"என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதிமொழிகள்: 8:17)
(காலமே எழுந்து, நேர் முழங்காலில் நின்று, இருகைகளையும் வானத்திற்கு நேரே உயர்த்தி, கரங்களை விரித்து கர்த்தரை நோக்கித் துதியுங்கள்.)
1. இயேசுவே வானத்துக்கும்
பூமிக்கும் ஆண்டவர்
2. இயேசுவே கர்த்தர்
3. இயேசுவே கிறிஸ்து
3. இயேசுவே கிறிஸ்து
4. இயேசுவே பாவிகளை
மன்னிக்கும் உலக இரட்சகர்
5. இயேசுவே பூமியை நியாயந்தீர்க்கும் ராஜாதி
ராஜா
6. இயேசுவே எனக்கு
எல்லாவற்றிற்கும் எல்லாமானவர்
7. இயேசுவை உயர்த்துகிறோம்
– நேசிக்கிறோம் – கீழ்ப்படிகிறோம் – ஆமென்.
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே ஸ்தோத்திரம் ...
1. பசி போக்கும் ஜீவ
அப்பமானவரே ஸ்தோத்திரம்
2. இயேசு தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரானவர்
3. இயேசு பாதை காட்டும்
ஜீவ வழியானவர்
4. இயேசு இருள் நீக்கும்
ஜீவ ஒளியானவர்
5. இயேசு பாவம் போக்கும்
ஜீவ பலியானவர்
6. இயேசு மரணத்தை
ஜெயிக்கும் நித்திய ஜீவனானவர்
7. இயேசு வாழவைக்கும்
ஜீவ வார்த்தையானவர்
8. அறியாமை நீக்கும்
ஜீவ சத்தியமானவரே ஸ்தோத்திரம்
பரிசுத்த ஆவியானவரே
ஸ்தோத்திரம் …
1. பெலப்படுத்துகிற
பரிசுத்த ஆவியானவரே உமக்கே ஸ்தோத்திரம்
2. கற்று கொடுக்கும்
பரிசுத்த ஆவியானவரே உமக்கே ஸ்தோத்திரம்
3. வழிநடத்தும் பரிசுத்த
ஆவியானவரே உமக்கே ஸ்தோத்திரம்
4. வல்லமை வரங்களை
தரும் பரிசுத்த ஆவியானவரே உமக்கே ஸ்தோத்திரம்
5. அன்பின் கனிகளை
தருகிற பரிசுத்த ஆவியானவரே உமக்கே ஸ்தோத்திரம்
6. பயன்படுத்தும்
பரிசுத்த ஆவியானவரே உமக்கே ஸ்தோத்திரம்
7. எங்களுக்குள்ளே
வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரே உமக்கே ஸ்தோத்திரம்
இயேசுவே தேவனே
உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக ...
1. வானம் பூமி யாவும் படைத்த தேவனே உமக்கு
மகிமை உண்டாவதாக
2. சூரியன், சந்திரன்,
நட்சத்திரங்களை படைத்த தேவனே ஆராதிக்கின்றோம்
3. மலைகள், ஆறுகள்,
கடல்கள், நீரூற்றுகள் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம்
4. காணக்கூடிய, கண்களால்
காணமுடியாத அனைத்து ஜீவராசிகளையும் படைத்தவரே உமக்கு ஸ்தோத்திரம்
5. மனிதர்களாகிய எங்களை
உருவாக்கி படைத்து, பெருகச் செய்தவரே ஆராதிக்கின்றோம்
6. சர்வ வல்லைமையுள்ள
தேவனே உமக்கு மகிமை உண்டாவதாக
7. எங்கும் நிறைந்திருக்கும்
தேவனே ஸ்தோத்திரம்
8. எல்லாம் அறிந்த
தேவனே உம்மை ஆராதிக்கின்றோம்
9. மகா ஞானமுள்ள தேவனே
ஸ்தோத்திரம்
10. மகா பரிசுத்தமுள்ள
தேவனே உம்மைப் போற்றுகிறோம்
11. மகா நீதியுள்ள
தேவனே உமக்கு மகிமை உண்டாவதாக
12. மகத்துவமும் பயங்கரமுமான
தேவனே ஸ்தோத்திரம்
13. அன்பும், இரக்கமும்,
கிருபையுமுள்ள தேவனே துதிக்கிறோம்
பரம பிதாவே உமக்கு
ஸ்தோத்திரம் …
1. தேவைகளை சந்தித்து
பராமரிக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
2. வெற்றி தந்து பாதுகாக்கும்
தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
3. வியாதிகளிலிருந்து
சுகம் தரும் தேவனே உமக்கு துதி உண்டாவதாக
4. எல்லா சூழ்நிலைகளிலும்
சமாதானம் தரும் தேவனே உம்மை உயர்த்துகிறோம்
5. ஆலோசனை சொல்லி
வழிகாட்டும் தேவனே உமக்கே மகிமை உண்டாவதாக
6. பாவங்களை மன்னித்து
நீதிமானாக்கும் தேவனே உம்மை துதிக்கிறோம்
7. இன்றும் என்றும்
எங்களோடிருக்கும் தேவனே உம்மை ஆராதிக்கின்றோம்"அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்" (சங்கீதம்: 101:8)