டிசம்பர் 05, 2012

மிஷினெரி ஊழியத்திற்கு அழைப்பு அவசியமா?

 

'அழைப்பு' என்னும் பதம் புதிய ஏற்பாட்டில் வெவ்வேறு கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ வாழ்க்கையை செய்யும்படியாக அழைப்பைக் குறிக்கிறது. இது எல்லா கிறிஸ்தவர்களுக்குரிய ஒரு பொதுவான அழைப்பு. (ரோமர்: 1:7;  லூக்கா: 5:30). அதே வேளையில்...

கிருபை - கலாத்தியர்: 1:6
சமாதானம் - 1பேதுரு: 1:9
ஒளி, நம்பிக்கை, மகிமை, பரிசுத்தம் - கலாத்தியர்: 5:13; 1பேதுரு: 2:20-22. இந்த வசனங்களில் விடுதலை அல்லது நம்பிக்கை இவைகளுக்காக யாவரும் அழைக்கப்படுகிறார்கள் எனப் பர்க்கிறோம்.

இரண்டாவது ஒரு அழைப்பு உண்டு. அது கிறிஸ்தவ ஊழியம் அல்லது சேவை செய்யும்படியான அழைப்பு. இது விசுவாசியாய் இருந்து கொண்டு செய்யும் அழைப்பு அல்ல. இது ஒரு முழுநேர வேலையாக, உலக வேலையை விட்டு செய்யும் அழைப்பு. இந்த அழைப்பு மனிதனாலே அல்ல. தேவனாலே வருகிறது. (எபேசியர்: 3:7;  2தீமோத்தேயு: 1:11;  கலாத்தியர்: 1:1).

மக்கதோனியா அழைப்பு என்பது - மிஷினெரி அழைப்பு எனக் கூறமுடியாது. இதற்கு முன்பே பவுல் மிஷினெரியாகப் பணியாற்றி வந்தான். மக்கதோனியா அழைப்பு என்பது - உதவி தேவையான மனிதனின் அழைப்பு. தேவையில்லாத இடத்திற்கு போவதை தேவன் தடை செய்து, தேவையுள்ள மக்களிடத்தில் கொண்டு செல்கிறார். மிஷினெரி என்று தனி அழைப்பு கிடையாது. இது முழுநேர அழைப்பு.

தேவனுடைய முழுநேர அழைப்பை யாரும் தானாக விரும்பி ஏற்றுக் கொள்ள முடியாது. இது தேவனிடத்தில் இருந்து வர வேண்டும். இதற்கு அர்ப்பணம் மிக அவசியம். (லூக்கா: 9:57,58,61,62). தேவ அழைப்பும் அர்ப்பணமும் இல்லா விட்டால் ஊழியத்தில் நிலை நிற்க முடியாது. (ரோமர்: 15:17; 1கொரிந்தியர்: 9:11).

பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலைக் கண்டு கொள்ள வேண்டும்:

ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் பரிசுத்த ஆவி ஒவ்வொரு வழியாய் நடத்துகிறார். மறுபிறப்பில் (ஞானஸ்நானம்) தனக்கு இஷ்டமான இடத்தில் தோன்றி, தனக்கு இஷ்டமான திசைக்கு பரிசுத்த ஆவி செல்லுகிறது போல - வழி நடத்துதலிலும் செல்கிறார். எந்த இரண்டு கிறிஸ்தவனையும் பரிசுத்த ஆவி ஒன்று போல் வழி நடத்துவது இல்லை.

ஸ்தல சபை அங்கீகாரம் பெற வேண்டும்:

ஏனென்றால், சபையே சத்தியத்தின் தூணும், அஸ்திபாரமுமாயிருக்கிறது. (அப்போஸ்தலர்: 13:2). சபையின் மூலமாகத்தான் தேவனுடைய இரட்சிப்பின் கிருபை தேவையுள்ள மக்களிடம் பாய வேண்டும். (1தீமோத்தேயு: 3:15). பவுலும் பர்னபாவும் பரிசுத்த ஆவியின் மூலமும், சபையின் மூலமும் ஊழியத்திற்கு அனுப்பப்பட்டனர். ஊழியத்திலிருந்து திரும்பி வந்தபோது ஊழிய அறிக்கையை சபைக்கு கொடுத்தனர். பவுலின் உடன் ஊழியர் அனைவரும் ஏதாவதொரு சபையில் அங்கீகரிக்கப்பட்டனர்.

உதாரணமாக...

