1. சிலர் தங்கள் தேவர்களை உண்மையுடன் வழிபட்டு வந்திருக்கின்றனர்.*
2. சிலர் பாவம் செய்வதை விட்டுவிட்டு நல்லவர்கள் ஆக முயற்சி செய்திருக்கின்றனர்.**
3. எல்லா மனிதரும் பாவிகளாய் இருக்கிறபடியினால் பாவம் மிகக் கேடானதாய் இருக்க முடியாது என்று சிலர் வாதாடுகின்றனர்.***
4. மனிதனின் கற்பனையேயன்றி பாவம் என்பது இல்லை என்று கூட சிலர் சொல்லியிருக்கின்றனர்.****
5. இவ்வழிகள் எல்லாம் தோல்வியுற்றன. எல்லாரும் இன்னும் பாவமுள்ளவர்களாகவும் கடவுளின் கோபத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.*****
***//***
அ) இந்துக்களிலும் முஸ்லீம்களிலும் பலர் கிறிஸ்தவர்களைவிட வழிபாட்டில் அதிக உண்மையுள்ளவர்களாய் இருக்கின்றனர். என்றாலும், அது அவர்களுக்கு பாவங்களிலிருந்து விடுதலையளிப்பதில்லை.*
ஆ) புத்திசாலித்தனமாக வாழ்வது பற்றிய மிகச் சிறந்த உபதேசங்களில் சில கிறிஸ்தவரல்லாதோரிடமிருந்து கிடைக்கின்றன. உதாரணமாக... மகாத்மா காந்தியின் அஹிம்ஸா முறை. ஆனால், இது பாவங்களை ஒழித்து விடுவதில்லை.**
இ) எல்லா மனிதர்களும் பாவிகளானால் பாவம் கவலை தருவதாய் இருக்க முடியாது என்று வாதிப்பது எல்லா மனிதருக்கும் சாவு வருகிறபடியினால் சாவு கவலை தருவதாக இல்லை என்று வாதிப்பது போலவே செல்லாது.***
ஈ) பாவம் ஒருவனுடைய கற்பனையைப் பொறுத்ததுதான் என்னும் கருத்து, இம்மையில் கூட அதனால் உண்டாகும் கடுமையான விளைவுகளைக் கவனியாமற் போகிறது.****
உ) கடவுளுக்கு செவிகொடுத்தால் நம்மை இரட்சித்துக் கொள்ளுவதற்கு நாம் திறமையற்றவர்கள் என்று அறிந்து கொள்ளுவோம்.*****
*** //***
1. அப்போஸ்தலர்: 17:22,23 - அத்தேனே பட்டணத்தார் மிகுந்த சமயப் பற்றுடையவர்கள் என்று பவுல் கூறுகிறார்.*
2. லூக்கா: 18:9-14 - பரிசேயன் நற்செயல்கள் எல்லாம் செய்த போதிலும் நீதிமானாகத் தீர்க்கப்படவில்லை. **
3. எண்ணாகமம்: 14 - ல் இஸ்ரவேலர் பாவம் செய்தனர். அவர்கள் தண்டணையைக் குறித்து தேவன் அவர்களுக்கு கூறினார். அவர்கள் கடவுளின் தண்டனையைப் புறக்கணித்து, தவறு எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்பதுபோல தொடர விரும்பினர்.***
4. கலாத்தியர்: 5:19,20 - மாம்சத்தின் கிரியைகளை, பாவமுள்ள மனிதரின் செயல்களை பவுல் விவரிக்கிறார்.****
5. எபேசியர்: 2:3 - சுபாவத்தினாலே மனுக்குலத்திலுள்ள மற்றவர்களைப் போலவே நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.*****