வேதப்புத்தகம்: திருமணத்தில்
ஆரம்பித்து திருமணத்தில் முடிகிறது. (ஆதி: 2:18-25 / வெளி: 19:7).
“பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணர்” (எபே:
3:14,15). யோவா:
2:11 – இயேசு தம் முதலாம் அற்புதத்தை கானா ஊர் கலியாணத்தில் தொடங்கினார்.
தேவன் திருமண ஒழுங்கை ஏற்படுத்தக் காரணமென்ன?
எபி:
13:4 – சபையில் வேசித்தனம் இல்லாதிருக்க மல்: 2:15 – தேவ பக்தியுள்ள சந்ததியைப்
பெற
ஏசா:
43:21 – கர்த்தரை துதிக்க, ஆராதிக்க, தொழுது கொள்ள
ஆசீர்வாத குடும்ப வாழ்விற்கு பரிசுத்த வேதாகமம் கூறும் ஆலோசனைகள்
ஆதி: 2:18 – "மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்"
ஆமோ: 3:3 - "இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ"
குடும்பத் தலைவன்
ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களும் மிகத் தெளிவாக குடும்பத்தைத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தேவன் கணவனுக்கே கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கின்றன. முதலில் ஆணைப்படைத்த தேவன் பின்பு பெண்ணை ஆணுக்குத் துணையாயிருக்கப் படைத்தார் (ஆதி. 1:26-27; 2:18-25). ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தபின் கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டே முதலில் அதற்கு விளக்கம் கேட்டார் (ஆதி: 3:9-12). கர்த்தர் ஆதாமைப் பார்த்து, “குடும்பத்தை ஆளும் பொறுப்பை உனக்குக் கொடுத்திருந்தேன். ஆனால் அதை நீ முறையாக செய்யவில்லை”
என்றார். கர்த்தர் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கொடுத்த தண்டனையை மட்டுமன்றி ஆரம்பத்தில் கர்த்தர் அவர்கள் எந்தப் பொறுப்புகளைச் சுமந்து குடும்பமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தாரோ அதையே தேவன் நினைவுபடுத்துகிறார்.. அதாவது, ஆதாம் குடும்பத்தை ஆள்பவனாகவும், ஏவாள் அவனுக்கு ஏற்றபடி அமைந்து நடப்பவளாகவும் இருக்க வேண்டுமென்பதே கர்த்தரின் கட்டளையாக இருந்தது. ஆகவே, குடும்பத்தை ஆள்பவனாக கணவனே இருக்கிறான்.
ஒரு கிறிஸ்தவ
கணவன் குடும்பத்தை எப்படி ஆள வேண்டும்?
1.
கிறிஸ்தவ கணவனாக இருந்து
குடும்பத்தை நடத்த வேண்டும்:
எபேசி:
5:28 – “புருசனும் மனைவிக்கு தலையாயிருக்கிறான்”. கிறிஸ்தவ கணவன் தன் குடும்பத்தை முதலில்
ஆவிக்குரிய காரியங்களில் நடத்திச் செல்வதற்கு கவனமாயிருக்க வேண்டும். குடும்பத்திற்குள்
உலகம், அதன் ஆசை இச்சைகள் நுழைவது எளிது. ஆனால், ஆவிக்குரிய தேவ ராஜ்யத்திற்குரியவைகள்
நுழைவதுதான் சற்று கடினம். உலகத்தை அறிவது, கற்பது எளிது. எனவே, தன் சொந்த குடும்பத்தை
தேவனுக்குள் நடத்துவதில் கிறிஸ்தவ கணவன் மிக கவனமுள்ளவனாயிருக்க வேண்டும். ஜெபம், பரிசுத்தம்,
வேதவாசிப்பு, விசுவாசம், ஆராதனை, ஊழியத்தை செய்வது, தாங்குவது இவற்றில் நடத்திச் செல்ல
அர்ப்பணிக்க வேண்டும்.
2.
மனைவியின் மேல் அன்புகூர
வேண்டும்:
(எபேசி: 5:25)
எப்படி
அன்புகூர்வது? “சபையில் அன்பு கூர்வது போல”. அப்: 20:28 – தேவன் தமது சுய இரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபை". ஜீவனைக் கொடுத்து மனைவி மக்களை காப்பாற்ற
பாடுபட வேண்டும்.
உலகக் கணவன் – “சமைப்பது, பிள்ளை பெறுவது” என்ற ரீதியில்
நடத்துவான்.
கிறிஸ்தவ கணவன் - நாமோ அப்படியல்ல. அதற்கும்
மேல் சில கடமைகள் மனைவிக்கு உண்டு என்பதை அறிய வேண்டும். “ஆவிக்குரிய காரியங்களில்,
ஊழியங்களில், தாலந்து வரங்கள்” கர்த்தருடைய சபையில் பயன்படுத்தப்பட உதவிகரமாக இருக்க
வேண்டும். 1பேது: 3:7 – மனைவியை கனம் பண்ணு.
3.
இச்சையடக்கம் உள்ளவனாக இருக்க
வேண்டும்:
(யாத்: 20:17)
ஏனைய
பெண்களை மனதளவில்கூட நினைத்துப் பார்க்கக்கூடாது. நீதி: 5:18,19 – "உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு; அவளே நெசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக...."
வீட்டை
ஆள்பவன் கணவன். எனவே, அவன் வீட்டில் இருப்பது அவசியம். கிறிஸ்தவ கணவன் வீட்டிற்கு வெளியே
அதிக நேரம், காலம் செலவழிப்பது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகும்.