மார்ச் 28, 2019

பழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்



Image result for old testament images

பஞ்சாகமம்நியாயப்பிரமாணம், சட்டங்கள் 

(ஆசிரியர்: மோசே)

ஆதியாகமம்:

·         பொருளடக்கம்: ஆரம்பங்களின் சரித்திரம், முற்பிதாக்களின் காலம்
·         கருப்பொருள்: ஆரம்பங்கள்
·         புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்கள்: 3:15 – ஸ்திரீயின் வித்து உலக இரட்சகராய் வெளிப்படுவார்

யாத்திராகமம்:

·         பொருளடக்கம்: அடிமைத்தனத்திலிருந்து மீட்பு, பாவத்திலிருந்து மீட்பு
·         கருப்பொருள்: மீட்பு
·         புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்கள்: மோசே,பஸ்கா,செங்கடலை கடத்தல், பிரதான ஆசாரியன் – இயேசு கிறிஸ்துவின் முன் அடையாளங்கள்

லேவியராகமம்:

·         பொருளடக்கம்: பிராயச்சித்தம்(பலிகள்), பரிசுத்தம்
·         கருப்பொருள்: பரிசுத்தம்,நீதி,உடன்படிக்கை
·         புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்கள்: பலி – கிறிஸ்து

எண்ணாகமம்:

·         பொருளடக்கம்: இஸ்ரவேலரின் 39 வருட பாடுகள் நிறைந்த வனாந்திரபயண விபரம்.
·         கருப்பொருள்: வனாந்திர அலைச்சல்கள்
·         “தெய்வீக ஒழுக்க புத்தகம்” என் அழைக்கலாம். தமது சொந்த ஜனங்களாய் இருந்தாலும் தவறு செய்ததால் தேவன் தண்டித்தார்.

உபாகமம்:

·         கருப்பொருள்: உடன்படிக்கை புதுப்பிக்கப்படல்
·         பொருளடக்கம்: உடன்படிக்கை, மோசேயின் கடைசி நாட்களின் விபரம்
·         இதற்கு முந்திய புத்தகங்களில் சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை “நினைவுகூறும்படி” இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்த புத்தகம் எழுதப்பட்டது.


சரித்திர ஆகமங்கள்

யோசுவா:

·         கருப்பொருள்: தேவனுக்கு கீழ்ப்படிதல், தேவனுடைய வழிநடத்துதல்
·         பொருளடக்கம்: வாக்குத்தத்த நிறைவேறுதல் (கானான்)
·         புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்:
-  ராகாபின் வீட்டு ஜன்னலில் கட்டியிருந்த சிவப்பு நூல் இயேசு கிறிஸ்து சிந்தின இரத்தத்திற்கு அடையாளமாக இருக்கிறது.
-  யோசுவா கிறிஸ்துவுக்கு முன்னடையாளமானவன். யோசுவா ஜனங்களை வெற்றிக்கு நேராக நடத்தினவன். (ரோமர்:8:37)
-  யோசுவா சுதந்தரத்தை பங்கிடுவது போல கிறிஸ்துவும் பிதா கொடுக்கும் சுதந்தரத்தை பங்கிடுபவராக இருக்கிறார். (எபேசியர்:1:12-14)

நியாயாதிபதிகள்:

·         கருப்பொருள்: தேவனுடைய மீட்பு, தேவ ஜனங்களின்  கீழ்ப்படியாமை
·         பொருளடக்கம்: இஸ்ரவேலரை ஒடுக்கினவர்களும், மீட்டவர்களும்; மார்க்க மற்றும் ஒழுக்க சீர்கேடுகள்
·         சிறப்பம்சம்: ஒரு சுழற்சியை புத்தகம் முழுவதும் காண்கிறோம்.
     


