ஜனவரி 26, 2013

கேள்விப்படாதோர் கேள்விப்பட...என்ன செய்யலாம்?

 
இயேசுவை அறியாத மற்ற மக்கள், கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பார்த்து அதைப் பற்றி இன்னும் அதிகமாக அறிய விரும்பும் வண்ணமாக சாட்சியாக வாழ்ந்து வருவதனாலும், தாங்கள் கற்றுக் கொண்ட தேவ வசனத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதானாலும், ஆராதனை மற்றும்  ஜெபக் கூட்டங்களுக்கு மற்றவர்களை அழைத்துக் கொண்டு வருவதானாலும், நற்செய்தியை அறியாத உலகத்தின் பல பகுதிகளுக்கு உடன் கிறிஸ்தவர்களை அனுப்பி வைப்பதானாலும் கேள்விப்படாதோர் கேள்விப்பட - கிறிஸ்தவர்கள் இதைச் செய்யலாம்.

இவை தரப்பட்டிருக்கும் வரிசையைக் கவனிக்கவும்:

முதலாவது, சொந்த  வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கு சாட்சியாகவும், பின்பு கிறிஸ்துவைப் பற்றிக் கூறுதலும்  வருகின்றன. மக்களை ஆலயத்திற்கு அழைத்துக் கொண்டு வருவதும், ஊழியம் செய்வதும், ஊழிய அழைப்புள்ளோரை அனுப்பி வைப்பதும் முக்கியமான காரியங்களே. ஆனால், ஒருவன் செயலாலும், சொல்லாலும் கொடுக்கும் சாட்சியத்திற்குப் பிந்தினவைகளாகவே இவை வருகின்றன.

மத்தேயு: 5:16 - "இவ்விதமாய், மனுர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது"

2கொரிந்தியர்: 3:1-3 - " எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக் கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக் கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ? எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே. ஏனெனில், நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய  கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது"

  
அப்போஸ்தலர்: 8:4 - "சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்"

யோவான்: 1:46 - "...அதற்குப் பிலிப்பு, வந்து பார் என்றான்" -  என்று சொன்னான்.

அப்போஸ்தலர்: 13:2,3 - "அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்."

முதலாவது சாட்சியுள்ள ஜீவியம்; அடுத்து ஆத்துமாதாயம்.