பிப்ரவரி 05, 2015

தலைமைத்துவ ஆன்மீக நிலைமை


1. தலைவர்கள் நியமிக்கப்படுவதில்லை; தேவனால் உருவாக்கப்படுகிறார்கள். அதில் முதிர்ச்சி நிலை எட்டும் சமயத்தில் தலைமைத்துவ நிலைக்கு உறுதி செய்யப்படுகிறார்கள்.

2. தலைவனின் வல்லமையானது பரலோகத்திலும், புமியிலும், நரகத்திலும் உணரப்பட வேண்டும்.

3. நாம் நம்மை வெறுமையாக்கி கடவுளைச் சார்ந்து இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பயன்படுத்துவார்.

4. தேவ அங்கீகாரமுடையவனாயிருப்பான் (ஏசாயா: 42:1)

5. எத்தனை அருமையான இயற்கை சுபாவங்கள் தலைவனாக நம்மை தகுதியாக்கினாலும், ஆவியானவர் நம்மேல் அமராவிடில் அனைத்தும் வீணாணதே (ஏசாயா: 42:1)

6. தலைவனின் வாழ்க்கை கடவுளின் அழகு மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

7. தனக்கு கீழ் உள்ள மந்தையானது கடவுளின் மந்தை என மறந்து விடக் கூடாது.

8. ஆவிக்குரிய ஆழமான பார்வையுடையவனே ஆன்மீகத் தலைவன்.

எப்படி?

1. மலையைச் சுற்றிலும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைக் காண வேண்டும்.

2. மனசாட்சியின் சுவரில் தேவனின் விரல் எழுதும் வார்த்தைகளைப் படித்து அர்த்தம் சொல்லத் தெரிந்திருப்பவனாக இருக்க வேண்டும்.

3. உலகப் பொருள்களின் திரையை விலக்கி தேவ இரக்கத்தின் சிங்காசனத்தை மக்களுக்கு காட்டுகிறவன்.

4. மலையின் மீது காட்டப்படும் மாதிரியை பிறருக்குச் சொல்லுகிறவன்.

5. தீவில் காட்டப்படும் தரிசனத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகிறவன்.


தலைமைத்துவ முதிர்ச்சி


1. திறமையான தலைவன் முழுமனதுடனான கீழ்படிதலும், தியாகம் செய்பவனாகவும் இருப்பான்

2. தலைவனின் ஆவிக்குரிய முதிர்ச்சி கடவுளின் தோட்டத்திலிருந்து வரும் நறுமணமாகும். அது அவனைச் சுற்றியுள்ள சூழலை மாற்ற வல்லமையுள்ளது. அது தேவனை நிரூபித்துக் காட்டும் பாதிப்பாகும்.

3.  தலைவனின் திறமைகளும், ஆழமான அர்ப்பணிப்பும் தோல்வி மற்றும் களைப்பு என்னும் பள்ளியில் பட்டை தீட்டப்பட்டனவாகும்.

4. சோம்பேறிகளும், ஒழுங்கற்றவர்களுமாயிருப்பவர்கள் உண்மையான தலைமைத்துவத்தை எட்டுவதில்லை.

5. தைரியமான தலைவர்கள் விரும்பத்தக்கதும், அழிவைக் கொண்டு வருகிறதுமான சூழ்நிலைகளை அமைதியுடன் எதிர் கொள்வார்கள்.

6. தாழ்மை என்பது ஆன்மீகத் தலைவனின் அடையாளம். (தான் வெட்டிச் சாய்த்த மரத்தைப் பற்றி கோடாறி பெருமைப்பட முடியாது)

7. பெருமைக்கு பலியாகியிருப்பவர் அந்தப் பாவம் தன்னிடம் இருப்பதைப் பற்றிய அறிவே இல்லாமல் இருப்பர். பெருமையின் அசிங்கமான வெளிப்பாடு சுயமாகும்.

பரிசோதனை செய்யலாமா:

1. நீங்கள் விரும்பும் பதவி வேறொருவருக்கு கொடுக்கும்போது...

2. நீங்கள் பெற்ற வரத்தை காட்டிலும் வேறொருவர் பெற்ற வரம் மேலாகத் தெரிந்தால்...

