எளிதில் கெடாதிருக்க சில முக்கியமான குறிப்புகள்
1. ஜெபஜீவியத்தில் அதிகமதிமாய் வளர வேண்டும் (எபேசியர்: 6:18; 1தெசலோனிக்கேயர்: 5:17)
2. தினமும் வேதம் வாசித்து தியானம் பண்ண வேண்டும் (சங்கீதம்: 1:2)
3. துன்மார்க்கரின் ஆலோசனை, உறவு, தோழமை முற்றிலுமாய் விட வேண்டும் (சங்கீதம்: 1:1)
4. மற்றவர்களின் குறையை அறிவதை முற்றிலும் வெறுக்க வேண்டும் (மத்தேயு: 7:3)
5. மற்றவர்களின் குற்றத்தை தூற்றுவதை நிறுத்த வேண்டும் (ரோமர்: 14:4)
6. உள்ளத்தில் பகையை வைக்கலாகாது (லேவியராகமம்: 19:17)
7. ஆகாத சம்பாஷனை, வீண்பேச்சு, கட்டுக்கதை வாயில் உதிக்கலாகாது (1கொரிந்தியர்: 15:33)
8. கர்த்தரால் பயன்படுத்தப்படும்போது அவருக்குள் மறைந்து வாழ வேண்டும் (அப்போஸ்தலர்: 3:12)
9. மேட்டிமை உள்ளத்தில் எழும்பலாகாது (யாக்கோபு: 4:6)
10. புகழ்ச்சியை வெறுக்க வேண்டும் (நீதிமொழிகள்: 27:21)
11. எந்த வேலையையும் எப்போதும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும் (எபேசியர்: 6:15)
12. கஷ்டத்தில் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் (2கொரிந்தியர்: 7:4)
13. பொய்யாய் பேசும்போது சந்தோஷமாய் இருக்க வேண்டும் (மத்தேயு: 5:10,11)
14. ஏழைகளை ஆதரிக்க வேண்டும் (யாக்கோபு: 1:27)
15. நெருக்கப்படுகிறவர்கள், வியாதியஸ்தர்களுக்காய் இரங்க வேண்டும் (ஏசாயா: 58:6,7)
16. ஆவியில் நிறைந்திருக்க வேண்டும் ( எபேசியர்: 5:18)
17. ஜெபம் கேட்கப்படாத வேளையிலும் விசுவாசம் வேண்டும் (யாக்கோபு: 1:3)
18. கர்த்தரை மட்டுமே நம்ப வேண்டும் (சங்கீதம்: 121:1,2)
19. ஆராதனைக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் (சங்கீதம்: 84:10; எபிரேயர்: 10:25)
20. அப்பம் பிட்குதலில், அப்போஸ்தலரின் உபதேசத்தில், ஐக்கியத்தில் நிலைத்திருக்க வேண்டும் (அப்போஸ்தலர்: 2:42)