பிப்ரவரி 16, 2016

மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்

Image result for amos

மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்


  • ஆமோஸ்: 1:3 – “… தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”   
  • ஆமோஸ்: 1:6 – “.. காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”  
  • ஆமோஸ்: 1:9 – “… தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”    
  • ஆமோஸ்: 1:11 – “… ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”    
  • ஆமோஸ்: 1:13 – “… அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
  • ஆமோஸ்: 2:1 – “… மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
  • ஆமோஸ்: 2:4 – “… யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”    
  • ஆமோஸ்: 2:6 – “… இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
ஆமோஸ் தீர்க்கதரிசி தன் புத்தகத்தில் நான்கு தேசங்களையும், நான்கு வம்சங்களையும் (அல்லது இனங்கள்) அவர்கள் செய்த மூன்று நாலு பாதகங்களையும், அதனால் அவர்களுக்கு கர்த்தரால் வருகிற ஆக்கினைத்தீர்ப்பையும் குறிப்பிடுகிறதை வாசிக்கிறோம்.


பாதகங்களைச் செய்த நாடுகளும், வம்சங்களும் அதற்கு வரும் தண்டனைகளும்


1
2
3
4
5
6
7
தமஸ்கு
தாழ்ப்பாள் உடையும்
சங்காரம்
சிறையிருப்பு

-

-

-

-
காத்சா
தீக்கொளுத்துதல்
சங்காரம்
விரோதம்
அரண்மனை பட்சிப்பு

-

-

-
தீரு
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு

-

-

-

-

-
ஏதோம்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு

-

-

-

-

-
அம்மோன்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
யுத்த முழக்கம்
பெருங்காற்று புசல்
சிறை இருப்பு

-

-
மோவாப்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
சங்காரம்
கொலை

-

-

-
யூதா
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு

-

-

-

-

-
இஸ்ரவேல்
புகலிடம்
இல்லை
பலப்படுவது
இல்லை
தப்புவது இல்லை
நிலைநிற்பது இல்லை
இரட்சிப்பு இல்லை
நிர்வாண ஓட்டம்
இருத்துவேன் (அடிப்பேன்)


நாடுகள்: தமஸ்கு, காத்சா, தீரு, இஸ்ரவேல்
வம்சங்கள் / இனங்கள்: ஏதோம், அம்மோன், மோவாப், யூதா

நாடுகளும், வம்சங்களும் செய்த பாவங்கள் ஒரே மாதிரியானவைகள். ஆனால், ஆக்கினைத்தீர்ப்பு, தண்டனைகளில் மட்டும் வித்தியாசப்படுவதை காணலாம். ஏன் இந்த வித்தியாசம்?

லூக்கா: 12:47,48 – “தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்”

இரண்டு வித மக்கள் இருக்கிறார்கள்: 1. சத்தியத்தை அறிந்தவர்கள் 2. சத்தியத்தை அறியாதவர்கள்.

அட்டவணையில் நாம் காணும்போது இவ்விரு பிரிவினரை நாடுகளிலும் இனங்களிலும் காணலாம். அறிந்தவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு அதிகம். அறியாதவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு குறைவு. இவைதான் வித்தியாசத்திற்கு காரணம்.

                 “மூன்று பாதகங்கள், நாலு பாதகங்கள்” என்றால் என்ன?   
                                                                               
விரிவாக ஆய்வு செய்வோம்.

யாத்திராகமம்: 20:2–17 வரையுள்ள வசனங்களில் 10 கட்டளைகள் உள்ளதை காணலாம். அவை:

1. உன்னை அடிமைத்தனத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம்.
2. மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ்த்தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.


4. ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் வேலை செய்து உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.                                                  
5. உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.


8. களவு செய்யாதிருப்பாயாக.
9. பிறனுக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

 -   தேவனாகிய கர்த்தர் கொடுத்த பத்து கட்டளைகள் இவையே.

பத்து கட்டளைகளை இரு பிரிவாக பிரிக்கலாம். அவை:

1. பத்து கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் கர்த்தருடைய பரிசுத்த நாமத்தின் மகிமைக்குரியது. அதை நாம் பரிசுத்தகுலைச்சலாக்கக் கூடாது. அதை நாம் மீறி நடந்துகொள்ளும்போது அந்நிய தேவனை தொழுது கொள்ளுகிறவர்களுக்கு ஒப்பாக இருப்போம். அது கர்த்தருடைய பார்வையில் பாதகமாக அமையும். கர்த்தரின் நாமத்திற்கு மகிமையை கொண்டு வருகிற முதல் மூன்று கட்டளைகளை மீறுவதே “மூன்று பாதகங்கள்” என ஆமோஸ் குறிப்பிடுகிறார்.

மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு எதிராக மற்றும் திரியேக தேவனுக்கு பிதா,  குமாரன் பரிசுத்தாவிக்கு விரோதமாக செய்யும் மூன்று பாதகம் இதுவே.

2. அடுத்து வரும் 4,5,6,7 ஆகிய கட்டளைகள் நமக்கு நாமே மற்றும் பிற மனிதனுக்கு அல்லது சக மனிதனுக்கு விரோதமாக எவ்வித எதிரான காரியங்களையும் செய்யாதபடிக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள். அதை மீறி நடக்கும்போது சக மனிதனுக்கு தீமையும், மனித சமுதாயத்திற்கு மிகப் பெரிய சேதத்தையும் விளைவிக்கும். அது ஒரு தேசத்தை மட்டுமல்ல… முழு உலகத்தையே நாசமாக்கி விடும். தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டுப் போய்விடும். 4,5,6,7, ஆகிய இந்நான்கு கட்டளைகளையும் மீறி நடக்கும்போது தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், தேசங்களின் ஒழுக்கம் சீர்கெடுகிறது. சக மற்றும் பிற மனிதனுக்கு விரோதமாக மனிதன் செய்யும் “நாலு பாதகங்கள்” இதுவே என ஆமோஸ் குறிப்பிடுகிறார்.

இதற்கடுத்து வரும் 8,9,10 ஆகிய கட்டளைகளும் 4,5,6,7 ஆகிய கட்டளைகளைப் போலவே தனி மனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கத்தைப்பற்றியதே. எனவே, பத்து கட்டளைகளில் கடைசி மூன்று கட்டளைகள் 4,5,6,7 ஆகிய கட்டளைகளுக்குள் அடங்கி விடுகிறதை பார்க்கலாம். எனவே, மூன்று பாதகங்கள் மற்றும் நாலு பாதகங்கள் என்பது இக்கட்டளைகளை மீறி நடப்பதையே குறிக்கிறது.

1. ஒரு மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் மூன்று
2. ஒரு மனிதன் பிற மனிதனுக்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் நாலு.

அ) ஒரு மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் மூன்று:

சங்கீதம்: 107:17 – “நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய் கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்” என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. பத்து கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் நீதியின் மார்க்கத்தை நமக்கு காட்டுகிறது. போதிக்கிறது. அதை விட்டு வழிவிலகி சென்றால்… பாதகமான மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களாவோம். அது நமது ஆவி ஆத்துமா சரீரத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்து விடும். கட்டளையை விட்டு விலகுவதே பாதகம். பாதக மார்க்கம்.

ஆ) ஒரு மனிதன் பிற மனிதனுக்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் நாலு:

சங்கீதம்: 107:34 – “குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார்” ஆதியாகமம்: 3:17 – “… பூமி உன்னிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்…” பாவம் மற்றும் பாதகங்களினிமித்தம், பூமி, தேசங்கள், வம்சங்கள் அனைத்தும் சாபத்திற்குள்ளாகிறது. முடிவில் ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவாகிறது.

இப்படிப்பட்ட பாதகங்களைத்தான் ஆமோஸ் குறிப்பிடுகிற நாடுகளும், வம்சங்களும் செய்து ஆக்கினைக்குள்ளானர்கள் என அறிகிறோம்.

மூன்று, நாலு பாதகங்கள் என்பது பாவத்தின் எண்ணிக்கையை காட்டுகிறது. 3+4=7;  ... என மனிதன் பாவத்தோடே பாவத்தை செய்வதினால் பாவத்தின் கூட்டுத்தொகை கூடுதலாகிக் கொண்டே போகிறதை வேதத்தில் நாம் காணலாம். மாற்கு: 7: 21-22 வரை 13 பாதகங்கள்;    கலா: 5:19-21 - வரை 17 பாதகங்கள்;   2தீமோ: 3:1-8 வரை 21 பாதகங்கள். பரிசுத்தத்தை விரும்புகிற கூட்டத்தைவிட பாவத்தையும் பாதகத்தையும் விரும்பிச் செய்கிற கூட்டம் அதிகமாக உள்ளதை உலகில் பார்க்கிறோம். ஆதாமில் ஆரம்பம் ஆன மீறுதல் என்கிற பாவம் பெருகி பெரும் பாதகத்தை நோக்கி பயணம் செய்து முழு மனுக்குலத்தையும் சர்வ நாசம் செய்து கொண்டிருப்பதை மனிதன் உணராமலிருப்பதை காணும்போது... மனந்திரும்புதலின் செய்தி மனுக்குலத்திற்கு எவ்வளவு அவசியமானது என்பதை நமக்கு உணரச் செய்கிறது.


தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார்?

நம்மை ஆசீர்வதிக்கவே அழைத்திருக்கிறார் என ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகிறார். சாத்தான் நம்மை அழைத்து அடிப்பான். தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை நம் கண்காண நயமாக வஞ்சித்து பிடுங்கிக் கொள்வான். பின்பு, நம்மை ஏளனம் செய்து நித்தித்து அவமதிப்பான்.