-    பெலவீனமான மனிதர்கள் பொருள்களைக் கொண்டு தேவன் வெற்றி தந்தார்.
Ø  இடது கை பழக்கமான ஏகூத் (3:25)
Ø  சம்கார் பயன்படுத்திய தாற்றுக்கோல் (3:31)
Ø  யாகேல் பயன்படுத்திய கூடார ஆணி (4:21)
Ø  கிதியோனுடன் 300 பேர், எக்காளம்,வெறும்பானை,தீவட்டி(7:16)
Ø  சிம்சோன் பயன்படுத்திய கழுதையின் தாடை எலும்பு (15:15)
-    வேதத்திலேயே முதல் ஞானஅர்த்தமுள்ள கதையை 9:8-15 காண்கிறோம்.
-    இஸ்ரவேலரை ஒடுக்கினவர்கள் – மீட்டவர்கள்
எண்
ஒடுக்கினவர்கள்
மீட்டவர்கள் (இரட்சகன்)
ஆதாரம்
1.
மெசொப்பொத்தாமியர்
ஒத்னியேல்
3:7-11
2.
மோவாபியர்
ஏகூத்,சம்கார்
3:12-31
3.
கானானியர்
தெபோராள்,பாராக்
4:1,5:31
4.
மீதியானியர்
கிதியோன்
6:1,9:57
5.
அம்மோனியர்
யெப்தா
10:1,12:15
6.
பெலிஸ்தியர்
சிம்சோன்
13:1,16:31

ரூத்:

·         கருப்பொருள்: மனவுறுதி,ஞானமுள்ள தெரிந்தெடுத்தல்,மீட்டுக்கொள்ளும் அன்பு
·         பொருளடக்கம்: உறவின் முறை மீட்பு, இஸ்ரவேலரின் பழக்கவழக்கம்
·         சிறப்பம்சம்:
-  “அன்பின் கதை” மருமகளுக்கும் மாமிக்கும் இடையே உள்ள அன்பு
-  பெண்ணின் பெயரை தலைப்பாக கொண்ட முதல் புத்தகம்
-  தேவனுடைய மீட்பின் திட்டம் புறஜாதியரையும் உள்ளடக்குகிறது என்பதை விவரிக்கிறது.
-  இப்புத்தகத்தின் தலைச்சிறந்த வசனம் – 1:16 – ரூத்தின் அறிக்கை
-  வேதத்திலேயே எந்த தீர்க்கதரிசனமும் கர்த்தருடைய வார்த்தையும் இல்லாத முதல் புத்தகம்.
·         புதிய ஏற்பாட்டில் நிறைவேறுதல்கள்:
-    உறவின் முறையாளை மீட்டுக்கொள்ளும் போவாஸ் இயேசுவுக்கு முன்னடையாளம்.
-    ரூத் தேவனுடைய மீட்பின் திட்டத்தில் தாவீதின் முன்னோர்களை பெற்றெடுக்கும் தாயாக தெரிந்தெடுக்கப்படுகிறாள்.

1 சாமுவேல்:

·         கருப்பொருள்: தேவனுடைய ஆளுகையின் மேன்மை
·         பொருளடக்கம்:   நாட்டின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட பெரிய மாறுதல்கள்
·         சிறப்பம்சம்:
-    இப்புத்தகத்தில் தான் வேதாகமத்தில் முதல் முறையாக “சர்வ வல்லமையுள்ள கர்த்தர் (சேனைகளின் கர்த்தர்)” (1:3) என்கிற பதம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
·         புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்:
-    இஸ்ரவேலின் ராஜாவாகிய மேசியாவுக்கு பழைய ஏற்பாட்டு முன்னோடியான மாதிரியாக தாவீது வெளிப்படுத்தப்பட்டான்.
-    புதிய ஏற்பாட்டு இயேசுகிறிஸ்துவை “தாவீதின் குமாரன்” (மத்:1:1,9:27,21:9) என்றும் “தாவீதின் சந்ததி” (ரோமர்:1:4) என்றும் தாவீதின் வேரும் சந்ததியும் (வெளி:12:16) என்றும் அழைக்கிறது.

