டிசம்பர் 05, 2014

இந்த ஆண்டில் தேவன் செய்த நன்மைகளுக்கு ...


இந்த ஆண்டில் தேவன் செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்வோம்

   கடந்த நாட்கள் காத்து புதிய நாளை தந்தீரே நன்றி

   என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வந்தீரே நன்றி

   எனது வியாதியில் சுகம் தந்தீரே நன்றி

   எனது கண்ணீரை துடைத்தீரே நன்றி

   எனது குறைச்சலில் உதவி செய்தீரே நன்றி

  தேவைகளை சந்தித்தீரே நன்றி

  உபத்திரவத்தில் விடுதலை தந்தீரே நன்றி

  அனாதையான எனக்கு ஆதரவு தந்தீரே உமக்கு நன்றி

   கைவிடப்பட்டபோது ஜீவன் தந்தீரே நன்றி

   நல்லதொரு குடும்பத்தை தந்தீரே நன்றி

  நல்ல மனைவியைத் தந்தீரே நன்றி

  நல்ல கணவனைத் தந்தீரே நன்றி

 நல்ல பிள்ளைகளைத் தந்தீரே நன்றி

 இருக்க நல்ல வீடு தந்தீரே நன்றி

 வாழத் தேவையான வசதி தந்தீரே நன்றி

   கடினமாக உழைக்க நல்ல பெலன் தந்தீரே நன்றி

  சாப்பிட ஆகாரம் கொடுத்து சாப்பிடச் செய்தீரே நன்றி

   நல்ல சரீரத்தை கொடுத்தீரே நன்றி

   அனைத்து அவயவயங்களும் செயல்படச் செய்கின்றீரே நன்றி

   ஞானத்தையும் ஞாபகச் சக்தியையும் தருகிறவரே நன்றி

   நல்ல ஆவிக்குரிய நண்பர்களைத் தந்தீரே நன்றி

   நல்ல சபையைக் கொடுத்தீரே நன்றி

   நல்ல ஊழியங்களைக் கொடுத்தீரே நன்றி

   நல்ல போதகரைக் கொடுத்தீரே நன்றி

   நல்ல ஆராதனையைக் கொடுத்தீரே நன்றி

   நேசிக்கும் இதயங்களைக் கொடுத்தீரே நன்றி

   கடனில்லாத வாழ்வைக் கொடுப்பவரே நன்றி

   என்னையும் இரட்சித்தீரே நன்றி

   என்னையும் நேசிக்கின்றவரே நன்றி

   எனது பாவங்களை மன்னித்தீரே நன்றி

   என்னை மன்னிக்க உமது இரத்தத்தை சிந்தினீரே நன்றி

   எனக்காக உயிர்த்தெழுந்தவரே நன்றி

   தமது ஊழியம் செய்யும்படி எங்களைத் தெரிந்தெடுத்தீரே நன்றி

   எனக்கு நித்திய ஜீவனைத் தந்தீரே நன்றி

   எனக்கு பரலோக பாக்கியம் தந்தீரே நன்றி

   மீண்டும் இந்த உலகிற்கு வரப்போகிறீரே நன்றி

   என்னை அழைத்துச் செல்பவரே நன்றி

   சதி நாச மோசங்களிலிருந்து காப்பாற்றீனீரே நன்றி
   ஆபத்திலிருந்து காப்பாற்றினீரே நன்றி  
   எனது சத்ருக்களுக்கு என்னை ஒப்புக் கொடாமல் தப்புவித்ததற்காக நன்றி

