ஜனவரி 30, 2013

ஆதிதிருச்சபையார் செய்த ஊழிய முறைமைகள்

 
1. ஜெபாலய பிரசங்கம்:

ஜெப ஆலயங்கள் யூதர்கள் பாபிலோனில் சிறை சென்றபோது உருவானதாகும். எனவே, யூதர்கள் இருந்த இடங்களிலெல்லாம் ஜெபாலயங்கள் இருந்தன. இவைகள் நற்செய்தி ஊழியத்தின் மைய இடங்களாக உபயோகிக்கப்பட்டன. அப்போஸ்தலர்: 13:5; 17:17; 4:1 - "சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபாலயங்களில் தேவ வசனத்தை பிரசங்கித்தார்கள்".

2. வெளிப்பிரசங்கம்:

ஊர்புறம், கொல்லைப்புறம், திறந்தவெளி, ஆற்றங்கரை, சந்தைவெளிகள் ஆகிய இடங்களில் பேசுவது யூதர்களுடைய வழக்கமாயிருந்தது. ஆதிச்சபை இம்முறையை பின்பற்ற அரம்பித்தது. அப்போஸ்தலர்: 5:11-14;    8அதிகாரம்,  16:13;  17:17.

(மின் தடை காரணமாக) ...தொடரும்...

ஜனவரி 26, 2013

பாவமில்லாதிருப்பது என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மெய்யாகவே முடிகிற காரியமா?

 
அவனாகவே இதைச் செய்ய முடியாது. ஏனென்றால், எல்லாக் கிறிஸ்தவர்களும் நாள்தோறும் (அறிந்தோ, அறியாமலோ) பாவம் செய்கின்றனர். என்றாலும், அவனுடைய இரட்சகராகிய இயேசு தம் சொந்த நீதியினால் அவன் பாவத் தன்மையை மூடுகிறார்; எனவே, பலங்குன்றிய பெலவீனமான கிறிஸ்தவனையும்கூட தேவன் தமது அன்புள்ள பிள்ளையாகக் கருதுகிறார்.

ஒரு கிறிஸ்தவனை அவனுடைய இரட்சகரிடமிருந்து இறுதியாகப் பிரித்து வைக்கும் ஒரே காரியம் விசுவாசமின்மையே. பலங்குன்றிய பெலவீனமான கிறிஸ்தவனிடம் தேவன் பொறுமை காட்டி தம்மிடம் திருப்பும்படி அவனை இடைவிடாமல் அழைக்கிறார்.

1கொரிந்தியர்: 15:9,10 - "நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை. அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது"

பிலிப்பியர்: 3:12 - " நான் அடைந்தாயிற்று அல்லது முற்றும் தேறினவனானேனென்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்"

ஏசாயா: 1:18 - " வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும், பஞ்சைப்போலாகும்"

கேள்விப்படாதோர் கேள்விப்பட...என்ன செய்யலாம்?

 
இயேசுவை அறியாத மற்ற மக்கள், கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பார்த்து அதைப் பற்றி இன்னும் அதிகமாக அறிய விரும்பும் வண்ணமாக சாட்சியாக வாழ்ந்து வருவதனாலும், தாங்கள் கற்றுக் கொண்ட தேவ வசனத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதானாலும், ஆராதனை மற்றும்  ஜெபக் கூட்டங்களுக்கு மற்றவர்களை அழைத்துக் கொண்டு வருவதானாலும், நற்செய்தியை அறியாத உலகத்தின் பல பகுதிகளுக்கு உடன் கிறிஸ்தவர்களை அனுப்பி வைப்பதானாலும் கேள்விப்படாதோர் கேள்விப்பட - கிறிஸ்தவர்கள் இதைச் செய்யலாம்.

