பிப்ரவரி 20, 2016

இழுப்புண்டுபோனால் உங்கள் அழைப்பு வெளுப்புண்டுபோகும்

Image result for God's calling

விதைப்பு, விளைச்சல், அறுவடையை நோக்கி ஒரு பயணம் …

இயேசுவை அறிந்துகொள்வது மாத்திரமல்ல, அவரை அறிவிக்கவேண்டியதும் நமது பொறுப்பு; அது நம்மேல் விழுந்த கடமையாயிருக்கிறதே!

“சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ!” (1கொரி. 9:16) என்று தனது அர்ப்பணிப்பை கொரிந்து சபையின் மக்களுக்கும் அறிவித்தார் பவுல்.

சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அழைக்கப்பட்ட நாம், பயணத்தின் பாதையையும் அறிந்திருக்வேண்டும்; பாதை மாறிவிடக்கூடாது. எதையோ செய்ய அழைக்கப்பட்ட நாம் எதைஎதையோ செய்து கொண்டிருக்கக்கூடாது. அப்படிச் செய்வோமென்றால், அர்ப்பணத்தின் வழியை கோட்டை விட்டு விடுவோம். தேவன் நமக்கென நியமித்த இலக்கை அடையும்படி, நம்மை நெருக்கும் தேவனுடைய அன்பை நாம் ஒவ்வொரு நாளும் புரிந்துகொள்ளவேண்டும்.

 "ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்" என்பதுதான் உண்மை (பிர. 10:15). அது உடனிருப்பவரை மட்டுமல்ல, அவர்களையும் இளைத்துப்போகவே செய்யும். நம்முடைய நிலை இப்படி ஆகிவிடக்கூடாதே!

பரலோகத்திற்குப் பயணப்பட்டுப் போகிறோம் என்பது இயேசுவை ஏற்றுக்கொண்ட அனைவரும் அறிந்ததே; ஆனால், போகும்போது வழியில் எதைச் செய்து கொண்டு போகவேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பயணத்தின் முடிவிலே எதைச் சாதிப்போம்? எதைச் சந்திப்போம்? என்பதையே சிந்தித்துச் செயல்படுவோம்; அதுவே நம்முடைய அழைப்பினை உறுதியாக்கும். அழைப்பிற்கடுத்த செயல்களும், நோக்கமுமே நமது பயணத்தின் போக்கை நிர்ணயிக்கவேண்டும். வழி தப்பிப்போன மக்களைப் போல அழைக்கப்பட்டோர் அலையக்கூடாது.

 வழிதப்பிப்போன ஜனத்தைக் குறித்து ஓசியா தீர்க்கதரிசி: “அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்” (ஓசியா 8:7) என்று எழுதுகிறார்; ஆம், வழி தப்பியோரின் நிலை இதுவாகத்தான் இருக்கும். எனவே பவுல், “நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்” (1கொரி. 9:26) என்கிறார்.

சிலம்பம்பண்ணினேன் என்பது முக்கியமல்ல, எதற்காக எதனுடன் சிலம்பம்பண்ணினேன் என்பதே முக்கியம். அழுதுகொண்டே போவதுதான் நமது பாதையென்றாலும், அதிலேதான் நாம் போகவேண்டும்; நமது கண்ணீரின் துளிகளினால் விதைகள் விளைச்சலைக் கொடுக்கும் காலம் வரும் (சங். 126:6). அழைக்கப்பட்டோரே, ஆவிக்குரிய பெலம் பெற்றோரே உங்கள் பெலம் வீணாகிவிடாதபடிக்கு, நியமிக்கப்பட்ட வழியிலேயே வலம் வாருங்கள்.

பெலமுள்ள ஓர் மனிதன் இருந்தான்; அவன் தனது பெலத்தைக் கொண்டு எதையாகிலும் செய்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டான். வீணாய் வீட்டில் இருப்பதற்கு மனமற்ற அவன் ஒரு வாளியையும் கயிற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான், வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிணற்றிலிருந்த நீரை இறைத்து இறைத்து தரையில் ஊற்றிக்கொண்டேயிருந்தான். காலை தொடங்கி, மாலை வரை அவனது செயலை போவோரும் வருவோரும் பார்த்துக்கொண்டேயிருந்தனர். அவன் இறைத்து ஊற்றிய நீர் எவ்வித செடிக்கும், தோட்டத்திற்கும் பாயாமல் வீணாக அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாளும், இன்று வேலை செய்துவிட்டோம் என்ற உற்சாகத்தில் வீடு திரும்புவான். தினமும் தனது பெலனை இப்படியே விரயமாக்கிக்கொண்டிருந்த அவன் மரணத்தை நெருங்கியபோது அவன் ஊற்றியிருந்த நீரினால் ஆங்காங்கே காஞ்சொறிகளும், காட்டுச் செடிகளும் மட்டுமே முளைத்தெழும்பியிருந்தன. கனிகளைத் தரும் விருட்சங்கள் ஒன்றுமில்லை. பெலனைச் செலவழித்தது உண்மைதான், ஆனால், செலவழிக்கவேண்டிய இடத்தில் அதனைச் செலவழிக்கவில்லை. வேலை நடந்தது, ஆனால் (அழைப்போ) உழைப்போ வீணாகி விட்டது.

எனக்குப் பிரியமானவர்களே, உங்களது பெலத்தை நீங்கள் எப்படி செலவு செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் ஒவ்வொரு துளியும் அழைப்பின் வழியிலேயே செலவழிக்கப்படட்டும். அழைப்பிலே களைப்பில்லை; தொல்லைகள் பல நேரிட்டாலும் தொடுவோம் நாம் எல்லையை. இதற்குத்தான் நான் அழைக்கப்பட்டேன் என்றால், அதற்காகவே ஓடுங்கள். வழியில் வரும் விரியன்களெல்லாம், உதறிவிட்டால் உயிரிழந்துவிடும்; பவுலை நினைத்துக்கொள்ளுங்கள்.

அழைப்பின் பாதையில் அணிவகுத்துச் செல்லவேண்டிய பலர், “தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகின்றனர்” (யாக். 1:14). எதைச் செய்யவோ கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட மனிதர்கள், வேறெதையோ செய்து கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்களது கால்கள் அழைப்பின் பாதையில் இல்லாததே. குறிப்பிட்ட பணியினைச் செய்ய அழைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் குறியைத் தப்ப விட்டு விடுகின்றனர். பிற ஊழியர்களும், ஊழியங்கள் செய்யும் விதங்களையும் பார்க்கும்போதோ அவைகளால் கவரப்பட்டு தாங்களும் அப்படியே செய்யவேண்டும் என்று எண்ணங்கொண்டு, தனித்துவமான தங்கள் வழியினை தவற விட்டு விடுகின்றனர்.

சத்திரக்காரர்களாகி விட்ட நல்ல சமாரியன்கள் 

நல்லசமாரியனாக புறப்பட்டு சென்று கொண்டே... யிருக்கவேண்டிய பலர் இன்று சத்திரக்காரர்களாக மாறிவிட்டனர். சமூக சேவை என்ற பெயரில், சுவிசேஷத்தின் பாதையை பலர் தவற விட்டு விட்டனர். சமூக சேவை என்பதையும் சத்தியம் அறிவிப்பதையும் பிரித்துப் பார்ப்பதிலேயே தடுமாறிப் போவோமென்றால், சத்தியத்தைச் சுமந்து கொண்டு நெடுந்தூரம் செல்லவேண்டிய பயணம் தடைபட்டுப் போய்விடும்.

நல்ல சமாரியனுடைய வேலையைச் செய்ய அழைக்கப்பட்ட பலர், சத்திரக்காரர்களின் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். தாங்கள் இருக்கும் சத்திரத்தையே விரிவாக்கி, விரிவாக்கி கட்டிக் கொண்டிருக்கின்றனர். காயம்பட்ட மனிதர்களை வெளியிலே தேடும் சமாரியர்களின் எண்ணிக்கையோ குறைந்து கொண்டே போகின்றது. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் எனக் கட்டி வைத்தாலும், 'வெளியே சாலை ஓரத்திலே காயம்பட்டுக் கிடப்பவர்களைக் கொண்டு வரவும் ஆட்கள் வேண்டுமே' அதனை அசட்டை செய்து விடலாகாதே.

