நீதிமொழிகள்: 29:18 - "தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவர்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்".
தரிசனம் இல்லாத இடத்தில் சீர்கேடு வரும்; அல்லது தேக்கநிலை ஏற்படும்.
எனவே, கர்த்தரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் மற்றும் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவருக்கும் தரிசனம் அவசியம் தேவை என்பதை நாம் உணரவேண்டும்.
தரிசனம் என்பது என்ன?
சுருக்கமாக சொன்னால் - "நாளைய தினத்தை பார்ப்பது"
தரிசனத்தை சொல்வதைவிட "பார்ப்பது" மிக நன்று.
- தேவனோடு இருக்கும் உறவில் பிறப்பது தரிசனம்
- தேவனோடு இருக்கும் ஐக்கியத்தில் பிறப்பது தரிசனம்
- தேவனோடு இருக்கும் ஜெபத்தில் பிறப்பது தரிசனம்
நோக்கத்தை விட ... தரிசனம் பெரியது.
தரிசனம் என்பது எண்ணிக்கையில் அல்ல. (அதாவது, சபையில் 100, 500, 1000, 3000, 5000 பேர் வருவார்கள் என்ற எண்ணிக்கையில் அல்ல)
நோக்கம் மற்றும் குறிக்கோள், இலக்கைவிட பெரியது - தரிசனம்
தரிசனம் என்பது எண்ணிக்கையில் அல்ல. (அதாவது, சபையில் 100, 500, 1000, 3000, 5000 பேர் வருவார்கள் என்ற எண்ணிக்கையில் அல்ல)
நோக்கம் மற்றும் குறிக்கோள், இலக்கைவிட பெரியது - தரிசனம்
தரிசனத்திற்குள் - "இலக்கு, நோக்கம்" உள்ளது.
கனவுக்கு பிற்பாடு வருவது தரிசனம்.
கனவு - Drems
"விருப்பம், ஆசைகள், வாஞ்சை" இதையே "கனவு - Drems" என்கிறோம்.
முதலில் நாம் கனவு காண வேண்டும். பின்பு கண்ட கனவை தரிசனமாக்க வேண்டும்.
முதலில் நாம் கனவு காண வேண்டும். பின்பு கண்ட கனவை தரிசனமாக்க வேண்டும்.
கனவு - எந்தளவுக்கு சாத்தியமானது?
50 சதவீதம் நிறைவேறக்கூடியதா? ஆம். ஆனால்,
கனவு - நிறைவேறலாம்; நிறைவேறாமலும் போகலாம்.
எனவே, கனவை தரிசனமாக மாற்ற வேண்டும்.
நம் சபையைப் பற்றிய ஒரு கனவு நமக்கு இருக்க வேண்டும்:
மூன்றாண்டுகளுக்குப் பிறகு சபையின் வளர்ச்சிநிலை எவ்வாறு இருக்க வேண்டும்?
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சபையின் வளர்ச்சிநிலை எவ்வாறு இருக்க வேண்டும்?
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சபையின் வளர்ச்சிநிலை எவ்வாறு இருக்க வேண்டும்?
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சபையின் வளர்ச்சிநிலை எவ்வாறு இருக்க வேண்டும்?
இப்போது இருக்கும் நிலை நீடித்தால் நம் காலம் முடியுமுன்னே - தேவ திட்டம், தேவ நோக்கம், தேவ ராஜ்ய தரிசனம் முழுவதும் நிறைவேறுமா? நிறைவேறாதா? அப்படியென்றால் என்ன செய்யப்பட வேண்டும்?
இப்போது இருக்கும் நிலை நீடித்தால் நம் காலம் முடியுமுன்னே - தேவ திட்டம், தேவ நோக்கம், தேவ ராஜ்ய தரிசனம் முழுவதும் நிறைவேறுமா? நிறைவேறாதா? அப்படியென்றால் என்ன செய்யப்பட வேண்டும்?
இதேபோல ... நம்மைக் குறித்தும் ஒரு கனவு இருக்க வேண்டும். நமது குடும்பத்தைக் குறித்தும் ஒரு கனவு இருக்க வேண்டும்.