இஸ்ரவேலைக்குறித்த தேவனது ஆதங்கம்:

ஆமோஸ்: 2:9-11 – “நானோ: கேதுரு மரங்களைப் போல் உயரமும், கர்வாலி மரங்களைப் போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு, நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி, உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்”.

“இப்படி நான் செய்யவில்லையா?” – என்று கர்த்தர் நம்மிடம் சூசகமாக கேட்பதை பார்க்கிறோம்.
  • செய்யத்தான்
  • கொடுக்கத்தான்
  • செழிக்கத்தான்
  • ஐசுவரியவனாக்கத்தான்
  • ஞானமுள்ளவனாக்கத்தான் 
  • உங்கள் பிள்ளைகளை தீர்க்கதரிசிகளாக்கத்தான், ஊழியர்களாக்கத்தான்
  • தேசத்தின் அதிபதிகளாக்கத்தான்     – தேவனாகிய கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்.
தேவனாகிய கர்த்தர் நம்மை நடத்தி வந்த பாதைகளை திரும்பி பாருங்கள். தேவனால் அழைக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள்வரை நம் வாழ்வில் அவர் செய்த காரியங்களை நினைத்துப் பாருங்கள். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் எத்தனை? எத்தனை? உலகவாழ்வின் ஆசீர்வாதங்கள் எத்தனை? எத்தனை? இப்படி அவர் நமக்கு செய்யவில்லையா? அவர் செய்த அதிசயங்கள், அற்புதங்கள், வழிநடத்துதல்கள், அடையாளங்களை நினைத்து நினைத்து நன்றி சொல்லுங்கள்.

நம்முடைய ஆசீர்வாதங்கள் கர்த்தருடைய வசனத்திற்குள் மறைவாக வைத்திருக்கிறார். நாம் தான் வேதத்தை வாசித்து தியானித்து கண்டு பிடித்து அவைகளை சுதந்தரிக்க வேண்டும்.  நீதி: 25:2 – “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை”. கர்த்தருடைய வசனத்தின் உள் அர்த்தத்தை கண்டறிய, கர்த்தருடைய பாதத்தில் பொறுமையோடே அமர்ந்து வேதத்தை தியானித்தால்தான் விளங்கும். அதை நாம் சுதந்தரிக்க வழி புலப்படும்.

மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும் வந்த ஆக்கினையிலிருந்து தப்புவது எப்படி?

சங்கீதம்: 107:6,13,19 – “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்” என வாசிக்கிறோம். கர்த்தருடைய வார்த்தைகளை மீறி, கட்டளைகளை மீறி பாதகங்களை செய்யும்போது, தேவ ஜனத்திற்கு ஆபத்தும், ஆக்கினையும் வருகிறது. அப்போதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு தங்களை காத்துக் கொண்டார்கள் என பார்க்கிறோம்.

ஏசாயா: 1:18 – “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” என்று அழைக்கிறார். பாவத்தை நோக்கி எவ்வளவு தூரம் பயணப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கர்த்தர் அழைக்கிறார். அனைத்து பாதகங்களையும் நம்மை விட்டகற்றி வெண்மையாக்கி, பரிசுத்தமாக்கி நீதிமானாக்க அழைக்கிறார். பாதக மார்க்கத்தை விட்டு விலகி ஜீவ மார்க்கத்தை பின் தொடரும்போது, நம்மேல் வருகிற ஆக்கினைத்தீர்ப்பு மாறி, ஆசீர்வாத வாழ்வை காண்போம்.

ஆபத்திலே கர்த்தரை நோக்கி மனதார கூப்பிடும்போது…. (ஆமோஸ்: 9:12-15)
  • விழுந்துபோனதை திரும்ப எடுப்பிக்க உதவிடுவார்
  • திறப்புகளை அடைப்பார்
  • பழுதானவைகளை சீர்படுத்துவார்
  • பூர்வ நாட்களில் இருந்ததைப்போல ஸ்தாபிப்பார்
  • சிறையிருப்பு என்கிற அடிமைத்தனத்தை திருப்புவார்
  • பாழானவைகளை திரும்ப கட்டுவாய்
  • உன் தோட்டம் செழிப்பாகும் (தொழில், வேலை, வியாபாரம், குடும்பம்)
  • குடிவிட்டு ஓட மாட்டாய்; ஊர்ஊராக அலைந்து திரியமாட்டாய்; நிலைத்திருப்பாய்
இப்படி அவர் செய்யவில்லையா? என்று கர்த்தர் கேட்கிறார். நாம் என்றால் தேவனுக்கு அவ்வளவு பிரியம். எண்: 24:1 – “இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்” என்பதை அறிவோமாக. ஆமென்! அல்லேலூயா!