3. நமக்குள் இருக்கும் பெலகீனங்கள் மற்றவர்களால் சுட்டிக்காட்டப்படும்போது

4. நமக்கு எதிராய் எழும்பும் குற்றச்சாட்டுக்கு உடனடியான கோபத்திற்கும், சுய நியாயப்படுத்துதலுக்கும் நாம் நடத்தப்படுகிறோமா?

மேற்கூறிய அனைத்திற்கும் ஆம் என்ற பதில் இருக்குமானால் சிலுவையில் அடிக்கப்படாத சுயத்தின் துடிப்புகள் உங்கள் சுபாவத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவைகள் தேவ கிருபைக்கு அடியில் கொண்டு வரப்பட வேண்டும்.

  •  நாம் எந்த அளவுக்கு ஒரு பாதையில் பயணப்பட்டிருக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நாம் நம்மை பின்பற்றுகிறவர்களையும் அழைத்துச் செல்ல முடியும்.

  •  தலைவன் ஞானமுள்ளவனாயிருக்க வேண்டும். அறிவைப் பயன்படுத்தும் திறன்தான் ஞானம். ஞானம் பரலோகத்திலிருந்து வரும் பகுத்தறிவு. அறிவு படிப்பதின் மூலம் வருகிறது. பகுத்தறிவு, தீர்ப்பு, அனுபவம் போன்ற ஆற்றலின் கலவையே ஞானம்.


வயதான பாட்டியும் வாக்குத்தத்தமும்


வயதான ஏழைத்தாயார் ஒருவர் தன்னுடைய ஒரே மகனை அதிக கஷ்டத்தோடு கடன்பட்டு , படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கினார்கள். அவர்களுடைய மகனும் நன்றாகப் படித்தான். வெளிநாட்டில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. அவனுடைய தாயார் தன் மகனிடம்: நீ வேலையில் அமர்ந்தவுடன் எனக்கு இருக்கும் கடன்களை தீர்க்க பணம் அனுப்பு என்று கேட்டுக் கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின. மகன் வெளிநாட்டிற்கு சென்று இரண்டு மாதங்கள் ஆகியும் அவனிடமிருந்து  பணம் எதுவும் வரவில்லை. ஆனால், அந்த ஒவ்வொரு மாதமும் மகனிடமிருந்து ஒரு கவர் வரும். அதை ஆவலோடு அந்த தாயார் பிரித்து பணம் ஏதாவது இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். 

ஆனால், அந்த கவரில் ஒரே ஒரு மஞ்சள் நிற தாள் மாத்திரமே இருக்கும். இதைப்பார்த்து சோர்ந்துபோன தாயார் மிகுந்த வேதனையடைந்தார்கள். தன் மகன் பணம் அனுப்பாததை எண்ணி அநேகரிடம் சொல்லிபுலம்பினார்கள்.

ஒருநாள் தன் சபை போதகரிடம் தன்னுடைய நிலைமையையும், தன் மகன் பணம் அனுப்பாததையும் சொல்லி,  எனக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். போதகரோ,  நான் உங்கள் வீட்டிற்கு வந்து ஜெபிக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார்.

ஒருநாள் போதகர் அந்த தாயார் வீட்டிற்குச் சென்றார். அவர் வீட்டிற்குள் சென்றபோது அந்த தாயார், தன்னுடைய மகன் அனுப்பியிருந்த அந்த மஞ்சள் நிறத்தாள்களை சுவரில் ஒட்டி வைத்திருந்ததை போதகருக்கு காண்பித்து, என்னுடைய மகன் எனக்கு ஒரு பணமம் அனுப்பவில்லை; ஆனால், இந்த தாள்களை மாத்திரமே அனுப்பியுள்ளான் என்றார்கள்.

போதகர் அந்த தாள்களை பார்த்தார். அவை அனைத்தும் தன்னுடைய அன்பு தாயாருக்கு மகன் அனுப்பிய பெரும் தொகைகளின் வங்கி காசோலைகளாகும். போதகரோ, அவர்களுடைய மகனின் அன்பையும், தாயாரின் அறியாமையையும் எடுத்துக்கூறி ஜெபித்தார்.