இவை தரப்பட்டிருக்கும் வரிசையைக் கவனிக்கவும்:

முதலாவது, சொந்த  வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கு சாட்சியாகவும், பின்பு கிறிஸ்துவைப் பற்றிக் கூறுதலும்  வருகின்றன. மக்களை ஆலயத்திற்கு அழைத்துக் கொண்டு வருவதும், ஊழியம் செய்வதும், ஊழிய அழைப்புள்ளோரை அனுப்பி வைப்பதும் முக்கியமான காரியங்களே. ஆனால், ஒருவன் செயலாலும், சொல்லாலும் கொடுக்கும் சாட்சியத்திற்குப் பிந்தினவைகளாகவே இவை வருகின்றன.

மத்தேயு: 5:16 - "இவ்விதமாய், மனுர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது"

2கொரிந்தியர்: 3:1-3 - " எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக் கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக் கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ? எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே. ஏனெனில், நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய  கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது"

  
அப்போஸ்தலர்: 8:4 - "சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்"

யோவான்: 1:46 - "...அதற்குப் பிலிப்பு, வந்து பார் என்றான்" -  என்று சொன்னான்.

அப்போஸ்தலர்: 13:2,3 - "அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்."

முதலாவது சாட்சியுள்ள ஜீவியம்; அடுத்து ஆத்துமாதாயம்.

ஜனவரி 24, 2013

பாவத்திலிருந்தும் அதன் தண்டனையிலிருந்தும் தப்புவதற்கு ஏதாவது வழி உண்டா?

 
இதற்கு நாமே கண்டு பிடிக்கக்கூடிய வழி எதுவும் இல்லை. காலங்காலமாக தப்பும் வழிகளைக் கண்டு பிடிக்க மக்கள் முயற்சி செய்து வந்திருக்கின்றனர்.

1. சிலர் தங்கள் தேவர்களை உண்மையுடன் வழிபட்டு வந்திருக்கின்றனர்.*

2. சிலர் பாவம் செய்வதை விட்டுவிட்டு நல்லவர்கள்  ஆக முயற்சி செய்திருக்கின்றனர்.**

3. எல்லா மனிதரும் பாவிகளாய் இருக்கிறபடியினால் பாவம் மிகக் கேடானதாய் இருக்க முடியாது என்று சிலர் வாதாடுகின்றனர்.***

4. மனிதனின் கற்பனையேயன்றி பாவம் என்பது இல்லை என்று கூட சிலர் சொல்லியிருக்கின்றனர்.****

5. இவ்வழிகள் எல்லாம் தோல்வியுற்றன. எல்லாரும் இன்னும் பாவமுள்ளவர்களாகவும் கடவுளின் கோபத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.*****

***//***

அ)    இந்துக்களிலும் முஸ்லீம்களிலும் பலர் கிறிஸ்தவர்களைவிட வழிபாட்டில் அதிக உண்மையுள்ளவர்களாய் இருக்கின்றனர். என்றாலும், அது அவர்களுக்கு பாவங்களிலிருந்து விடுதலையளிப்பதில்லை.*

ஆ)    புத்திசாலித்தனமாக வாழ்வது பற்றிய மிகச் சிறந்த உபதேசங்களில் சில கிறிஸ்தவரல்லாதோரிடமிருந்து கிடைக்கின்றன. உதாரணமாக... மகாத்மா காந்தியின் அஹிம்ஸா முறை. ஆனால், இது பாவங்களை ஒழித்து விடுவதில்லை.**

இ)    எல்லா மனிதர்களும்  பாவிகளானால் பாவம் கவலை தருவதாய் இருக்க முடியாது என்று வாதிப்பது எல்லா மனிதருக்கும் சாவு வருகிறபடியினால் சாவு கவலை தருவதாக இல்லை என்று வாதிப்பது போலவே செல்லாது.***

ஈ)   பாவம் ஒருவனுடைய கற்பனையைப் பொறுத்ததுதான் என்னும் கருத்து, இம்மையில் கூட அதனால் உண்டாகும் கடுமையான விளைவுகளைக் கவனியாமற் போகிறது.****

