பிப்ரவரி 18, 2013

மானிட அவதாரத்தில் இயேசுகிறிஸ்து

 
மானிட அவதாரத்திற்கு முன்பு இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டில் “குமாரன்” என்றும் “கர்த்தருடைய தூதன்” என்றும் குறிப்பிடப்பட்டார் என்று இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம்.

இந்த பகுதியில் மானிட அவதாரத்தில் வந்த இய‌ேசுகிறிஸ்துவைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

நித்தியத்திலும் மனித அவதாரத்திற்கு முன்பும் இருந்த கிறிஸ்து மானிட அவதாரமானார்.

யோவான்: 1:14 - “அந்த வார்த்தை மாம்சமாகி ...” ரோமர்: 8:3 - “மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக் கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனை பாவத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்தார்.”

பிலிப்பியர்: 2:6,7 - “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் , தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். ”

எபிரேயர்: 2:14 - “ ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியான பிசாசனவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு...” அவர் அவதரித்தார்.

மத்தேயு: 1, 2 அதிகாரங்கள், லூக்கா: 1, 2 ஆகிய அதிகாரங்களில் இயேசுவின் பிறப்பின் செய்தியை நாம் வாசித்து அறியலாம்.

கொலோசெயர்: 1:15 - “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்”

 1. மனித அவதாரத்தின் காரணங்கள்:

இயேசு மனிதனாக வந்ததற்கு பல காரணங்கள் உண்டு.

அ) தேவனுடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வந்தார்:

தேவன் முற்பிதாக்களுக்கு (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) கொடுத்திருந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவும் புறஜாதிகளுக்கு இரக்கம் கிடைப்பதற்காகவும் வந்தார். ரோமர்: 9:8,9 - “...மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல; வாக்குதத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்த சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவ‌ேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே”

ஆதியாகமம்: 3:15 - ல் முதல் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்”

பழைய ஏற்பாட்டில் பல வாக்குத்தத்தங்களை பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டு பலி முறைகள், ஆசரிப்பு கூடாரம் இவைகளெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பனையாக உள்ளன.

ஏசாயா: 7:14 - “ஆதலால், ஆண்டவர்தாமே உங்களுக்கொரு ஒரு அடையாளத்தை கொடுப்பார்; இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்”

ஏசாயா: 9:6 - “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்., கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா , சமாதானப் பிரபு என்னப்படும்”

சங்கீதம்: 22:1 - “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறி சொல்லும் வார்த்தைகளை க‌ேளாமலும், ஏன் தூரமாயிருக்கிறீர்?”

சங்கீதம்: 41:9 - “என் பிராண சிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என் மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.”

மேலே கண்ட பழைய ஏற்பாட்டு வேத வசனங்கள் இயேசுவின் முதலாம் வருகையைப் பற்றி தெளிவாக நமக்கு போதிக்கின்றன.

ஆ) பிதவை வெளிப்படுத்தும்படி மானிடரானார்:

பழைய ஏற்பாட்டில் தேவன் தன்னை சிருஷ்டி கர்த்தராகவும், அண்ட சராசரத்தையும் ஆளுகிறவராகவும் வெளிப்படுத்தினார் (சங்கீதம்: 103:19).

கிறிஸ்து, தேவனை பிதாவாக வெளிப்படுத்தினார். பழைய ஏற்பாட்டில் யூதருக்கு அளிக்கப்பட்ட வேத வாக்கியங்களில் தேவன் ஒருவராகவும், பரிசுத்தராகவும், பராமரிக்கிறவராகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளார். தேவனை பிதாவாக கிறிஸ்து வெளிப்படுத்தியதால் தேவனைப்பற்றிய வெளிப்பாடு நிறைவடைந்தது.

யோவான்: 1:18 - “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.”

யோவான்: 14:9 - “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்”

யோவான்: 16:27 - “நீங்கள் என்னை சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால், பிதாதாமே உங்களை நேசிக்கிறார்”
யோவான்: 13:3 - “தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்கு போகிறதையும் இயேசு அறிந்து, ...”
1யோவான்: 3:1,2 - “நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே, பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கின்ற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” 

 இ) ஒரு உண்மையுள்ள பிரதான ஆசாரியனாகும்படி மனித அவதாரம் எடுத்தார்:

இயேசு ஒருவர்தான் மனிதராகிய நமது சார்பில் ஒரு உண்மையான பிரதான ஆசாரியனான இருக்க முடிந்தது. இந்த உண்மையை எபிரேய நிருபம் விவரிக்கிறது.

