சபைக்குள்
வரப்போகும் பலவான்களுக்கான வசன அறிக்கை
“பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்
கொள்வார்” (ஏசா: 53:12)
1. "என்னைக்
கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்கு சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்” (சங்:
2:8)
2.
இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும்
வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு பட்டணத்தின்குடிகள் மறு பட்டணத்தின்
குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத்
தேடவும் தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். அநேக
ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில்
விண்ணப்பம் பண்ணவும் வருவார்கள். அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில்
பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக் கொண்டு: தேவன்
உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி,
அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்” (சக:
8:20-23)
3.
“ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும்,
சூசன்னாளும் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டு வந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும்
அவருடனே இருந்தார்கள்” (லூக்: 8:3)
4.
“இரதத்தை நிறுத்தச் சொன்னான். அப்பொழுது பிலிப்பும்
மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்
கொடுத்தான்” (அப்:8:38)
5.
ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச்
சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்”
(சங்: 47:9)
6.
“சிலர்
அவனைப்பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ்மேடையின் நியாயாதிபதிகளில்
ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே
வேறு சிலரும் இருந்தார்கள்” (அப்:17:34)
7.
“அப்பொழுது
தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் (தொழிலதிபர்கள், மொத்த வியாபாரிகள்) தேவனை
வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக் கொண்டிருந்தாள்; பவுல்
சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்” (அப்:
16:14)
8.
“தினந்தோறும்
தேவாலயத்திலேயும், வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று
பிரசங்கித்தார்கள்” (அப்: 5:42)
9.
“அவர்கள்
புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை
நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்”
(மாற்: 16:20)