தீமோத்தேயு - லீஸ்திரா, இக்கோனியா (அப்போஸ்தலர்: 16:2)

எப்பாப்பிரே - கொலோசே பட்டணம் (கொலேசெயர்: 1:7).

காயு - தெர்பே

சோபத்தா - பெரேயா பட்டணம் (அப்போஸ்தலர்: 20:4)

அந்தியோகியா சபைக்கு போதகர் தேவைப்பட்டபோது எருசலேம் சபையால் பர்னபா அனுப்பப்பட்டார். (அப்போஸ்தலர்: 11:22). ஆதி சபையில் சுயாதீனர் ஒருவரும் இல்லை. ஒவ்வொரு மிஷினெரியும், ஒவ்வொரு ஸ்தல சபையின் அங்கத்தினராக இருந்ததுடன், சபையால் அங்கீகரிக்கப்பட்டு, சபையால் சபையின் மூலமாக பொருளுதவியும் பெற்றனர்.


ஒரு மனிதன் கிறிஸ்தவ சேவைக்கு அழைப்பை பெறுவது எப்படி?

 

தேவன் சர்வ ஆளுகை உள்ளவர். அவரே அவருடைய வேலைக்கு நம்மைத் தெரிந்தெடுக்கிறவர். எனவே, அவருடைய அழைப்பை நாம் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்க வேண்டும்.

கீழ்க்காணும் சில நிபந்தனைகளை கைக் கொள்ளும்போது தேவ அழைப்பைப் பெறலாம்:

1. திறந்த மனது - (2கொரிந்தியர்: 10:5)

2. கூர்மையான காதுடையவர், தேவனுடைய சத்தத்தை தெளிவாகக் கேட்க உதாரணம்: சாமுவேல், தாவீது, எலிசா, சீஷர்கள் - (மாற்கு: 4:7)

3. தூய்மையான இருதயம்  -  (யோவான்: 7:17; சங்கீதம்: 99:5; எபிரேயர்: 12:14;  சங்கீதம்: 24:3,4;  66:16)

4. சுறுசுறுப்பான கைகளையுடையவன் - (யோவான்: 5:17;  19:4)

5. ஆயத்தமான கால்கள் - (சங்கீதம்: 119:32; ஏசாயா: 52:7;  1கொரிந்தியர்: 7:29;  1சாமுவேல்: 21:8)

அழைப்பு வேறு; வழி நடத்துதல் வேறு

முழு நேர ஊழியத்துக்குரிய அழைப்புக்கும் - வழி நடத்துதலுக்கும் உள்ள தெளிவான வித்தியாசத்தை முதலில் கண்டறிய வேண்டும்.

மக்கதோனியா அழைப்பு பவுலின் மிஷினெரி அழைப்பு அல்ல. அது குறிப்பிட்ட காலத்தில் வந்த அழைப்பு. அழைப்பு பெற்றவர்கள் உள் நாட்டிலா அல்லது வெளி நாட்டிலா என்ற வழி நடத்துதலை பெற வேண்டும். வெளி நாட்டு அழைப்பு இருந்தால் எப்போது, எங்கு செல்வது என்ற வழி நடத்துதலை அறிந்திருக்க வேண்டும். 

தேவன் பவுலை புற ஜாதியினரிடத்திற்கும், பேதுருவை யூதரிடத்திற்கும் அனுப்பினார். (கலாத்தியர்: 2:7,8). வில்லியம் கேரியை இந்தியாவிற்கும், ஹட்சன் டெய்லரை சீனாவிற்கும் தேவன் அனுப்பினார்.  வழி நடத்துதல் மிஷினெரிகளுக்கு மட்டுமல்ல, எந்த ஊழியம் செய்தாலும் அதை வெளி நாட்டிலா, உள்நாட்டிலா என்ற வழி நடத்துதல் மிக அவசியம். எந்த சபை, எவ்வளவு காலம், என்ன ஊழியம் என்ற வழி நடத்துதல் மிக மிக அவசியம்.

அழைப்பில்லாமல் ஒருவர் மிஷினெரியாக இருக்க   முடியுமா?

இக் கேள்விக்கு விடையளிக்கும்போது ஒன்றுக்கொன்று எதிர் திசைகளுள்ள இரண்டு விடைகள் உண்டு. அதைத் தவிர்த்து நாம் சரியான விடை காண வேண்டும்.

