டிசம்பர் 06, 2012

பாஸ்போர்ட் அப்ளை பண்ண ஆலோசனை

 
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையும் குறிப்பிடவும்.

Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை) அடையாளம்

Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை குறிப்பிடவும்.

Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்.

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும்,

போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
ரேசன் கார்டு
குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதழ்: (ஏதாவது ஒன்று)

 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதழ்கள்:

10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

உங்களது பெயரை ( மதம் மாறும்போது/ எண்கணித முறையில் ) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.

நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்:

 துணை பாஸ்போர்ட் அதிகாரி க . ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை) பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார்:

பாஸ்போர்ட் விண்ணப்பித்ததிலிருந்து எத்தனை நாள் கழித்து கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு? - இரா.ஸ்ரீதர், திருப்ப த்தூர்.

”பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் கிடைக்கும். இதில், போலீஸ் விசாரணைக்கான காலம் சேராது. புது பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1,000. விரைவாக, உடனடியாக பாஸ்போர்ட் வேண்டும் என்றால் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதில் உடனே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,500.”

எனது மகள் பிறந்தநாள் 23.4.1994. இது கோயம்புத்தூர் மாநகராட் சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் 22.4.1994 என்று உள்ள து. நான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது ஒரு நாள் வித்தியாசம் உள்ளதால் தர மறுத்துவிட்டார்கள். பாஸ்போர்ட் பெற நான் என்ன செய்யவேண்டும்? - ராஜேந்திரன், கோயம்புத்தூர்.

”முதலில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சரியான பிறப்பு சான்றிதழை பெறவேண்டும். அந்த சரியான பிறப்பு சான்றிதழைக் கொண்டு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் மாற்றவேண்டும். அதன்பிறகு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.”

”எனக்கு ஒரு கம்பெனி மூலம் வெளிநாட்டுக்குப் போக வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் படித்தது நான்காம் வகுப்பு. பிறப்பு சான்று வேண்டும் என்று கேட்கிறார்கள். என்னிடம் அது இல்லை. இந்நிலையில் நான் என்ன சான்று கொடுத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்? - இரா.சுதாகரன், கோயம்புத்தூ ர்.
”எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.”

எனது பாஸ்போர்ட் புத்தகத்தில் செல்வகுமாரி என்பதற்குப் பதிலாக செல்வகுமார் என அச்சாகி உள்ளது. அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? - செல்வகுமாரி, நத்தமேடு, சிதம்பரம் தாலுகா.

”நீங்கள் கொடுத்த ஆவணத்தில் செல்வகுமாரி என்று இருந்தால், புது பாஸ்போர்ட் கட்டணம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும். ஆவணத்தில் தவறு இருந்தால் சரியான ஆவணத்துடன் மீண்டும் கட்டண ம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.”

எனது தங்கை பஞ்சாயத்து மூல ம் எழுதிவாங்கி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனது தங்கை மகன் கல்வி மாற்றுச் சான்றிதழில் (டிசி) முதல் அப்பாவின் பெயர் உள்ளது. ரேஷன் கார்டில் இரண்டாவது அப்பா பெயர் உள்ளது. பாஸ்போர்ட் எடுப்பதில் ஏதாவது சிக்கல் வருமா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

”தங்களின் தங்கை மகனின் முதல் அப்பா அதாவது, உயிர் கொடுத்த அப்பாவின் பெயருள்ள சான்றிதழ்களைக் கொடுத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டில் ரத்த உறவு கொண்ட பெற்றோர்கள் (பயோலாஜிக்கல் பேரன்ட்ஸ்) பெயர்தான் இடம்பெறும்.”

எனது மகள் திருச்சியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். எனக்கு புதுச்சேரியில் நிரந்தர முகவரி உள்ளது. திருச்சி முகவரியில் என் மகளுக்கு பாஸ்போர்ட் வாங்கினால் முகவரி மாற்ற வேண்டியது வரும். நாங்கள் எந்த முகவரியில் வாங்குவது என்று கூறவும்?- கே.உஷா கிருஷ் ணமூர்த்தி, புதுச்சேரி.

”ஒருவர் தற்போது எந்த முகவரியில் வசிக்கிறாரோ அந்த முகவரியைக் குறிப்பிட்டுதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் திருச்சி கல்லூரி முகவரியைக் குறிப்பிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளலாம். படிப்பு முடிந்தவுடன் நிரந்தர முகவரிக்கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து முகவரியை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.”

நன்றி http://vidhai2virutcham.wordpress.com

***          ***         ***

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே...

உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?

• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்,
Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,
Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும்,
Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?

இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).

3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?

ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்

. மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம்
. ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?

முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.

1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)

• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)

• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு – இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ் . பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

• வேறு சான்றிதழ்கள் கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

• 10வது மேல் படித்திருந்தால்தான் ECNR முத்திரை இருக்கும், எனவே கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டு போகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
 • மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.

சிறுவர்-சிறுமியர்

சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.

5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?

• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும் • நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை


6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?


• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)

• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)

• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)

• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்

• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்.


மேலும் தெரிந்து கொள்ள http://www.lopol.org/…/indian-passport-fee-structure-fresh-…


7) தொலைந்து போனால்?

பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.

தட்கல் திட்டம்:

பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்

அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்

• வாக்காளர் அடையாள அட்டை

• இரயில்வே அடையாள அட்டைகள்

• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்

• வங்கி அலுவலக புத்தகம்

• எரிவாயு இணைப்பிற்கான ரசீது

• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட (எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
 • சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
 • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட

மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்

 • ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்.


மேலும் விவரங்களுக்கு :http://passport.gov.in/ 

விசா பெற வழிகாட்டும் இணையத்தளங்கள்!……..


வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி,

விசா பெறுவது எப்படி? 

இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com/) வலைத்தளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ...

பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும்.
வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம்.
மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ‘நான் இந்த நாட்டு குடிமகன்’ என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு ...

இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது.

மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net/) :

எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்

********************************************************************************

பிற் சேர்க்கை: (03.04.2017)

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு ...

இந்த பதிவில் உள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு தளங்களிலிருந்து வாசகர்களுக்கு (பயனாக இருக்குமென கருதி சேகரிக்கப்பட்டு) தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி இதில் எனக்கு இதைப்பற்றிய விஷய ஞானம் அதிகமில்லை என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்களின் சந்தேகக் கணைகளுக்கு பதிலளிக்க இயலாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

மேலும், நமது தளத்தின் வாசகர்களுக்கு மேற்படி புதிய தகவல்கள் தெரிந்திருந்தால் கேள்விக் கணைத் தொடுப்போருக்கு தேவையான நல்ல தகவலை கருத்துப் பெட்டியில் பதிலளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.