ஏப்ரல் 04, 2019

“உனக்கே உரிய ஆசீர்வாத கொடுப்பினை”


Image result for images of blessings


திறவுகோல்வசனம்: உபா: 7:13

  “உன்மேல் அன்புவைத்து, உன்னைஆசீர்வதித்து, உனக்குக்கொடுப்பேன்…“

  1.  உன்மேல் அன்புவைக்கிறவர்
  2. உன்னை ஆசீர்வதிக்கிறவர்                                       
  3. உன் தேவையறிந்து கொடுக்கிறவர்


அ) உன்மேல் அன்புவைக்கிறவர்:


உபா: 7:6,7 – “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி  தெரிந்துகொண்டார். சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான  ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை;நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.”

உபா: 7:8 – “கர்த்தர் உங்களில்அன்புகூர்ந்ததினாலும், … உங்களைமீட்டுக்கொண்டார்.”

கர்த்தருடைய அன்பு எப்படிப்பட்டது?
முடிவுபரியந்தமும் நிலைத்திருக்கக்கூடியது.

    i.     யோவா: 13:1 “தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.”

   ii.     எஸ்தர்: 2:17 – ‘ராஜா சகல ஸ்திரீகளைப் பார்க்கிலும் எஸ்தர் மேல் அன்பு வைத்தான்;சகல கன்னிகைகளைப் பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும்கிடைத்தது; ஆகையால் அவன் ராஜ கிரீடத்தை அவள் சிரசின் மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.”

எஸ்தர் – முடிவுபரியந்தம் அல்லது தன்மரணபரியந்தம் அன்புமாறாமல் இருக்க தன்னை தகுதிபடுத்திக்கொண்டாள்.ராஜா மட்டுமல்ல, எஸ்தரும் அன்பு வைத்தாள்.

அதுபோல, இவ்வுலகத்தில் வந்த இயேசு தம்முடையவர்களிடத்தில் முடிவுபரியந்தம் அன்புவைத்தால் மட்டும்போதாது – அவரது அன்பிற்குரியவர்களாக நாமும் மரணபரியந்தம் நடந்துகொள்ளவேண்டும். அதற்குப் பெயர்தான் உடன்படிக்கை என வேதம் சொல்கிறது.

இரண்டு பக்கமும் பரஸ்பரஅன்பு பகிர்ந்து கொள்ளப்படும்பொழுதுதான் – நன்மைகளின் பெருக்கம் உண்டாகும். பரஸ்பர அன்பினால் வந்த ஆசீர்வாதபெருக்கத்தை கவனியுங்கள்:

1.   தயவும் பட்சமும் கிடைத்தது – இரக்கம், கனிவு, அன்பு
2.   ராஜகிரீடம் சிரசில் வந்தது - ஆளுகை
3.   பட்டத்து ஸ்திரீ – பட்டத்துராணி – அந்தஸ்து

இவையனைத்தும் எஸ்தருக்கு முடிவுபரியந்தம் அல்லது மரணபரியந்தமும் கிடைத்தது.

ஆ) உன்னை ஆசீர்வதிக்கிறவர்:


    i.     ஆதி: 5:2 – “அவர்களை ஆணும்பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து,” 
      – சிருஷ்டிக்கும்போதேஆசீர்வாதம் – குடும்பஆசீர்வாதம்

   ii.     யோசு: 17:14 – “யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி:  கர்த்தர்  எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் ஜனம் பெருத்தவர்களாயிருக்கிறோம்;”

“ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்” – என்பதின்பொருள்என்ன?

ஆதி: 39:3-5 – “கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு: யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்குவிசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். அவனைத்தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு,  கர்த்தர் யோசேப்பினிமித்தம்  அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.”

ஆதி: 39:22 “சிறைச்சாலைத்தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின்கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச்செய்தானோ அதைக்  கர்த்தர்  வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத்தலைவன் விசாரிக்கவில்லை.” – அதிகாரிகள்தயவு, பெருக்கம்.

ஆதி: 41:37,38 “இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க்கண்டது. அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோஎன்றான்.”

 – எகிப்தியரின்பார்வையில்பெருக்கம்

நாங்கள்மட்டுமல்ல,எங்களைச்சுற்றிலும் உள்ள மக்களிடத்தில் தயவு கிடைத்ததினால் நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்.

    i.     எங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட வீட்டாரின் பெருக்கம்
   ii.     எங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட அதிகாரிகளின் பெருக்கம்
   iii.     எங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட தேசத்துஜனங்களின் பெருக்கம்

இ) உன் தேவையறிந்து கொடுக்கிறவர்:


உபா: 8:18 – “உன்தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில்உனக்குஉண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச்சம்பாதிக்கிறதற்கானபெலனைஉனக்குக்கொடுக்கிறவர்.”

உபா: 33:20 – காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;”

தானி: 2:21 – அவர்காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத்தள்ளி, ராஜாக்களைஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும்கொடுக்கிறவர்.”