உ) கடவுளுக்கு செவிகொடுத்தால் நம்மை இரட்சித்துக் கொள்ளுவதற்கு நாம் திறமையற்றவர்கள் என்று அறிந்து கொள்ளுவோம்.*****

*** //***

1. அப்போஸ்தலர்: 17:22,23 - அத்தேனே பட்டணத்தார் மிகுந்த சமயப் பற்றுடையவர்கள் என்று பவுல் கூறுகிறார்.*

2. லூக்கா: 18:9-14 - பரிசேயன் நற்செயல்கள் எல்லாம் செய்த போதிலும் நீதிமானாகத் தீர்க்கப்படவில்லை. **

3. எண்ணாகமம்: 14 - ல் இஸ்ரவேலர் பாவம் செய்தனர். அவர்கள் தண்டணையைக் குறித்து தேவன் அவர்களுக்கு கூறினார். அவர்கள் கடவுளின் தண்டனையைப் புறக்கணித்து, தவறு எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்பதுபோல தொடர விரும்பினர்.***

4. கலாத்தியர்: 5:19,20 - மாம்சத்தின் கிரியைகளை, பாவமுள்ள மனிதரின் செயல்களை பவுல் விவரிக்கிறார்.****

5. எபேசியர்: 2:3 - சுபாவத்தினாலே மனுக்குலத்திலுள்ள மற்றவர்களைப் போலவே நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.*****

ஜனவரி 23, 2013

"கிறிஸ்து" என்னும் சொல்லின் பொருள்

 
"கிறிஸ்து" என்னும் சொல் "அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்று பொருள்படும். எபிரேய மொழியில் "மேசியா" என்பதாகும்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், ராஜாக்களும் அவர்கள் பதவிக்கென அபிஷேகம் செய்யப்பட்டனர். இவர்களில் யாருமே குறைபாடில்லாதவர்களாய் இருக்கவில்லை. ஆனால், அவர்களிடம் வந்து அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் கடவுளின் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற அபிஷேகம் பெற்ற ஒருவரை தேவன் அவர்களுக்கு வாக்களித்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.

இயேசுவே 'கிறிஸ்து' என்றால் "உலகத்தின் இரட்சகராகும்படி அவர் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்" என்று பொருள்.

"கிறிஸ்து" என்பது இயேசுவின் பணிசார்ந்த பெயர். அவருடைய பதவியையும், வேலையையும் இது காண்பிக்கிறது.

அவர் காலத்தில் இயேசு என்னும் பெயருடைய பலர் இருந்தனர். ஆனால், கிறிஸ்துவாக இருந்தது அவர் மாத்திரமே.

இயேசு கள்ளக் கிறிஸ்துக்களைப் பற்றி மத்தேயு: 24:24;  மாற்கு: 13:22 - ல் பேசினார். 1யோவான் 2 ல் நாம் அந்திக் கிறிஸ்துவைப் பற்றி வாசிக்கிறோம். ஆனால், கிறிஸ்துவானவர் ஒருவரே.

நமது இரட்சகரைப் பற்றி பேசும்பொழுது நாம் அவரை சாதாரணமாக இயேசு என்று அழைப்போம். அவருடைய பதவியைப் பற்றி பேசினால் நாம் அவரை இயேசு கிறிஸ்து என்றோ கிறிஸ்து என்றோ நாம் அழைப்போம். அவர் மெய்யான கடவுள் என்று நம்பிய போதிலும், நாம் அவரைக் கடவுள் என்னும் பெயரால் அழைப்பதில்லை.

யாத்திராகமம்: 30:30 - ஆரோன் ஆசாரியனாக அபிஷேகம் பண்ணப்படுதல்.

1சாமுவேல்: 16:13 - சாமுவேல் தாவீதை அரசனாக அபிஷேகம் பண்ணுகிறார்.