பிரிட்டனில் தொழிற்புரட்சி உண்டான காலத்தில், சிறுவர்கள் பலர் தொழிற்சாலைகளிலேயே பணிபுரிந்து கொண்டிருந்தனர். பள்ளிக்குச் சென்று கல்வி கற்கவும் நேரமின்றி தொழிற்சாலைகளிலேயே முடங்கிக் கிடந்தனர் சிறுவர்கள். இத்தகைய சிறுவர்களுக்கு கல்வியைப் புகட்டவேண்டும் என விரும்பிய கிறிஸ்தவ ஊழியர்கள் 1780-ம் ஆண்டு ஞாயிறு பள்ளி இயக்கத்தினைத் தொடங்கினர். ஞாயிற்றுக் கிழமை மாத்திரமே சிறுவர்களுக்கு கல்வியைப் புகட்டிவந்தனர் கிறிஸ்தவ ஊழியர்கள்; அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

 நாட்கள் செல்லச் செல்ல இந்த ஞாயிறு கல்வி இயக்கம் அமெரிக்காவுக்கும் பரவியது. ஒழுங்காக, வழக்கமாக ஆலயத்திற்குச் செல்லாத பெற்றோரும் ஞாயிறு கல்விக்குச் செல்லும்படி தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தினர். விளையாட்டுகள், பரிசுகள், சுற்றுலாக்கள் என பல்வேறு அம்சங்களோடு மேலும் மெருகூட்டப்பட்டன. ஞாயிறு கல்விகள். 'வேதாகமம்' மாத்திரமே ஞாயிறு பள்ளியின் பாடப்புத்தகமாகக் கொடுக்கப்பட்டது. வேதத்தின் வசனங்களை மனனம் செய்து, கற்று, எழுதுவதன் மூலமே கல்வி அறிவைக் கொடுத்து வந்தனர்.

கிறிஸ்தவ ஊழியர்கள். சிறுவர்களுக்கான பாடல்களுடன் ஜெபிக்கவும் கற்றுக் கொடுத்தனர்; ஞாயிறு கல்வி ஊழியத்திற்கென பல ஊழியர்களும் தங்களை அர்ப்பணித்தனர். 1870-ம் ஆண்டு, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் கல்வி கட்டாயமாக்கப்பட்டபோது, பள்ளிக்கூடங்கள் பெருகின, சிறுவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கத் தொடங்கினர். எனினும், ஞாயிறு பள்ளிக்கும் சிறுவர்கள் வருகை தந்து இயேசுவின் அன்பை அறிந்துவந்தனர். எனினும் பிரதானமான கல்வி அவர்களுக்கு பள்ளியிலேயே கிடைத்தது.

அரசாங்கம் பள்ளிகளை நடத்த, கிறிஸ்தவ ஊழியர்களோ ஞாயிறு பள்ளிகளை மட்டுமே நடத்திவந்தனர். ஆனால், இன்றைய நிலையோ மாறிப்போய்விட்டது. வேதத்தை விட்டு விலகி தொழிற்கல்வியைக் கற்றுக் கொடுத்தனர். ஞாயிறு பள்ளியில் வேத கல்வியை கற்றுக்கொடுக்கவில்லை. அந்நாட்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்குக் கல்வி தேவைப்பட்டது, இன்றோ, வேலை தேடுவதற்கு கல்வி தேவைப்படுமளவிற்கு உலகம் தள்ளப்பட்டுவிட்டது. எனவே, ஊழியர்களும், ஊழியங்களும் தங்கள் பாதைகளையும் சற்று மாற்றி அமைத்துக் கொண்டன.

அறிவும், ஞானமும் 

சாலமோன் ஞானத்தைக் கேட்டபோது, தேவன் அவனுக்கு புத்தகங்களைக் கொடுக்கவில்லை, புற்களைப் பற்றியும், மரங்களைப் பற்றியும் எழுதப்பட்டதும் (தாவரவியல், உயிரியல்), நியாயம் விசாரிப்பதற்குச் சட்டப் புத்தகங்களைக் கொடுக்கவில்லை. மாறாக, மொத்தமாக அவனை நிரப்பி விட்டார். தேவனோடு பேசிக் கொண்டிருந்த நிமிடங்களிலேயே அவன் நிபுணணாகி விட்டான். அதுவுமல்லமல், ஐசுவரியமும் அவனுக்கு கூடக் கொடுக்கப்பட்டது.

நோவாவும் அப்படியே, பேழை உண்டாக்கு என்றார், அவன் அவர் சொற்படியே செய்தான் (ஆதி. 6:22). அப்படியே, ஆசாரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படி மோசேக்குப் போதித்த தேவன், பெசலெயேலைப் பேர் சொல்லி அழைத்து, விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும் வேலை செய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும் மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினார்.

இத்தனை வேலைகளையும் அவன் கலாசாலைக்குச் சென்று கற்றுவிட்டு வரவேண்டும் என்றால், ஆசரிப்புக்கூடாரம் என்று கட்டப்பட்டிருக்குமோ எனக்குத் தெரியாது. இயேசுவைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் வார்த்தையே நமது கவனத்தின் மையத்தை ஈர்க்கட்டும். யூதர்கள் இயேசுவைக் குறித்து, 'இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்?' என்று ஆச்சரியப்பட்டார்கள்.

மொத்தமாகத் தரும் தேவனை, புத்தகத்தை வைத்து மட்டுப்படுத்தி விட முடியாது. கற்றோர்களை விட கல்லாதோர்கள் அறிவு சிறுத்தவர்களல்ல. கல்வி என்ற சட்டத்திற்குள் உலகம் இவ்விரு கூட்டத்தினரையும் உருவாக்கி, அறிவைக் கொண்டு அவர்களைப் பிரித்து விட்டது அவ்வளவுதான்.

இணக்கமான ஓர் வசனத்தை இச்சத்தியத்தின்போது ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

 அந்திக்கிறிஸ்துவின் நாட்களில், “அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும்” செய்ததைப்போல (வெளி 13:17), படித்து பட்டம் பெற்றவர்கள் மாத்திரமே வேலைக்கும், அரசுப் பணிகளுக்கும் தெரிவு செய்யப்படுகின்றனர். பட்டம் இருந்தால் பதவி என்ற நிலை. இந்நிலை உலகத்தின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டதல்ல, மனிதர்களால் இடையில் வகுக்கப்பட்டதே. கல்வி இல்லையேல் எதிர்காலம் இல்லை, வேலை இல்லை, வாழ்வு இல்லை என்ற நிலைக்கு மனிதர்களை கல்வியால் சிறை வைக்கப்பட்டு விட்டனர்.

இப்போது, பூமியில் இருக்கும் மனுக்குலம், நிலவைச் சென்றடையும் ஞானம் வேண்டும் என்றோ, அல்லது செவ்வாய் கிரகத்தைச் சென்றடையச் செய்யும் கல்வி வேண்டும் என்றோ, விண்ணிலே கூடு கட்ட ஞானம் வேண்டும் என்றோ கர்த்தர் விரும்பியதில்லை. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்ற ஞானம் போதிக்கப்பட்டு, பரலோகத்திற்குச் சென்றடையச் செய்யும் போதனையையே தேவன் விரும்புகின்றார்.

 கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் பயின்ற ஓர் மாணவன் நிலவைச் சென்றடைந்து, பரலோகத்தை கோட்டை விட்டுவிட்டால் அவனது நிலை என்ன? பாபேல் கோபுரத்தை (விஞ்ஞானம்) மாத்திரம் கட்டுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, பாவியாகவே அவனை விட்டுவிடக் கூடாது. ஆங்காங்கே சென்று திரிந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டிய ஊழியர்கள் பலர் ஞானத்தை விட்டு விட்டு, அறிவைப் புகட்டும் சத்திரத்தில் சிக்கிக் கொண்டார்கள். அரசாங்கத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டார்கள். கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதானபடியினால், அரசாங்கத்தின் கட்டளைகளைக் கைக்கொள்ள தள்ளப்படுகின்றார்கள். சுதந்திரப் பறவைகளான சுவிசேஷகர்கள் கூண்டுக்குள் சிக்கிக்கொண்டார்கள்.

மிஷனரி ஒருவரைச் சந்தித்தேன். தனது ஊழியத்தைப் பற்றி என்னுடன் அவர் உரையாடிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய ஒரே ஒரு மகனைக் குறித்ததான தேவ திட்டத்தைக் குறித்துப் பேசத் தொடங்கினார். நான் அவனை கல்வி கற்க அனுப்பப் போவதில்லை, பள்ளிக்கும் அனுப்பப்போவதில்லை, வேதத்தை மாத்திரமே அவன் கற்றால் போதும் என்றார். அவரது முடிவு எனக்கு அதிர்ச்சியாயிருந்தது; ஏனெனில், அப்போது நான் அந்த முதிர்ச்சியில் இல்லை. பள்ளிக்குச் சென்று பதினேழு வருடங்கள் படிப்பினை முடித்து, பின்னர் உயர் கல்வியும் கற்றால் பின்பு அவன் ஊழியம் செய்ய வருவானோ இல்லையோ யாருக்குத் தெரியும்? என்றார். கல்வியில் சென்று செலவழித்த அந்த வருடங்கள் அவனது வாழ்க்கையில் வீணாகத்தான் இருக்கும், எனவே, தொடக்க முதல் வேதத்தையே அவனது கரங்களில் கொடுக்கப்போகிறேன் என்றார்.

