நவம்பர் 03, 2014

தேவன் மனிதனுக்கு உதவி செய்ய வேண்டிய அவசியமென்ன?


1.  ஒரு தேவதூதன் பாதிக்கப்பட்டால் மற்ற தூதர்களுக்கு பாதிப்பில்லை.
ஒரு தூதன் பாவம் செய்தால் அது அவனை மட்டுமே பாதிக்கும்.

2. லூசிப்பர் பாவம் செய்தான்; அவனோடு சேர்ந்த தூதர்களும் பாவம் செய்தனர். எனவே, அவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டனர். மற்ற தூதர்களுக்கு இப்பாவம் ஏற்படவில்லை.

3. தூதர்களுக்கும், விழுந்துபோன தூதர்களுக்கும் சக்திகள் இருந்தன. விழுந்துபோன தூதர்கள் தேவசாயலை இழந்தனரே தவிர வல்லமையை இழக்கவில்லை.

4. லூசிப்பர் தேவனுடைய சிங்காசனத்திற்குமேல் 'போவேன்' - என நினைத்தான். கடவுளைக்காட்டிலும் மேன்மையாக இருக்க வேண்டும் என நினைத்தான்.

ஆனால்...                                                     "மனிதன்"


1. மனிதனுக்கு வல்லமை இல்லை. கடவுளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.

2. மனிதன் பாவம் செய்யும்படி லூசிப்பரினால் தூண்டப்பட்டான். சாத்தானுக்கோ... யாரும் தூண்டிவிடாமலேயே , அவனுக்குள்ளேயே அந்த எண்ணம் எழுந்தது.

3. மனிதனுக்கு தேவன் சந்ததியை உருவாக்கும் வல்லமையை கொடுத்தார். அவனுக்கு குடும்பம் உண்டு. பிள்ளைகள் உண்டு. எனவே, முதல் மனிதன் மூலம் (ஆதாம்) முழு மனுக்குலமும் பாவத்திற்குள்ளானது.

"ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்" (எபிரெயர்: 2:14-16).