ஜெப ஆலயங்கள் யூதர்கள் பாபிலோனில் சிறை சென்றபோது உருவானதாகும். எனவே, யூதர்கள் இருந்த இடங்களிலெல்லாம் ஜெபாலயங்கள் இருந்தன. இவைகள் நற்செய்தி ஊழியத்தின் மைய இடங்களாக உபயோகிக்கப்பட்டன. அப்போஸ்தலர்: 13:5; 17:17; 4:1 - "சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபாலயங்களில் தேவ வசனத்தை பிரசங்கித்தார்கள்".
2. வெளிப்பிரசங்கம்:
ஊர்புறம், கொல்லைப்புறம், திறந்தவெளி, ஆற்றங்கரை, சந்தைவெளிகள் ஆகிய இடங்களில் பேசுவது யூதர்களுடைய வழக்கமாயிருந்தது. ஆதிச்சபை இம்முறையை பின்பற்ற அரம்பித்தது. அப்போஸ்தலர்: 5:11-14; 8அதிகாரம், 16:13; 17:17.
(மின் தடை காரணமாக) ...தொடரும்...