2சாமுவேல்:

·         கருப்பொருள்: தாவீது ராஜாவின் ஆட்சி
·         பொருளடக்கம்: தாவீதின் வெற்றிகள், தாவீதின் மீறுதல்கள், தாவீதின் துன்பங்கள்

1இராஜாக்கள்:

·         கருப்பொருள்: தேவனுடைய உடன்படிக்கையை காத்துக்கொள்ளுதல்
·         பொருளடக்கம்: சாலொமோன் ஆட்சி, பிரிக்கப்பட்ட இராஜ்யம்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்:
-    நமக்காக தேவனால் ஞானமான இயேசுகிறிஸ்துவை முன்குறிக்கும்படி பலரும் வியக்கத்தகும்படி சாலொமோன் ஞானமுள்ளவனாயிருந்தான். (1கொரி:1:30)
-    தீர்க்கதரிசியாகிய எலியா கிறிஸ்துவுக்கு பாதையை செவ்வைபண்ண வந்த யோவான்ஸ்நானகனுக்கு முன்னடையாளமாக இருக்கிறார்.

2இராஜாக்கள்:

·         கருப்பொருள்: இஸ்ரவேலரின் பாவம் – தேவ கோபம்
·         பொருளடக்கம்: பிரிக்கப்பட்ட இராஜ்யத்தின் வரலாறு

1நாளாகமம்:

·         கருப்பொருள்: மீட்பின் வரலாறு
·         பொருளடக்கம்: தாவீது ராஜாவின் வம்சம், தாவீதின் ஆட்சி காலம்
·         சிறப்பம்சம்:
-    தேவன் தாவீதோடே பண்ணிய உடன்படிக்கை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவின் நம்பிக்கையின் மையமாக வலியுறுத்தப்படுகிறது.

2நாளாகமம்:

·         கருப்பொருள்: உண்மையான ஆராதனை, உயிர்மீட்சி, சீர்திருத்தம்
·         பொருளடக்கம்: சாலொமோனின் ஆட்சி காலம், சாலொமோனுக்கு பின் வந்த ஆட்சி
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்:
-    தாவீதின் ராஜ்யம் அழிக்கப்பட்டாலும் அவன் வம்சாவழி காக்கப்பட்டது. இவற்றின் நிறைவேறுதல் இயேசுகிறிஸ்துவில் காணப்படுகிறது. (மத்:1:1, லூக்:3:23-38)

எஸ்றா:

·         கருப்பொருள்: சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து ஆலயத்தை மீண்டும் கட்டுதல்
·         பொருளடக்கம்: செருபாபேல் தலைமையில் திரும்பி வருதல், எஸ்றா தலைமையில் திரும்பி வருதல்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்:
-       யூதமக்கள் சிறையிருப்பிலிருந்து திரும்புவது இயேசுவினால் உண்டாகும் மன்னிப்பிற்கும், மீட்பிற்கும் அடையாளமாக உள்ளது.
·         சிறப்பம்சம்:
-       யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பியதற்கான ஒரே ஆதாரம் எஸ்றா, நெகேமியா புத்தகம் மட்டுமே.
-       இப்புத்தகத்தின் 2 பிரிவுகளுக்குள்ளே அதிகாரம் 6 – 7 இடையே 60 வருட கால இடைவெளி என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

நெகேமியா:

·         கருப்பொருள்: எருசலேம் அலங்கத்தை திரும்ப கட்டுதல்
·         பொருளடக்கம்: நெகேமியாவின் அரசு வாழ்க்கை, எருசலேம் அலங்கத்தை கட்டுதல்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்:
-       யூதமக்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி பழைய நிலைக்கு மாறுவதற்காக அடிப்படைப்படிகள் நிறைவேறியுள்ள காரியம் புதிய ஏற்பாட்டு இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு அவசியமானது.
·         சிறப்பம்சம்:
-    52 நாட்களுக்குள் இடிந்த அலங்கம் கட்டப்பட்டது.

எஸ்தர்:

·         கருப்பொருள்: காண்கிற தேவன்
·         பொருளடக்கம்: யூதர்கள் பயமுறுத்தப்பட்டு விடுவிக்கப்படுதல்
·         சிறப்பம்சம்:
-    நம் நாட்டின் பெயர் (இந்து தேசம்) கூறப்பட்டுள்ள புத்தகம். (1:1)
-    பெண்ணின் பெயரை தலைப்பாக கொண்டுள்ள 2 வது புத்தகம்.
-    திறவுகோல் வசனம்: 4 :14
-    இப்புத்தகத்தில் தேவனுடைய பெயர் காணப்படாவிட்டாலும் ஒவ்வொரு வார்த்தையிலும் மறைந்திருந்து பேசுவதை காண முடியும்.

