ஜனவரி 17, 2017

குட்டி குட்டி துணுக்ஸ்

Image result for ரேடியோ மார்க்கோனி

வானொலியைக் கண்டு பிடித்த மார்க்கோனி முதன் முதலில் வானொலியில் பேசிய செய்தி இதுவே:



“நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது ஆலயத்திற்கு போவேன்.

 பாதிரியார், “பரமண்டலத்தில் உள்ள எங்கள் பிதாவே” என அழைத்து பிரார்த்தனை செய்வார். 

இந்த பிரார்த்தனை பிதாவை சென்றடையுமா? என்று அப்போது சந்தேகப்பட்டேன். 

ஆனால், இன்று எங்கோ இருந்து பேசும் ஒலியை எங்கிருந்தோ நீங்கள் கேட்கிறீர்கள் என்கிறபோது, நாம் எழும்பும் எந்த ஒலியையும் பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதா கட்டாயமாகக் கேட்பார் என்று உறுதியாக நம்புகிறேன்”



Image result for   சிறைக் கைதி

சிறைக் கைதியின் ஆன்ம தாகம்


ஒரு சிறைக்கைதி இருண்ட அறைக்குள் அடைக்கப்பட்டான். அங்கு சிறிதளவும் வெளிச்சம் கிடையாது … இருள் … எப்போதுமே இருள். 24 மணிநேரமும் இருள்தான்.

அந்தக் கைதியிடம் வேதபுத்தகம் இருந்தும்கூட அவனால் அதை வாசிக்க முடியவில்லை.

அவன் எப்போதும் வேதத்தை திறந்து வைத்துக் கொண்டு, தனக்கு உணவு கொண்டு வருகிறவர்கள் எப்போது தன் அறைக் கதவை திறப்பார்கள் என்று பார்த்துக் கொண்டே இருப்பான். 

கதவு திறக்கும்போது வருகிற வெளிச்சத்தில் மிக வேகமாக தாகத்தோடு ஐந்தாறு வசனங்களை வாசிப்பான். 

அதற்குப் பிறகு இருட்டில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு படித்த வசனங்களை தியானித்தவாறே அடுத்த முறை கதவு திறக்கப்படும் வேளைக்காக ஏக்கத்தோடு காத்திருப்பானாம்.

வேத வாசிப்பில் நாம் எப்படி இருக்கிறோம்? சற்றே சிந்திப்போம்.

“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன், நாள் முழுதும் அது என் தியானம்” (சங்கீதம்: 119:97).

Image result for பேய் பிசாசு

சாத்தான் அழுவதும், சிரிப்பதும் எப்போது?


சினிமா தியேட்டரிலும், தொலைக்காட்சியிலும் … நீ சினிமா மற்றும் சீரியல் பார்க்கும்போது சாத்தான் சிரித்துக் கொண்டே உன் முதுகைத் தட்டிக் கொடுப்பான்.

மதுபானக்கடையில் நீ இருக்கும்போது மனமகிழ்ச்சியுடன் உன்னைக் கட்டித் தழுவுவான்.

வெற்றிலை, பீடி, சிகரெட், பொடி, சுருட்டு, ஹான்ஸ், பான்பராக் போன்றவற்றை பயன்படுத்தி, தேவனுடைய ஆலயமாகிய உன் சரீரத்தை நீ கெடுத்துக் கொண்டிருந்தால் சாத்தான் கைதட்டிச் சிரிப்பான்.

கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடும்போதும், நிலையற்ற சிற்றின்பங்களை நுகரும்போதும் சாத்தான் பெருமிதத்தோடு புன்னகைப்பான்.

ஆனால்,

நீ வேதம் வாசிப்பதையும், ஜெபிப்பதையும் தேவனை மகிழ்ச்சியோடு ஆராதிப்பதையும், சாட்சி சொல்வதையும் அவன் கண்டால், “ஓர் ஆத்துமா என்னை விட்டுத் தூரமாகப் போகிறதே” என்று அழுது புலம்பி கண்ணீர் வடிப்பான். 

இறுதியில் உன்னைவிட்டு எங்கோ ஓடிப் போவான்..

“சாத்தான் நம்மைக் கண்டால் விடமாட்டான்; இயேசு என்ற பெயரைச் சொன்னால் தொடமாட்டான்”


Image result for கண்ணீர் சிந்தும் பிசாசு

ஜெபத்தைப் பற்றி … இவர்கள் கூற்று


“எனக்கு இன்று மிகவும் அதிகமாக வேலைகள் இருக்கின்றன. ஆகவே, மிகமிக அதிகமான நேரம் நான் ஜெபிக்க வேண்டும். மூன்று மணி நேரமாவது நான் ஜெபித்தால்தான் அத்தனை கடமைகளையும் என்னால் நிறைவேற்ற முடியும்” – மார்ட்டின் லூதர்

என் கல்லூரி நாட்களில் அதிகமதிகமாக படிக்க வேண்டிய பரீட்சை சந்தர்ப்பங்களிலும்கூட நான் ஜெபத்தை விட்டுவிடவே இல்லை. அதற்காக கர்த்தர் எனக்கு விசேஷ ஞாபக சக்தியையும் அறிவையும் தந்தார்” – எட்வர்ட் பைசன்


“சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்” (லூக்கா: 18:1)


நன்றி: புதுவாழ்வு ஏஜி