செப்டம்பர் 01, 2013

பண்டிகையும் கிறிஸ்தவமும் - 4


பண்டிகை கொண்டாடலாம்  என்பதற்கு வேத ஆதாரம்:
(எண்: 10:10, யோவேல்: 2:15,16)

வேதத்தை வாசிக்கும்போது - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொருமுறையும் சுவிசேஷம் அறிவிக்கும்போதும் பண்டிகை நாட்களில்தான் அதிகம் அறிவித்தார் என நாம் அறியலாம். பண்டிகைக்கு முன்பாகவே அவர் அவ்விடத்திற்கு வருவதைக் காணமுடியும். (யோவா: 5:1). இயேசு பஸ்கா பண்டிகையை ஆசரித்தார். (மத்: 26:17, மாற்: 14:12, லூக்: 22:9, 2:41,43,   22:15, யோவா: 2:13, 6:4,  12:1,15,  7:10) இயேசு பண்டிகைக்கு இரகசியமாக போனார். யோவா: 7:37 - பண்டிகையில் இயேசு சுவிசேஷம் அறிவித்தார். யோவா: 10:22,23 - ல் - இயேசு தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகையில் கலந்து கொண்டார்.

அப்.பவுல் பண்டிகையில் கலந்து கொள்ள விருப்பமாயிருந்தான். (அப்: 18:20,21). பவுல் பெந்தேகொஸ்தே பண்டிகையில் கலந்து கொள்ள எருசலேமிற்கு செல்ல தீவிரப்பட்டான். (அப்: 20:16). "ஆதலால், பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." (1கொரி: 5:8).

மேலும் பவுல் கூறும்போது,  பண்டிகை கொண்டாடலாம். ஆனால்,  பிறர் குற்றப்படுத்தும்படியான வகையில் கூடாத என்கிறார். "ஆகையால், போஜனத்தையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகைகளையும், மாதப் பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாதிரப்பானாக" (கொலோ: 2:16).

நாகூம்: 1:15 - "...யுதாவே உன் பண்டிகைகளை ஆசரி". 

எசேக்: 45:17, 21,23,25 - குறிக்கப்பட்ட பண்டிகைகளை ஆசரிக்கலாம். 

ஏசா: 33:20 - "நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோனை நோக்கிப்பார்". 

சங்: 83:3 - "மாதப்பிறப்பிலும், நியமித்த காலத்திலும், நம்முடைய பண்டிகை நாட்களிலும் எக்காளம் ஊதுங்கள்". 

எஸ்தர்: 9:17,18 - "...சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்". 

நெகே: 8:18 - "...ஏழு நாள் பண்டிகையை ஆசரித்தார்கள்".

(எஸ்றா: 6:22, 3:5, 2நாளா: 35:17, 30:13,22, 8:13, 7:8,9, 2:4, 1ராஜா: 8:65, 12:32, உபா: 16:10,15,16, யாத்: 5:1, 10,9, 23:14-16, யாத்: 32:5, 34:18,22, லேவி: 23:6, எண்: 28:17, லேவி: 23:34, எண்: 29:12, உபா: 16:13, எண்: 10:10)