அறிக்கை செய்ய மறுக்கும்போது நிகழ்பவை
1. தேவனோடு கூடிய ஐக்கியம் முறிந்துபோகும். தேவன் நம்முடைய பிதாவாகவே இருக்கிறார். ஆனால், அவரோடு கொண்டிருக்கும் தொடர்பு தடைபடுகிறது.2. உடன் விசுவாசிகளுடன் கூடிய ஐக்கியமும் முறிந்துபோகும்
3. தேவனுடைய இரட்சிப்பின் மகிழ்ச்சியை இழந்து போகிறோம்
4. நமது வல்லமையை இழந்துபோகிறோம்
5. பயன் விளைவிக்கத்தக்க சாட்சியை இழந்து போகிறோம். நாம் பேசாதபடி தடை செய்யப்படுகிறோம். இயேசுநாதரின் தகுதியால் நாம் பெற்ற இரட்சிப்பு நிலையானது. எனினும், இவ்வுலகில் ஊழியம் செய்யும் தகுதியை இழந்து போகிறோம்.
6. நமது பாவம் வெளியரங்கமாயிருந்தால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயருக்கு அது அவமானத்தைக் கொண்டு வரும். இரட்சகரின் எதிரிகளால் அவர் தூற்றப்படுவதற்கும் காரணமாகும்.
7. பொய்யான வாழ்க்கை வாழ்பவர்களாகக் காணப்படுவோம். உண்மையாகவே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா என்னும் ஐயத்தை நமது செயல்கள் உண்டாக்கும். உயர்ந்த பேச்சும், தாழ்ந்த நடத்தையுமாக காணப்படும். நமது பேச்சு வெண்ணெய்யைப் போலிருக்கும். நடத்தையோ வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலைப்போலிருக்கும்.
8. நாம் ஜெபம் செய்கின்ற வேளையில், அங்கே தேவனுடைய சமூகமின்றி காணப்படும்
9. நமது ஆத்துமாக்கள் எரிந்து போகாது. என்றாலும், நாம் கட்டியவைகள் எரிந்து போகும்
10. நமது வாழ்க்கையில் கப்பற்சேதத்தை உண்டு பண்ணுகிறவர்களாக இருப்போம். பின்வாங்கிப்போன ஒருவருடைய செயல், கர்த்தருடைய ஊழியத்தில் அவர் நிலைநிற்காதபடி அவருடைய எஞ்சிய வாழ்க்கையை இருட்டறைக்குள் அடைத்துப்போடும்.
11. இவ்வுலகில் நம் ஜீவனை இழந்து போவதற்கு அது காரணமாகி விடும்.
12. கிறிஸ்துவின் நியாயாசனத்திலிருந்து நாம் பெற வேண்டிய பலன்களை இழந்து போவோம்
13. கொடிய குற்ற உணர்வுடன் நாம் வாழ்கிறவர்களாயிருப்போம்.
பாவம் செய்கிற போதெல்லாம் தேவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு காலம் குற்ற உணர்விற்கு அடிமைகளாக நாம் இருக்கப் போகிறோம் என்றும், எப்பொழுது அந்தப் பாவத்தை அறிக்கை செய்யப்போகிறோம் என்றும், அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பாவம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக நமது அறிக்கையும் இருக்க வேண்டும்.
திரும்பச் செலுத்துதல்
இரட்சிக்கப்பட்ட பாவி தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளைச் சரிசெய்யும் பொருட்டு திரும்பச் செலுத்த வேண்டியவனாக இருக்கிறான். புதிய ஏற்பாட்டில் நாம் காணும் சகேயு இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக விளங்குகிறான் (லூக்: 19:8). கர்த்தருக்கு மகிமை உண்டாகும்படி நாம் இதை செய்ய வேண்டும்.
வட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த W.P.நிக்கல்சன் அனல் தெறிக்க பிரசங்கம் செய்யக்கூடியவராக இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த அவர் ஒருமுறை பிரசங்கம் செய்தபோது நூற்றுக்கணக்கானோர் இரட்சிக்கப் பட்டனர். தேவ ஆவியானவரின் வல்லமையுள்ள நடத்துதலின்படி குற்ற உணர்வைப் பெற்ற மக்கள் தங்கள் தொழிற்சாலைகளில் திருடிய இயந்திரகருவிகளை திரும்ப கொடுத்தனர். திரும்ப கொடுத்த கருவிகளை வைப்பதற்கு சில புதிய அறைகள் கட்ட வேண்டியதாயிற்று. கடைசியில், தொழிற்சாலையில் போதுமான இடமில்லாத காரணத்தால் எடுத்த பொருட்களை திரும்ப கொண்டு வராதீர்கள் என பொது அறிவிப்பு செய்தனர்.
சில சூழ்நிலைகளில் திரும்ப செலுத்த முடியாது போய்விடும். அவ்வேளைகளில் தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்வதே ஒரு கிறிஸ்தவன் செய்யக்கூடிய சிறந்த செயலாகும்.
மற்றவற்றைக் கர்த்தரிடத்தில் விட்டுவிட வேண்டும்.
நன்றி: வில்லியம் மெக் டொனால்டு