செய்யுள் ஆகமங்கள்

யோபு:

·         கருப்பொருள்: தேவனுடைய ஆளுகை
·         பொருளடக்கம்: யோபுவின் சோதனையும் முடிவும்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்:
-    யோபு அறிக்கை பண்ணுகிற மீட்பர் (19:25-27) இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகின்றன.
·         சிறப்பம்சம்:
-    மற்ற எந்த பழைய ஏற்பாட்டு புத்தகங்களை காட்டிலும் இப்புத்தகத்தில் நீதிமானை குறைகூறுகிற பிசாசின் “குறைகூறுதல்” விவரிக்கப்பட்டுள்ளது.

சங்கீதம்:

·         கருப்பொருள்: துதி, ஆராதனை, ஜெபம், தேவனுடைய வார்த்தை, தேவ ஜனங்களின்  பாடுகள், மீட்பு
·         பொருளடக்கம்:
எண்
5 ஆகமம்
திறவுகோல்
ஆதாரம்
1.
ஆதியாகமம்
மனிதன்
1-41
2.
யாத்திராகமம்
விடுதலை
42-72
3.
லேவியராகமம்
பரிசுத்தம்
73-89
4.
எண்ணாகமம்
அலைந்து திரிதல்
90-106
5.
உபாகமம்
தேவனின் வார்த்தை
107-150

·        புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (2,8,16,22,40,41,45,68,69,89,102,109,118)
-    இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசி,ஆசாரியர்,ராஜா (110)
-    இயேசுகிறிஸ்துவின் 2 வருகைகள்
-    அவருடைய குமாரத்துவம்,குணாதிசயங்கள்
-    அவருடைய பாடுகள்,பரிகாரபலி,உயிர்த்தெழுதல்
·         சிறப்பம்சம்:
-    வேதத்தில் மிக நீளமான புத்தகம்; பெரிய அதிகாரத்தை கொண்டது (119); வேதத்தின் மைய வசனம் (118:8)
-    வேதத்தில் “அல்லேலூயா” என்ற பதம் 28 முறை வருகிறது. அதில் 24 முறை இப்புத்தகத்தில் தான் வருகிறது.
-    புதிய ஏற்பாட்டில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரே பழைய ஏற்பாட்டு புத்தகம் இது மட்டுமே.

நீதிமொழிகள்:

·         கருப்பொருள்: சரியான வாழ்விற்கான ஞானம்
·         பொருளடக்கம்: ஞான போதனைகள்
·         சிறப்பம்சம்:
-        இப்புத்தகத்தில் கூறப்பட்ட பெரும்பான்மையான ஆலோசனைகள் ஒரு தகப்பன் தன் மகனுக்கு கொடுப்பது போல உள்ளது.
-        தேவனுக்கு பயப்படுதல் என்பது அடிக்கடி இப்புத்தகத்தில் வலியுறுத்தப்படுகிறது.
-        எல்லா தலைமுறைக்கும் ஒத்துபோகக்கூடிய கொள்கைகளை போதிக்கிறது.

பிரசங்கி:

·         கருப்பொருள்: மாயை
தேவனைவிட்டு விலகி மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் மனிதனின் வீண் முயற்சியின் வெறுமையை விளக்குகிறது.

உன்னதப்பாட்டு:

·         கருப்பொருள்: விவாகத்தில் அன்பு
மணவாளனாகிய சாலொமோன் மணவாட்டியாகிய சூலேமித்தியாளை பார்த்து பாடுவது போல் அமைந்துள்ள இப்புத்தகம், மணவாளனாகிய இயேசுவையும் மணவாட்டியாகிய சபையையும் குறிக்கிறது.

