டிசம்பர் 05, 2012

மிஷினெரி ஊழியத்திற்கு அழைப்பு அவசியமா?

 

'அழைப்பு' என்னும் பதம் புதிய ஏற்பாட்டில் வெவ்வேறு கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ வாழ்க்கையை செய்யும்படியாக அழைப்பைக் குறிக்கிறது. இது எல்லா கிறிஸ்தவர்களுக்குரிய ஒரு பொதுவான அழைப்பு. (ரோமர்: 1:7;  லூக்கா: 5:30). அதே வேளையில்...

கிருபை - கலாத்தியர்: 1:6
சமாதானம் - 1பேதுரு: 1:9
ஒளி, நம்பிக்கை, மகிமை, பரிசுத்தம் - கலாத்தியர்: 5:13; 1பேதுரு: 2:20-22. இந்த வசனங்களில் விடுதலை அல்லது நம்பிக்கை இவைகளுக்காக யாவரும் அழைக்கப்படுகிறார்கள் எனப் பர்க்கிறோம்.

இரண்டாவது ஒரு அழைப்பு உண்டு. அது கிறிஸ்தவ ஊழியம் அல்லது சேவை செய்யும்படியான அழைப்பு. இது விசுவாசியாய் இருந்து கொண்டு செய்யும் அழைப்பு அல்ல. இது ஒரு முழுநேர வேலையாக, உலக வேலையை விட்டு செய்யும் அழைப்பு. இந்த அழைப்பு மனிதனாலே அல்ல. தேவனாலே வருகிறது. (எபேசியர்: 3:7;  2தீமோத்தேயு: 1:11;  கலாத்தியர்: 1:1).

மக்கதோனியா அழைப்பு என்பது - மிஷினெரி அழைப்பு எனக் கூறமுடியாது. இதற்கு முன்பே பவுல் மிஷினெரியாகப் பணியாற்றி வந்தான். மக்கதோனியா அழைப்பு என்பது - உதவி தேவையான மனிதனின் அழைப்பு. தேவையில்லாத இடத்திற்கு போவதை தேவன் தடை செய்து, தேவையுள்ள மக்களிடத்தில் கொண்டு செல்கிறார். மிஷினெரி என்று தனி அழைப்பு கிடையாது. இது முழுநேர அழைப்பு.

தேவனுடைய முழுநேர அழைப்பை யாரும் தானாக விரும்பி ஏற்றுக் கொள்ள முடியாது. இது தேவனிடத்தில் இருந்து வர வேண்டும். இதற்கு அர்ப்பணம் மிக அவசியம். (லூக்கா: 9:57,58,61,62). தேவ அழைப்பும் அர்ப்பணமும் இல்லா விட்டால் ஊழியத்தில் நிலை நிற்க முடியாது. (ரோமர்: 15:17; 1கொரிந்தியர்: 9:11).

பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலைக் கண்டு கொள்ள வேண்டும்:

ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் பரிசுத்த ஆவி ஒவ்வொரு வழியாய் நடத்துகிறார். மறுபிறப்பில் (ஞானஸ்நானம்) தனக்கு இஷ்டமான இடத்தில் தோன்றி, தனக்கு இஷ்டமான திசைக்கு பரிசுத்த ஆவி செல்லுகிறது போல - வழி நடத்துதலிலும் செல்கிறார். எந்த இரண்டு கிறிஸ்தவனையும் பரிசுத்த ஆவி ஒன்று போல் வழி நடத்துவது இல்லை.

ஸ்தல சபை அங்கீகாரம் பெற வேண்டும்:

ஏனென்றால், சபையே சத்தியத்தின் தூணும், அஸ்திபாரமுமாயிருக்கிறது. (அப்போஸ்தலர்: 13:2). சபையின் மூலமாகத்தான் தேவனுடைய இரட்சிப்பின் கிருபை தேவையுள்ள மக்களிடம் பாய வேண்டும். (1தீமோத்தேயு: 3:15). பவுலும் பர்னபாவும் பரிசுத்த ஆவியின் மூலமும், சபையின் மூலமும் ஊழியத்திற்கு அனுப்பப்பட்டனர். ஊழியத்திலிருந்து திரும்பி வந்தபோது ஊழிய அறிக்கையை சபைக்கு கொடுத்தனர். பவுலின் உடன் ஊழியர் அனைவரும் ஏதாவதொரு சபையில் அங்கீகரிக்கப்பட்டனர்.

உதாரணமாக...

தீமோத்தேயு - லீஸ்திரா, இக்கோனியா (அப்போஸ்தலர்: 16:2)

எப்பாப்பிரே - கொலோசே பட்டணம் (கொலேசெயர்: 1:7).

காயு - தெர்பே

சோபத்தா - பெரேயா பட்டணம் (அப்போஸ்தலர்: 20:4)

அந்தியோகியா சபைக்கு போதகர் தேவைப்பட்டபோது எருசலேம் சபையால் பர்னபா அனுப்பப்பட்டார். (அப்போஸ்தலர்: 11:22). ஆதி சபையில் சுயாதீனர் ஒருவரும் இல்லை. ஒவ்வொரு மிஷினெரியும், ஒவ்வொரு ஸ்தல சபையின் அங்கத்தினராக இருந்ததுடன், சபையால் அங்கீகரிக்கப்பட்டு, சபையால் சபையின் மூலமாக பொருளுதவியும் பெற்றனர்.