1. அப்போஸ்தலனாகிய பவுலுக்கு கிடைத்த மக்கதொனியா அழைப்பைப்போல் அழைப்பைப் பெற்றவர் மாத்திரமே மிஷினெரியாய் இருக்க முடியும் என்பது.

2. எல்லா கிறிஸ்தவர்களும் மிஷினெரிகளாய் இருக்கிறபடியால் சிறப்பான அழைப்பு தேவையில்லை என்பது.

இந்த இரண்டு கருத்தும் தவறு. 

முதல் கருத்தை வலியுறுத்துகிறவர்களில் பெரும்பான்மையினர் ஒரு இடத்திற்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இரண்டாவது கருத்தை வலியுறுத்தபவர்கள் - ஊழியப் பணித்தளங்களுக்குச் செல்வதன் மூலம் பல தீமைகளை விளைவிக்கின்றனர். பின்பு, தோல்வியடைந்து வீடு திரும்புகின்றனர்.

இக்கால மிஷினெரிகளுக்கு இரண்டு வகை சோதனையுண்டு:

1. கர்த்தருக்கு முன் ஓடுவது

2. கர்த்தருக்கு பின் தங்குவது

இந்த சோதனைகளை ஜெயிக்க வேண்டும்.

கிறிஸ்தவ ஊழியத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவது எது?

கிறிஸ்தவ ஊழியத்திற்கான அழைப்பு திடீரென ஆகாயத்தில் தோன்றுவது அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவருடைய உள்ளத்தில் அழைப்பைக் குறித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இது வேததத்திற்கு ஒத்ததாய் இருக்க வேண்டும்.

ஒரு தேவனுடைய பிள்ளை வேத வசனத்திற்கு உண்மையாக கீழ்படியும்போது தேவன் அவனை படிப்படியாக வழி நடத்திக் காண்பிக்கிறார்.

1. ஆண்டவரை தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளுதல்

2. தேவ சித்தத்திற்கு கீழ்படிதல். இதில் இரண்டு வகை சித்தம் உண்டு. அவை:

அ) பொதுவான தேவ சித்தம். (1தெசலோனிக்கேயர்: 4:3;   2பேதுரு: 3:9)

ஆ) சிறப்பான தேவ சித்தம். இது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும், ஒவ்வொரு நாளிலும் வித்தியாசமாய் அமையும். (ரோமர்: 12:1,2;  எபேசியர்: 2:10).

டிசம்பர் 03, 2012

மிஷினெரி ஊழியம்

 

' மிஷினெரி' என்ற பதம் 'மிட்டோ' என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு 'அனுப்புதல்' என்று பொருள். 

கிரேக்க பதத்தில் 'அப்போஸ்டலோ' - 'அனுப்பு' அல்லது 'அனுப்புதல்' என்னும் பதத்திற்கு சமமானது. 

இவ்விரு பதங்களின் மூலக் கருத்து ஒன்று போலானது, அப்போஸ்தலர் என்னும் பதம்  புதிய ஏற்பாட்டில் 80 முறை உபயோகிக்கப்பட்டுள்ளது.

இயேசுவே முதல் அப்போஸ்தலர்; பிரதான அப்போஸ்தலர். அவருடைய அப்போஸ்தல தன்மை பிதாவினிடத்திலிருந்து வந்தது.  ஏனெனில் மீட்பின் ஊழியத்தை இவ்வுலகில் நிறைவேற்றும்படி அவர் பிதாவினால் அனுப்பப்பட்டார். இயேசு தன் சீர்களில் 12 பேரை வேறு பிரித்து அவர்களை அப்போஸ்தலர் என அழைத்தார். இவர்கள் அவரால் போதிக்கப்பட்டு பயிற்சி பெற்றனர். அவரிடத்தில் இருந்து சீர்கள் அப்போல்தல அதிகாரத்தைப் பெற்றனர். அவர் உயிர்த்தெழுந்த பின் சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி உலகம் முழுவதும் அவரால் அனுப்பப்பட்டனர்.

அவருடைய ஊழியத்திற்கும் ( His Mission) , சீஷர்கள் ஊழியத்திற்கும் (Mission of the Disciple) இடையே நேரடியான தொடர்பு இருந்தது. யோவான்: 20:21 - "பிதா என்னை அனுப்பினது போல நான் உங்களை அனுப்புகிறேன்". இந்த பன்னிருவரும் தான் 'அப்போஸ்தலர்கள்' என அழைக்கப்பட்டனர். இவர்கள் சிறப்பான சிலாக்கியங்களும், சிறப்பான உத்திரவாதங்களுடைய சிறப்புத் தன்மையுடைய மனிதக் கூட்டம்.

