(லேவியராகமம்: 23:6-8; யாத்திராகமம்: 12:18; 23:15; உபாகமம்: 16:3-4)
பஸ்கா பண்டிகையை தொடர்ந்து புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வருகிறது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பஸ்கா பண்டிகை முதலாம் மாதத்தின் 12 ம் நாள் மாலையில் அனுசரிக்கப்படுகிறது. 15 ம் தேதியிலிருந்து 21 ம் தேதி வரையிலும் 7 நாட்கள் இந்த புளிப்பில்லாத அப்பப் பண்டிகை ஆசரிக்கப்படுகிறது. ஏழு என்பது 'முழுமை' பரிபூரணத்தைக் குறிக்கிறது.
எல்லா வித புளிப்பும் அகற்றப்பட வேண்டும்: (யாத்திராகமம்: 12:15; 13:3)
புளிப்பு என்பது...
1. பாவத்துக்கும் - 1கொரிந்தியர்: 5:8
2. மாய்மாலத்துக்கும் - லூக்கா: 12:1
3. பரிசேயர், சதுசேயர் உபதேசத்துக்கும் அடையாளமாய் இருக்கிறது - மத்தேயு: 16:6
1கொரிந்தியர்: 5:6,8 - "கொஞ்சம் புளித்த மா" பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கும் என்று அறியீர்களா?... ஆகையால், துர்க்குணம், பொல்லாப்பு என்னும் புளித்த மாவோடும் அல்ல, துப்புரவு, உண்மை என்னும் புளிப்பில்லா அப்பத்தோடு பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்"
யாத்திராகமம்: 12:15 - உங்கள் வீடுகளிலே எப்படிப்பட்ட புத்தகங்கள் இரக்கின்றது? எப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கின்றீர்கள்? என்பதில் ஜாக்கிரதையாயிருங்கள். இணையதளங்களில் காணும் காட்சிகளில், வாசிக்கும் வலைப்பூக்களில் உள்ளவற்றில் அதிக கவனமாயிருங்கள்.
கர்த்தருடைய பந்தி இராப் போஜனம்:
பஸகா பண்டிகையின் மாலை வேளையிலே, கிறிஸ்து தமது சீஷர்களைக் கூட்டிச் சேர்த்து, இராப் போஜனத்தைப் பற்றிய சட்டதிட்டங்களைக் கொடுத்தார். (லூக்கா: 22:1-15; 22:19 - "பின்பு அவர் அப்பத்தை எடுத்து (புளிப்பில்லாத அப்பம்) ஸ்தோத்திரம் பண்ணி...
புளிப்பில்லாத அப்பம் என்பது...
வேத வசனத்தக்கும், துப்புரவான உபதேசத்துக்கும் அடையாளம்.
அப்பம் - கர்த்தருடைய வார்த்தைக்கு அடையாளம். யோவான்: 6:35 - "இயேசு அவர்களை நோக்கி, ஜீவ அப்பம் நானே என்றார்."
வேத வசனத்தை நாம் வாஞ்சையோடு புசிக்க வேண்டும். எந்த அப்பத்தையும் அப்படியே புசிப்பதென்பது அல்ல. ஆரோக்கியமான உபதேசத்தையே உட்கொள்ள வேண்டும். உபதேசத்தோடு புளிப்பை இணைக்கும்போது, அது நம்மை (பாவ) அடிமைத்தனத்துக்குள் வழி நடத்துகிறது. தெளிவான உபதேசம் உன்னை விடுதலையாக்கும். தவறான உபதேசங்களோ அடிமைப்படுத்தும். (2தீமோத்தேயு: 2:15).
யோவான்: 7:16,17 - இயேசு சொன்னார்... "என் உபதேசம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது"
யோவான்: 7:17 - உபதேசத்தை அறிந்து கொள்ளுதலைப் பற்றிய இரகசியம்.
"அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய் பேசுகிறேனோ என்று அறிந்து கொள்வான்"
புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, பாவமில்லாத தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. பாவமற்ற பூரணமான பலியானவர் பாவத்தினால் வரும் சகல ஆதிக்கங்களையும் நாம் புறம்பே தள்ளி, தவறான உபதேசங்களுக்கு விலகி, புளிப்பில்லாத வசனங்களை நாம் தியானிக்கும்போது - நாமே புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை கொண்டாடுகிறவர்களாகின்றோம்.