- கனவை மெயப்பிக்கச் செய்வதே - "தரிசனம்". கனவு கண்டால் மட்டும் போதுமானதல்ல. கனவை தரிசனமாக மாற்ற வேண்டும்.
- நமது கனவை, வாஞ்சையை, ஆசையை - தரிசனமாக மனக் கண்களில் காண வேண்டும். அதை தரிசிக்க வேண்டும். விசுவாசக் கண்ணோட்டத்தோடு சொந்தக் கண்களால் பார்க்க வேண்டும். பின்பு அதை அப்படியே விசுவாசிக்க வேண்டும்.
ஆவிக்குரிய தலைவன்
தரிசனமுள்ளவன் தலைவனாகிறான்.
- "தான் எங்கே போகிறேன் என்று அறிந்து, அதை கண்டு ( VISION ) , அதற்கு பின்செல்கிற மக்களை உடையவன் தலைவன் ஆகிறான்"
தேவனோடு ஜெபத்தில் ஐக்கியத்தில் நல்ல உறவில் இருக்கும் தலைவனுக்கு தரிசனம் உண்டாகிறது.
தலைவனுக்கு தரிசனம் உண்டாகும்போதுதான் அது நிறைவேறும். ஏனெனில், அதை செயலாற்றும் கிருபையை தேவன் தலைவர்களுக்குள் வைத்திருக்கிறார்.
- "தலைவன் என்றால் - அவனைப் பின்பற்றக்கூடிய மக்கள் இருக்க வேண்டும். அவனே தலைவன்.தலைவன் என சொல்லக்கூடிய ஒருவரை பின்பற்றி செல்ல மக்கள் இல்லையென்றால்... அவர் சும்மா... வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார் என பொருள்" - என்கிறார் - ஜான் மேக்ஸ்வெல்
ஒரு தலைவன் தரிசனங் காண்கிறவனாக இருக்க வேண்டும். எப்படி?
ஒட்டுமொத்தமாக ஒரு முழுப் படத்தைப் பார்த்தல்
- "கழுகைப்போல மேலே இருந்து பார்ப்பவன் - தலைவன்; கீழே பார்ப்பவன் - சீஷன் அல்லது தொண்டன்"
மேலே செல்லச் செல்ல தரிசனம் விரிவாகும். கீழே போகப் போக தரிசனம் குறுகி தெரியும்.
வால்ட்டிஸ்னி என்ற ஆங்கிலேயர் தன்னுடைய கார்ட்டூன் பொம்மை உலகத்தை "டிஸ்னி லேண்ட்" என்ற பெயரில் பிரம்மாண்டமாக பார்க் ஒன்றை தொடங்க திட்டமிட்டு செயல்பட்டார். ஆனால் அதை செய்து கொண்டு இருந்த தருவாயில் பாதியில் அவர் மரித்துப்போனார். அதைத் தொடர்ந்து அவரது உதவியாளர் அப்பணியை மேற்கொண்டு சிறப்பாக செய்து முடித்தார். திறப்பு விழா கூட்டத்தின்போது... கூடிவந்த மக்கள் இதை ஸ்தாபித்த வால்ட் டிஸ்னி இன்று நம்மிடையே இல்லையே என்ற வருத்தத்தில் இருந்தனர். திறப்பு விழா செய்து வைத்த அவரது உதவியாளர் கூட்டத்தைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: "இன்று வால்ட்டிஸ்னி நம்மிடையே இல்லை என்பது வருத்தம்தான்; ஆனால், அன்றே அவர் அதைப் பார்த்து விட்டார்" என்றார்.
- இதற்கு பெயர்தான் தரினம் என்பது. தலைவன் என்பவன் எதையும் முன்கூட்டியே தரிசிப்பவன். தரிசித்ததை செய்பவன்.
நாம் எப்படி?
விரிவான பெரிதான தரிசனமுடையவர்களாய் விளங்க தீர்மானிப்போம்.
- "குன்றின்மேல் ஏறி உயரே சென்று மேய்ச்சலை பார்ப்பவன் - மேய்ப்பன்; கீழே இருக்கும் மேய்ச்சலை மட்டும் பார்ப்பது - ஆடு"
- இதற்கு பெயர்தான் தரினம் என்பது. தலைவன் என்பவன் எதையும் முன்கூட்டியே தரிசிப்பவன். தரிசித்ததை செய்பவன்.