ஆனால், புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் என அழைக்கப்பட்ட வேறு சிலர் இருந்தனர். இவர்கள் அப்போஸ்தலரின் இரண்டாம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். பர்னபா, தீமோத்தேயு, சீலா ஆகியோர்.

அப்போஸ்தலர் - பரிசுத்த ஆவியினாலும், சபையினாலும் அனுப்பப்பட்டார்கள் என அப்போஸ்தலர்: 13:4 - ல் காண்கிறோம். இந்த அப்போஸ்தல நடபடிகளில் ஆக்கியோனாகிய லூக்கா அப்போஸ்தலருடைய ஊழியங்களையே பெரும்பாலும் குறிப்பிடுகிறார். (அப்போஸ்தலர்: 8:4;  13:9).

இந் நாட்களில் நாம் யாரை மிஷனெரி என்று அழைப்பது?

பன்னிரண்டு பேரின் இனத்தைச் சேர்ந்த யாரும் இப்போது கிடையாது. (லூக்கா: 22:14; 21:30). ஆயினும், அப்போஸ்தலருடைய 2 ம் கூட்டத்தைச் சார்ந்தவர்களுக்கும், 12 பேருக்கும் இடையே சில பொதுவான காரியங்கள் உண்டு.

இவ்விரு கூட்டத்தாரும் ரோம ராஜ்யத்தில் உள்ள பல தேசங்களுக்கு அனுப்பப்பட்டனர். பிரசங்கிக்கவும், போதிக்கவும் சபையால் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல் பல இடங்களுக்கு பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்பட்டார்கள். (அப்போஸ்தலர்: 16:6,7).

மிஷினெரி என்னும் பதத்திற்கு - சகல நிபந்தனைகள், எதிர்ப்புகள் அனைத்தையும் விளக்கக் கூடிய ஒரு விளக்கத்தை கொடுப்பது கூடாத காரியம்.

பாரம்பரிய அடிப்படையில் முழு நேரமாக ஜெபத்திலும், வேத வாசிப்பதிலும், வேத வசனத்தை பிரசங்கிப்பதிலும் ஈடுபட்டுள்ள ஊழியர் (அப்போஸ்தலர்: 6:4) நிலவியல், கலாச்சார எல்லைகளைக் கடந்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பவர்கள் "மிஷினெரிகள்" என்று அழைக்கப்படுகின்றனர். (அப்போஸ்தலர்: 22:21;  15:20 ). இந்த விளக்கம் நிறைவான விளக்கம் அல்ல. ஆயினும், வேதாகமத்திற்கு ஒத்தது என்று கூறலாம்.

எனவே, ஒரு மிஷினெரி என்பவன் வெளி தேசத்தில் அந்நிய மொழி, அந்நிய கலாச்சாரம் நிறைந்த இவர்கள் நடுவில் சுவிசேஷத்தைக் கேள்விப்படாத ஜனங்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணி அவர்களை கிறிஸ்துவின் சபையில் கொண்டு வரும் பணியில் ஈடுபடுகிறவன் மிஷினெரி.

கிறிஸ்தவ சபையின் சர்வலோக மிஷினெரி ஊழியம் - இயேசு கிறிஸ்துவின் மானிட அவதாரத்தில் வேரூன்றி உள்ளது. தேவன் இவ்வுலகத்தை மீட்கும் நோக்கத்தில் பங்குள்ளவர்.

" தேவன் ஒரு மிஷினெரி தேவன். 
பரிசுத்த வேதாகமம் ஒரு மிஷினெரி புத்தகம். 
சுவிசேஷம் ஒரு மிஷினெரி செய்தி. 
சபை ஒரு மிஷினெரி ஸ்தாபனம்."

சபை தன் மிஷினெரி ஊழியத்தை செய்யத் தவறும்போது தன் விசுவாசத்தை மறுதலிக்கிறது. தன்னுடைய உக்கிராணத்தை மறுக்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு சாட்சி; ஆனால், ஒவ்வொரு கிறிஸ்தவனும் மிஷினெரி அல்ல. காரணம்... அழைக்கப்பட்டவர்களோ அநேகர்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்.

மிஷினெரிகளாக யாரும் பிறப்பதில்லை; ஆனால்,  மிஷினெரிகளாக உருவாக்கப்படுகிறார்கள்.