ஆம், பிரியமானவர்களே! கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தங்களை மாற்றப்படாத காசோலைகளாகவே அந்த தாயாரைப்போல நாமும் மிக அழகாக சுவர்களில் மாட்டி வீட்டை அலங்கரிக்கிறோம். ஆனால், அவைகள் நமக்கு ஆசீர்வாதங்களை கொண்டு வருகின்றனவா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நம்மை ஆசீர்வதிக்கவே தேவன் நமக்கு வாக்குத்தத்தங்களைத் தந்துள்ளார். ஆகவே, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம். வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி ஜெபித்து இருதயத்தில் வைத்து அறிக்கை செய்வோம். கர்த்தர் தமது வாக்குத்தத்தங்களை நம் வாழ்வில் நிறைவேற்றி ஆசீர்வதிப்பார்.

"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம்: 119:105). 

-- Selected

பிப்ரவரி 04, 2015

இயற்கையாக வளரும் சபை


ஒரு சபை வளர தேவையான எட்டு விஷயங்களை "இயற்கையாக வளரும் சபை" (Natural  Church Development) என்ற ஒரு புத்தகத்தில் கற்றுக் கொண்டேன். அதையே ஜெபக்குறிப்பாக வைத்து ஜெபிக்கிறோம். பிரசங்கிக்கிறோம். இதை வாசிக்கும் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்பதால் இதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

     


இவையிரண்டும் கடினமானதை  எளிதாகச் செய்யும் எளிய வழிகள்


           

-  இது இருப்பதை இன்னும் கடினமாக்குபவை

ஒரு சபை வளர வேண்டுமெனில், அதன் தரிசனங்கள், இலக்குகள், திட்டங்கள், செயல்பாடுகள் கடைபிடிக்க எளிதானதாக, மக்களை சென்றடையத்தக்கதாக காணப்பட வேண்டும். ஒரு சபையை வளர அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வட்டமான சக்கரங்கள் கொண்ட வாகனமா? சதுர சக்கர வாகனமா? எது எளிதானதென்று கவனிக்க வேண்டும். ஒரு போதகர் தன் சபையை எப்படிப்பட்ட சக்கரத்தின் மீது அமைத்து நகர்த்திக் கொண்டிருக்கிறார் என கவனித்தாலே போதுமானது. வளருமா? வளராதா? என சொல்லி விடலாம். வளருவதற்கேற்ற வழிகளை கீழே காண்போம்.

திருச்சபையே கிரியை செய்வாய்

1. பெலப்படுத்தப்பட்ட தலைமைத்துவம்:

ஒரு திருச்சபை வளர்வதற்கு மிக முக்கியமானது அந்த சபையின் தலைவர்கள், போதகர்கள், மற்றும் பல்வேறு ஊழிய பொறுப்புகளில் இருப்பவர்கள் யாவரும் தெய்வ பயமுள்ளவர்களாகவும், ஆவிக்குரிய வாழ்வில் முன்மாதிரி உள்ளவர்களாகவும், குடும்பம், குடியிருக்கும் பகுதி, வேலை செய்யும் இடம், சபை, சமுதாயம் இவைகளில் நற்சாட்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாகவும், ஆவியின் வரங்களினால் செயல்படுகிறவர்களாகவும், பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கும்போது சபை வளர்ச்சியடையும்.

2. வரங்களின் அடிப்படையில் விசுவாசிகள் அனைவரும் ஊழியம் செய்ய வேண்டும்:

திருச்சபையில் உள்ள அங்கத்தினர்கள் யாவரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதனால் அருளப்படும் இரட்சிப்பை பெற்றவர்களாகவும், வார்த்தைக்கு கீழ்படிந்து தேவனோடு தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தினால் உடன்படிக்கை செய்தவர்களாகவும், பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாகவும், ஆவியின் கனிகள் மற்றும் ஆவியின் வரங்களை பெற்றவர்களாக இருக்க வேண்டும். தங்களுக்கு தேவன் எந்த வரத்தை தந்திருக்கிறார் என்று கண்டு பிடித்து, அதை அபிவிருத்தி செய்து தேவ நாமத்திற்கு மகிமையாக திருச்சபை வளர்ச்சியடைய பயன்படுத்துகிறவர்களாக திகழும்போது சபை பல மடங்கு வளர்ச்சி பெறும்.

