நவம்பர் 18, 2015

எதிர்கால ஆசீர்வாதத்திற்கான ஜெபகுறிப்புகள்

Image result for Prayer knee

எதிர்கால ஆசீர்வாதங்களுக்கான ஏழுநாள் உபவாச கூடுகை விண்ணப்பம்      

           “நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கு மட்டும், ஏழுநாள் காத்திரு என்றான்” (1சாமுவேல்: 10:8)

வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்திருக்கிற நாம் கர்த்தருடைய பாதத்தில் ஏழுநாட்கள் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து, நமது ஆவி ஆத்துமா சரீரத்தை ஜீவபலியாக அர்ப்பணித்து ஜெபித்து, வசன அறிக்கை செய்து எதிர்கால நன்மைகளை சுதந்தரித்துக் கொள்வோம்.  

உபவாசம் எப்படி ஆசரிக்க வேண்டும்?

 (ஏசாயா: 58 அதிகாரம் / மத்தேயு: 6:17)

நாம் செலுத்த வேண்டிய சர்வாங்க தகனபலிகளும் சமாதான பலிகளும்:

    a)   தலை:

  1.   தலையின் மேல் உள்ள இரத்தப்பழிகள் நீங்க என்னை ஒப்புக் கொடுக்கிறேன்

  2.   தலையின் மேல் உள்ள பொல்லாப்புகள் நீங்க என்னை ஒப்புக் கொடுக்கிறேன்

  3.   தலையின்மேல் உள்ள தேவனுடைய மீறுதல்கள், சாபங்கள், தேவ கோபங்கள் நீங்க என்னை ஒப்புக் கொடுக்கிறேன்

  4.   அபிஷேகம் பெற்றவர்களுக்கு விரோதமாக நடக்கும் சிந்தனை, நடக்கையை என் தலைமேலிருந்து என்னை விட்டு அகற்ற ஒப்புக் கொடுக்கிறேன்

  5.   என் தலையின்மேல் உள்ள இரத்தப்பழிக்கு என்னை நீங்கலாக்கி, என்னிமித்தமும், என் அக்கிரமங்கள், மீறுதல்களினிமித்தமும் வந்த இரத்தபழிகளுக்கு என் சந்ததி ஆளாகாமல் காக்கப்பட கெஞ்சி மன்றாடுகிறேன்

  6.   அந்நிய காரியங்களில் தலையிட்டு பாடுபடாதபடிக்கு காத்துக்கொள்ள ஒப்புக் கொடுக்கிறேன் (1பேதுரு: 4:15)

  7.   கர்த்தரின் ஆணையை அசட்டை பண்ணினதையும், அவரது உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும் தலைமேலிருக்கும் இம்மீறுதலை மன்னிக்கும்படி மன்றாடுகிறேன் (எசேக்: 17:19)

  8.   தலையின்மேல் தேவையற்ற சிங்காரங்கள் வராதபடி காத்துக்கொள்ள ஒப்புக் கொடுக்கிறேன்

  9.   எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என் தலைமயிரிலும் அதிகமாக உள்ளது. அது என்னை விட்டு நீங்கும்படி என்னை ஒப்புக் கொடுக்கிறேன் (சங்: 40:12)

  10.  நிமித்தமில்லாமல் என்னை பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள். வீணாக எனக்கு சத்துருக்களாகி என்னை சங்கரிக்க வேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று (சங்: 69:4) அதிலிருந்து நான் தப்பித்துக் கொள்ள கிருபை தாரும்

  11.  எங்கள் தலையின்மேல் உள்ள அபிஷேகத்தை இழந்து விடாதபடி காத்துக்கொள்ள கிருபை தாரும்

  12.  எங்கள் தலையின்மேல் உள்ள மகிமையின் கிரீடத்தை இழந்து விடாதபடி காத்துக் கொள்ள கிருபை தாரும்

  13.  எங்கள் தலையின்மேல் உள்ள மகிமையின் கிரீடத்தை வேறொருவன் எடுத்துக் கொள்ளாதபடி கிருபை தாரும்

  14.  நிந்திக்கிற நிந்தை எங்கள் தலையின்மேல் வராதபடி கிருபை தாரும்

  15.  எங்களுக்கு விரோதமாக ஏளனமாக ஒருவரும் தலையை துலுக்காதபடி கிருபை தாரும் (சங்: 44:14)

  16.  மனுஷர் எங்கள் தலையின்மேல் ஏறிப்போகாதபடி கிருபை தாரும் (சங்: 66:12)

  17.  தலையின்மேல் தோன்றும் தரிசனங்களால் கலங்கித் திகையாதபடி கிருபை தாரும் (தானி: 4:5)

