'ஜெபம்' பற்றிய அறிஞர்கள், ஜெப வீரர்கள், மன்றாட்டு வீரர்கள் கூறும் கருத்துக்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்:
"ஜெபம் என்பது பரலோகமும் பூலோகமும் ஒன்றை ஒன்று முத்தமிடும் நிகழ்ச்சியாகும்" - யூத அறிஞர்
"ஜெபம் ஆத்துமாவின் வெளிப்படாத சொல்லப்படாத அந்தரங்க எண்ணம்; இருதயத்தில் அவ்வெண்ணத் தீ மறைந்து கிடந்து நடுங்க வைக்கிறது" - யாரோ ஒரு கவிஞர்
"தேவனின் சித்தத்தை மேற் கொள்வதற்கு முயற்சிப்பது ஜெபம் என்றெண்ணாது; அவரது சித்தத்திற்கு முழுவதுமாய் ஒப்புவிப்பதே ஜெபமாகும்" - ஆர்ச் பிஷப்
"தேவனின் பிரசன்னத்தை உணர்வதுதான் ஜெபம்" - சகோ.லாரன்ஸ்
"நான் என்னுடைய இருக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்பு என்னுடைய இருதயத்தை தேவனுக்கு நேராக ஏறெடுக்காமல் எழுந்திருக்க இயலாது" - ஜான் பிளட்சர்
"நான் மற்றவர்களின் முகத்தில் விழிப்பதற்கு முன்பு அதிகாலையில் அவரது சமுகத்தில் விழிக்க வேண்டும்" - ராபர்ட் மரே மச்சாயின்
"அந்தரங்க ஜெபத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது நூல் நிலையங்களும், கல்வித் திறனும் வெறுமையானதாகவே தெரிகிறது. ஜெபத்துடனும், உபவாசத்துடனும் தேவனிடம் திரும்பும் நாளே நமது பொற்காலம் எனலாம். அப்பொழுது தான் பரலோகத்தின் வாசல் விரிவாக திறக்கப்படும். நமது உள்ளங்களும் தேவ மகிமையின் மையத்தினை நாடி செல்ல முடியும்" - ஸ்பர்ஜன்
"இருதயத்திலிருந்து புறப்பட்டு வருவதே இருதயத்தைத் தொடும். உயிருள்ள மனசாட்சியினின்று தோன்றுவதே மனசாட்சியைக் குத்தும்" - வில்லியம் பென்
"தனி ஜெபம் நம்முடைய ஊழியத்தில் எடுத்துரைக்க இயலாத, ஈடு இணையற்ற ஆசீர்வாதத்தினை அளிக்க வல்லது. அது பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் அபிஷேகமாகும்" - ஸ்பர்ஜன்
"தேவன் நமது ஜெபங்களுக்கு பதிலளிப்பாரேயன்றி தாமக வேறெதுவும் செய்ய மாட்டார்" - ஜான் வெஸ்லி
"ஜான் நாக்ஸ் உபவாசித்து ஜெபித்தான். இங்கிலாந்தின் அத்தனை படைகளையும் விட, அவனது ஜெபத்திற்கே அஞ்சுகிறேன் என்றாள் ஸ்காட்லாந்தின் இரத்த வெறி ராணிமேரி" - C.H. ஸ்பர்ஜன்
"அதிகாலைதோறும் 2 மணி நேரமாவது நான் ஜெபிக்கத் தவறினால், வெற்றி பிசாசுக்கு பொய் விடுகிறது. தினமும் குறைந்தது 3 மணி நேரமாவது ஜெபிக்க வேண்டிய அளவு, எனக்கு அவ்வளவு வேலை இருக்கிறது" - மார்டின் லுத்தர்
"ஏதோ ஒரு காரணம் சொல்லி ஜெபக்கூட்டங்களுக்கு மட்டம் போடுவது பின்மாற்றத்தின் அறிகுறியாகும்; ஜெபக்கூட்டத்தைவிட முக்கியமான கூட்டம் வேறென்ன? ஜெப இருதயமே மிகப் பெரிய தேவை. ஆனால், அதைப் பெறுவதே மிகக் கடினம். இதுவே நான் திட்டமாய் கண்டறிந்தது" - சார்லஸ் பின்னி