3. தீவிரமான ஆவிக்குரிய தன்மை - ஜெபம், வேத தியானம், வைராக்கியமான விசுவாசம்:

திருச்சபை அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் ஞாயிறு ஆராதனைகளில் தவறாமல் பங்கு பெறுகிறவர்களாக மாத்திரம் இராமல், தினமும் முறையான குடும்ப ஜெபம், தனி ஜெபம், வேத தியானம் செய்கிறவர்களாகவும், எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தை மறுதலியாமல் காத்துக் கொள்கிறவர்களாகவும் இருக்கும்போது சபை ஆரோக்கியமாக இருக்கும்.

4. செயல்படும் அமைப்புகள்: 

சில நேரங்களில் சபைகளில் பல நிகழ்ச்சிகள், பல பிரிகள் இருக்கும். ஆனால், அவைகள் நல்ல உற்சாகமாக, தீவிரமாக செயல்படாமல் பெயரளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படியிராமல் ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், சிறுவர்கள், சுவிசேஷ ஊழியம், பின் தொடர் ஊழியம், சீஷத்துவம், சமூக சேவை, ஜெபம் இவைகளை ஊக்கமாக, விறுவிறுப்பாக, எல்லோரின் ஒத்துழைப்போடு, ஆழமான அர்ப்பணிப்போடு நடைபெறும்போது சபை வேகமாக வளரும்.

5. எழுச்சியான ஆராதனை:

ஒரு திருச்சபையின் முக்கியமான அம்சம், நிகழ்ச்சி ஞாயிறு ஆராதனையாகும். எந்த சபையில் துதிப் பாடல்கள், செய்திகள், ஜெபங்கள், சாட்சிகள், நிகழ்ச்சிகள் மற்றும் ஆராதனை நல்ல உற்சாகமானதாகவும், உணர்வுள்ளதாகவும், அவியில் அனலாகவும் இருக்கிறதோ அந்த சபை வளரும். அங்கே தேவ பிரசன்னம் உண்டு. விடுதலை உண்டு. வளர்ச்சியும் உண்டு.

6. ஆசீர்வாதமான சிறு குழுக்கள்: 

ஒரு திருச்சபை கொண்டாடக்கூடிய அளவில் பெரிதாகவும், அதே சமயம் பராமரிக்கக்கூடிய அளவில் சிறிதாகவும் இருக்க வேண்டும். எட்டு பேரிலிருந்து  15 நபர்கள் கூடி, வார நாட்களில் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டில் கூடி ஜெபிக்கவும், ஐக்கியப்படவும், ஒருவரையொருவர் நேசிக்கவும்,  பராமரிக்கவும், அந்த பகுதி மக்கள் சுவிசேஷத்தை அறியவும், குழு அங்கத்தினர்கள் சீஷத்துவத்தில் வளரவும், தேவன் தங்களுக்கு அருளியிருக்கிற வரங்களை கண்டு பிடித்து பயன்படுத்தவும் சிறிய அளவில் கூடி வருவது  மிக அவசியம். இது சபை வளர்ச்சிக்கு உதவும் பக்க வேர்களாக திகழும்.

7. வல்லமையோடு நற்செய்தியை அறிவித்தல்: 

திருச்சபையின் முக்கியமான நோக்கம் சீஷராக்குதல், அதற்கு முதலில் செய்யப்பட வேண்டியது இயேசு கிறிஸ்துவை பற்றியும், அவர் மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக பட்டபாடுகள், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் பற்றியும்,  இயேசுவை விசுவாசித்தால் நாம் இரட்சிக்கப்படுவோம் என்ற செய்தியும் அறிவிக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியின் வல்லமையோடு நிரூபிக்கப்பட வேண்டும். மனிதர்களின் இரட்சிப்புக்காக திட்டமிட்டு முறையாக ஜெபிக்க வேண்டும். தெளிவாக திருவசனத்தை பிரசங்கிக்க வேண்டும். மனந்திரும்புதல், விசுவாசம், கீழ்படிதல் போதிக்கப்பட வேண்டும். அறியாதவர்கள் அறியவும், சந்திக்கப்படாதவர்கள் சந்திக்கப்படவும் வேண்டும் என்பதை தலையாய பணியாக கொண்ட சபை வளர்ச்சி அடையும்.