அவரது வார்த்தைகளை ஜீரணிக்கவோ எனக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. எழுதவும், வாசிக்கவும், உலகளவில் சிலவற்றை அறிந்து கொள்ளவும் கல்வி என்பது கட்டாயமல்லவா? என்று அவரோடு வாதிட்டுக்கொண்டிருந்தேன். சாமுவேலை அவனது தாய் சிறு வயதிலேயே அன்னாள் கர்த்தருடைய சமூகத்தில் கொண்டு விட்டு விட்டாளே, அந்தப் பிள்ளையோடு தேவனும் பேசத்தொடங்கி விட்டாரே, அவனை தீர்க்கதரிசியாகவும் ராஜாவை அபிஷேகம் பண்ணுகிறவனாகவும் மாற்றினாரே, அவன் கல்வி கற்றது எங்கே? என்று கேட்டார்.

எனவே, என்னுடைய மகனையும் அப்படியே நான் செய்யப்போகிறேன், சில வருடங்கள் சில போதகர்களுடன் இருக்கும்படியாகவும், ஊழியத்தைக் கற்றுக்கொள்ளும்படியாகவும் அவனை அனுப்பவிருக்கிறேன் என்றார். எனது தந்தை என்னைப் படிக்கவைக்கவில்லையே, கல்விக்கு அனுப்பவில்லையே என்று அவன் பிற்காலத்தில் வருத்தப்படக்கூடாதே, என்று நான் சொன்னபோது. எனது அர்ப்பணிப்பு அவனைக் குறித்து அப்படித்தான்; பிற்காலத்தில் அவன் வருத்தப்படும் நிலைக்கு வந்தாலும் நான் அதனை விட்டுப் பின்வாங்கப்போவதில்லை என்றார்.

பள்ளியிலிருந்து முற்றிலுமாய் தனது பிள்ளையைப் பிரித்து விட்ட அந்த ஊழியரைக் கண்டு நான் சற்று அசந்துபோனாலும், அவரது அர்ப்பணிப்பிற்கு வாதத்தின் இறுதியில் மதிப்பளித்தேன். உங்களது பிள்ளையை வேண்டுமென்றால் நீங்கள் படிக்க வையுங்கள், எனது மகனை நான் அப்படித்தான் செய்யப்போகிறேன் என்றார் என்னிடத்தில். அவரது மகன் கல்வியில் பேதையானாலும், கர்த்தரில் அவன் மேதையாயிருப்பான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. மோரியா மலையில் தகப்பனால் கட்டப்பட்ட ஈசாக்கின் வாழ்க்கை தேவனைத் தியானிப்பதாகவே மாறும் என்பதில் சந்தேகமில்லை. அறிவு அல்ல அறிவிப்பதே முக்கியம் என்பதை முக்கியமாகக் கொண்டிருந்த அந்த மிஷனரியின் பணி ஆசீர்வதிக்கப்படுவதாக.

நோக்கம் தவறிப்போவதை தேவன் விரும்புவதில்லையே; இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது, தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் (யோவா 2:14-16). ஆண்டவரே, இதில் வரும் லாபத்தைக் கொண்டு, ஆலயத்திற்கு இதைச் செய்கிறோம், ஆலயத்தைப் பழுது பார்க்கிறோம், ஆலயத்தை விரிவாக்கிக் கட்டுகிறோம், ஆலயத்தில் பணி செய்வோருக்கு ஊதியம் கொடுக்கிறோம் என்று சொல்வதற்குக்கூட அங்கே இடமில்லாமற்போயிற்று. பலிகள் வெளியே இருந்து கொண்டு வரப்பட வேண்டும், ஆசாரியன் ஜனங்களால் போஷிக்கப்படவேண்டும் என்ற சட்டத்தை உடைக்கவே இயேசு சவுக்கை உண்டுபண்ணினார்.

 வியாபாரிகள் ஊழியம் செய்யலாம், ஆனால், ஊழியர்கள் வியாபாரம் செய்யக்கூடாது. இந்தக் கோட்பாட்டில் கோட்டை விட்டுவிட்டவர்கள் அநேகர். “தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்” (2தீமோ. 2:4). பின்னுக்கு இழுக்கும் படகை விட்டால்தான், முன்னுக்குப் போகும் இயேசுவோடு முன்னேற முடியும். இன்றோ, அரசு செய்திருக்க வேண்டிய பணியினை கிறிஸ்தவர்கள் செய்துவிட்டார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மக்கள் அநேகர்; எனினும், 'நீங்கள் அதைச் செய்ய அழைக்கப்பட்டவர்களா?' என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

'என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்' என்று எலியா சொன்னபோது, கர்த்தர் எலியாவை நோக்கி, 'நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு' என்றார் (1இராஜா. 17:1-3). உடமைகள் இல்லாத அவனால் உடனே புறப்பட்டுப் போக முடிந்தது. உடமைகளோடு இருக்கும் ஊழியர்களால் அப்படிச் செய்ய இயலாமற்போய் விடுகின்றது.

கர்த்தருடைய சொற்கேட்டு பயணிப்பதற்கு மாறாக, ஆகாபை தேடிச் சென்று சகாயம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். சகாயம் வேண்டி சால்வையால் அவர்களை மூடி கௌரவிக்கிறார்கள். இருப்பிடத்தை விட்டு விட்டு ஓட முடியாத நிலையில் இருப்பதினாலேயே இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும் போதும், இடது புறமாய்ச் சாயும் போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21) என்கிறார் தேவன். வலது, இடது புறத்தை நாம் பார்க்கும்போது, வழியை விட்டு இழுபட்டு விடக்கூடாது. எங்கெங்கோ, என்னென்னவோ நடந்து கொண்டிருந்தாலும், அதைக் குறித்து நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை; உங்கள் வழி இதுதான்; அதிலே திடமாயிருங்கள்; கர்த்தர் தந்த தாலந்துகளை திறமைகளை அந்த வழியிலேயே வெளிப்படுத்துங்கள். இழுப்புண்டுபோனால் உங்கள் அழைப்பு வெளுப்புண்டுபோகும்.

வலியும், வழியும்

 அழைக்கப்பட்ட நாம் பாதையை விட்டு விலகி விலகிச் சென்று கொண்டிருக்கும்போது, கொஞ்சம் வளர்ச்சியைக் கண்டதும், அதே பாதையில் மேலும் வளர முயற்சிக்கிறோம். என்றாலும், நம்மேல் அன்பு கொண்ட தேவன், அழைப்பை நோக்கியே நம்மைத் திருப்ப விரும்புகின்றார். அதற்காக அவர் செய்யும் பணி, நமது பாதைகளை அடைப்பதே. வழியை விட்டு நாம் விலகும்போது, பல விதங்களில் தேவன் நம்மை உணர்த்துவிக்கின்றார்.

எனினும், புரிந்துகொள்ளாமல் நாம் தொடர்ந்து செல்லும்போது, தேவன் பிறவழிகளை அடைக்கின்றார்; அது நமக்கு வலியாகத் தென்படும். நாமாக நமது வழியைக் கண்டுகொள்ளாமலிருக்கும் பட்சத்தில், தவறிச் சிதறித் தன்னார்வமாகப் பயணிக்கும் பட்சத்தில், நமது எண்ணத்தை ஒருமுகப்படுத்தவும், நோக்கத்தை ஒருமுகப்படுத்தவும், சீரான வழியில் நம்மை நடத்தவும், வழி இதுவே என்று சொல்லவும், நாம் பயணிக்கும் தவறான வழிகளை முட்களாலோ, சோதனைகளாலோ அடைத்துவிடுகின்றார் தேவன்.

என்றாலும், அத்தனை தூரம் அந்த வழியில் பயணித்து விட்ட ஊழியர்கள் தேவன் கொடுக்கும் தடையையும் உடைத்து விடவே வகை தேடுகின்றனர். எனினும், “ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவர்” (ஏசா. 22:22) பல நேரங்களில் தன் பணியினைச் செய்து, பாதைகளைப் பூட்டி, பாதைகளை மாற்றுகின்றார். அது வலித்தாலும், நமது வழியோ அழைப்பை நோக்கி மாறியிருக்கும் என்பதே சந்தோஷமான செய்தி.