ஒரு காலத்திலும் இல்லாத அளவில் நமது நாட்களில் மிஷினெரிகளின் தேவை அதிகம். ஞானமும், ததரியமும், தரிசனமும், பொறுமையும், தாழ்மையும், உண்மையும் உள்ள மிஷினெரிகள் தேவை.

திருச்சபையில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் இந்த மாபெரும் மிஷினெரி ஊழியத்தை அறியாமலோ, அதின் பங்கை நிறைவேற்றாமலோ இருப்பது கூடாது. மிஷினெரியாக அழைக்கப்படாவிடினும் தனக்கு ஸ்தல சபை ஊழியத்திலும் உலக சுவிசேஷ பிரபல்யத்திலும் பங்கு உண்டு என்பதை மறக்கலாகாது.

"நெருப்பு எரிவதின் மூலம் நிலைத்து இருப்பதுபோல சபையானது மிஷினெரி ஊழியத்தின் மூலம் நிலைத்து நிற்கிறது" - என்று எமில் புருனர் என்ற கிறிஸ்தவ பெரியாரின் கூற்று. 

ஜெபத்தினாலும், பணத்தினாலும் மட்டும் மிஷினெரி ஊழியத்தை தாங்கினால் போதாது. நாம் கருத்தாய் ஜெபம் பண்ணி, கருத்தாய் பண உதவி செய்வதின் மூலமே இந்த ஊழியம் வல்லமையாய் இருக்கும்.

தேசங்களிலுள்ள ஒவ்வொரு சபைகளும் உலக சுவிசேஷ பிரபல்யத்தில் தங்களுடைய கடமையை கருத்தாய் உணர்ந்து செயலாற்றும்போது, மிஷினெரி ஊழியம் குன்றிப் போகாமல் புத்துயிர் பெற்று (எழுப்புதல்) புது வழியில் முன்னேற்றம் அடையும்.



ஜெபத்தைப் பற்றிய அறிஞர் கருத்துக்கள்

 

'ஜெபம்' பற்றிய அறிஞர்கள், ஜெப வீரர்கள், மன்றாட்டு வீரர்கள் கூறும் கருத்துக்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்:

"ஜெபம் என்பது பரலோகமும் பூலோகமும் ஒன்றை ஒன்று முத்தமிடும் நிகழ்ச்சியாகும்" - யூத அறிஞர்

"ஜெபம் ஆத்துமாவின் வெளிப்படாத சொல்லப்படாத அந்தரங்க எண்ணம்; இருதயத்தில் அவ்வெண்ணத் தீ மறைந்து கிடந்து நடுங்க வைக்கிறது" - யாரோ ஒரு கவிஞர்

"தேவனின் சித்தத்தை மேற் கொள்வதற்கு முயற்சிப்பது ஜெபம் என்றெண்ணாது; அவரது சித்தத்திற்கு முழுவதுமாய் ஒப்புவிப்பதே ஜெபமாகும்" - ஆர்ச் பிஷப்

"தேவனின் பிரசன்னத்தை உணர்வதுதான் ஜெபம்" - சகோ.லாரன்ஸ்

"நான்  என்னுடைய இருக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்பு என்னுடைய இருதயத்தை தேவனுக்கு நேராக ஏறெடுக்காமல் எழுந்திருக்க இயலாது" - ஜான் பிளட்சர்

"நான் மற்றவர்களின் முகத்தில் விழிப்பதற்கு முன்பு அதிகாலையில் அவரது சமுகத்தில் விழிக்க வேண்டும்" - ராபர்ட் மரே மச்சாயின்

"அந்தரங்க ஜெபத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது நூல் நிலையங்களும், கல்வித் திறனும் வெறுமையானதாகவே தெரிகிறது. ஜெபத்துடனும், உபவாசத்துடனும் தேவனிடம் திரும்பும் நாளே நமது பொற்காலம் எனலாம். அப்பொழுது தான் பரலோகத்தின் வாசல் விரிவாக திறக்கப்படும். நமது உள்ளங்களும் தேவ மகிமையின் மையத்தினை நாடி செல்ல முடியும்" - ஸ்பர்ஜன்

"இருதயத்திலிருந்து புறப்பட்டு வருவதே இருதயத்தைத் தொடும். உயிருள்ள மனசாட்சியினின்று தோன்றுவதே மனசாட்சியைக் குத்தும்" - வில்லியம் பென்

