'திரித்துவம்' என்ற வார்த்தை முதன் முதலாக கி.பி.181 -ல் அந்தியோகியாவை சோ்ந்த 'தியோபிலஸ்' என்பவர் பயன்படுத்தினார். திரித்துவம் என்பதற்குரிய கிரேக்க வார்த்தை “திரியோஸ்”; இலத்தீன் வார்த்தை “தினிதாஸ்” . கி.பி.220 ல் 'தொ்த்துல்லியன்' என்ற சபைபிதா இந்த வார்த்தையை முதன் முதலாக பயன்படுத்தினார்.
தேவன் ஆவியாயிருக்கிறார்; ஆளத்துவம் உடையவர்; தேவனில் 3 ஆளத்துவங்கள் அடங்கியுள்ளன. பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்தாவியாகிய தேவன் என்பதே அது. இந்த சத்தியம் மனித அறிவிற்கு எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாய் இல்லை. இதற்கு இணையாக உலகத்தில் எந்தவொரு உதாரணமும் இல்லை. எனவே, விளக்கி சொல்வதில் பிரச்சினைகள் உண்டு.
வேதத்தில் இது போன்ற மனித அறிவிற்கு மேற்பட்ட எத்தனையோ சத்தியங்கள் இருக்கின்றன. நமது அறிவு குறைவுள்ளது. எல்லைக்குட்பட்டது.ஆனால் சத்தியம் எப்போதும் நிலைத்து நிற்கின்றது. திரித்துவம் மனிதன் கொண்டு வந்த உபதேசமல்ல. வேதம் அதை தெளிவாகக் காட்டுகிறது.
பழைய ஏற்பாட்டில் திரித்துவத்திற்கு ஆதாரமான வசனங்கள்:
1. ஆதியாகமம்: 1:26 - நமது சாயல் நமது ரூபம்
2. ஆதியாகமம்: 3:22 - நம்மில் ஒருவரைப் போலானான்
3. ஆதியாகமம்: 11:6,7 - நாம் இறங்கிப் போய்
4. ஏசாயா: 6:8 - நமது காரியமாய் போவான்
இந்த வேதபகுதிகளில் தேவன் தம்மை “நாம்” என்று பன்மையிலேயே அழைத்துள்ளார்.
தேவனுக்கு எபிரேய மொழியில் “ஏலோகிம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஏலோகிம்” என்ற வார்த்தை பன்மையாகும். “ஏல்” என்ற ஒருமைப் பதத்திற்கு “ஏலோகிம்” என்ற பன்மை பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிருஷ்டித்தார் என்பது ஒருமையில்தான் வருகிறது.
கர்த்தருடைய தூதனானவர் என்று பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் வருகிறது. இது திரித்துவத்தில் ஒருவராகிய கிறிஸ்துவையே குறிக்கிறது என்று நம்பலாம். கர்த்தருடைய தூதனானவர் என்று அழைக்கப்படுகிறவரே தேவன் என்றும், கர்த்தர் என்றும் அழைக்கப்படுகிறதைப் பார்க்கிறோம்.
ஆபிரகாமிடத்தில் கர்த்தருடைய தூதனானவர்....
ஆதியாகமம்: 22:11 - “அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்”
ஆதியாகமம்: 22:15 - “கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமை கூப்பிட்டு:”
ஆதியாகமம்: 11:18 - “நி என் சொல்லுக்கு கீழ்படிந்த படியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என் பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்”
யாக்கோபினிடத்தில் கர்த்தருடைய தூதனானவர்...
ஆதியாகமம்: 31:11 - “அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்”
ஆதியாகமம்: 31:13 - “... பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நானே...”
மோசேயினிடத்தில் கர்த்தருடைய தூதனானவர்...
யாத்திராகமம்: 3:2 - “அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார்.”
யாத்திராகமம்: 3:4 - “அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதை கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி:...”
இப்படி பழைய ஏற்பாட்டில் பல உதாரணங்களை வேதத்தில் நாம் காணலாம்.