   நாவின் சவுக்காரத்திற்கு தினமும் என்னை காத்துக் கொண்டதற்காய் நன்றி

   கடந்த 2014 ஆண்டுகளாக தந்த மத சுதந்தரத்திற்காக நன்றி

  தோமாவை தமிழ்நாட்டுக்கு தந்ததற்காக நன்றி

   சீகன்பால்கை தமிழ்நாட்டிற்கு தந்தீரே நன்றி

   தமிழ் மொழியில் வேதாகமத்தை அச்சிட்டு தந்தீரே நன்றி

   தமிழகத்திற்கு ஏராளமான மிஷினெரிகளை தந்தீரே நன்றி

   தமிழகத்திற்கு ஏராளமான ஊழியர்களை தந்தீரே நன்றி

   தமிழகத்தில் 40 இலட்சம் கிறிஸ்தவர்களைத் தந்தீரே நன்றி

   சுவிசேஷத்திற்காக திறந்த வாசலைத் தந்தீரே நன்றி

  கிருபை வரங்கள் கனிகள் தந்தீரே நன்றி

   பரிசுத்தாவியினால் அபிஷேகித்து நிறைத்தீரே நன்றி

   ஞானஸ்நானம் எடுக்க உதவினீரே நன்றி

   என்னை துதிக்கச் செய்தீரே நன்றி

   என்னை பாடச் செய்தீரே நன்றி

   என்னை ஆளுகை செய்கிறீரே நன்றி

   என்னை வழிநடத்தி வந்தீரே நன்றி

  தேவனுக்கு பயனுள்ள பாத்திரமாக மாற்றினீரே நன்றி

   தேவாலயத் தேவைகளை சந்தித்தீரே நன்றி

   ஊழியத்தை தாங்குகிறவர்களை எழுப்பினீரே நன்றி

   ஜெபப் பங்காளர்களைத் தந்தீரே நன்றி

   உதவியாளர்களைத் தந்தீரே நன்றி

   பொறுப்பாளர்களை பராமரிப்பாளர்களைத் தந்தீரே நன்றி

   நீர் தந்த அறுவடைக்காக நன்றி

   நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களுக்காய் நன்றி

   நீர் கொடுக்கப் போகிற வாக்குத்தத்தங்களுக்காகவும் நன்றி

  வருடம் முழுவதும் வழி நடத்துகிறீரே நன்றி

   வாழ்நாள் முழுவதும் போஷித்துக் காப்பாற்றீனீரே நன்றி

   தினந்தோறும் அதிகாலையில் புதுகிருபையை தருகின்றீரே நன்றி

   நிமிடந்தோறும் விசாரிக்கிறீரே நன்றி

இம்மட்டும் உதவின எபிநேசரே நன்றி

தனிப்பட்ட வாழ்வில் மற்றும் குடும்ப வாழ்வில் தேவன் செய்த நன்மைகளை நினைத்து சிறிது நேரம் நன்றி சொல்லுங்கள்….         

v  தேவன் தந்த ஈவுகள் - வாங்கிய வாகனம், பொருட்கள், நிலங்கள், கட்டின வீடுகள் வேலைவாய்ப்பு…

v  தேவன் கொடுத்த விடுதலைக்காககடன், வியாதி, பிசாசு, கெட்ட சொப்பனம், சாபம், சத்துரு…



 தேவன் தந்த சமாதானத்திற்காக – மனதில் நிம்மதி, ஆறுதல், குடும்ப ஒற்றுமை சமாதானம், வேலை செய்யுமிடத்தில்… சுற்றுப்புறத்தில், உறவினர்களிடையே …

நவம்பர் 29, 2014

ஆசிரியர் கடிதம் - 1


கிறிஸ்துவுக்குள் அன்பான நேசரின் தோட்ட வாசகர்களுக்கு,

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இந்த தளத்தில் வெளியிடப்படுகிற அனைத்து செய்திகளும் ஆசீர்வாதமாக இருக்குமென்று கருதுகிறேன்.

வாசிக்கிற உங்களுக்கு எனது சில ஆலோசனைகள்...

1. வாசிக்கிற நீங்கள் பயனடைந்தால் அதைக் குறித்த கருத்தை பதிவு செய்ய கேட்கிறேன். (வாசித்து விட்டு அமைதியாக செல்ல வேண்டாம்)

2. இத்தளம் உங்களுக்கு பிடித்திருந்தால்... நீங்கள் விரும்பினால் உங்கள் முகநூலில் வெளியிடலாம்.

3. இத்தளம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் இதில் உறுப்பினராக இணைந்து , இத்தளம் வளர ஆதரவு அளிக்கலாம்.