"தனி ஜெபம் நம்முடைய ஊழியத்தில் எடுத்துரைக்க இயலாத, ஈடு இணையற்ற ஆசீர்வாதத்தினை அளிக்க வல்லது. அது பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் அபிஷேகமாகும்" - ஸ்பர்ஜன்

"தேவன் நமது ஜெபங்களுக்கு பதிலளிப்பாரேயன்றி தாமக வேறெதுவும் செய்ய மாட்டார்" - ஜான் வெஸ்லி

"ஜான் நாக்ஸ் உபவாசித்து ஜெபித்தான். இங்கிலாந்தின் அத்தனை படைகளையும் விட, அவனது ஜெபத்திற்கே அஞ்சுகிறேன் என்றாள் ஸ்காட்லாந்தின் இரத்த வெறி ராணிமேரி" - C.H. ஸ்பர்ஜன்

"அதிகாலைதோறும் 2 மணி நேரமாவது நான் ஜெபிக்கத் தவறினால், வெற்றி பிசாசுக்கு பொய் விடுகிறது. தினமும் குறைந்தது 3 மணி நேரமாவது ஜெபிக்க வேண்டிய அளவு, எனக்கு அவ்வளவு வேலை இருக்கிறது" - மார்டின் லுத்தர் 

"ஏதோ ஒரு காரணம் சொல்லி ஜெபக்கூட்டங்களுக்கு மட்டம் போடுவது பின்மாற்றத்தின் அறிகுறியாகும்; ஜெபக்கூட்டத்தைவிட முக்கியமான கூட்டம் வேறென்ன? ஜெப இருதயமே மிகப் பெரிய தேவை. ஆனால், அதைப் பெறுவதே மிகக் கடினம். இதுவே நான் திட்டமாய் கண்டறிந்தது" - சார்லஸ் பின்னி

"நமக்கு சிந்திக்கவும், உணரவும் முடிகிறதே தவிர அதை செயல்படுத்த முடியவில்லையே ;செயல்படுத்த முடியாவிடில் செயலிழந்தவர்களாகி விடுவோம்" - C.S.லூயிஸ்

"இதயத்தோடு இதயம் பேசினாற்போல், பெரிய சப்தத்தினிடையே சில அரிய யோசனை சொல்லி, துன்பத்தினூடும், துக்கத்தினூடும் பேசவே, தேவன் சில வேளைகளில் உள்ளே விட்டுக் கதவை அடைக்கிறார்." - ஸோல் போர்ட்

"அநேகருடைய ஜெபத்திற்கு சாத்தான் தடங்கலாயிருக்கிறான். உன் ஜெபங்களும், விசுவாசமும் குவிந்து கொண்டே போகையில் நீ பயப்படாதே. ஏனென்றால், நாளைக்குப் பின் அவை வெள்ளப் பெருக்கெடுத்து , பதிலை அடித்துக் கொண்டு வருவதுடன், இன்னும் பல புதிய ஆசீர்வாதங்களையும் சேர்த்துக் கொண்டு வரும்" - சர்மான்

"பாதாளம் பக்தருக்கு கேடுண்டாக்க தன்னாலானதை செய்கிறது. சிறந்த ஆத்துமாக்கள் வெப்பத்தினாலும், நெருக்கத்தினாலும் சோதித்தறியப்படுகின்றனர். ஆனால், தேவன் அவர்களை ஒருபோதும் கைவிடார்" - வாட்கின்ஸன்

" 'நான்' என்பது ஜெயிக்கப்பட்டிருந்தால்தான் நாம் தேவனோடு போராட பெலமுள்ளவர்களாகலாம். சண்டை போடுவதால் அல்ல; அவர் மேல் சர்ந்திருப்பதாலேயே ஆசீர்வாதம் பெறலாம்" - K.R.மில்லர்

"நமது விசுவாசத்தை சோதிக்க, நமது ஜெபத்தை உயிர்ப்பிக்க, கிறிஸ்து தமது பதிலை தாமதப்படுத்துகிறார். படகு தண்ணீரில் மூழ்கிப் போகையில் தேவன் நித்திரை செய்கிறார். படகு அமிழ்ந்து போகுமுன் நிச்சயம் அவர் விழித்துக் கொள்வார். அவர் தூங்குகிறார். ஆனால், அவர் அவசியத்திற்கதிகமாய் தூங்குவதில்லை. ஏற்ற சமயத்தில் விழித்துக் கொள்வார்" - அலெக்சாண்டர் மெக்லரென்

