நவம்பர் 07, 2014

தேவன் தம்மை வெளிப்படுத்தும் விதம்


மனிதனால் புரிந்து கொள்ள முடியாதவற்றை தேவன் வெளிப்படுத்திக் காட்டும் செயலே வெளிப்பாடு
இதனைதான் கிரேக்க மொழியில் அப்போகாலிப்சிஸ்என்பர். இதன் பொருள்திரையை விலக்கிக் காட்டுதல்என்பதாகும்.
நம்முடைய தேவன் ஏறக்குறைய 12 விதங்களில் வெளிப்பாடுகளை தந்துள்ளதை சத்திய வேதத்திலே காணமுடியும்.
1.       தூதர்கள் வழியாகஆதி 18,19; தானி 9:21-27; லூக் 1:11-20.

2.       நேரடியான தேவனிள் உரையாடல் வழியாகஆதி 3:9-19; 6:13-21; 12:1-3; யாத் 20:1-17; எரே 1:4,5.

3.       பிரபஞ்சம் / சர்வ லோகம் வழியாகசங் 19:1-3; அப் 14:15-17; ரோம 1:18-20.

4.       தீர்க்கதரிசிகள் வழியாகஎண் 12:8; உபா 34:10-12.

5.       சொப்பனங்கள் வழியாகதானி 7:1; எண் 12:6; மத் 1:20; 2:12,13,19-22.

6.       தரிசனங்கள் வழியாகஏசா 1:1; எசே 1:1; 8:3; 11:24; 43:3; அப் 9:10; 10:3-6; 10:10-16; 16:9; 19:9; 23:11.

7.       அற்புதங்களின் வழியாகயாத் 3; நியா 6:37, யோனா 1:1; 4:6.

8.       ஊரீம் தும்மீம் வழியாகயாத் 28:30; எண் 27:21.

9.       திருவுளச் சீட்டு வழியாகநீதி 16:33.

10.    வசனத்தின் வழியாக – 1 யோவா 5:9-12.

11.    பராமரிப்புகள் வழியாகசங் 136:25, மத் 5:45; 6:25,26.

12.    கிறிஸ்துவின் வெளிப்படுதல்கள் வழியாக

) பழைய ஏற்பாட்டில் கிறிஸ்து பலமுறை வெளிப்பட்டு தேவ வெளிப்படுத்துதல்களை வழங்கியுள்ளார்ஆதி 32:24-30; 48:16; யாத் 3:2; 14:19; நியா 6:11; ஏசா 37:36; தானி 3:25.
) புதிய ஏற்பாட்டில் அவதாரமாகி (மனிதனாக பிறந்து வெளிப்படுத்தல்களை வழங்கினால்எபி 1:1; யோவா 1:14,18.
பிரியமானவர்களே, இப்பொழுது ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களிடம் எப்படியெல்லாம் பேசினார், வெளிப்பாடுகளை கொடுத்தார் என்று எழுதி, பின் சிந்தித்துப்பாருங்கள். ஆச்சரியப்படுவீர்கள்
நம் தேவன் உண்மையாகவே ஜீவனுள்ள தேவன்
- Selected -