என்னுடைய வாழ்க்கையைத்தான் சிறந்த சாட்சியாக நான் இதற்கு முன்வைக்கமுடியும். 

1992-ம் ஆண்டு நான் இரட்சிக்கப்பட்டேன், அன்று முதல் அந்த பெலமுள்ள மனிதனைப் போலவே ஆர்வம் கொண்டவனாக வாழத்தொடங்கினேன். 'பேசுவது, பிரசங்கிப்பது, எழுதுவது, ஆலோசனை வழங்குவது, ஒருங்கிணைப்பது' போன்றவைகளைச் செய்வதற்காகவே நான் தெரிந்து கொள்ளப்பட்டவன் என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஆங்காங்கே ஊழியர்களுடனும், ஊழியத்துடனும் என்னை இணைத்துக்கொண்டேன். என்றபோதிலும், கர்த்தர் எனக்கெனக் குறித்த வழியில் தீவிரமாகப் பயணிக்காமல் தாமதமாகவே ஊர்ந்து சென்று கொண்டிருந்தேன்; ஆங்காங்கே இருந்த இழுப்புகளே அதற்குக் காரணங்கள். ஆனால், தேவனோ எனது வழிகள் அனைத்தையும் அடைத்து, எனது பயணத்தைத் துரிதப்படுத்தத் தொடங்கியிருந்தார். தடைகளைக் கொடுத்தே எனது அழைப்பின் பாதைக்குள் என்னை திசை திருப்பிக் கெண்டிருந்தார் தேவன்.

1998-ம் ஆண்டு சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய நேர்க்காணலில் தேர்வானேன்; எனினும், புறப்படும் நேரத்தில் உண்டான பலவிதமான சிக்கல்கள் அப்பயணத்தைத் தடுத்துப்போட்டன. தொடர்ந்து வட இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கும் உண்டான தடைகளினால், கர்த்தர் என்னை திசை திருப்பி மிஷனரியாக மாற்றினார். மிஷனரி ஸ்தாபனத்தில் பல்வேறு பணிகளில் எனது பயணத்தை நான் தொடர்ந்துகொண்டிருந்தேன்.

 மிஷனரி ஸ்தாபனத்திலும் தொழிற்பயிற்சி மையத்திலேயே எனது பணி தொடங்கியது; அதனைத் தொடர்ந்து மீடியா துறையில் கணக்காளனாக, உதவியாளனாகவும், ஸ்தாபனத்திற்காக வாகனங்களை வாங்குகிறவனாக, வாகனங்களுக்கான காப்பீடு மற்றும் சாலைவரிகளை மேற்பார்வையிடுகிறவனாக என பல்வேறு பணிகளை அணிந்திருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல கர்த்தர் ஒவ்வொன்றாக அவகளை விட்டு என்னை திசை திருப்பினார். இணையதளம் வடிவமைப்பதிலும் மூழ்கியிருந்த என்னை அவர் தூக்கியெடுத்தார்.

 நான் மகிழ்ந்துகொண்டிருந்த பல செயல்களுக்காக மனம் வருந்தினேன். அழைப்பிற்கடுத்த எவைகளும் நுகத்தடியாக எனது கழுத்தில் இராதபடி, அழைப்பை மாத்திரமே நோக்கித் திரும்பச் செய்தார். அழைப்பைத் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் தேவன் அடைத்தபோது, பயணிக்கவேண்டிய வழியைப் பாராமல், அடைக்கப்பட்டவைகளை வலியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். தனி வாழ்வின் ஜெப நேரங்களும், வேத தியானங்களும் வழியை எனக்குத் தெளிவாய் காட்ட உற்சாகமானேன்.

சத்துரு அடைத்தால் தேவன் உங்களைத் தாண்டச் செய்வார்; ஆனால், தேவன் அடைத்தால், அழைப்பை நோக்கி உங்களைத் திசை திருப்புவார்.
அந்தப் பயணம் வலியல்ல, அதுதான் வழி.

- Selected -


பிப்ரவரி 16, 2016

மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்

Image result for amos

மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்


  • ஆமோஸ்: 1:3 – “… தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”   
  • ஆமோஸ்: 1:6 – “.. காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”  
  • ஆமோஸ்: 1:9 – “… தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”    
  • ஆமோஸ்: 1:11 – “… ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”    
  • ஆமோஸ்: 1:13 – “… அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
  • ஆமோஸ்: 2:1 – “… மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
  • ஆமோஸ்: 2:4 – “… யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”    
  • ஆமோஸ்: 2:6 – “… இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
ஆமோஸ் தீர்க்கதரிசி தன் புத்தகத்தில் நான்கு தேசங்களையும், நான்கு வம்சங்களையும் (அல்லது இனங்கள்) அவர்கள் செய்த மூன்று நாலு பாதகங்களையும், அதனால் அவர்களுக்கு கர்த்தரால் வருகிற ஆக்கினைத்தீர்ப்பையும் குறிப்பிடுகிறதை வாசிக்கிறோம்.


பாதகங்களைச் செய்த நாடுகளும், வம்சங்களும் அதற்கு வரும் தண்டனைகளும்


1
2
3
4
5
6
7
தமஸ்கு
தாழ்ப்பாள் உடையும்
சங்காரம்
சிறையிருப்பு

-

-

-

-
காத்சா
தீக்கொளுத்துதல்
சங்காரம்
விரோதம்
அரண்மனை பட்சிப்பு

-

-

-
தீரு
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு

-

-

-

-

-
ஏதோம்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு

-

-

-

-

-
அம்மோன்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
யுத்த முழக்கம்
பெருங்காற்று புசல்
சிறை இருப்பு

-

-
மோவாப்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
சங்காரம்
கொலை

-

-

-
யூதா
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு

-

-

-

-

-
இஸ்ரவேல்
புகலிடம்
இல்லை
பலப்படுவது
இல்லை
தப்புவது இல்லை
நிலைநிற்பது இல்லை
இரட்சிப்பு இல்லை
நிர்வாண ஓட்டம்
இருத்துவேன் (அடிப்பேன்)


நாடுகள்: தமஸ்கு, காத்சா, தீரு, இஸ்ரவேல்
வம்சங்கள் / இனங்கள்: ஏதோம், அம்மோன், மோவாப், யூதா

நாடுகளும், வம்சங்களும் செய்த பாவங்கள் ஒரே மாதிரியானவைகள். ஆனால், ஆக்கினைத்தீர்ப்பு, தண்டனைகளில் மட்டும் வித்தியாசப்படுவதை காணலாம். ஏன் இந்த வித்தியாசம்?

லூக்கா: 12:47,48 – “தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்”

இரண்டு வித மக்கள் இருக்கிறார்கள்: 1. சத்தியத்தை அறிந்தவர்கள் 2. சத்தியத்தை அறியாதவர்கள்.

அட்டவணையில் நாம் காணும்போது இவ்விரு பிரிவினரை நாடுகளிலும் இனங்களிலும் காணலாம். அறிந்தவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு அதிகம். அறியாதவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு குறைவு. இவைதான் வித்தியாசத்திற்கு காரணம்.

                 “மூன்று பாதகங்கள், நாலு பாதகங்கள்” என்றால் என்ன?   
                                                                               
விரிவாக ஆய்வு செய்வோம்.

யாத்திராகமம்: 20:2–17 வரையுள்ள வசனங்களில் 10 கட்டளைகள் உள்ளதை காணலாம். அவை:

1. உன்னை அடிமைத்தனத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம்.
2. மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ்த்தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.


4. ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் வேலை செய்து உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.                                                  
5. உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.


8. களவு செய்யாதிருப்பாயாக.
9. பிறனுக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

 -   தேவனாகிய கர்த்தர் கொடுத்த பத்து கட்டளைகள் இவையே.

பத்து கட்டளைகளை இரு பிரிவாக பிரிக்கலாம். அவை:

1. பத்து கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் கர்த்தருடைய பரிசுத்த நாமத்தின் மகிமைக்குரியது. அதை நாம் பரிசுத்தகுலைச்சலாக்கக் கூடாது. அதை நாம் மீறி நடந்துகொள்ளும்போது அந்நிய தேவனை தொழுது கொள்ளுகிறவர்களுக்கு ஒப்பாக இருப்போம். அது கர்த்தருடைய பார்வையில் பாதகமாக அமையும். கர்த்தரின் நாமத்திற்கு மகிமையை கொண்டு வருகிற முதல் மூன்று கட்டளைகளை மீறுவதே “மூன்று பாதகங்கள்” என ஆமோஸ் குறிப்பிடுகிறார்.

மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு எதிராக மற்றும் திரியேக தேவனுக்கு பிதா,  குமாரன் பரிசுத்தாவிக்கு விரோதமாக செய்யும் மூன்று பாதகம் இதுவே.

2. அடுத்து வரும் 4,5,6,7 ஆகிய கட்டளைகள் நமக்கு நாமே மற்றும் பிற மனிதனுக்கு அல்லது சக மனிதனுக்கு விரோதமாக எவ்வித எதிரான காரியங்களையும் செய்யாதபடிக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள். அதை மீறி நடக்கும்போது சக மனிதனுக்கு தீமையும், மனித சமுதாயத்திற்கு மிகப் பெரிய சேதத்தையும் விளைவிக்கும். அது ஒரு தேசத்தை மட்டுமல்ல… முழு உலகத்தையே நாசமாக்கி விடும். தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டுப் போய்விடும். 4,5,6,7, ஆகிய இந்நான்கு கட்டளைகளையும் மீறி நடக்கும்போது தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், தேசங்களின் ஒழுக்கம் சீர்கெடுகிறது. சக மற்றும் பிற மனிதனுக்கு விரோதமாக மனிதன் செய்யும் “நாலு பாதகங்கள்” இதுவே என ஆமோஸ் குறிப்பிடுகிறார்.

இதற்கடுத்து வரும் 8,9,10 ஆகிய கட்டளைகளும் 4,5,6,7 ஆகிய கட்டளைகளைப் போலவே தனி மனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கத்தைப்பற்றியதே. எனவே, பத்து கட்டளைகளில் கடைசி மூன்று கட்டளைகள் 4,5,6,7 ஆகிய கட்டளைகளுக்குள் அடங்கி விடுகிறதை பார்க்கலாம். எனவே, மூன்று பாதகங்கள் மற்றும் நாலு பாதகங்கள் என்பது இக்கட்டளைகளை மீறி நடப்பதையே குறிக்கிறது.

1. ஒரு மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் மூன்று
2. ஒரு மனிதன் பிற மனிதனுக்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் நாலு.

அ) ஒரு மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் மூன்று:

சங்கீதம்: 107:17 – “நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய் கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்” என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. பத்து கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் நீதியின் மார்க்கத்தை நமக்கு காட்டுகிறது. போதிக்கிறது. அதை விட்டு வழிவிலகி சென்றால்… பாதகமான மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களாவோம். அது நமது ஆவி ஆத்துமா சரீரத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்து விடும். கட்டளையை விட்டு விலகுவதே பாதகம். பாதக மார்க்கம்.

ஆ) ஒரு மனிதன் பிற மனிதனுக்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் நாலு:

சங்கீதம்: 107:34 – “குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார்” ஆதியாகமம்: 3:17 – “… பூமி உன்னிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்…” பாவம் மற்றும் பாதகங்களினிமித்தம், பூமி, தேசங்கள், வம்சங்கள் அனைத்தும் சாபத்திற்குள்ளாகிறது. முடிவில் ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவாகிறது.

இப்படிப்பட்ட பாதகங்களைத்தான் ஆமோஸ் குறிப்பிடுகிற நாடுகளும், வம்சங்களும் செய்து ஆக்கினைக்குள்ளானர்கள் என அறிகிறோம்.

மூன்று, நாலு பாதகங்கள் என்பது பாவத்தின் எண்ணிக்கையை காட்டுகிறது. 3+4=7;  ... என மனிதன் பாவத்தோடே பாவத்தை செய்வதினால் பாவத்தின் கூட்டுத்தொகை கூடுதலாகிக் கொண்டே போகிறதை வேதத்தில் நாம் காணலாம். மாற்கு: 7: 21-22 வரை 13 பாதகங்கள்;    கலா: 5:19-21 - வரை 17 பாதகங்கள்;   2தீமோ: 3:1-8 வரை 21 பாதகங்கள். பரிசுத்தத்தை விரும்புகிற கூட்டத்தைவிட பாவத்தையும் பாதகத்தையும் விரும்பிச் செய்கிற கூட்டம் அதிகமாக உள்ளதை உலகில் பார்க்கிறோம். ஆதாமில் ஆரம்பம் ஆன மீறுதல் என்கிற பாவம் பெருகி பெரும் பாதகத்தை நோக்கி பயணம் செய்து முழு மனுக்குலத்தையும் சர்வ நாசம் செய்து கொண்டிருப்பதை மனிதன் உணராமலிருப்பதை காணும்போது... மனந்திரும்புதலின் செய்தி மனுக்குலத்திற்கு எவ்வளவு அவசியமானது என்பதை நமக்கு உணரச் செய்கிறது.


தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார்?

நம்மை ஆசீர்வதிக்கவே அழைத்திருக்கிறார் என ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகிறார். சாத்தான் நம்மை அழைத்து அடிப்பான். தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை நம் கண்காண நயமாக வஞ்சித்து பிடுங்கிக் கொள்வான். பின்பு, நம்மை ஏளனம் செய்து நித்தித்து அவமதிப்பான்.

இஸ்ரவேலைக்குறித்த தேவனது ஆதங்கம்:

ஆமோஸ்: 2:9-11 – “நானோ: கேதுரு மரங்களைப் போல் உயரமும், கர்வாலி மரங்களைப் போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு, நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி, உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்”.

“இப்படி நான் செய்யவில்லையா?” – என்று கர்த்தர் நம்மிடம் சூசகமாக கேட்பதை பார்க்கிறோம்.
  • செய்யத்தான்
  • கொடுக்கத்தான்
  • செழிக்கத்தான்
  • ஐசுவரியவனாக்கத்தான்
  • ஞானமுள்ளவனாக்கத்தான் 
  • உங்கள் பிள்ளைகளை தீர்க்கதரிசிகளாக்கத்தான், ஊழியர்களாக்கத்தான்
  • தேசத்தின் அதிபதிகளாக்கத்தான்     – தேவனாகிய கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்.
தேவனாகிய கர்த்தர் நம்மை நடத்தி வந்த பாதைகளை திரும்பி பாருங்கள். தேவனால் அழைக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள்வரை நம் வாழ்வில் அவர் செய்த காரியங்களை நினைத்துப் பாருங்கள். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் எத்தனை? எத்தனை? உலகவாழ்வின் ஆசீர்வாதங்கள் எத்தனை? எத்தனை? இப்படி அவர் நமக்கு செய்யவில்லையா? அவர் செய்த அதிசயங்கள், அற்புதங்கள், வழிநடத்துதல்கள், அடையாளங்களை நினைத்து நினைத்து நன்றி சொல்லுங்கள்.

நம்முடைய ஆசீர்வாதங்கள் கர்த்தருடைய வசனத்திற்குள் மறைவாக வைத்திருக்கிறார். நாம் தான் வேதத்தை வாசித்து தியானித்து கண்டு பிடித்து அவைகளை சுதந்தரிக்க வேண்டும்.  நீதி: 25:2 – “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை”. கர்த்தருடைய வசனத்தின் உள் அர்த்தத்தை கண்டறிய, கர்த்தருடைய பாதத்தில் பொறுமையோடே அமர்ந்து வேதத்தை தியானித்தால்தான் விளங்கும். அதை நாம் சுதந்தரிக்க வழி புலப்படும்.

மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும் வந்த ஆக்கினையிலிருந்து தப்புவது எப்படி?

சங்கீதம்: 107:6,13,19 – “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்” என வாசிக்கிறோம். கர்த்தருடைய வார்த்தைகளை மீறி, கட்டளைகளை மீறி பாதகங்களை செய்யும்போது, தேவ ஜனத்திற்கு ஆபத்தும், ஆக்கினையும் வருகிறது. அப்போதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு தங்களை காத்துக் கொண்டார்கள் என பார்க்கிறோம்.

ஏசாயா: 1:18 – “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” என்று அழைக்கிறார். பாவத்தை நோக்கி எவ்வளவு தூரம் பயணப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கர்த்தர் அழைக்கிறார். அனைத்து பாதகங்களையும் நம்மை விட்டகற்றி வெண்மையாக்கி, பரிசுத்தமாக்கி நீதிமானாக்க அழைக்கிறார். பாதக மார்க்கத்தை விட்டு விலகி ஜீவ மார்க்கத்தை பின் தொடரும்போது, நம்மேல் வருகிற ஆக்கினைத்தீர்ப்பு மாறி, ஆசீர்வாத வாழ்வை காண்போம்.