 "அக்கினி ஒருபோதும் பனிக்கட்டியை உருவாக்க முடியாது; பிசாசு ஒரு போதும் பரிசுத்தவான்களை உருவாக்க முடியாது; அதுபோல, ஜெபிக்காத போதகர்களும் ஒருபோதும் மன்றாட்டு வீரர்களை எழுப்ப முடியாது." - லியோனார்டு ரேவன் ஹில்

"ஜெபமில்லாத 'உற்சாகம்' வீணாணது; தேவனுக்காக மனிதரோடு பேசுவது முக்கியம்; ஆனால், மனிதருக்காக தேவனோடு பேசுவது அதிலும் முக்கியம்" (லூக்கா: 5:15,16)

"ஜெபமின்றி ஜெயமில்லை; கர்த்தரின் படை வீரர்கள் முழங்காலில்தான் நன்றாகப் போரிடுவார்கள்"  - (1நாளாகமம்: 5:20)

ஜெபிக்கிறவன் பாவஞ் செய்வதை நிறுத்துவான்; பாவஞ் செய்கிறவன் ஜெபிக்கிறதை நிறுத்துவான்" - (சங்கீதம்: 66:18) 

ஆண்டவர் சமுகத்தில் அவசரம் ஆகாது; ஆத்திரமாய் வந்து செல்பவர்கள் மீது தேவன் தமது ஆசீர்வாதங்களை ஊற்றுவதில்லை" (எரேமியா: 29:13)

"விளையாடுவதை நிறுத்து - விண்ணப்பிக்கத் துவங்கு.
உண்டது போதும் - உபவாசிக்கத் துவங்கு.
மனிதரிடம் பேசுவதை குறைத்திடு - தேவனோடு பேசுவதை கூட்டிடு.
சுற்றியது போதும் - முடங்கி மன்றாடு.
மனிதரைக் கேட்பதை குறைத்திடு - தேவ வார்த்தைகளைக் கேட்டிடு"லியோனார்டு ரேவன் ஹில்


பிலதெல்பியா


 
வெளிப்படுத்தல்: 3:7-11
(பிந்திய கால எழுப்புதல் அடையும் சபை)

'பிலதெல்பியா'  - என்றால் 'சகோதர சிநேகம்' என்று பொருள்.
(அடோல்பாஸ்ட் - சகோதர;  பிலேயா  - அன்பு)

பிலதெல்பியா பட்டணம்:

இது சர்தையிலிருந்து 28 மைல் தென் கிழக்கிலிருந்தது. லீதியா, மீசியா, பிரீசியா, ஆகிய நாடுகளின் நுழைவாயிலாக இப்பட்டணம் இருந்தது. திபேரியுராயன் .ப்பட்டணத்தைச் சீரமைக்க பெரிதும் உதவினான். எனவே, கொஞ்சக் காலத்திற்கு இப் பட்டணத்திற்கு ராயனின் புதுப் பட்டணம் என்ற பெயர் இருந்தது. ஆனால், மீண்டும் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது. அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாய் இருந்தது. 

 
 இன்றைக்கும் இப்பட்டணம் 'அலாஷேகிர்' என்ற பெயரில் இருக்கிறது. இதன் இன்றைய ஜனத்தொகை 10,000. இதில் இப்போது 12 சபைகள் இருக்கிறது. 'அலாஷேகிர்' - தேவனுடைய பட்டணம் என்று பொருள்.

 இச் சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:

1. பரிசுத்தமுள்ளவர்
2. சத்தியமுள்ளவர்
3. தாவீதின் திறவுகோலை உடையவர்
4. ஒருவரும் பு+ட்டக் கூடாதபடி திறக்கிறவர்
5. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பு+ட்டுகிறவர்

கிறிஸ்து பரிசுத்தமுள்ள ராஜாவாக இச்சபைக்கு வெளிப்படுகிறார். தாவீதின் திறவுகோல் என்பது ராஜரீக அதிகாரத்தையும் புதிய எருசலேமைத் திறந்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் குறிக்கிறது.

