ஆண்களுக்கான ஜெபக் குறிப்புகள்
*அனைத்து
ஆண்களும் ஜெபிக்கிறவர்களாக மாற … ஜெப ஆவியால் நிரப்பப்பட
*தேவசமூகத்தை,
ஆலயத்தை, ஆராதனையை வாஞ்சிக்க
பரிசுத்தத்தில்
நிலைத்திருக்க … மறைவான, துணிகரமான பாவங்களுக்கு விலகியிருக்க
* தேவனோடு,
ஊழியரோடு, சபையோடு ஐக்கியத்தில் நிலைத்திருக்க
*தினமும்
வேதம் வாசித்து, சத்தியத்தில் நிலைத்திருந்து விசுவாசத்தில் பெருக
* தினமும்
அபிஷேகத்தில் நிறைந்து அரைமணிநேரம் அந்நியபாஷைகளில் பேச
* உபவாச
ஜெபம், இரவு ஜெபங்களில் ஆர்வத்தோடு பங்குபெற
* சபை பாரம்,
ஆத்தும பாரம், சுவிசேஷ பாரம், ஊழிய பாரம், நாமகிரிப்பேட்டை பற்றிய பாரம் உண்டாக
*ஆவியின்
கனிகள், வரங்களை வாஞ்சித்து ஜெபித்து பெற்றுக் கொள்ள
* ஊழியங்களில்
பங்கு பெற, ஊழியங்களை பொறுப்பெடுக்க, ஊழியங்களை தாங்க முன் வர
* பொருத்தனை,
முதற்பலன், தசமபாகம், ஸ்தோத்திர காணிக்கைகளை தவறாமல் உண்மையோடு செலுத்த
*கர்த்தருக்கும்
சத்தியத்திற்கும், போதகருக்கும் சத்தியத்தினிமித்தம், தேவ அன்பினிமித்தம் கீழ்படிய
*உலக பெருமை
பாராட்டுக்களை விட்டு விலகி, தாழ்மையை தரித்துக் கொள்ள
*சபைக்கு
சாட்சியும் தூண்களும் மற்றும் ஆதாரமாக விளங்கிட
*சபையில்,
குடும்பத்தில், சமுதாயத்தில் சாட்சியைக் காத்துக் கொள்ள
*குடும்பத்தில்
உள்ள இரட்சிக்கப்படாத மற்ற ஆண்கள் இரட்சிப்பு பெற
*தினமும்
குடும்ப ஜெபத்தை நடத்த, குடும்ப சகிதமாய் ஆராதனைக்கு ஆர்வமாக பங்கெடுக்க
*குடும்பத்தை
ஊழியத்திற்கு உபயோகப்படுத்த … ஊழியங்களுக்கு மற்றும் ஜெபங்களுக்கு அனுமதிக்க
*குடும்பத்தில்
உள்ளவர்களின் தாலந்து வரங்களை சபையில் பயன்படுத்த அனுமதிக்க
*குடும்பத்தில்
பாவ தீய பழக்கவழக்கங்கள் நுழையாமல் விழிப்புடன் இருக்க
*பிள்ளைகளை
தேவபக்தியில் வளர்க்க … சுகம், பெலன், ஆரோக்கியத்திற்காக
*குடும்பமாக
ஆவிக்குரிய காரியங்களில் வளர, இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்பட
*நலமான
வேலை செய்து குடும்பத்தை பொறுப்பாய் நடத்த
*சபையில்:
ஆராதிக்கிறவர்களாக, துதிக்கிறவர்களாக, பாடுகிறவர்களாக, இசை வல்லுநர்களாக, விசாரிக்கிறவர்களாக,
பணிவிடையாளர்களாக, உதவியாளர்களாக, பொறுப்பாளர்களாக, ஆலோசகர்களாக, நிர்வாகிகளாக விளங்க
*1:1 என்ற
விகிதத்தில் ஒருவர் ஒரு ஆத்துமாவை வாரந்தோறும் ஆதாயம் செய்ய
*கடைசி
வெள்ளி இரவு ஜெப சவாரி மற்றும் ஜெப நடையில் ஆர்வமுடன் பங்கு பெற
*சபையில்
உள்ள அனைத்து ஆண்களும் ஆண்கள் ஐக்கிய கூடுகையில் தவறாமல் பங்குபெற
*ஆண்கள்
ஐக்கியத்தின் நோக்கத்தையும், ஐக்கியப்படுதலின் அவசியத்தையும் ஆசீர்வாதத்தையும் புரிந்து
கொள்ள
*சபையின்
காரியங்களை பொறுப்பாக அக்கறையெடுத்து செயல்படும் ஆண்களை தேவன் ஆசீர்வதிக்க