தீர்க்கதரிசன ஆகமம்

ஒரே காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளும், இராஜாக்களும்

வடக்கு இராஜ்ஜியம்
இராஜாக்கள்
தீர்க்கதரிசிகள்
யெரோபெயாம் 2
         யோனா,ஓசியா,ஆமோஸ்  
பெக்கா
மீகா
ஓசெயா
மீகா

தெற்கு இராஜ்ஜியம்
இராஜாக்கள்
தீர்க்கதரிசிகள்
யோவாஸ்
யோவேல்
அமத்சியா
யோவேல்
உசியா
யோவேல்
யோதாம்
யோவேல்
ஆகாஸ்
ஏசாயா
எசேக்கியா
ஏசாயா
மனாசே
ஏசாயா
யோசியா
எரேமியா,ஆபகூக்,செப்பனியா
யோவாகாஸ்
எரேமியா
யோயாக்கீம்
எரேமியா
யோயாக்கீன்
எரேமியா
சிதேக்கியா
எரேமியா

புத்தகம் எழுதிய 16 தீர்க்கதரிசிகள்
எண்
தீர்க்கதரிசிகள்
சிறப்பு பெயர்
1
ஏசாயா
பழைய ஏற்பாட்டு சுவிசேஷகன்
2
எரேமியா
கண்ணீரின் தீர்க்கன்
3
எசேக்கியேல்
தரிசனத்தீர்க்கதரிசி
4
தானியேல்
ஞானத்தீர்க்கதரிசி
5
ஓசியா
அன்பின் தீர்க்கதரிசி
6
யோவேல்
பெந்தெகொஸ்தே தீர்க்கன்
7
ஆமோஸ்
நீதியின் தீர்க்கன்
8
ஒபதியா
பரியாசக்காரனை கடிந்துகொண்ட தீர்க்கன்
9
யோனா
முழு உலகத்தீர்க்கன்
10
மீகா
ஏழைகளின் தீர்க்கன்
11
நாகூம்
கவிஞன்
12
ஆபகூக்
தத்துவ மேதை
13
செப்பனியா
மேடைப்பேச்சாளன்
14
ஆகாய்
தேவாலயத்தீர்க்கன்
15
சகரியா
ஞான திருஷ்டிக்காரன்
16
மல்கியா
விரிவுரையாளன்

ஏசாயா:

·         கருப்பொருள்: நியாயத்தீர்ப்பு, இரட்சிப்பு (பாவத்தின் தண்டனை,பரிகாரம், மேசியாவின் வருகை)
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)
·         சிறப்பம்சம்:
-    சிருஷ்டிப்பு முதல் புதிய வானம், புதிய பூமி கருத்துகள் கொண்ட பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகம்.
-    ஏசாயா 53ம் அதிகாரத்தில் ஏசாயா கண்ட சிலுவை தரிசனமே இயேசுவின் மரணத்தை குறித்து வேதத்திலேயே மிக தெளிவாக விளக்கப்பட்ட பகுதி.

எரேமியா:

·         கருப்பொருள்: இஸ்ரவேல் ஜனங்களின் பின்மாற்றமும் நியாயத்தீர்ப்பும்

புலம்பல்:

·         கருப்பொருள்: எரேமியாவின் புலம்பல்,பாடுகள்

எசேக்கியேல்:

·         கருப்பொருள்: தேவனுடைய நியாயத்தீர்ப்பும் தேவனுடைய மகிமையும்
·         பொருளடக்கம்: நியாயத்தீர்ப்பை குறித்த தீர்க்கதரிசனங்கள், ஆசீர்வாதங்கள்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்:
-    17:22,23 – கேதுருவின் நுனிக்கிளை இயேசுவை குறிக்கிறது.
-    34:11-31 – மேய்ப்பன் இயேசுவை குறிக்கிறது.
·         சிறப்பம்சம்:
-    பழைய ஏற்பாட்டிலேயே அதிகமான காலங்களை உள்ளடக்கிய புத்தகம் இது.
-    “அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள்” (65 முறை)
-    “கர்த்தருடைய மகிமை” (19 முறை)
-    இப்புத்தகத்தில் எசேக்கியேல் “மனுஷகுமாரன்” என்றும் “காவலாளன்” என்றும் சொல்லப்படுகிறான்.