8. அன்பின் ஐக்கியமும் விருந்தோம்பலும் உள்ள சபை:

வளரும் சபையின் அடையாளம் அன்பின் ஐக்கியம். புதிதாக வருபவர்களை அன்போடு ஏற்றுக் கொண்டு அவர்களின் தேவைகளை சந்திப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் சபை வளரும். அங்கத்தினர்களுக்குள் ஒரே குடும்பம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும். ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் (எபேசியர்: 4:1-3).

தேவனிடத்தில் அழியாத அன்பு, ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் அன்பு, உலக மக்கள் மேல் மனதுருகும் அன்பு, குழு மனப்பான்மையுள்ள சபை, கிறிஸ்துவின் நிமித்தமும் தேவ ராஜ்யத்தின்  நோக்கத்தினிமித்தமும்  ஐக்கியத்தை காத்துக் கொள்ளும் சபை வளர்ந்து பெருகும்.

அபிஷேகம் பெற்ற திருச்சபைகள் அகிலமெங்கும் வளர்ந்து பெருக ஜெபிப்போம்! திட்டமிடுவோம்!  ஒன்று சேர்ந்து செயல்படுவோம்! 

பிப்ரவரி 01, 2015

பிரத்தியேகமான ஒரு ஜெப வேண்டுகோள்

நேசரின் தோட்ட வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
எங்கள் நாமகிரிப்பேட்டை நேசரின் தோட்டம் ஏ.ஜி.சபையின் ஊழிய தரிசனம், இலக்குகள், செயல்பாடுகள் நிறைவேற உங்களது தனி ஜெபங்களில், குடும்ப ஜெபங்களில் அனுதினமும் ஜெபித்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாமகிரிப்பேட்டையில் உள்ள மொத்த மக்கள் தொகை: 1,09,963 பேர். நம் சபைக்கு தசமபாகமாக தேவையான மக்கள்: 10,907 பேர்.

நாமகிரிப்பேட்டை மையப்பகுதியில் மட்டும் உள்ள மொத்த மக்கள் தொகை: 12,675 பேர். நம் சபைக்கு தசமபாகமாக தேவையான மக்கள்: 2007 பேர்.

2015 முதல் 2020 க்குள் நாம் கேட்பதோ 2000 பேர்.
Remember to pray today, no matter what your situation is, because it ...
நமது தரிசனம் 

நாமகிரிப்பேட்டை மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். 76 கிராமங்கள் சந்திக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் மீட்கப்பட வேண்டும். எந்த ஒரு ஆத்துமாவும் கிறிஸ்துவை அறியாமல் மரிக்கக்கூடாது. 2015 முதல் 2020 க்குள் 2000 பேர் இரட்சிக்கப்பட்டு ஆராதனைக்கு வரவேண்டும். எங்கு பார்த்தாலும், எங்கு திரும்பினாலும் கர்த்தருடைய பிள்ளைகளாக காணப்பட வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் கர்த்தரைத் துதிக்கிற துதியும், துதிப்பாடலும், ஜெப சத்தமும் காணப்பட வேண்டும். அனைத்து வீடுகள், கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கர்த்தருடைய காலண்டர்கள், வசனங்கள் காணப்பட வேண்டும். ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்க, குடும்பம் குடும்பமாக, ஜாதிஜாதியாக, வம்சம் வம்சமாக வாஞ்சையோடும், தாகத்தோடும் அணியணியாக, திரள் திரளாக நமது ஆலயத்தை நோக்கி படையெடுத்து வர ஆவியானவர் உதவி செய்ய வேண்டும். டூவீலர், கார்கள் மற்றும் வேன், பஸ்களில், ரயில்களில், விமானங்களில் ஏறி மக்கள் ஆராதிக்க வர வேண்டும். 

                           நமது இலக்குகள் (2015 – 2020)
  
    தரிசனத்தை செயல்படுத்த - இலக்கு தேவை;   தரிசனம் இலக்காக மாற வேண்டும்

1.   வருடத்திற்கு 400 புதிய ஆத்துமாக்கள் ஆராதனைக்கு வர வேண்டும். (இரண்டு ஆராதனை 200 + 200 = 400)

2.   2020 ல் 2000 பேர் இரட்சிக்கப்பட்டு ஆராதனை அங்கத்தினர்களாக இருக்க வேண்டும்.

