வேதாகமம் – தெரிந்ததும் தெரியாதததும் – பகுதி - 3
(1) தள்ளப்பட்ட வேதம் (Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.
(2) பர்த்தலோமேயு சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg) மரித்தப்பின் அவர் விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின் ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின் ஸ்கல்ட்ஸ்(Benjamin skalts ) என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார்.
(3) ஜெர்மனியிலிருந்து வந்த மிஷினரியான சீகன் பால்கு தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிப்பெயர்த்தவர்.
(3) 2 இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.
(4) வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது
1. மண்ணிலிருந்து ஆதாம்.
2. எலும்பிலிருந்து ஏவாள்.
3. தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.
4. கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.
(5) மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.
(6) சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.
(7) சாஸ்திரிகள்கீழேகண்டநட்சத்திரத்தைகுறித்துமத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.
(8) வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23
(9) நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.
(10) வேதத்திலே மில பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.
(11) தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.
(12) யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.
(13) “தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.
(14) தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் (Samuel Morse) முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் “Look at the great things God did" அதாவது ‘தேவன் செய்த மாபெரும் செயல்களை பாருங்கள்’ எண் 23:23.
(15) மோசே குழந்தையாக விடப்பட்ட நைல் நதியின் ( Nile River) மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.
(16) ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (Euphrates)
(ஆதியாகமம் 2:14)என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.
(17) ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” (Tigris) (ஆதியாகமம் 2:14) என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.
(18) யோர்தான் நதி (Jordan Valley) 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19.
2. 2 இரா 2:8.
3. 2 இரா 2:13,14.
(19) வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை (Mountains of Ararat) இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.
(20) தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்
1. மோசே – யாத் 35:28-30
2. இயேசு – மத் 17:2
3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56
(21) வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது
1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.
(22) “அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.
(23) லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.
(23 a) லேவியராகமத்தில் “கர்த்தர்”என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.
(24) யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.
(25) ‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.
(26) ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.
(27)
“ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.
(28) சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது – சங் 15,70,93,100,125.
(29) யூதர்கள் பழைய ஏற்பாட்டை தோரா,(Torah) நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.
(30) இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.
(31) பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது – லேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.
(32) 3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அந்திக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.
(33) வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.
(34) வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).
(35) பிதாவாகிய தேவனை “அப்பா” என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).
(36) கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா”("alpha") கடைசி எழுத்து “ஒமேகா” ("Omega") ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமும் இதுவே).
37) 2 இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.
(38) பழைய ஏற்பாட்டில் நீளமான அதிகாரம் சங்கீதம் 119 புதிய ஏற்பாட்டில் லூக்கா 1.
(39) சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது
(40) (சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது – சங் 15,70,93,100,125.
(41) நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
(42) யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.
(43) சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.
(44) தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.
(45) சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.
(46) புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.
(47) சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.
(48) சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.
(49) சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.
(50)
“சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.