ஆத்துமாக்கள்
சபையில் நிலைநிற்க
“நீங்கள்
தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில்
உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்” (கொலோ: 4:12)
(ஒவ்வொரு சபைப் போதகப்பிதாக்களும், சபைமக்களும் இவ்வேதவசனத்தை அறிக்கையிட்டு ஜெபிக்கும்படி அன்பாய் கேட்கிறேன்)
1.
“இஸ்ரவேலை
சிதறடித்தவர் அதைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக
அதைக்காப்பார்” (எரே: 31:10)
2.
“பாபிலோன்
நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும்
கடாக்களைப்போல் இருங்கள்” (எரே: 50:8)
3.
“கர்த்தராகிய
ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத்
தேடிப்பார்ப்பேன். ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன்
மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான
நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி, அவைகளை
ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும், தேசங்களிலிருந்து சேரவும் பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே
அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல்மலைகளின் மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும்
அவைகளை மேய்ப்பேன். அவைகளை நல்லமேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில்
அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக் கொள்ளும், இஸ்ரவேலின்
மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன்
என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எசேக்: 34:11-15)
4.
“கர்த்தராகிய
ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி
அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ண வேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனுஷரைப்
பெருகப் பண்ணுவேன்” (எசேக்: 36:37)
5.
“யாக்கோபின்
ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க்கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை
நிச்சயமாய் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன்
தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி,
வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார்,
கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா: 2:12,13)
6.
“கர்மேலின்
நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது
கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில்
மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக” (மீகா: 7:14)
7.
“யோசியா
இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே
காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை” (2நாளா:
34:33)
8.
“எங்கள்
மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச்
சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்;
கொடுமையாகவும், கலகமாகவும் பேசினோம்; கள்ள வார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து
பிறப்பிக்கப்பண்ணினோம்” (ஏசா: 59:12,13)
9.
“கற்பாறையின்மேல்
விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும்
தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியி னாலே, கொஞ்சக்கால மாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில்
பின்வாங்கிப் போகிறார்கள்” (லூக்: 8:13)
10.
“விசுவாசத்தினாலே
நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர் களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்”
(எபி: 10:38,39)
11.
“தேசங்களின்
ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகித் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும்,
அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும், புத்தியும்
உள்ளவர்ளெல்லாரும், தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு, தேவனுடைய
தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின்படி நடந்து கொள்வோம் என்றும்,
எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும், சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும்
எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின்
ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம்
என்றும், தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும்
விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள்
கையில் கொள்ளாதிருப்போம் என்றும் … ஆணையிட்டு பிரமாணம் பண்ணினார்கள்” (நெகே:
10:28-31)
12.
“தேமா
இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னை விட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப்
போய்விட்டான்;” (2தீமோ: 4:10)
13.
“பிரிந்துபோகிறவன்
தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான்” (நீதி: 18:1)
14.
“அவர்கள்
நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள்; ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களா யிருக்கவில்லை;
நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார் களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று
வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்” (1யோவா: 2:19)
15.
“கடைசிகாலத்திலே
தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச்
சொன்னார்களே. இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே”
(யூதா: 18,19)
16.
“உம்முடைய
சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்;உம்முடைய வசனமே சத்தியம்” (யோவா:
17:17)
17.
“பரிசுத்த
பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை
உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொள்ளும். நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களைக்
காத்துக் கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களை காத்துக் கொண்டு வந்தேன்; வேதவாக்கியம்
நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை”
(யோவா: 17:11-12)
18.
“நீர்
அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று
காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவா: 17:15)
19.
“ஒருமைப்பாட்டில்
அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், … நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும்
என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்” (யோவா: 17:23,24)
20.
“நீர்
என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும்,
உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்”
(யோவா: 17:26)
21.
“என்னில்
நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; … ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால்,
வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; … நீங்கள் என் அன்பிலே
நிலைத்திருங்கள்” (யோவா: 15:4,6,9)
22.
“என்
நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுப்பரியந்தம் நிலைத்திருப்பவனே
இரட்சிக்கப்படுவான்” (மத்: 10:22)
23.
“நீங்கள்
என் உபதேசத்திலே நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” (யோவா: 8:31)
24.
“பர்னபா
… தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும்
புத்திசொன்னான்” (அப்: 11:23)
25.
“சீஷருடைய
மனதை திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி,
நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்”
(அப்: 14:22)
26.
“ஆகையால்,
தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே
தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்;
நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய். அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால்
அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே
” (ரோம: 11:22,23)
27.
“அவனவன்
தான்அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்” (1கொரி:7:20)
28.
“விழித்திருங்கள்,
விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள்” (1கொரி:
16:13)
29.
“நீங்கள்
கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்” (கொலோ: 1:22)
30.
“நீ
தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு”
(1தீமோ: 4:15)
31.
“உத்தம
விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ள வளாய், இரவும் பகலும்
வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்” (1தீமோ:5:5)
32.
“அந்த
விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும்
நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்”
(2தீமோ: 1:5)
33.
“சுயாதீனப்பிரமாணமாகிய
பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே
நிலைத்திருக் கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிரு
ந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்” (யாக்: 1:25)
34.
“அவருக்குள்
நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்” (1யோவா:
2:6)
35.
“உலகமும்
அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும்
நிலைத்திருப்பான்” (1யோவா: 2:17)
36.
“அவருடைய
கட்டளைகளை கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்;
அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்”
(1யோவா: 3:24)
37.
“எல்லாவற்றையும்
முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும்செய்யுங்கள்”(பிலி:2:16)
38.
“திராட்சத்தோட்டங்களைக்
கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள்
பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே” (உ.பா:1:15)
39.
“என்
ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக் கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத்
துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு” (எரே: 6:26)