஊழியங்கள்

3. சபையின் போதனைகள் வெறும் பாரம்பரியமும் தத்துவமும் அல்ல. வசனத்தின்படி செய்ய வைப்பது

4. உறுதியான விசுவாச வாழ்வு

5. சபையை கட்டுகிற கிளை ஊழியங்களை ஸ்தாபிக்கிற தரிசனமுள்ள செல் குழுக்கள்

6. சபைப் பெருக்கத்திற்கான தலைமைத்துவப் பயிற்சி

7. விசுவாசிகளை வரங்களுக்கேற்ப ஊழியத்தில் பயன்படுத்துதல்

8. உறுதியான தரிசனங்களுடன் கூடிய நிலையான செயல்மறைகள்

9. திடமான கொண்டாட்ட நிகழ்ச்சிகள்

சபை:  சீஷர்களை ஏற்படுத்தும்

இயேசு கிறிஸ்து:  தம் சபையை கட்டுகிறார்

பரிசுத்தாவி:  உணர்த்துகிறார்

தேவன்:   தம்முடைய ராஜ்யத்தை வளர்க்கிறார்


ஒரு சபையின் வீழ்ச்சிக்கு காரணங்கள்... சில....

1. சபை தன் தரிசனத்தை, நோக்கத்தை, இலக்கை விட்டு விடுதல் அல்லது தவற விடுதல் அல்லது வேலை நிறுத்தம் செய்தல்

2. ஜெபக்குறைவு: ஜெபிக்கிறவர்கள் இல்லாமை அல்லது உருவாகாமை. ஜெபம் பற்றிய போதனையின்மை

3. சபை வாழ்க்கையில் அதாவது தேவ பிள்ளைகளோடு உள்ள ஐக்கியத்தில் குறைவுபடுதல்

4. பரிசுத்தத்தில் கவனமின்மை அல்லது கண்டிப்பின்மை

5. சுவிசேஷம் அறிவியாமை: மக்கள் இருக்குமிடத்திற்கு சென்று அறிவியாமை, அனுப்பாமை

6. சீஷத்துவப் பயிற்சி இல்லாமை - அர்ப்பணிப்பில்லாமை

7. ஊழிய அர்ப்பணிப்பிற்கு நடத்தாமை

8. மக்களின் திறமைகளை உபயோகப்படுத்த அறியாத தலைமை

9. ஊழியருக்கும் விசுவாசிக்குமிடையே உள்ள பிளவு

தோல்வியை இருவிதமாக பிரிக்கலாம்: 1. செய்ய நினைத்து செயல்படாமல் போவது  2. ஒரு போதும் நினையாமல் செயல்படுதல்  - நான்ஸ்

"நீங்கள் திட்டமிட்டு செயல்படாவிட்டால், நீங்கள் செய்தவை தோல்வியே"