நாம் எப்படி?
விரிவான பெரிதான தரிசனமுடையவர்களாய் விளங்க தீர்மானிப்போம்.
செயல்பாடு - Missions
செயல்பாடு என்பது - "தரிசனத்தை நிறைவேற்றப் பாடுபடுவது"
'இலக்கு' என்பது - 'மைல்கல்'
- தரிசனத்தை செயல்படுத்த - இலக்கு தேவை ; இலக்கை நிறைவேற்ற - ஆட்கள் தேவை
- கனவு தரிசனமாக வேண்டும். தரிசனம் இலக்காக மாற வேண்டும். இலக்கு செயல்பாடாக மாற வேண்டும். செயல்பாட்டை செயல்படுத்த ஆட்கள் வேண்டும்.
தலைவனைப் பின்பற்றக்கூடிய சீஷர்கள் இருக்க வேண்டும். சீஷர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். பயிற்சி பெற்றவர்கள் நாளைய தலைவர்கள் ஆக வேண்டும். தொடர்ந்து தலைவர்களை எழுப்பிக் கொண்டும், உருவாக்கிக் கொண்டும், பயிற்சி தந்து கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி நிலையை, தரிசனத்தை நிறைவேற்ற, கனவை மெய்ப்பிக்க முடியும். தலைவர்கள் இல்லாமல் வளர்ச்சியை காண இயலாது. அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செயல்படக்கூடிய தலைவர்களை எழுப்புவது மிக அவசியம்.
உருவாக்கப்பட்ட தலைவர்களில் ஒரு சிலர் விழுந்துபோகலாம்; அல்லது எதிராக மாறலாம். சோர்ந்து போய் தளர்ந்துவிடக் கூடாது. அடுத்தடுத்து நாம் தலைவர்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தேவன் நமக்கு கொடுத்த தரிசனத்தை, நோக்கத்தை தவற விடாது நிறைவேற்ற முடியும்.
சிற்சில இடறல்கள், பாடுகள், மனவேதனைகள், மனக்காயங்கள் வந்தாலும் தீங்கநுபவித்துக் கொண்டே தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டுமே தவிர, சோர்ந்துபோய் தேக்க நிலைக்கு மட்டும் போய்விடாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
சபையில் 10 பேர்தான் இருக்கிறார்கள் என்றால்... 10 பேரில் ஒருவரையாவது தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்கி கர்த்தருக்காக பயனடையச் செய்வது நம் கரத்தில் உள்ளது என்பதை மறவாதேயுங்கள்.
தரிசனம் நிறைவேற சில காரியங்கள்:
உருவாக்கப்பட்ட தலைவர்களில் ஒரு சிலர் விழுந்துபோகலாம்; அல்லது எதிராக மாறலாம். சோர்ந்து போய் தளர்ந்துவிடக் கூடாது. அடுத்தடுத்து நாம் தலைவர்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தேவன் நமக்கு கொடுத்த தரிசனத்தை, நோக்கத்தை தவற விடாது நிறைவேற்ற முடியும்.
சிற்சில இடறல்கள், பாடுகள், மனவேதனைகள், மனக்காயங்கள் வந்தாலும் தீங்கநுபவித்துக் கொண்டே தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டுமே தவிர, சோர்ந்துபோய் தேக்க நிலைக்கு மட்டும் போய்விடாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
சபையில் 10 பேர்தான் இருக்கிறார்கள் என்றால்... 10 பேரில் ஒருவரையாவது தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்கி கர்த்தருக்காக பயனடையச் செய்வது நம் கரத்தில் உள்ளது என்பதை மறவாதேயுங்கள்.
தரிசனம் நிறைவேற சில காரியங்கள்:
எங்கே போகிறோம்? - இது தரிசனம் (VISION)
என்ன செய்கிறோம்? - இது செயல்பாடு (MISSIONS)
1. திட்டமிடுதல் (PLANING)
2. செயல்படுதல் (PROCESS)
3. மக்கள் (PEOPLE)
தரிசனம் நிறைவேற இம்மூன்றை நோக்கி செல்ல வேண்டும்.