எபிரேயா்: 2:10 - “ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சோ்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கேற்றதாயிருந்தது”

எபிரேயா்: 4:15,16 - “நம்முடைய பலவீனங்களை குறித்துப் பரிதபிக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் ”

எபிரேயர்: 5:1 - “அன்றியும், மனுஷரில் தெரிந்து கொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காக காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்டுகிறான்.”

எபிரேயர்:5:4 - “ஆரோனைப்போல த‌ேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்த கனமான ஊழியத்திற்கு தானாய் ஏற்படுகிறதில்லை”

எபிரேயர்: 5:5 - “அந்தப்படியே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராயிருக்கிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.”

ஈ) பாவத்தை பரிகரிக்க கிறிஸ்து மானிடனாய் அவதரித்தார்:
கிறிஸ்து தம்மைத்தாமே பலியாக கொடுத்ததினிமித்தம் பாவத்தை பரிகரித்தார்.

எபிரேயர்: 2:10 - “ஏனென்றால், தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சோ்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கு ஏற்றதாயிருந்தது. ”

எபிரேயர்: 9:26 - “அவர் தம்மைத் தாமே பலியிடுகிறதனாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக அந்த கடைசி காலத்தில் ஒரே தரம் வெளிப்பட்டார்.”

மாற்கு: 10:45 - “மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனை கொடுக்கவும் வந்தார் என்றார்.”

யோவான்: 1:29 - “மறு நாளில‌ே யோவான், இயேசு தன்னிடத்தில் வரக் கண்டு: இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி” என்றான்.

யோவான்: 1:36 - “இயேசு நடந்து போகிறதை அவன் கண்டு: இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றான்”

1யோவான்: 3:5 - “அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை”
லேவியராகமம்: 16:20,21 - “அவன் இப்படி பரிசுத்தஸ்தலத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ் செய்து தீர்ந்த பின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக் கடாவைச் சேரப் பண்ணி, அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின் மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லா பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்”

ஏசாயா: 53:5 - “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் தண்டனை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமடைகிறோம்”

2கொரிந்தியர்: 5:21 - “நாம் அவருக்குள் தேவநீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”

உ) கிறிஸ்து பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கு மானிடனாய் வெளிப்பட்டார்:

1யோவான்: 3:8 - “... பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே த‌ேவனுடையகுமாரன் வெளிப்பட்டார்.”

எபிரேயர்: 2:14,15 - “... பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்க்குள்ளானவர்கள் யாவரையும் விடுதல‌ைபண்ணுபடிக்கும் அப்படியானார்.”

வெளிப்படுத்தல்: 20:10 - “மேலும், அவர்களை மோசம் போக்கின பிசாசானவன் மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்; அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்”

ஊ) நமக்கு ஒரு பரிசுத்த வாழ்க்கையின் மாதிரியை காண்பிக்கும்படி கிறிஸ்து மானிடனாய் அவதரித்தார்:

மத்தேயு: 11:29 - “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்”

1யோவான்: 2:6 - “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்”

2கொரிந்தியர்: 3:18 - “நாமெல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருருடைய மகிமையை கண்ணாடியிலே காண்கிறதுபோல கண்டு, ஆவியாய் இருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்”

மத்தேயு: 5:6,7 - “நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்”

இயேசு கிறிஸ்து தேவகுமாரன், மனித குமாரன் நல்ல முன் மாதிரி.

எ) இரண்டாம் வருகைக்கு ஜனங்களை ஆயத்தம் பண்ணும்படி கிறிஸ்து முதலாவதாக மானிடனாக வந்தார்:

எபிரேயர்: 9:28 - “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்”

ரோமர்: 8:18 - 25 “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு சிருஷ்டியானது ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது. அதேனென்றால், சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்கு கீழ்ப்படடிருக்கிறது. ஆகையால் நமக்கு தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் வருகிறதற்கு காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்படுகிறோம். காணப்படுகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்புனோமாகில், அது வருகிறதற்கு பொறுமையோடே காத்திருப்போம்”

வெளிப்படுத்தல்: 5:6,7 - “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். அந்த புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும், தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்தக் கொண்டு, ஆட்டுக்குட்டியானவாருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:” என்று எழுதப்பட்டுள்ளது.

இதுவரை இயேசு கிறிஸ்து திரித்துவ தேவனில் ஒருவர் என்பதையும், கர்த்தராயிருக்கிற இய‌ேசு கிறிஸ்துவின் மானிட அவதாரத்தின் காரணங்களையும் பார்த்தோம். இனி அடுத்த திரியில் வேறொரு தலைப்பின் கீழ் வேதத்தை தியானிப்போம்.

இதை வாசிக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளையும் கர்த்தராயிருக்கிற இய‌ேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. ஆமென்! அல்லேலூயா!