ஆபத்திலே கர்த்தரை நோக்கி மனதார கூப்பிடும்போது…. (ஆமோஸ்: 9:12-15)
  • விழுந்துபோனதை திரும்ப எடுப்பிக்க உதவிடுவார்
  • திறப்புகளை அடைப்பார்
  • பழுதானவைகளை சீர்படுத்துவார்
  • பூர்வ நாட்களில் இருந்ததைப்போல ஸ்தாபிப்பார்
  • சிறையிருப்பு என்கிற அடிமைத்தனத்தை திருப்புவார்
  • பாழானவைகளை திரும்ப கட்டுவாய்
  • உன் தோட்டம் செழிப்பாகும் (தொழில், வேலை, வியாபாரம், குடும்பம்)
  • குடிவிட்டு ஓட மாட்டாய்; ஊர்ஊராக அலைந்து திரியமாட்டாய்; நிலைத்திருப்பாய்
இப்படி அவர் செய்யவில்லையா? என்று கர்த்தர் கேட்கிறார். நாம் என்றால் தேவனுக்கு அவ்வளவு பிரியம். எண்: 24:1 – “இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்” என்பதை அறிவோமாக. ஆமென்! அல்லேலூயா!

பிப்ரவரி 15, 2016

மறைப்பது தேவனுக்கு மேன்மை – ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை

Image result for proverbs: 25:2

மறைப்பது தேவனுக்கு மேன்மை – ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை


  நீதி: 25:2 – “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை”

தேவன் ஏன் காரியத்தை மறைக்கிறார்? அதன் தாற்பரியம் என்ன? நம்மைக் குறித்து தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாத திட்டங்களை சாத்தான் கண்டறியக் கூடாது என்பதற்காக காரியத்தை மறைக்கிறார். அப்படியானால்… தேவன் மறைத்து வைத்துள்ள காரியத்தை மனிதன் கண்டறிவது எப்படி? கருகலானவைகளை காண்பது எப்படி?

அதற்கு மனிதன் காரியத்தை ஆராய வேண்டும். ஜெபத்துடன் வேதத்தை வாசித்து காரியத்தை ஆராயும்போது, பரிசுத்த ஆவியானவர் கருகலானவைகளையும், மறைவானவைகளையும் வெளிப்படுத்துவார். நம்மைக் குறித்து தேவன் வைத்திருக்கும் எதிர்கால ஆசீர்வாதங்கள், நிகழ்கால காரியங்களை, தேவதிட்டங்களை கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, வேததியானத்தின் மூலம் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் வெளிப்பாடுகள் கிடைக்கும். அது நம் வாழ்விற்கு மேன்மையை கொண்டு வரும்.

சில அரசியல் தலைவர்களை பத்திரிக்கை நிருபர்கள் அணுகி கட்சியின் நிலவரங்கள் மற்றும் கூட்டணி சேர்வது பற்றி அவர்களின் வாயைக்கிளறி அவர்களது திட்டங்களை அறிந்து பத்திரிக்கையில் வெளியிட முற்படுவார்கள். அதற்கு அரசியல்வாதிகளின் பதில் இப்படியாகத்தான் இருக்கும்: “அப்படியா!!!” “ஆகட்டும் பார்க்கலாம்” “நோ… கமெண்ட்ஸ்”  :கருத்துச் சொல்ல விருப்பமில்லை" “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” “கற்பனைகளுக்கெல்லாம் பதில் தர இயலாது” – என்று காரியங்களை மறைக்கும் பொருட்டு, பட்டும் படாமலும், பொத்தாம் பொதுவாகவும், உறுதியற்ற பதிலாகவும்தான் சொல்வார்கள். அல்லது புன்முறுவல், புன்கையோடு அமைதி காப்பார்கள். காரணம் என்ன? எதிர்க்கட்சிகளுக்கு இவர்களது திட்டம் வியூகம் மற்றும் கூட்டணி பற்றி முன்கூட்டியே தெரிந்தால் அதற்கு எதிராளிகள் சமாதி கட்டி விடுவார்கள். இதன் விளைவு? கட்சியில் பிளவும் - தேர்தலில் தோல்வியும் ஏற்படும்.

இதுபோலதான் தேவன் நம்மை எப்படியெல்லாம் நம்மை ஆசீர்வதிப்பார்? எவ்வழிகளிளெல்லாம் நம்மை நடத்துவார்? என சாத்தானுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டால்… அவன் நமக்கு வாழ் நாளெல்லாம் தொல்லைகள் கொடுத்துக் கொண்டேயிருப்பான். வழிகளெல்லாம் தடைகளை கொடுப்பான். முன்னேறவே விட மாட்டான். முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவானல்லவா?! எனவேதான், நம்மைக் குறித்த அவரது திட்டத்தை மற்றும் காரியத்தை,  சாத்தான் கண்டறிய முடியாதபடி மறைக்கிறார். மறைத்து வைத்துள்ளார். அவனுக்குத்தான் மறைத்து வைத்திருக்கிறாரே தவிர, நமக்கு மறைத்து  வைக்கவில்லை.

ஆனால், நாம் அதைப் பெற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உண்டு. தேவனால் மறைத்து வைக்கப்பட்டுள்ள நம் வாழ்வைக் குறித்த தேவதிட்டத்தை, காரியத்தை அறிந்து கொள்ள, வெளிப்பாடுகளை பெற்றுக் கொள்ள பரிசுத்த வேதாகமத்தின் வாயிலாக “காரியத்தை ஆராய” வேண்டும். வேதத்தை அனுதினமும் ஆராய்ந்து தான் எதையும் நாம் பெற முடியும்.

எதனால் அப்படி? ஏனென்றால்… சாத்தான் கர்த்தருடைய வேதத்தை வாசிக்க மாட்டான். அதில் உள்ள சத்தியத்தை அறிந்தாலும் தேவரகசியமோ, வெளிப்பாடோ அவனுக்கு புரியாது. விளங்காது. அதற்கு பரிசுத்த ஆவியானவர் துணை வேண்டும். அவனுக்கோ அது இல்லை. தேவனோ… சாத்தானுக்கு மறைத்து வைத்துள்ளார். வேதத்தை வாசித்து தியானிப்பவர்களுக்கோ அவர் காரியத்தை வெளிப்படுத்துகிறார். ஏனென்றால்… நமக்கு சத்திய ஆவியானவர் உண்டு. அவரை நாம் பெற்றிருக்கிறோம். அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். "வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படி சொல்லா விட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை" (ஏசாயா: 8:20).

தேவனாகிய கர்த்தர் மனிதனுக்கு வேண்டிய அனைத்து ஆசீர்வாதங்களையும் தம்முடைய திருவசனத்திற்குள் ஒருவரும் அறியாதபடி மறைத்து வைத்துள்ளார். பரிசுத்த ஆவியினால் வேத வசனங்களையெல்லாம் முத்திரித்து இருக்கிறார். அதை ஆவியின் நிறைவை அபிஷேகத்தை பெற்றவர்கள் மட்டுமே வெளிக்கொண்டு வருகிறார்கள். அவ்வசனத்தின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

வேத தியானம்தான் சகலவித ஆசீர்வாதங்களையும் கொண்டு வரும். வசனத்தைக் கொண்டுதான் நம்மை குணப்படுத்துகிறார். சங்: 107:20 - “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்”

எனவே, வசனத்தின் காரியத்தை விளங்கிக் கொள்ள வசனத்தை ஆராய வேண்டும். ஆராய ஆராயத்தான் ஆவியானவரின் வெளிப்பாடுகள் மற்றும் மறைந்திருக்கும் கருகலானவைகள் நம் கண்களுக்கு புலப்படும். "தேவனே உம்முடைய வார்த்தையின் மகிமையை பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்" (சங் 119:18) என தாவீதைப்போல ஜெபிப்போம்.

“கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்” (ஏசா: 34:16).



பிப்ரவரி 14, 2016

விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகிமை

Image result for job:23:12

விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகிமை

 "தேவனே உம்முடைய வார்த்தையின் மகிமையை பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்" (சங் 119:18)

"அவருடைய (கர்த்தருடைய) வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக் கொண்டேன்"  (யோபு 23:12)

"உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; ..." (எரேமியா: 15:16).

தேவனுடைய வார்த்தைகளின் மகத்துவத்தை பல இடங்களில் வேதத்தை வாசிக்கும் போது பார்க்கலாம். இவ்வளவு ருசியான தேவனுடைய வார்த்தையை நாம் ருசி பார்க்காமல் இருக்கலாமா?. இன்று அனேகர் தேவனுடைய வார்த்தையை ருசிப்பார்க்காத காரணத்தினால் தங்களுடைய வாழ்க்கையில் ருசியில்லாத உணவை அடிக்கடி ருசி பார்க்க நேரிடுகிறது.

