லேவியராகமம்: 23:10-14
அசைவாட்டும் அறுப்பின் முதற்பலன் பண்டிகை ஓய்வு நாளுக்கு அடுத்த நாளில் அதாவது ஞாயிற்றுக் கிழமையில் நடைபெற வேண்டும். இந்தப் பண்டிகை "முதற்பலன்களில் பிரதானம்" என்றழைக்கப்படுகிறது.
கோதுமைக்கதிர் முதிர்ந்து அறுவடைக்கு ஏற்ற சமயம் வரும்போது, அறுவடைக்கு முன்பு முதல் கதிர் அறுக்கப்பட்டு வாரத்தின் முதலாம் நாள் கர்த்தருக்கு முன் அசைவாட்டம் காணிக்கையாய் படைக்கப்படும். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் நாளில் தானே இது நடைபெறும். அசைவாட்டப்படும் அந்த கதிர், அறுவடைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் ஆயத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடெழுகிறவர்களுக்கு முதற் பலன் ஆனார். (1கொரிந்தியர்: 5:20-23)இ
லேவியராகமம்: 23:11 - "உங்களுக்காக அது அங்கீகரிக்கும்படி..." - தேவனே இதை அங்கீகரித்த போதும் - என்பதற்காக கதிர் அசைவாட்டப்படுகிறது. ஓய்வு நாளுக்கு அடுத்த நாளிலே அதாவது, கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழும்பிய ஞாயிற்றுக்கிழமையிலே இது நடக்கிறது.
மத்தேயு: 12:40 - பூமியின் வயிற்றிலே மூன்று நாள் இரவும் பகலும் இயேசு இருந்தார். மத்தேயு: 12:40 - ன் நிறைவேறுதலின்படி இயேசு கிறிஸ்து ஒரு புதன் கிழமையிலே சிலுவையிலே அறையப்பட்டிருக்க வேண்டும். அதற்கடுத்த ஒரு நாள் பெரிய நாளாக (வியாழக்கிழமை) ஓய்வு நாளாக இருந்தது. (யோவான்: 19:31).
குறிப்பு: யூதர்களுடைய நாள் - சுரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறது.
கவனிக்கவும்: யோவான்: 20:17 க்கும் யோவான்: 20:27 க்கும் உள்ள வித்தியாசம்:
இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தவுடன் மரியாளிடம் 'என்னைத் தொடாதே' என்றார். ஆனால், பிற்பாடு தோமாவிடம் 'உன் கையை என் விலாவிலே போடு' என்றார்.
கிறிஸ்து மரியாளிடம் 'என்னைத் தொடாதே' என்றதற்கு காரணம்: அவர் இன்னும் பிதாவினிடத்திற்கு ஏறிப்போய், அவரால் அங்கீகரிக்கப்படாதததே ஆகும். ஆனால், அவர் வாரத்தின் முதல் நாள் பரலோகத்துக்கு ஏறிச் சென்று லேவியராகமத்தில் சொல்லப்பட்டதை நிறைவேற்றினார்.
கொலோசெயர்: 1:18 - "அவரே சபையாகிய சரீரத்துக்கு தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராய் இருக்கும்படி அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்".
மத்தேயு: 27:51-53 - இயேசு உயிரோடு எழுந்த பின்பு கல்லறைகள் திறந்தன. மரித்த பரிசுத்தவான்கள் சரீரம் அநேகருக்கு காட்சியளித்தது. அவர்கள் முதற்பலனானவர்கள். ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு அடையாளமானவர்கள்.
லேவியராகமம்: 23:12 - பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாக கர்த்தருக்கு செலுத்த வேண்டும். பிதாவாகிய தேவனால் இயேசு கிறிஸ்து அங்கீகரிக்கப்படுவதற்கு இது முன்னடையாளமாகும்.
லேவியராகமம்: 23:13 - ...
1. போஜன பலி - இரத்தம் இருப்பதில்லை
2. 2/10 பாகம் - முதற்பலனுக்கு அடையாளம்
3. மெல்லிய மாவு - உன்னைப்போல பிறனையும் நேசி - என்ற 2 ம் கற்பனையில் இயேசு கிறிஸ்து
4. எண்ணெய் - பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவரே நம்மை தேவனால் அங்கீகரிக்கும்படி நடத்திச் செல்ல முடியும்.
5. பான பலி - திராட்சை இரசம் மகிழ்ச்சியைக் குறிக்கிறது
உயிர்த்தெழுந்த கிறிஸ்தவின் புதிதும் ஜீவனுமான வழியில் நாம் நடக்கும்போது இந்த பண்டிகையை தனிப்பட்ட முறையில் கொண்டாடகிறவர்களாகுவோம்.
ஞானஸ்நானத்தில் ஜலத்திலிருந்து வெளியே வரவது கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததற்கும், நாமும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவோடு புதிய ஜீவனை தரித்தவர்களாய் நடக்கிறதற்குமான மிக அருமையான அடையாளம்