1இராஜாக்கள்: 19:16 - எலியா எலிசாவை தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணுகிறார்.

எபிரேயர்: 1:9; சங்கீதம்: 45:7 - கடவுள் இயேசுவை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்.

மத்தேயு: 16:16 - சீமோன் பேதுரு: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

அப்போஸ்தலர்: 2:36 - "இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று... அறியக்கடவீர்கள்"

ஜனவரி 22, 2013

சரியான உறவுகள்

 
கிறிஸ்தவ வாழ்க்கையில் உபதேசமும் கடமையும் ஒருமித்துச் செல்கிறது. நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதுவே நாம் எப்படி வாழ்வது என்று தீர்மானிக்கிறது.

இந்தப் பகுதியின் முக்கியமான கருத்து ஒருவரில் ஒருவர்  உள்ள உறவை சார்ந்ததாகும். நமக்கு தேவனோடு சரியான உறவு இருக்குமானால் நம் அருகில் இருக்கும் ஜனங்களோடும் உறவு சரியாய் இருக்கும். தேவனிடத்தில் அன்பாய் இருக்கிறேன் என கூறிக் கொண்டு சகோதரனைப் பகைத்தால் அவன் பொய்யன் என வேதம் கூறுகிறது. (1யோவான்: 4:20).

1. தேவனோடு உள்ள உறவு: (ரோமர்: 12:1-2)

அ) சரீரத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுத்தல்: (ரோமர்: 12:1)

இரட்சிக்கப்படுவதற்கு முன்பு பாவ இன்பத்திற்காக நம்முடைய சரீரத்தை செலவிட்டோம். இப்பொழுது அவருடைய மகிமைக்காக உபயோகிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுடைய சரீரம் தேவனுடைய ஆலயம் என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. (1கொரிந்தியர்: 6:19,20). ஏனென்றால், தேவனுடைய ஆவி அவனுக்குள் வாசமாயிருக்கிறார்.(ரோமர்: 8:9). கிறிஸ்துவை நம்முடைய சரீரத்தில் மகிமைப்படுத்துவது நம்முடைய சிலாக்கியம். ஜீவபலியாகிய இயேசு கிறிஸ்துவே அதற்கு சரியான உதாரணம். அதில், கிறிஸ்துவின் பூரண கீழ்படிதல் இருந்தது. ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற வார்த்தை எக்காலத்தும் ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஆ) நம்முடைய மனதை தேவனுக்கு ஒப்புக் கொடுத்தல்: (ரோமர்: 12:2)

உலகம் நம்முடைய மனதை (சிந்தையை)  கட்டுப்படுத்த விரும்புகிறது. ஆனால், தேவன் நமது மனதை மறுரூபமாக்க வேண்டும் என விரும்புகிறோம். வேதத்தில் வாசித்துப் பாருங்கள்: எபேசியர்: 4:17-24;  கொலோசெயர்: 3:1-13.

இ) நம்முடைய சித்தத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்: (ரோமர்: 12:2)

ஒருவனுடைய மனது சரீரத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனால், சித்தம் மனதை கட்டுப்படுத்தகிறது. அநேகர் தங்களுடைய சித்தத்தை தங்களுக்கு இருக்கிற சுய சக்தியினால் (Will Power) கட்டுப்படுத்தலாம் என நினைக்கின்றனர். ஆனால், அதில் தோல்வி அடைகிறார்கள். ஆனால், நமது சித்தத்தை தேவனுடைய வல்லமைக்கு ஒப்புக் கொடுத்து ஜீவிக்கும்போது வெற்றியுள்ள கிறிஸ்தவனாக ஜீவிக்க முடியும். நம்மடைய ஒழுங்குபடுத்தப்பட்ட ஜெபத்தின் மூலமாக நமது சித்தத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். என்னுடைய சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபிக்க வேண்டும்.

