பல வருடங்களுக்குப் முன்பு கம்யூனிஸ்ட் சேவகர்கள் தங்களுடைய தலைவன் மாவோவின் படத்தை திருச்சபையினுள்ளே தொங்க விட வற்புறுத்தினர்.
"நான் இயேசு கிறிஸ்துவின் படத்தையே தொங்கப் போடவில்லை. நான் ஜப்பானியரின் சக்கரவர்த்தி படத்தையும் தொங்க விட மறுத்தேன். நான் மாவோவின் படத்தையும் தொங்க விடுவதில்லை."
1955 ஆம் ஆண்ட போதகர் வாங் கைது செய்யப்பட்டு, இரண்டு வருடங்கள் மனோரீதியாக கடுமையான கொடுமையிலும் திசை திருப்புதலிலும் நசுக்கப்பட்டார். ஏறக்குறைய பைத்திய நிலைக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு அறிக்கையில் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டார். இப்படி இறங்கியதால் விடுதலை செய்யப்பட்டார்.
சிறைக்கு வெளியே வந்த பின் அவருக்கு நிம்மதியே இல்லை. "நான் ஒரு யூதன். நானும் பேதுருவைப் போல் கிறிஸ்துவை மறுதலித்து விட்டேன்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். கடைசியில் சீனச் சேவகர்களிடம் சென்றார்.
"நான் கையெழுத்திட்ட அறிக்கையைத் திரும்பக் கொடுங்கள். உங்கள் விருப்பம்போல் என்னை என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்" என்றார்.
அந்தச் சேவகர்கள் போதகர் வாங் கூட அவரது மனைவியையும் கைது செய்தனர். வாங் சிறையில் இருந்து ஒரு கடிதம் எழுதியபோது, "என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நான் அடைக்கலான் குருவிகளைவிட விலையேறப் பெற்றவன்" என குறிப்பிட்டிருந்தார்.
போதகர் வாங் இரட்சகர் இயேசு மேல் வைத்த அன்பினிமித்தம் சிறைச்சாலையிலேயே மரித்துப் போனார்.
இயேசு கிறிஸ்துவைக் கைது செய்ய வந்த அதிகாரிகளின் கூட்டத்தை எதிர்த்து பேதுருவைப் போல் யார் முன் நின்றார்கள்? அதே வேளையில் எதிர்ப்பு வந்தபோது இயெசு கிறிஸ்துவை மறுதலிக்கத்தக்க அளவில் பேதுருவைவிட பெலவீனமாக யார் நடந்திருக்கக்கூடும்? நமது மனுஷீகத்திற்காகத் தேவன் ஒருபோதும் நம்மைக் கடிந்த கொள்ளுகிறதில்லை. அவர் நமது பெலவீனத்துடன் நம்மை ஏற்றுக் கொண்டு மறுபடியும் நாம் பெலன் பெறும்வரை நம்மை தொடருகிறார். பேதுரு மற்றும் போதகர் வாங் மின் டாவோ போன்றவர்களை எவ்வாறு தேவன் பெலப்படுத்தி மறுபடியும் நிலை நிறுத்தினாரோ, அதைப்போலவே நம்மையும் உறுதியுள்ள தைரியசாலிகளாக மாற்ற அவரால் கூடும். கிறிஸ்துவுக்காக சாட்சியாக நிற்பதில் நீ தவறினதினால் நீ வருத்தம் அடைந்ததுண்டா? இன்று உன்னை நிலை நிறுத்தும்படி அவரிடம் கேள். மற்றொரு சந்தர்ப்பத்தில் நீ திடமாக நிற்கும்படி இப்போதே அவர் உன்னை பலப்படுத்த ஆரம்பிப்பார்.