“உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்”
திறவுகோல்வசனம்: அப்:
2:3 – “அல்லாமலும்
அக்கினிமயமான நாவுகள் போலப்
பிரிந்திருக்கும்
நாவுகள்
அவர்களுக்குக் காணப்பட்டு
அவர்கள் ஒவ்வொருவர்மேலும்
வந்து அமர்ந்தது”
அக்கினிமயமான
நாவுகள் காணப்பட்டது; பிரிந்திருக்கும்
நாவுகள் வந்தமர்ந்தது
பழைய ஏற்பாட்டு
காலங்களில் … 1. முட்செடியில்
எரிந்தது 2. குத்துவிளக்கில் எரிந்தது 3. பலிபீடத்தில்
எரிந்தது
புதிய
ஏற்பாட்டு காலத்தில் … நம் இதயங்களில்
பரிசுத்த ஆவியானவர் எரிய வேண்டும்.
அப்: 19:19 – எபேசு பட்டணத்தில் காணப்பட்ட
அக்கினி அசுத்த புத்தகங்களை எரித்தது பரிசுத்த
அக்கினி.
“மாயவித்தைக்காரராயிருந்தவர்களில்
அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து,
எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்;
அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.”
†
அக்கினி பற்றி எரிந்தால் வேண்டாதது எரிந்துவிடும்
†
இன்று நம் இருதயங்களில் பரிசுத்த அக்கினி பற்றி
எரிவதாக
அப்: 19:11 – “பவுலின்
கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.” – அதுபோல இன்று உங்கள் கைகளினாலே
தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்வாராக! ஆமென்! அல்லேலூயா!
1. உபா: 9:1-3 – அவர் பட்சிக்கிற அக்கினி:
†
இது தீரிக்கதரிசன
வார்த்தை.; அக்கினி செய்கிற யாவையும் அவர்
செய்கிறார்.
“இஸ்ரவேலே, கேள்:
நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத்
துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து, ஏனாக்கின் புத்திரராகிய
பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ
அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக்
கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை
அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே,
நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.”
2. ஏசா: 6:1-4 – அவர் சுட்டெரிக்கிற அக்கினி:
†
புகை எழும்புகிற
இடத்தில் அக்கினி இருக்கும். ஆலயத்தில் புகை எழும்பிற்று. அப்படியானால், ஆலயத்தில்
அக்கினி இருந்தது என பொருள்.
“உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல்
வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள்
அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன;
அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை
மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்,
பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று
கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து,
ஆலயம் புகையினால் நிறைந்தது.”
3. ஏசா: 6:6,7 –
பரிசுத்தாவியானவர் அக்கினிமயமாக இருக்கிறார்:
“அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து,
தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து,
அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி,
உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.”
ஆவியானவர் அக்கினிமயமாக
இருக்கிறார்; அவர் நமக்குள் இராவிட்டால் …
நாம் அசுத்தமுள்ளவர்களாக இருப்போம்.
4. 1தீமோ: 2:21,22 –
பெந்தேகொஸ்தே அக்கினி – சுத்திகரிக்கிற அக்கினி:
“ஆகையால் ஒருவன்
இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால்,
அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான
கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி,
சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே,
நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.”
5. வெளி: 1:14 – அவரது
கண்கள் அக்கினி ஜுவாலை:
“அவருடைய சிரசும்
மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;”
தேவனுடைய அக்கினியினால் தேவாலயங்கள் இணைக்கப்படுகின்றன; தேவனுடைய
அக்கினியினால் தேவனுடையவர்கள்
இணைக்கப்படுகிறார்கள். (வெளி: 1:4,11,13 – ஏழுசபைகள், நிலையங்கி தரித்தவர்
ஒருங்கிணைக்கிறார்)
6. லூக்: 24:32 –
கொளுந்து விட்டு எரியும் அக்கினி:
“அப்பொழுது அவர்கள்
ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே
பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே
கொழுந்துவிட்டு எரியவில்லையா”
7. அப்: 2:42-44 –
ஐக்கியத்தை தருகிற அக்கினி:
“அவர்கள் அப்போஸ்தலருடைய
உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்,
அப்பம் பிட்குதலிலும்,
ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். எல்லாருக்கும் பயமுண்டாயிற்று.
அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும்
செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து
அநுபவித்தார்கள்.”
ஐக்கியத்தை மட்டுமல்ல அற்புத அடையாளங்களை கொண்டு வந்த அக்கினி.
அப்: 3:11 – “குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில்,
ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம்
என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.”
பரிசுத்த ஆவியானவரின்
வல்லமை, அவரது நிறைவு, அவரிடத்தில் இணைப்பை, பிணைப்பை கொண்டு வந்தது. ஜனங்களை
ஒருங்கிணைக்கிறது.
இரண்டு வகை சபை உண்டு.
1.
பரிசுத்த ஆவியானவரின்
அக்கினி சபையை ஒருங்கிணைக்கலாம்
2.
பனிபோல உறைந்து கிடந்து
ஒருங்கிணைக்கலாம்
இதில் எவ்வகை சிறந்தது என
நீங்களே தீர்மானியுங்கள்.
ஒருவனுக்குள் பரிசுத்த அக்கினி எரிந்தால் – சாதாரண மனிதன் அசாதாரண மனிதனாக மாறுவான்.
ஒரு சபைக்குள் பரிசுத்த அக்கினி எரிந்தால் – சாதாரண சபை அசாதாரண சபையாக மாறும்
நாம் என்ன செய்யப் போகிறோம்?