என்ன செய்கிறோம்? - இது செயல்பாடு (MISSIONS)
1. திட்டமிடுதல் (PLANING)
2. செயல்படுதல் (PROCESS)
3. மக்கள் (PEOPLE)
தரிசனம் நிறைவேற இம்மூன்றை நோக்கி செல்ல வேண்டும்.
- தகுதிக்கெற்ற தரிசனம் வேண்டும்
- பதவிக்கேற்ற தரிசனம் வேண்டும்
- இருப்பதற்கேற்ற தரிசனம் வேண்டும்
- பணம், ஆட்களை கொண்டு தரிசனம் வேண்டும்
அப்போஸ்தலர் கால திருச்சபையில் 'எழுப்புதல்' ஏற்பட காரணங்கள்:
- தங்களை வெறுமையாக்கினர்
- துணிந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்
- நற்செய்தியை பரப்புவதில் தீவிரப்பட்டனர்
- எல்லாரும் ஊழியம் செய்தனர்
- எல்லா நாளும், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் ஊழியம் செய்தனர்
- கர்த்தர் ஒருவருக்கே கடன்பட்டிருந்தனர்
- இலக்கை, கடைசி கட்டளையை நிறைவேற்றுவதில் குறியாய் இருந்தனர்
- சுவிசேஷத்தினிமித்தம் வந்த தீங்கை மன்ப்புர்வமாக ஏற்றுக் கொண்டனர்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.... இருப்பினும்...
இதுபோல... நாம்...
- ஆத்துமாவில் பானபலியாக ஊற்றப்பட அர்ப்பணிக்க வேண்டும்
- அர்ப்பணிப்பை நம்மில் கூட்ட வேண்டும்
யோவான்: 15:7 - "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்"
யோவான்: 2:5 - "... அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்..."
தரிசனத்திற்கு நேராக மக்களை ஊக்கப்படுத்தும் விதம்:
1. வேதாகம சம்பவங்களை கதைபோல சொல்ல வேண்டும்
2. உங்கள் தரிசனத்தை உருவாக்கும் இடத்திற்கு அவர்களைக் கொண்டு வாருங்கள்
3. பட்டணத்தின்மேல், ஜனத்தின்மேல் அக்கறை இருக்க வேண்டும்
4. உங்கள் தரிசனத்தை மக்கள் காணும்படிச் செய்ய வேண்டும்
5. இதயத்திற்கும், மூளைக்கும், கைக்கும் பேச வேண்டும்
அதாவது,
இதயத்திற்கு - வார்த்தை, வசனத்தால் பேச வேண்டும்
மூளைக்கு - ஏன்? எதற்கு? பகுத்தறிவுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அப்படி பார்க்கும்போது - மூளை ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசப்பட வேண்டும்
கைக்கு - கர்த்தருக்கு கொடுக்கும்படி பேச வேண்டும்
- நமக்கு கொடுக்கப்பட்ட தரிசனம் நம்முடையதல்ல. இது தேவ தரிசனம் என்பதை மக்கள் அறிவார்கள்
நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ஜீவனைக் கொடுத்து செயல்படுத்தி வருகின்றனர் என்பதை அறியுங்கள்.
"உலகை மீட்க வேண்டும் - என்பதே தேவ தரிசனம்"
அதில் நான் ஒரு ஆள் மட்டுமல்ல - உலகமே செயல்படுகிறது. நானும் அதில் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சந்தோஷமாக கர்த்தருடைய தரிசனம் நிறைவேற மனதார அர்ப்பணித்து செயல்படுவேன் என்று தீர்மானம் எடுங்கள். கர்த்தர் உங்களை பயன்படுத்துவார். தேவன் தனது தரிசனத்தை நிறைவேற்ற உங்களை கருவியாக உபயோகப்படுத்துவார். உங்கள் மூலம் தேசங்களை அசைக்கும் பல தலைவர்கள் எழும்பட்டும். ஆத்துமாக்கள் மீட்கப்படட்டும் என் வாழ்த்துகிறேன். GOD BLESS YOU.