4. இதில் வெளியிடும் கட்டுரைகள் உங்கள் தளத்தில் நீங்கள் வெளியிட விரும்பினால்... தாராளமாக வெளியிடலாம். மறவாமல் நம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்லலாம். (விரும்பினால் என் மின்னஞ்சலுக்கு mccharlesmc@gmail.com ஒரு கடிதம் எழுதி தெரியப்படுத்தலாம்)

5. உங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யலாம்.

அன்புடன் 
கிறிஸ்துவின் பணியில்
உங்கள் ஊழியன்


நவம்பர் 28, 2014

தேசங்களை அசைத்துக் கொண்டிருக்கிற தேவ மனிதனின் முதல் அர்ப்பணிப்பு....


# என் சொந்த தேவைகளையோ, ஊழியத் தேவைகளையோ யாரிடத்திலும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ, ஜெபக்குறிப்பு என்கிற வடிவத்தில்கூட கூறுவதில்லை.

# எந்த காரணத்தைக் கொண்டும் எந்த ரூபத்திலும் உயிரே போனாலும் சரி கடன் வாங்குவதில்லை.

# எளிமை வாழ்வினையும் தாழ்மையையும் தியாகத்தையும் என்றுமே கடைப்பிடிக்க வேண்டும்.

# கிறிஸ்துவை வாழ்ந்து காண்பித்து, பவுலின் பாதைகளை ஊழியப் பாதையாக                                                       மாற்றிக் கொள்ளவேண்டும்.

# வீண் புகழ்ச்சிக்காகவோ, மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ                                        ஒரு காரியமும் செய்யக்கூடாது.

# சத்தியத்தை கூறுவதில் எத்தனை பாடுகள் வந்தாலும் அதனை மாற்றியோ ,                                       கலப்படம் செய்தோ ஒருநாளும் பேசக்கூடாது.

# பாவத்திற்காக போராடுவதில் இரத்தம் சிந்த நேரிட்டாலும் பின்வாங்க கூடாது.

# ஆத்தும பாரம் எந்த காலத்திலும் குறையாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.

# தேவன் கட்டளையிடாத எந்த ஊழியத்தையும் செய்ய முன்வரக் கூடாது.

# கையளவு மேகம் தெரியும்வரை அல்லது முசுக்கொட்டை செடியின் நுனியில் அசைவின்                                சத்தம் கேட்கும்வரை காத்திருக்க வேண்டும் எதிலும் அவசரம் காட்டிவிடக் கூடாது.

# என்னோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு நான் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்க வேண்டும்

_"நீ இல்லாவிடில்" புத்தகத்தில் இருந்து தொகுத்தது. 




- Selcted 
 

நவம்பர் 20, 2014

இளம் ஊழியருக்கு இனிய ஆலோசனை


* குறைவாகப் பேசு; அதிகமாகக் கேள்.

* சாமார்த்தியமான காரியங்களை பிறரிடம் பேசுவதைக் காட்டிலும், இதயங்களை புரிந்து கொண்டு அவர்களுடைய தேவைகளுக்கு உன்னை உருவகப்படுத்திக் கொள்.

* உனக்குத் திறந்த உள்ளம் உண்டு என்பதையும், உனக்கு முன் வெளிப்படுத்தப்படும் உண்மைக்கு பாதுகாப்பும், ஆறுதலும் உண்டு என்பதை அனுபவத்தின் மூலம் அறியும்படிச் செய்.

* அதிகமான கண்டிப்பைத் தவிர்த்து, அவசியமானால் எச்சரிக்கையுடன் சாந்தமாக கடிந்து கொள்.

* உன்னை நம்பி ஏமாற்றப்படுவோம் என்ற பயம் பிறரில் உருவாக இடமளிக்காதே.

* பிறரை சரி செய்வதற்காக, உன்னையே நீ சரி செய்து கொள்.

- ஒரு அனுபவம் வாய்ந்த 19 ஆம் நூற்றாண்டு மூத்த ஊழியர்

மெத்தூசலா மரம்



இந்த மரத்தின் பெயர் மெத்துசேலா. 

இது உலகிலையே மிக பழமையான மரம் ,4843 ஆண்டு பழமை ஆனது..!

ஆதியாகமம்: 5:27 - "மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்..."