  18.  தலையில் வரும் வியாதிகள் நீங்க என்னை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். இயேசுவின் இரத்தம் தலைமேல் ஊற்றப்படுவதாக. தலைவலி, தலைசுற்றல், தலை பாரம், மூளைக்காய்ச்சல், தலைசூடு, மூளைக்கட்டிகள், பொடுகு, தலைமுடி உதிர்தல், கொப்புளங்கள், கன்னக்கட்டிகள், இரத்தக் கொதிப்பு, நரம்புக் குழாய்கள், சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல்கள், ஞாபகமறதி, நினைவிழப்பு, குழப்பம் நீங்க இயேசுவின் நாமத்தினால் குணமுண்டாவதாக.

  19.  கர்த்தாவே உமது தீபம் என் தலையின்மேல் பிரகாசிக்கட்டும் (யோபு: 29:3)

  20.  என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணும் (சங்: 23:5)

  21.  என் தலையை உயர்த்துகிறேன்; மகிமையின் ராஜாவே உட்பிரவேசியும் (சங்: 24:7)

  22.  வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே தலைக்கு மூலைக்கல்லாயிற்று (சங்: 118:22)

  23.  கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம் (ஏசா: 35:10)

  24.  ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலை; ஸ்திரீக்கு புருஷன் தலை; கிறிஸ்துவுக்கு தேவன் தலை. (1கொரி: 11:3). சபைக்கு கிறிஸ்து தலை (எபே: 5:23). அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக ஒப்புக் கொடுக்கிறேன் (எபே: 4:15)

   b)   கண்:

  1.   கண்டும் காணாமலும் இருக்கிற கண்சாடை பாவம் நீங்கும்படி என்னை ஒப்புவிக்கிறேன்

  2.   பரிதானம் வாங்க எதிர்பார்க்கும் கண்களை, வாங்காதபடி ஒப்புவிக்கிறேன்

  3.   என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு: 31:1). காத்துக்கொள்ள கிருபை தாரும்

  4.   என் கண்கள் நேராய் நோக்கவும், என் கண்ணிமைகள் செவ்வையாய் பார்க்கவும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன் (நீதி: 4:25)

  5.   மேட்டிமையான கண்கள் என்னை விட்டு நீங்குவதாக (நீதி: 6:17)

  6.   கண்களின் இச்சை என்னை விட்டு நீங்கும்படி அர்ப்பணிக்கிறேன் (1யோவா: 2:16)

  7.   விபசார மயக்கம் நிறைந்த கண்களையும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையும் என்னை விட்டு நீங்கும்படி கெஞ்சுகிறேன் (2பேது: 2:14)

  8.   பாவங்களற சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண் சொருகிப்போன குருடனைப்போலிருக்கிற சுபாவத்தை என்னை விட்டு அகற்றிப்போட வேண்டுகிறேன் (2பேது: 1:9)

  9.   தெய்வ பயமற்ற கண்களை என்னை விட்டு அகற்றுகிறேன் (ரோம: 3:18)

  10.  சாத்தானுடைய அதிகாரத்தில் சிக்கிய கண்கள் மீட்கப்பட, திறக்கப்பட கிருபை தாரும் (அப்: 26:18)
  11.  நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும் (சங்: 13:3)

  12.  மாயையை பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் (சங்: 119:37)

  13.  கண்ணின் காட்சிகளில் நடவாதபடி என்னை காத்துக்கொள்ள கிருபை தாரும் (பிர: 11:9)

  14.  உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும் (சங்: 119:18)

  15.  உமது வசனத்தை தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக் கொள்ள உதவி செய்யும் (சங்: 119:148)

  16.  ஜெப நேரத்தில் தடையாக வரும் மிகுந்த நித்திரை மயக்கத்தை என்னை விட்டு அகற்றும் (மத்: 26:43)

  17.  கட்டளைகளையும் போதகத்தையும் கண்ணின்மணிபோல் காத்துக் கொள்ள கிருபை தாரும் (நீதி: 7:2)

  18.  இல்லாமற்போகும் பொருட்களின்மேல் கண்களை பறக்கவிடாதபடி கிருபை தாரும் (நீதி: 23:5)

  19.  கர்த்தருடைய வழிகளை என் கண்கள் நோக்கும்படி அர்ப்பணிக்கிறேன் (நீதி: 23:26)

  20.  கர்த்தர் வெளிப்படுத்துகிறதை என் கண்கள் காணாமலும் உணராமலும் இருப்பதை என்னை விட்டு அகற்றுகிறேன் (கலா: 3:1)

  21.  கர்த்தரை அறியாதபடி என் கண்கள் மறைக்கப்படாதபடி கிருபை தாரும் (லூக்: 24:16)

