நவம்பர் 28, 2014

தேசங்களை அசைத்துக் கொண்டிருக்கிற தேவ மனிதனின் முதல் அர்ப்பணிப்பு....


# என் சொந்த தேவைகளையோ, ஊழியத் தேவைகளையோ யாரிடத்திலும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ, ஜெபக்குறிப்பு என்கிற வடிவத்தில்கூட கூறுவதில்லை.

# எந்த காரணத்தைக் கொண்டும் எந்த ரூபத்திலும் உயிரே போனாலும் சரி கடன் வாங்குவதில்லை.

# எளிமை வாழ்வினையும் தாழ்மையையும் தியாகத்தையும் என்றுமே கடைப்பிடிக்க வேண்டும்.

# கிறிஸ்துவை வாழ்ந்து காண்பித்து, பவுலின் பாதைகளை ஊழியப் பாதையாக                                                       மாற்றிக் கொள்ளவேண்டும்.

# வீண் புகழ்ச்சிக்காகவோ, மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ                                        ஒரு காரியமும் செய்யக்கூடாது.

# சத்தியத்தை கூறுவதில் எத்தனை பாடுகள் வந்தாலும் அதனை மாற்றியோ ,                                       கலப்படம் செய்தோ ஒருநாளும் பேசக்கூடாது.

# பாவத்திற்காக போராடுவதில் இரத்தம் சிந்த நேரிட்டாலும் பின்வாங்க கூடாது.

# ஆத்தும பாரம் எந்த காலத்திலும் குறையாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.

# தேவன் கட்டளையிடாத எந்த ஊழியத்தையும் செய்ய முன்வரக் கூடாது.

# கையளவு மேகம் தெரியும்வரை அல்லது முசுக்கொட்டை செடியின் நுனியில் அசைவின்                                சத்தம் கேட்கும்வரை காத்திருக்க வேண்டும் எதிலும் அவசரம் காட்டிவிடக் கூடாது.

# என்னோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு நான் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்க வேண்டும்

_"நீ இல்லாவிடில்" புத்தகத்தில் இருந்து தொகுத்தது. 




- Selcted