செப்டம்பர் 01, 2013

கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்



கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? 

மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!

”கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.”

இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.


"உம்முடைய கட்டளைகளை நான் கைக் கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்" (சங்: 119:100)

"நீங்கள் வளரும்படி, புதிதாய் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்" (1பேதுரு: 2:3).

"இவைகளால் ஞானத்தையும், போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் தேறுவான், விவேகி நல்லாலோசனைகளை அடைந்து,  நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்து கொள்வான். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்..." (நீதி: 1:2-7)