3.   வருடத்திற்கு ஒன்று அதிகபட்சம் இரண்டு கிளை சபைகளை நிறுவுதல்

4.   2020 க்குள் 76 கிராமங்களுக்கும் சுவிசேஷத்தை முழுவதும் அறிவிக்க வேண்டும்.

5.   ஆவிக்குரிய தலைவர்கள், ஜெபக்குழு தலைவர்கள் 100 பேரை உருவாக்குதல்

6.   வருடத்திற்கு 50 ஜெபப் பங்காளர்கள், ஜெபக்குழுக்கள் 10

7.   ஊழிய வளர்ச்சி நிதி, ஆலயநிலம் மற்றும் கட்டிட விஸ்தரிப்பு நிதி இலட்சங்களில் சேகரித்தல்

     செயல்பாடு  
        (செயல்பாடு என்பது  -  "தரிசனத்தை நிறைவேற்றப் பாடுபடுவது" )  
                                                
  “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மாற்கு: 1:17)  

        -: இலக்கு செயல்பாடாக மாற வேண்டும் :-

1.       ஆண்கள் நற்செய்திக் குழு, பெண்கள் நற்செய்திக் குழு, வாலிபர் நற்செய்திகுழு ஆரம்பித்தல்

2.   25,000 கைப்பிரதிகளை விநியோகித்து சுவிசேஷம் அறிவித்தல், தெருப்பிரசங்கம் செய்தல்

3.   நற்செய்தி கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள் மூலம் சுவிசேஷம் அறிவித்தல்

4.   ஜெபக்குழுக்கள், வீட்டுக்கூட்டங்கள், பராமரிப்பு குழுக்கள் மூலம் ஆத்துமாக்கள் சந்திக்கப்படுதல்

5.   16 ஆம் தேதி நடக்கும் சுவிசேஷ கூடுகையில் புது ஆத்துமாக்களை வழிநடத்துதல்

6.   இரத்தக் கோட்டை ஜெபத்தின் மூலம் ஆத்துமாக்களை விடுவித்தல்

7.   கிளை சபைகள் மூலம் தேவனுடைய இராஜ்யத்தை நிறுவுதல்

8.   தனித்தாள், பின்தொடர், கடித ஊழியம்,  SMS ஊழியம், மருத்துவமனை, வீடு சந்திப்பு செய்தல்

9.   உபவாச ஜெபம், இரவு ஜெபம், ஜெப நடை, காத்திருப்பு ஜெபம், ஜாமக்கார முழு இரவு ஜெபம் செய்தல்

10.  ஒய்கோஷ் ஜெபம், 40 நாள் உபவாசம், 30 நாள் உபவாசம், 21 நாள் உபவாச ஜெபம் செய்தல்


தேவ திட்டத்தை செயல்படுத்த ஆட்கள் வேண்டும்


பெயர்: ……………………………………………………………………………………                           வேலை:……………………………………………………………………  

ஓய்வு நேரம்: காலை:………………............ மாலை:…………………………….

செல்: ………………………………………………………………………..,   …………………………………………………………………………….,  மின்னஞ்சல்: ......................................................


பொறுப்பெடுக்கும் செயல் திட்டம்:

 1.............................................. 2............................................... 3..................................................

 4............................................. 5............................................... 6...................................................

அர்ப்பணிப்பு ஜெபம்:

ஆண்டவரே! எங்கள் சபையின் தரிசனமும், இலக்குகளும் செயல்படுத்தும்படிக்கு, தேவதிட்டத்தை நிறைவேற்ற சபையின் நடுவே, வேலையாட்களை எழுப்பும். "அறுப்பு மிகுதி; வேலையாட்களோ கொஞ்சம், அறுப்புக்கு எஜமான் வேலையாட்களை எழுப்பும்படிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்" என்றீரே! இதோ, வேண்டுகிறேன். வேலையாட்களை எழுப்பும்! என்னையும் உமது தேவ சேவைக்காக வேலையாளாய் மாற்றும்! அர்ப்பணிக்கிறேன்! எடுத்து உபயோகப்படுத்துமையா! இயேசுவே! எடுத்து உபயோகப்படுத்தும்! மேலே உள்ள ஊழிய செயல்பாடுகளில் எனக்கான ஊழிய பொறுப்புகளை எடுக்க உதவி செய்யும். ஆமென்!