யாரிடம் இந்த மகத்தான வார்த்தை நிரம்பியிருக்கிறதோ அந்த மனிதனே பாக்கியவான்.  இந்த உலகத்தில் முதல் ஐசுவரியவான் தேவனுடைய வார்த்தையால் நிரப்பப்பட்டவனே.

விதையென்னும் தேவனுடைய வார்த்தை இல்லாத நிமித்தமே நாம் அடிக்கடி நம்முடைய நோயை தீர்க்க மருத்துவமனைக்கும், பிரச்சினை, வழக்குகளை தீர்க்க உலக மனிதர்களிடமும் செல்ல நேரிடுகிறது.

 விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகத்துவத்தை  தியானிப்போம்


முதல் மகத்துவம்: விதையென்னும் தேவனுடைய வார்த்தை "ஜீவனைத் தருகிறது":


 " நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது"  (யோவான் 6:63). யாரெல்லாம் தேவனுடைய வார்த்தையை உட்கொள்கிறார்களோ அவர்கள் எல்லாம் மரிப்பதில்லை. அவர்கள் நித்திய நித்தியமாக தேவனோடு வாழ்கிறவர்கள். அவர்களுடைய உலக வாழ்க்கையில் ஏற்படும் நோய்களையும், இழப்புகளையும், நஷ்டங்களையும் விதையென்னும் தேவனுடைய வார்த்தை சரி செய்கிறது.

விதையென்னும் தேவனுடைய "வார்த்தையின் குணம்"  -  "உருவாக்குதல்", "சிருஷ்டித்தல்". தேவன் வார்த்தைகளை அனுப்பின போது வானமும் பூமியும் அதிலுள்ள எல்லா வஸ்துக்களும் உருவானதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். "கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் உண்டாயின" (சங் 33:6). "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளை நிற்கும்" (சங்: 33:9). விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகத்துவத்தை இவ்வசனங்களின்படி அறிய முடிகிறது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்த நோயாளிகள் விதையென்னும் அவருடைய வார்த்தையின் மூலம் புதிய உறுப்புகளைப் பெற்றுக் கொண்டதை நாம் சுவிசேஷ புத்தகங்களில் பல இடங்களில் வாசிக்கிறோம். நாமும் நம்முடைய வாழ்க்கையில் புதிய காரியங்களை பார்க்க வேண்டுமானால் தேவனுடைய வார்த்தையை நம்முடைய அனுதின உணவாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய  வாழ்க்கையில் புதிய புதிய கனிகளை, அற்புதங்களை, பலன்களை பார்க்க முடியும்.

  "என் வாயிலிருந்து புறப்படும் வசனம் அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 55:11)

 நம்முடைய "உட்கொள்தல்" எப்படி இருக்க வேண்டும்?

ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் தேவன் நமக்குத் தந்த வேதத்தை நன்றாக ஜெபத்துடன் வாசிக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நன்றாக படித்த வசனங்களை அசைபோட வேண்டும். அப்படி செய்யும் போது மட்டுமே இந்த மகத்தான விதையென்னும் தேவனுடைய வார்த்தை பலன் தரும். எனவே, ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட மகத்தான வார்த்தையை உட்கொள்வோம். அப்போது இதன் வல்லமையை வெளியரங்கமாக  காணலாம்.


இரண்டாவது மகத்துவம்: விதையென்னும் தேவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் "தண்ணீரைப் போல இருக்கிறது":


தண்ணீர் ஒரு இடத்தில் கடந்து போகும்போது என்ன நடக்கிறது என்பது எல்லாரும் அறிந்த ஒரு காரியம். அந்த இடத்தில் தேங்கி நிற்கிற எல்லா அசுத்தத்தையும் அழுக்கையெல்லாம் அடித்துச் செல்கிறது. அதைபோல தேவனுடைய வார்த்தையும் இருக்கிறது, இந்த வார்த்தை ஒருவனுடைய வாழ்க்கையில் கடந்து வருமானால் அங்கு நடக்கிற காரியம் – "பரிசுத்தம்".

"நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்" என்று யோவான் 15:3 ல் விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகிமையைப் பார்க்கிறோம், நம்முடைய வாழ்க்கையில் தேங்கி நிற்கிற பாவம் என்கிற அழுக்கை அடித்துச் சென்று, ஒரு முழுமையான சுத்திகரிப்பை விதையென்னும் தேவனுடைய வார்த்தை உண்டாக்குகிறது என்பதே மேலே சொல்லப்பட்ட வசனத்தின் அர்த்தம்.

இத்தகைய காரியத்தை நன்றாக அறிந்த தாவீது பின்வருமாறு எழுதுகிறார், "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால் தானே" (சங் 119:9)

பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்று விரும்புகிற தேவஜனமே!

தேவனுடைய வார்த்தையை எப்பொழுதும் இருதய அறைகளில் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" (சங் 119:11).

மூன்றாவது மகத்துவம்:  விதையென்னும் தேவனுடைய வார்த்தை "வெளிச்சத்தைத் தருகிறது":


தேவனுடைய வார்த்தை தூய்மையும் கண்களை தெளிவிக்கிறதுமாயிருக்கிறது (சங் 19:8). ஆம்! ஒரு மனுஷன் வெளிச்சத்துக்கு வரும்போது மட்டுமே அவன் தன்னுடைய சரீரத்தில் அல்லது தன்னுடைய வஸ்திரத்தில் ஒட்டியிருக்கிற அழுக்கைப் பார்க்க முடியும்.

இருளில் தொலைந்து போன ஒரு விலையுயர்ந்த பொருளைக் கண்டு பிடிக்க வேண்டுமானாலும் நமக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நமக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. எதற்காகவென்றால்... நம்முடைய பாவத்தைக் கண்டுபிடிக்கவும் பிசாசு கொண்டு வருகிற இருளை அடையாளம் காணவும் நம்முடைய ஆவிக்குரிய முத்துக்களாகிய வரங்களை கண்டுபிடிக்கவும் நமக்கு வெளிச்சம் அவசியம். இந்த வெளிச்சத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் விதையென்னும் தேவனுடைய வார்த்தை என்கிற விளக்கு நமக்கு மிகவும் அவசியம்.

இந்த மகத்தான வார்த்தை என்கிற வெளிச்சம் நம்முடைய வாழ்க்கையில் வரும் போது மட்டுமே நாம் உண்மையான உபதேசத்தையும் உண்மையான ஊழியக்காரனையும் அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது.

இன்று அனேகர் ஏமாற்றப்படுவதற்குக் காரணம் அவர்களிடம் விதையென்னும் தேவனுடைய வார்த்தை என்கிற விளக்கு இல்லாததே ஆகும்.   "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங் 119:105).

நான்காவது மகத்துவம்: விதையென்னும் தேவனுடைய வார்த்தை நமக்கு ஒரு "ஆவிக்குரிய உணவாய் இருக்கிறது":


" மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் " (மத் 4:4).

 நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை பலவிதங்களில் சோதிக்க வந்த பிசாசை எப்படியாக எதிர் கொள்கிறார் என்பதை நாம் மத் 4ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். தன்னுடைய மகத்துவம் நிறைந்த மகிமையான வார்த்தையை பிசாசின் கேள்விக்கு பதிலாக வைத்ததுமல்லாமல் அவனை அந்த வார்த்தைகளினால் விரட்டவும் செய்தார்.

நம்முடைய வாழ்க்கையில் வளரமுடியாமல் இருப்பதற்குக் காரணம் நம்முடைய பாத்திரத்தில் தேவனுடைய வார்த்தை நிறைந்து இருப்பதற்குப் பதிலாக உலகத்தின் வார்த்தையே நிறைந்து இருப்பதால்தான்.

இப்படிப்பட்டவர்களைப் பார்த்து அப்.பவுல், "மேலும் சகோதரரே நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல் மாமிசத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேச வேண்டியதாயிற்று" என்கிறார் (1கொரி 3:1). விதையென்னும் தேவனுடைய வார்த்தை இல்லாதவர்களை அப்.பவுல் இவ்வாறு அழைக்கிறார்.

குழந்தைகள் வளர வேண்டுமானால் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு அவசியமாகிறது போல, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை வளரவேண்டுமானால் எல்லா ஊட்டச் சத்துக்கள் நிறைந்த விதையென்னும் தேவனுடைய வார்த்தையாகிய உணவு தேவைப்படுகிறது.