2. சக விசுவாசிகளோடு உள்ள உறவு: (ரோமர்: 12:3-16)

ரோம சபையில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இதை எழுதுகிறார். ஒருவருக்கொருவர் உள்ள உறவை சரீரத்தில் அவயவமாகப் பாவித்து விவரிக்கிறார். 

ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் ஒரு பகுதியாக ஜீவிக்கிறார்கள். ஒவ்வொருவரும் நடப்பிக்க வேண்டிய ஆவிக்குரிய கிரியைகள் உண்டு. சரீரத்தைக் கட்டி எழுப்புவதற்கும், அதை சரீரத்தின் மற்ற அவயவயங்களை
பூரணப்படுத்துவதற்கும் வரங்கள் அளிக்கப்படுகிறது. நாம், மற்ற ஒவ்வொருவருக்கும் சொந்தம். கிறிஸ்துவின் அவயவயத்தின் வளர்ச்சிக்கும், ஆவிக்குரிய ஊழியத்திற்கும் நாம் முக்கியமானவர்கள்.

அ) உண்மையான மதிப்பீடு: (ரோமர்: 12:3)

ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுடைய ஆவிக்குரிய வரங்கள் என்ன? ஸ்தல சபையில் அவனுக்குரிய ஊழியங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒவ்வொரு விசுவாசியும் அவன் செய்யக் கூடாத வேலையைச் செய்து, தன்னை எண்ண வேண்டுவதற்கு மிஞ்சி எண்ணுவதாகும். சிலர் தங்களைக் குறித்து எண்ண வேண்டியதற்குக் குறைத்து எண்ணுவதும் தவறாகும். உதாரணம்: மோசே.

ஆ) உண்மையான கூட்டுறவு: (ரோமர்: 12:4-8)

ஒவ்வொரு விசுவாசிக்கும் வித்தியாசமான வரங்கள் உண்டு. சரியான அளவில் சரீரமாகிய சபை வளருவதற்கு ஏதுவாக தேவன் இந்த வரங்களை அருளியிருக்கிறார். ஒவ்வொரு கிறிஸ்தவனும் விசுவாசத்தின் மூலமாக தன்னுடைய வரத்தை செயல்படுத்த வேண்டும். நம்முடைய ஊழியத்தின் பலனை நாம் ஒரு வேளை பார்க்க முடியாவிட்டாலும் தேவன் அதைப் பார்த்து ஆசீர்வதிப்பார்.

இ) விசுவாசிகளின் ஆறு வித ஊழியம்: (ரோமர்: 12:6-8)

1. தீர்க்கதரிசனம்      2. ஊழியம்        3. போதித்தல்    4. புத்தி சொல்லுதல்                  5. பகிர்ந்து கொடுத்தல்    6. இரக்கம்

ஆவிக்குரிய வரங்கள் சபை கூடி எழுப்புவதற்காகக் கொடுக்கப்படுகிறது. சபையினுடைய விசுவாசிகளின் நடுவே அவர்களின் உறவை இந்த வரங்கள் கட்டி எழுப்புகிறது.

3. எதிராளி அல்லது விசுவாசிகளோடு உள்ள உறவு: (ரோமர்: 12:17-21)

தேவனுக்கு கீழ்படிகிறவர்களுக்கு விரோதிகள் இருக்கத்தான் செய்வார்கள். பவுலுக்கும் மற்ற அனைவருக்கும் விரோதிகள் இருந்தனர். இயேசு கிறிஸ்து இருக்கிற எல்லா சத்துருவிலும் - சொந்த வீட்டாரே சத்துரு என்றார். சத்துருக்களுக்கிடையே பதில் செய்தல் (பழி) கூடாது (ரோமர்: 12:19) என வேதம் கூறுகிறது. இப்பகுதியில் உள்ள வசனங்கள் வாசிக்க எளிதாய் இருக்கும். ஆனால், கடை பிடிப்பதே காரியம்.