ஒருவரும் திறக்கக்கூடாதபடி பு+ட்டுகிறவர், ஒருவரும் பு+ட்டக் கூடாதபடி திறக்கிறவர் என்பது அவருடைய சர்வ வல்லமையையும், சர்வ அதிகாரத்தையும் காட்டுகிறது. மனித சக்திகள் அவருடைய வல்லமையை மேற்கொள்ளாது என்பது பொருள். ஏதேன் தோட்டத்தின் வழியை ஒருவரும் நுழையக் கூடாதபடிக்கு அடைத்தார். புதிய ஏற்பாட்டில் தமது இரத்தத்தின் மூலமாக ஒருவரும் பு+ட்டக்கூடாதபடிக்கு தேவாலயத்தின் திரைச்சீலையை மேலிருந்து கீழாக கிழித்தார். மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் யாவரும் போக வழி செய்தார். சுவிசேஸத்திற்கு யு+தரும், சனகரீம் சங்கமும் ரோம அரசாங்கமும் கதவைப் பு+ட்ட முயன்றனர். ஆனால், ஒரு மனித சக்தியினாலும் அதை பு+ட்ட முடியவில்லை. சகொதர அன்புள்ள சபைக்கு கிறிஸ்து தம்மை இவ்விதம் வெளிப்படுத்துகிறார். 

நற்குணங்கள்: 

1. நற்கிரியை
2. கொஞ்சம் பெலனிருந்தும் மறுதலியாமல் வசனத்தை கக்க கொள்ளுதல்
3. பொறுமையாய் வசனத்தைக் கைக் கொள்ளுதல்

இச்சபைக்கு தீய குணங்கள் ஒன்றும் சொல்லப்படவில்லை. ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்தக் கொள்ளாதபடி உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு என்று ஆலோசனை மட்டும் கூறப்பட்டுள்ளது.

ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:

1. திறந்த வாசலை உனக்கு முன் வைத்திருக்கிறேன்.
2. சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்கு முன்பாகப் பணியச் செய்வேன்.
3. சோதனைக் காலத்தில் உன்னைத் தப்புவிப்பேன்.
4. இதோ சீக்கிரமாய் வருகிறேன். 92ம் வரகையைப் பற்றிய வாக்கு)
5. ஜெயங்கொள்ளுகிறவனை தேவாலயத்தில் தூணாக்குவேன்.
6. அதிலிருந்து அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.
7. தேவனுடைய நாமத்தையும் பரம எருசலேமின் நாமத்தையும் என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்.

சாத்தானின் கூட்டத்தார்: (3:9)

இது கிறிஸ்துவை மறுதலித்த யு+தர்களைக் குறிக்கிறது. தேவனுடைய ஜனமே யு+தர். ஆனால், உண்மையான யு+தர் மாமிசத்தின்படி ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவரும் அல்ல. ஆபிரகாம் விசுவாசத்தின் அடிப்படையில் நீதிமான் ஆனான். எனவே, மெய்யாய் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொருவரும், எந்த ஜாதியாய், கொத்திரமாய் இருந்தாலும் அவன்தான் மெய்யான யு+தன். (ரோமர்: 2:28,29) கிறிஸ்தவை மறுதலித்தும், தங்களை தேவ ஜனமென்றும் தங்களைப் பெருமை பாராட்டிக் கொண்டவர்களுக்கு இந்த எச்சரிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்தின் தூண்:

ஆலயமென்பது சபையையும், புதிய எருசலேமையும் குறிக்கிறது. தூண் என்பது விசுவாசிகள் சத்தியத்தில் உறுதியாய் நிலைத்து நிற்பதைக் காட்டுகிறது. (கலாத்தியர்: 2:9 ;  1தீமோத்தேயு: 3:16)

தேவனுடைய நாமம், தேவனுடைய நகரத்தின் நாமம், கிறிஸ்தவின் புதிய நாமம்:

தேவனுடைய நாமம் எழுதப்படல் என்பது அவன் தேவனுக்கு சொந்தமானவன் என்பதைக் காட்டுகிறது. புதிய எருசலேமில் வாசம் பண்ண பிரஜா உரிமை (குடியுரிமை) பெற்றவன் என்பதைக் காட்ட அவன் மேல் தேவனுடைய நகரத்தின் நாமம் எழுதப்படுகிறது. 

கிறிஸ்துவின் புதிய நாமம் என்பது 2 ம் வருகையில் கிறிஸ்து மணவாளனாய் வரும்போது சபையாகிய மணவாட்டி, மணவாளனாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்படுவதன் மூலமாக புதிய நாமத்தைப் பெறுகிறது.

(எழுத்துப் பிழையை பொறுத்தருள்க வேண்டுகிறேன். சீக்கிரம் சரி செய்ய முயற்சி செய்து வருகிறேன். சரியான பாண்ட் கிடைக்கவில்லை.)