அக்டோபர் 14, 2015

ஜெப சவாரி வேதவசன அறிக்கை - 1

Image result for prayer safari

ஜெப சவாரி வேதவசன அறிக்கை - 1

அ) பாகால் வல்லமை இயேசுவின் நாமத்தினால் அற்றுப் போவதாக

“அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்பட்டதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிற           - தையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்” (எசேக்: 11:18)

1. “வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்” (எரே: 10:11)

2. “மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே: 48:35)

3. “பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப் பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற் போகும்” (ஓசி: 2:17)

4. “சகல ஜனங்கள் மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப் போடுவார்” (ஏசா: 25:7)

5. “கர்த்தர் அவர்கள் மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்து போகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்து கொள்வார்கள்” (செப்: 2:11)

6. “கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவது போல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம்” (ஏசா: 25:10)

7. “நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்” (ஏசா: 44:25)

8. “அப்பொழுது நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்” (ஏசா: 2:17,18)

9. “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காண்டார்கள்; மரணஇருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா: 9:2)

10. ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாக சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்” (சங்: 47:9)

11. “விக்கிரகங்கள் அவருக்கு முன்பாக குலுங்கும்” (ஏசா: 19:1)

12. “அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே: 10:5)

13. “வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை” (எரே: 10:14)

14. “நரகலானவிக்கிரகங்களை அழித்து, நோப்பின்சிலைகளை ஒழியப்பண்ணுவேன்” எசே:30:13

15. சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும், அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்” (மீகா: 1:7)

16. “வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம் பண்ணுவேன்” (நாகூம்: 1:14)

17. “நான் விக்கிரகங்களின் பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை. தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய் விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி: 13:2)

18. “விக்கிரகங்களை உண்டு பண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப் போவார்கள்” (ஏசா: 45:16)

19. “உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்து போகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும்” (எசே: 6:6)

20. “ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு, உங்கள் முகங்களை திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்” (எசே: 14:6)

21. “உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளி விட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக” (எசே: 20:7)

22. “நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்” (எசே: 20:18)


23. “அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்” (எசே: 36:25)