இஸ்ரவேலரிடையில் பலவகையான திருவிழாக்கள் காணப்பட்டன. பெரிய விழாக்களுக்கு முன்பு உபவாசித்தலும் (நியாயதிபதிகள்: 26,27 அதிகாரங்கள், 1சாமுவேல்: 7:5,6, 2ராஜாக்கள்: 19:1-17, எரேமியா: 36:4-6,) , விழாக்களில் பலியிடுவதும் (1சாமுவேல்: 7:16, 2 சாமுவேல்: 23:16,17) முக்கிய அம்சங்களாகும்.
இஸ்ரவேலரிடையில் காணப்பட்ட விழாக்கள் யாவும் மூன்று வகையாகப் பகுக்கப்பட்டன. அவை:
1. திருநூல் சட்ட ஒழுங்கிற்குட்பட்டவை: (Canonical Festivals)
ஓய்வுநாள், அமாவாசை, ஏழாவது அமாவாசை, ஏழாவது ஆண்டு, பெந்தெகோஸ்தே அல்லது ஐம்பதாவது ஆண்டு.
2. வாழ்க்கை வழக்கிலுள்ளவை: (இவை புண்ணிய யாத்திரைக்குரியது)
பஸ்கா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை, வாரங்களின் விழா, கூடாரப் பண்டிகை ஆகியவை.
3. திருநூல் சட்ட ஒழுங்கிற்கு வெளியிலுள்ளவை:
பிரதிஷ்டை விழா, புரீம் விழா, நியாயப் பிரமாண விழாக்கள் முதலியவை: