நவம்பர் 15, 2014

காக்கப்பட வேண்டிய 6 காவல்கள்

10.11.2014  அன்று நாமக்கல் மாவட்ட ஊழியர் குடும்பகூடுகையில் சங்கை.ஐ.இரத்தினம் பால் - துதியின் கோட்டை ஊழியங்கள் - பாளையங்கோட்டை - தலைமை போதகர் அவர்கள் கொடுத்த தேவசெய்தி. இது நம்மில் அநேகருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தொகுத்து வழங்குகிறேன். இது 2 ஆம் பகுதி.


 

ஆறு காவல்களை போதகர் காக்க வேண்டும்:

1. கர்த்தரின் காவலைக் காக்க வேண்டும்

2. பலிபீடத்தின் காவலைக் காக்க வேண்டும்

3. ஏறெடுத்துப் படைக்கும் படைப்பின் காவலைக் காக்க வேண்டும்

4. பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்க வேண்டும்

5. ஆரோனை காவல் காக்க வேண்டும்

6. இஸ்ரவேல் புத்திரரை  காவல் காக்க வேண்டும்


ஆபகூக் - புத்தகத்தின் தியானம்

ஆபகூக் புத்தகத்தில் மூன்று அதிகாரம் மட்டுமே உள்ளது. அதை மூன்றாக பிரிக்கலாம்.

முதல் அதிகாரம் - "கண்ட பாரம்"  - அதாவது தரிசனம் கண்ட பாரம்:


அ)            கண்களை சுற்றிலும் ஏறெடுத்துப் பார். வீடுகள், அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று கிடக்கும் நோயாளிகள், ஏழைகள், கட்டுண்டுண்டவர்கள், காவலில் வைக்கப்பட்டவர்கள், கடனாளிகள், கைவிடப்பட்டோர் போன்றோரை குறித்த பாரம் நமக்கு ஏற்பட வேண்டும். அவர்களின் மீட்பைக் குறித்த பாரம் ஏற்பட வேண்டும்.

ஆ)        வட இந்தியாவைக் குறித்த பாரம், மிஷினெரிகளைக் குறித்த பாரம் நமக்கு ஏற்பட வேண்டும். மிஷன் டூர் சென்று அங்கு மீட்கப்படாத ஜனங்களை கண்டும், அவர்கள் இன்னும் அறியாதவைகளை தொழுது கொண்டிருக்கும் அறியாமைகளைக் கண்டும் பாரப்பட வேண்டும். இவர்களுக்கு இன்னும் சுவிசேஷத்தை அறிவிக்க மிஷினெரிகள் தேவை - அப்படிப்பட்டவர்களை நம் சபைகளில் எழுப்பி அனுப்ப வேண்டும் என்ற பாரம் அடைய வேண்டும்.

இ)      சபையின் பாரம் பெற வேண்டும். சபையின் தேவைகள் என்னென்ன? ஊழியத்திட்டங்கள் என்னென்ன? இலக்குகள் என்னென்ன? தரிசனம் என்னென்ன? என்பதைப்பற்றிய பாரம் பெற வேண்டும்.

இரண்டாம் அதிகாரம் - "தரிசனம் எழுதியது":

2:2 - "அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்திரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதை கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை"

தேவன் கொடுத்த திட்டங்களை, தரிசனங்களை ஜனங்கள் காணும்படி எழுதி வைக்க வேண்டும். பிரசங்கங்களை தொகுத்து புத்தகமாகவும், சி.டி-க்களாகவும், டிவிடி -க்களாகவும் வெளியிட் வேண்டும். அதன் மூலம் மக்கள் எழுப்புதலைப் பெற வேண்டும். தேவனுடைய தரிசனம் நிறைவேற இதன் மூலம் ஒரு எழுப்புதலையும், உயிர்மீட்யையும் பெறும்படி செய்ய வேண்டும்.

மூன்றாம் அதிகாரம் - "தரிசனம் பாடின விண்ணப்பம்":

பாடல் எழுத வேண்டும். அப்படிப்பட்ட வரம் இருந்தால், அதை தேவனுக்காக பயன்படுத்தி பல பாடல்களை எழுதி கர்த்தருக்கு புதுபுதுப்பாடல்களால் அவரைத் துதிக்க எழுதப்பட வேண்டும்.

சென்னையில் ஒரு சபைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அந்த சபையின் போதகர் "அம்பர உம்பர..." என ஒரு பாடலை கஷ்டப்பட்டு பாடிக் கொண்டிருந்தார். நான் அவரை அழைத்து கேட்டேன்: "அம்பர உம்பர ..." என்றால் என்ன பொருள்?" என்றேன். அதற்கு அவர் "தனக்கு தெரியாதென்றார்". நான் சொன்னேன்: "உங்களுக்கே தெரியாத பாடலை நீங்கள் ஏன் மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறீர்கள்? அர்த்தமற்ற பாடல்களை பாடுவதினால் யாருக்கு என்ன பிரயோஜனம்? இனிமேல் அர்த்தமுள்ள பாடல்களை கருத்தாய்ப் பாடுங்கள். மக்கள் அதை அறிந்து உணர்ந்து ஆவியில் நிறைந்து அபிஷேக வல்லமையோடு கர்த்தரை ஆராதிப்பார்கள்" என்றேன். அன்றையதின் அங்கே ஓர் எழுப்புதல் உண்டானது. 

பிரியமானவர்களோ! அனைவருக்கும் தெரிந்த, புரிந்த, எளிமையான பாடல்களைப் பாடி கர்த்தரை துதிக்கவும், அபிஷேகத்தில் நிறையவும் செய்யுங்கள். தந்தை.பெர்க்கமான்ஸ் அவர்கள் வந்த பிறகுதானே பாமர ஏழை மக்களும் கர்த்தரை எளிதாக பாடித் துதிக்க முடிந்தது?! எனவே, அனைவரும் ஏகோபித்து கர்த்தரைத் துதித்துப் போற்றுி பாடுகின்ற வகையில் எளிமையான பாடல்களை இயற்றுங்கள். பாடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.