தானியேல்:

·         கருப்பொருள்: தேவனின் மேலான அதிகாரம், ஆளுகை (5:23;4:37)
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)

ஓசியா:

·         கருப்பொருள்: தேவனுடைய நியாயத்தீர்ப்பும் அவரது மீட்பின் அன்பு
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)

யோவேல்:

·         கருப்பொருள்: கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்:
-    பரிசுத்தாவியின் அபிஷேகம்: அப்:2:4
-    கடைசிகாலங்களில் வானத்தில் காணப்படும் அடையாளம் (யோவேல்:2:30,31)
·         சிறப்பம்சம்:
-    பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பற்றி தீர்க்கதரிசனம் இதில் சொல்லப்பட்டுள்ளது.

ஆமோஸ்:

·         கருப்பொருள்: தேவனுடைய நியாயமான நியாயத்தீர்ப்பு
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)

ஒபதியா:

·         கருப்பொருள்: ஏதோம் தேசத்தின்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)
·         சிறப்பம்சம்: மிகச்சிறிய புத்தகம் (அதி:1)

யோனா:

·         கருப்பொருள்: தேவனது மீட்கும் கிருபையின் அகலம்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)
·         சிறப்பம்சம்: இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

மீகா:

·         கருப்பொருள்: தேவஜனங்களின் பாவம்,தேவனுடைய கடுமையான நியாயத்தீர்ப்பு, அவர் அருளும் இரட்சிப்பு
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)
·         சிறப்பம்சம்: மேசியாவின் பிறப்பிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகூம்:

·         கருப்பொருள்: யூதாவை ஆறுதல்படுத்ததல்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)

ஆபகூக்:

·         கருப்பொருள்: விசுவாச வாழ்வின் மகத்துவம்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)

செப்பனியா:

·         கருப்பொருள்: கர்த்தருடைய நாள் (அ) நியாயத்தீர்ப்பு
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)
·         சிறப்பம்சம்: தனது வம்ச அட்டவணையை விவரித்துகூறி தான் எசேக்கியா ராஜாவின் கொள்ளுபேரன் என்பதை தெளிவுப்படுத்தும் ஒரே தீர்க்கதரிசி.

ஆகாய்:

·         கருப்பொருள்:  தேவாலயம் திரும்பக் கட்டப்படுதல்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)

சகரியா:

·         கருப்பொருள்: தேவாலயத்தை கட்டி முடித்தலும், மேசியாவை குறித்த வாக்குத்தத்தங்களும்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)
·         சிறப்பம்சம்:
-    பழைய ஏற்பாடு முழுவதிலும் ஏசாயா புத்தகத்துக்கு அடுத்தபடியாக மேசியாவைக் குறித்த அதிக தீர்க்கதரிசனங்களை கொடுப்பது சகரியா புத்தகமே.

மல்கியா:

·         கருப்பொருள்: கண்டிப்பும், தெய்வீக அன்பும்
·         புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்கள்: (Refer வேதாகம வாய்ப்பாடு)
·         சிறப்பம்சம்:
-    “சேனைகளின் கர்த்தர்” என்னும் வார்த்தை இதில் 20 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

-    பழைய ஏற்பாடு 5 முக்கிய சத்தியங்களை வலியுறுத்துகிறது.
1.      தேவன் இஸ்ரவேலரை தெரிந்துகொள்ளுதல் (1:2)
2.      தேவனுக்கு விரோதமாக இஸ்ரவேலர் மீறுதல் செய்தல் (1:6)
3.   மேசியாவின் வருகை (3:1)
4.      புற ஜாதிய தேசங்கள் மேல் வரும் உபத்திரவங்கள் (4:1)
5.      இஸ்ரவேலர் தேவனால் சுத்திகரிக்கப்படுதல் (3:2-4)

இந்த 5 சத்தியங்களும் மல்கியாவில் ஒருங்கே காணப்படுவதால் இதை “சிறிய பழைய ஏற்பாடு” என்று அழைக்கப்படலாம்.
-    மக்கள் தேவனிடம் கேள்வி கேட்டு பதில் பெறுவது போலவும், தேவன் கேள்விகளை கேட்டு மக்களிடமிருந்து பதிலை பெறுவது போலவும், 23 கேள்விகள் இப்புத்தகத்தில் மாறிமாறி கேட்கப்பட்டு பதில் கொடுக்கப்படுகிறது.