"நமக்கு சிந்திக்கவும், உணரவும் முடிகிறதே தவிர அதை செயல்படுத்த முடியவில்லையே ;செயல்படுத்த முடியாவிடில் செயலிழந்தவர்களாகி விடுவோம்" - C.S.லூயிஸ்
"இதயத்தோடு இதயம் பேசினாற்போல், பெரிய சப்தத்தினிடையே சில அரிய யோசனை சொல்லி, துன்பத்தினூடும், துக்கத்தினூடும் பேசவே, தேவன் சில வேளைகளில் உள்ளே விட்டுக் கதவை அடைக்கிறார்." - ஸோல் போர்ட்
"அநேகருடைய ஜெபத்திற்கு சாத்தான் தடங்கலாயிருக்கிறான். உன் ஜெபங்களும், விசுவாசமும் குவிந்து கொண்டே போகையில் நீ பயப்படாதே. ஏனென்றால், நாளைக்குப் பின் அவை வெள்ளப் பெருக்கெடுத்து , பதிலை அடித்துக் கொண்டு வருவதுடன், இன்னும் பல புதிய ஆசீர்வாதங்களையும் சேர்த்துக் கொண்டு வரும்" - சர்மான்
"பாதாளம் பக்தருக்கு கேடுண்டாக்க தன்னாலானதை செய்கிறது. சிறந்த ஆத்துமாக்கள் வெப்பத்தினாலும், நெருக்கத்தினாலும் சோதித்தறியப்படுகின்றனர். ஆனால், தேவன் அவர்களை ஒருபோதும் கைவிடார்" - வாட்கின்ஸன்
" 'நான்' என்பது ஜெயிக்கப்பட்டிருந்தால்தான் நாம் தேவனோடு போராட பெலமுள்ளவர்களாகலாம். சண்டை போடுவதால் அல்ல; அவர் மேல் சர்ந்திருப்பதாலேயே ஆசீர்வாதம் பெறலாம்" - K.R.மில்லர்
"நமது விசுவாசத்தை சோதிக்க, நமது ஜெபத்தை உயிர்ப்பிக்க, கிறிஸ்து தமது பதிலை தாமதப்படுத்துகிறார். படகு தண்ணீரில் மூழ்கிப் போகையில் தேவன் நித்திரை செய்கிறார். படகு அமிழ்ந்து போகுமுன் நிச்சயம் அவர் விழித்துக் கொள்வார். அவர் தூங்குகிறார். ஆனால், அவர் அவசியத்திற்கதிகமாய் தூங்குவதில்லை. ஏற்ற சமயத்தில் விழித்துக் கொள்வார்" - அலெக்சாண்டர் மெக்லரென்
"அக்கினி ஒருபோதும் பனிக்கட்டியை உருவாக்க முடியாது; பிசாசு ஒரு போதும் பரிசுத்தவான்களை உருவாக்க முடியாது; அதுபோல, ஜெபிக்காத போதகர்களும் ஒருபோதும் மன்றாட்டு வீரர்களை எழுப்ப முடியாது." - லியோனார்டு ரேவன் ஹில்
"ஜெபமில்லாத 'உற்சாகம்' வீணாணது; தேவனுக்காக மனிதரோடு பேசுவது முக்கியம்; ஆனால், மனிதருக்காக தேவனோடு பேசுவது அதிலும் முக்கியம்" (லூக்கா: 5:15,16)
"ஜெபமின்றி ஜெயமில்லை; கர்த்தரின் படை வீரர்கள் முழங்காலில்தான் நன்றாகப் போரிடுவார்கள்" - (1நாளாகமம்: 5:20)
ஜெபிக்கிறவன் பாவஞ் செய்வதை நிறுத்துவான்; பாவஞ் செய்கிறவன் ஜெபிக்கிறதை நிறுத்துவான்" - (சங்கீதம்: 66:18)
ஆண்டவர் சமுகத்தில் அவசரம் ஆகாது; ஆத்திரமாய் வந்து செல்பவர்கள் மீது தேவன் தமது ஆசீர்வாதங்களை ஊற்றுவதில்லை" (எரேமியா: 29:13)
"விளையாடுவதை நிறுத்து - விண்ணப்பிக்கத் துவங்கு.
உண்டது போதும் - உபவாசிக்கத் துவங்கு.
மனிதரிடம் பேசுவதை குறைத்திடு - தேவனோடு பேசுவதை கூட்டிடு.
சுற்றியது போதும் - முடங்கி மன்றாடு.
மனிதரைக் கேட்பதை குறைத்திடு - தேவ வார்த்தைகளைக் கேட்டிடு" - லியோனார்டு ரேவன் ஹில்