ஐந்தாவது மகத்துவம்: தேவனுடைய வார்த்தை ஒரு "விதையாயிருக்கிறது":


" தேவனுடைய வசனம் விதையாயிருக்கிறது" (லூக் 8:11). சங்கீதம் ஒன்றை வாசிக்கும்போது விதையென்னும் தேவனுடைய வார்த்தை யாரிடம் இருக்கிறதோ அவன் மட்டுமே செழிப்பான் என அறிகிறோம்.

ஒரு மனுஷன் தன்னுடைய நிலத்தில் விளைச்சலைப் பெருக செய்ய வேண்டுமானால் அவன் அநேக விதைகளை இட வேண்டும்.  நல்ல விதைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவனுடைய விளைச்சல் முழுமையாக இருக்கும், அதுபோல நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நீதியான வாழ்க்கை, பரிசுத்தம், விசுவாசம், ஆவிக்குரிய கனிகள், வரங்கள் பெருக வேண்டுமானால் நாம் தேவனுடைய வசனமாகிய விதையை நம்முடைய இருதயத்தில் விதைக்க வேண்டும். அப்பொழுது  நம்முடைய நிலத்துக்கு தேவனாகிய கர்த்தர் வரும் நாளின்போது நல்ல விளைச்சலை காணமுடியும்.

ஆறாவது மகத்துவம்: தேவனுடைய வார்த்தை "இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிருக்கிறது":



"தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" (எபேசியர் 6:17 மற்றும் எபிரெயர் 4:12). எதற்காக பட்டயம் தேவைப்படுகிறது?

நிலத்தில் தேவையில்லாத களைகள், காஞ்சொறிகள், புதர்கள் வளரும். அப்படி வளருகிற களைகள் நல்ல விளைச்சலைக் கெட்டு போகச் செய்யகூடும். ஆகவே இந்த களைகளை வெட்டிப் போடுவதற்கு நிலத்தின் சொந்தக்காரர் பட்டயத்தைக் கையாளுகிறார்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தமக்கு விரோதமாக சோதனையைக் கொண்டு வருகிற,   தம்முடைய திட்டத்தை உடைத்துப் போடுவதற்கு தடையாக வந்த சாத்தானை வனாந்திரத்தில் தம்முடைய வாயிலிருந்து புறப்படுகிற வசனம் என்கிற ஆவியின் பட்டயத்தால் அகற்றி போட்டதை லூக்கா 4 ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

பாவம் நிறைந்த இவ்வுலக வாழ்வில் நாம் மாசற்றவர்களாய் வாழவும் ஊழியத்தில் ஜெயம் எடுக்கவும், இந்த மகத்தான இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய விதையென்னும் தேவனுடைய வார்த்தை மிக அவசியம்.

ஏழாவது மகத்துவம்: தேவனுடைய வார்த்தை நமக்கு "ஜெபத்தையும், ஜெயத்தையும் கற்றுத் தருகிறது":


" நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" (யோவான் 15:7).
  விதையென்னும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜெபிக்கும் போது நாம் எதைக் கேட்டாலும் உடனே பெற்றுக் கொள்கிறோம் என்பதே இதன் பொருள்.

இன்று அனேகர் தேவனிடம் இருந்து பெற்றுக் கொள்ளாததற்கு காரணம் ... அவர்களிடம் விதையென்னும் தேவனுடைய வார்த்தை இல்லாததே காரணம். ஏனென்றால் விதையென்னும் தேவனுடைய வார்த்தையே ஒரு மனுஷனுக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறது (ரோமர் 10:17). மாறாக வசனம் இல்லாத பட்சத்தில் அந்த மனுஷனுடைய இருதயத்தில் அவிசுவாசம் என்கிற களைகள், காஞ்சொறிகள் வளருவதை காணலாம்.

  தேவனுடைய வார்த்தை நமக்கு அதிகாரத்தை தருகிறது. என்ன அதிகாரம் கொடுக்கிறது? நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற அதிகாரம்.  நாம் உரிமையாக தேவனிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவர்கள். இத்தகைய காரியத்தை  தேவனுடைய சீஷர்களாகிய பேதுரு மற்றும் அப்.பவுலின் வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் பார்க்கலாம். இவர்கள் அதிகாரத்தோடு பிசாசுகளை துரத்தினதையும், பிசாசுகள் இவர்களைப் பார்த்து தேவனுடைய மனுஷர்கள் என்று கூறினதையும் நாம் நிருபங்களிலும், அப்போஸ்தலர் நடபடிகளிலும் வாசிக்கிறோம். இவர்களெல்லாம் விதையென்னும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அதன் வல்லமையினால் ஜெயம் பெற்றார்கள் என அறியலாம்.

பிரியமான  தேவஜனமே!

விதையென்னும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நம்முடைய ஆவிக்குரிய வீட்டைக் கட்டும் போது, எந்த சூழ்நிலையிலும் அதாவது புயல் அடித்தாலும், பெரு மழை சொரிந்தாலும் அசையாமல் நிலைத்திருக்க முடியும்  (மத் 7:24,25).

பிப்ரவரி 10, 2016

நம் தேவன் நம் வாழ்வின் பிரச்சனைகளை புரிந்து கொள்வார்

Image result for Break down car

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், ஒருவர் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அது ஒரு அதிக விலையுள்ள காராக இருந்ததால், பல சவுகரியங்களுடன் காரை செலுத்துவதில், ஓட்டுநருக்கு கொஞ்சம் பெருமையும் இருந்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலையின் ஆள்நடமாட்டம் குறைந்த ஒரு இடத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார் திடீரென ஆஃப் ஆனது. காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, பெட்ரோல் அளவு, பேட்டரி சார்ஜ், ரேடியேட்டரில் தண்ணீர் என எல்லாவற்றை சரி பார்த்தார் ஓட்டுநர். எல்லாமே சரியாக தான் இருந்தது. தனிமையில் நீண்ட பயணத்தை மேற்கொண்டு மகிழ விரும்பியவருக்கு, இப்போது கடும் கோபம் வந்தது.

எவ்வளவு முயன்றும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. முடிவில் தனது தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டு, சாலையில் செல்லும் மற்ற கார்காரர்களிடம் உதவி கேட்கும் முயற்சியில் இறங்கினார்.

அந்த வழியாக சென்ற பல கார்களும், நிறுத்தாமல் சென்ற போது, ஒரு பழைய காரில் சென்ற முதியவர் காரை நிறுத்தி இறங்கினார். உதவி கேட்டவரிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்தார். தனது பரிதாப நிலையை கூறி, தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதில் இரக்கப்பட்ட அந்த முதியவர், நான் ஒரு முறை உங்கள் காரை சோதித்து பார்க்கட்டுமா? என்றார்.

ஏற்கனவே மனம் வெறுத்த நிலையில் இருந்த உதவி கேட்டவர், முதியவரின் ஆசையை ஏன் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒத்துக் கொண்டார். நின்று போன காரின் முன் பாகத்தை திறந்த முதியவர், என்னத்தையோ உள்ளே நோண்டினார். பிறகு இப்போது ஸ்டார்ட் செய்து பாருங்க என்றார். எப்படியும் ஸ்டார்ட் ஆக போவதில்லை என்ற நம்பிக்கையில், அதை மனதில்லாமல் ஸ்டார்ட் செய்த ஓட்டுநருக்கு ஒரே ஆச்சரியம். அத்தனை நேரம் பாடுபடுத்திய தனது கார், உடனே ஸ்டார்ட் ஆனது.

Image result for carl benz

முதியவருக்கு நன்றி கூறிவிட்டு, உங்களுக்கு எப்படி இந்த காரில் இருந்த பிரச்சனை குறித்து தெரிந்தது என்று கேட்டார். அதற்கு அவர், “என் பெயர் தான் கார்ல் பென்ஸ் (Carl Benz). நான் தான் நீங்கள் வைத்துள்ள இந்த கார் நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் உரிமையாளர். மேலும் இந்த காரை வடிவமைத்ததும் நான் தான். இந்த காரில் எங்கே என்ன பிரச்சனை ஏற்படும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி ஒரு குட்டி “பை” கூறிவிட்டு முதியவர் இடத்தை காலி செய்தார். ஆச்சரியத்தில் நின்ற ஓட்டுநருக்கு மேற்கொண்டு கூற வார்த்தைகள் எதுவும் இருக்கவில்லை.

 அந்த கார் நிறுவனத்தின் உரிமையாளர் கார்களை உருவாக்குவது போல, நம் தேவனும் நம்மை உருவாக்கி இருக்கிறார். சாதாரண ஒரு காரில் என்ன பிரச்சனை இருக்கும் என்பதை ஒரு மனிதனால் நிதானிக்க முடியும் என்றால், நம்மை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனால் நமக்கு இருக்கும் தேவைகளை அறிந்துக் கொள்ள முடியாதா என்ன?