அக்டோபர் 15, 2015

தேவனுடைய ராஜ்யம் வருவதாக

Image result for kingdom of god on earth as it is in heaven

இயேசுவின் ராஜ்யம் வருவதாக

(வேதவசன அறிக்கை ஜெபம்)

1.   நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (லூக்: 11:20)

2.   “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்தகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (மத்: 12:28)

3.   “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” (மாற்: 1:15)

4.   “தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படும்” (லூக்: 19:11)

5.   “அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது” (லூக்: 1:33)

6.   “கர்த்தரின் நாமத்தினால் வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக” (மாற்: 11:10)

7.   “உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது” (சங்: 145:13)

8.   “அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும் அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்” (தானி: 4:3)

9.   “அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்” (தானி:6:26)

10. “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்” (தானி: 7:14)

11. “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்” (தானி: 7:27)

12. “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப்  பூமியிலேயும் (என்னிலும், என் குடும்பத்திலும், என் சபையிலும், என் பட்டணத்திலும், என் கிராமத்திலும், என் மாநிலத்திலும், என் தேசத்திலும்) செய்யப்படுவதாக” (மத்: 6:9,10)

13. “அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும், எருசலேமிலும் ஆளுகை செய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்” (ஏசா: 24:23)

14. “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்” (தானி: 4:25)

15. “உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார்” (தானி: 5:21)

16. “மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்” (மீகா: 4:8)

17. “அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமை பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்” (சகரி: 6:13)

18. “எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப் பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்கு சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கி பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்” (சகரி: 9:10)

19. “கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்” (யாத்: 15:18)

20. “கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது” (சங்: 103:19)

21. “கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம் பண்ணுகிறார். அல்லேலூயா” (சங்: 146:10)

22. “இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (எரே: 23:5)

23. “கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்; ஆதலால், பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது” (சங்: 93:1)

24. “கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமிபூரிப்பாகி, திரளானதீவுகள் மகிழக்கடவது” (சங்:97:1)

25. “கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்” (சங்: 96:10)

26. “வானங்கள் மகிழ்ந்து, பூமிபூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக” (1நாளா: 16:31)

27. “சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூறுவதாக. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது” (1நாளா: 16:32,34)

நாமகிரிப்பேட்டையில் தேவனுடைய ராஜ்யம் வருவதற்கு விரோதமாய் செயல்படும் எல்லாவித ஆவிகளையும் ஒரு திரி அணைகிறதுபோல் அணைந்துபோவதாக. ஆமென்.