மார்ச் 16, 2019

மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும்


                                “மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும்”                                
 The price of redemption - redemption of the material

திறவுகோல்வசனம்:              ரோமர்: 5:15 – “… மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது”.
ஒரு அடிமை அல்லது ஒரு போர்க்கைதியை மீட்பதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இது சம்பந்தமாக நாம் பார்க்கும்போது, அது அரைச்சேக்கல் வரி என்கிற வீதத்தில் தன்தன் உயிரை மீட்கும் காணிக்கையாக ஆண்டவருக்குச் செலுத்த வேண்டியது அவசியம். பின் வரும் வேதவசனங்களை நன்கு வாசித்துப் பாருங்கள்:

யாத்திராகமம்: 30:12 – “நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்”.

யாத்திராகமம்: 30:13-15 – “எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்க வேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்”.

யாத்திராகமம்: 30:14 – “எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டும்”.
யாத்திராகமம்: 30:15 – “உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்”.

ஐசுவரியவான் ஆனாலும், தரித்திரனானாலும் மீட்கும் பொருளாக இருவருக்கும் சமமாக அரைச்சேக்கல் செலுத்த வேண்டும் என காண்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் மீட்பிற்கு விலையாக எதை? எவ்வளவு? எதற்காக? கொடுத்தனர்?

1.   தனது மாடு இன்னொருவனைக் கொன்றதால், அந்த உயிருக்கு ஈடாக செலுத்த வேண்டிய அபராதம்:              
     யாத்திராகமம்: 21:30 – “அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதனால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்”.

2.   மனிதனின் முதற்பேற்றை மீட்கக் கொடுத்த பணம்:                                                             
      எண்ணாகமம்: 18:15 – “மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்க வேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்க வேண்டும்”.
3.   அடிமையான தன் இனத்தானை, குடும்பத்தார் மீட்கக் கொடுக்கும் பணம்: (லேவியராகமம்: 25:47-51)

லேவியராகமம்: 25:51 – “… அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்”.

4.   அடகு வைத்ததை மீட்கக் கொடுத்த தொகை: (லேவியராகமம்: 25:25-28)
லேவியராகமம்: 25:26,27 – “… தானே அதை மீட்கதக்கவனானால், அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப் போகக்கடவன்”.

இத்தகைய பொருள் தரக்கூடியதற்கு அடிப்படையான எபிரேய மூலபாஷை “Koper” என்பதாகும். அதேபோல, இன்னொரு எபிரேய சொல்லும் இதற்கு அடிப்படையாக இருக்கிறது. அது “Asam” என எபிரெய மொழியிலும், “Trespass Offering” (டிரஸ்பாஸ் ஆஃபரிங்) எனவும் அழைக்கப்படுகிறது. அதன் பொருள் குற்றநிவாரணபலி என்பதாகும்.

1.   கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்தால், குற்றநிவாரணபலியாக செலுத்த வேண்டிய அபராதம்:
லேவியராகமம்: 5:15-18 – “ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்ற நிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்து, பரிசுத்தமானதைத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாக ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான். அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்”.

2.   தன் அயலானுக்கு மாறாட்டம் பண்ணி, பலாத்காரமாய் பறித்துக் கொண்டதினிமித்தம் செலுத்த வேண்டிய அபராதம்:
லேவியராகமம்: 6:2-7 – “ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம் பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக் கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண் செய்து, அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்ததும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ் செய்தானேயாகில், அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியினால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக் கொண்டதையும், இடுக்கண் செய்து பெற்றுக் கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டு வருவானாக. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக் காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்”.

3.   குற்றநிவாரணபலி:
லேவியராகமம்: 7:1-7 – “குற்றநிவாரண பலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்பட வேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து, அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்பட வேண்டும்; அது மகா பரிசுத்தமானது. பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்”.

4.   கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களை செய்தால் செலுத்த வேண்டிய அபராதம்:
எண்ணாகமம்: 5:5-8 – “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின் முதலோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய்க்கூட்டி, தான் குற்றஞ’செய்தவனுக்குச் செலுத்தக்கடவன். அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேர வேண்டும்”.

5.   குற்றநிவாரணபலியான இயேசுகிறிஸ்து:
ஏசாயா: 53:10 – “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக் கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்”.
மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா குற்றநிவாரண பலியைச் செலுத்தும்போது, இயேசு இந்த வசனத்தை (ஏசாயா: 53:10,11 – “… அநேகர்…”) மனதிற் கொண்டிருந்தார் என கருத இடமுண்டு. ஏசாயா: 53:11 – “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய   அக்கிரமங்களை தாமே சுமந்து கொள்வார்”. இந்த வசனத்தை இயேசு காணும்போது, தம்மை மற்றவரின் பாவத்திற்காக பாடுபடுகிறவராகப் புரிந்து கொண்டார் எனலாம். இப்படி பதிலாளாகப் பாடுபடுவது, அநேகருக்காக தம் தந்தையாகிய பிதாவுக்கு தன்னையே பலியாக படைப்பது என்பதை பழைய ஏற்பாட்டிலிருந்தல்ல … அவர் பாடுபட்ட வரலாற்றிலிருந்து புதிய ஏற்பாட்டிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மாற்கு: 14:36 – “அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்”.
மாற்கு: 15:34 – “ஒன்பதாம் மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்”.

ரோமர்: 5:15 – “… மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது”.

மத்தேயு: 20:28 – “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்”.

1தீமோத்தேயு: 2:6 – “எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது”.

மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே என்பதை இந்த ஆய்வின்மூலம் அறிகிறோம்.