  22.  சமாதானத்துக்கு ஏற்றவைகளை அறியும் கண்கள் எனக்கு மறைவாயிருக்காதபடி கிருபை தாரும் (லூக்: 19:42)

  23.  வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாத தாழ்மையுள்ள கண்களை எனக்குத் தாரும் (லூக்: 18:13)

  24.  சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கத்தக்க தெளிவுள்ள கண்களைத் தாரும் (லூக்: 11:34)

  25.  என் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணருகின்ற கண்களை எனக்குத் தாரும் (லூக்: 6:42)

  26.  உமது இரட்சண்யத்தைக் காணும் கண்களை எனக்குத் தாரும் (லூக்: 2:32)

  27.  கண்களில் வருகிற வியாதிகளை குணமாக்கியருளும்: கண்வலி, கண்புரை, பூ விழுதல், நீர் வடிதல், கண்வீக்கம், பார்வைக் கோளாறு, கண்எரிச்சல், கண்கட்டி, கூச்சப்பார்வை, கண் மங்குதல், மாலைக்கண், கண் ஊறல், தூர, கிட்டப் பார்வை, இரத்த அழுத்தம், சர்க்கரை, பார்வையிழப்பு, மாறுகண், கண் நரம்பு கோளாறு, விழித்திரை கோளாறு, மெட்ராஸ் ஐ, கண் தொற்று நோய் போன்றவைகள் குண்மாக வேண்டுகிறேன்

  c)   செவி:

  1.   வீண் வார்த்தைகளுக்கு செவிகொடாதிருக்க கிருபை தாரும் (யாத்: 5:9)

  2.   நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரின் வார்த்தைக்கு செவிகொடாதே போனோம் என்கிற பாவத்தை கிருபையாய் மன்னித்தருளும் (தானி: 9:14)

  3.   என் போதகரின் சொல்லை கேளாமலும், உபதேசம் பண்ணினவர்களுக்கு செவி கொடாமலும் போகிற செவியை என்னை விட்டு அகற்ற கிருபை தாரும் (நீதி: 5:13)

  4.   முதுகை காட்டுவதும், உபதேசித்து சொன்ன புத்திமதிக்கு செவி கொடாமல் போனதையும் மன்னித்தருளும் (எரே: 32:33)

  5.   ஆலோசனைக்கு செவிக்கொடுக்கிறவனாக மாற்றும் (நீதி: 12:15)

  6.   அனுப்பப்பட்ட ஊழியக்காரனுக்கு கீழ்படியவும், செவியை சாய்த்து கீழ்படியவும், வழியை சீர்படுத்தவும் அர்ப்பணிக்கிறோம்  (எரே: 35:15)

  7.   கடிந்து கொள்ளுதலுக்கு செவிசாய்க்க கிருபை தாரும் (நீதி: 13:1)

  8.   அக்கிரம உதடுகளுக்கும் பொய்யான கேடுள்ள நாவுகளுக்கும் செவி கொடாதபடி என் செவியைக் காத்துக் கொள்ள கிருபை தாரும் (நீதி: 17:4)

  9.   அவதூறு, புறங்கூறுதல், நிந்தித்தல், தூஷணங்களை கேளாத செவியாக மாற கிருபைதாரும்

  10.  தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி, அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்த என் அக்கிரமத்தையும், தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடாமற்போனதையும் ஒத்துக் கொண்டு மன்னித்தருளும்படி மனதார வேண்டுகிறேன் (எரே: 3:13)

  11.  அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டாதபடிக்கு அவரின் சொல்லைக் கேளாமலும், பொல்லாப்பை விட்டு திரும்புவதற்கு செவியை கேளாமலும் இராதபடி செய்தருளும் (எரே: 44:5)

  12.  ஏழையின் கூக்குரலுக்கு செவியை அடைக்காதபடி கிருபை தாரும் (நீதி: 21:13)

  13.  வேதத்தை கேளாதபடி செவியை விலக்காதபடிக்கு கிருபை தாரும் (நீதி: 28:9)

  14.  அதிபதியானவனின் பொய்களுக்கு செவி கொடாதபடி காத்தருளும் (நீதி: 29:12)

  15.  மூடர் பலியிடுவதைப் பார்க்கிலும் செவி கொடுக்கச் சேர்வதே நலம் என்றறிய கிருபை தாரும் (பிர: 5:1)

  16.  கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவும், தேவனுடைய வேதத்துக்கு செவி கொடுக்கவும் கிருபை தாரும் (ஏசா: 1:10)

  17.  கர்த்தருடைய வசனத்தை நிந்தையாக கருதாதபடி, வசனத்தின்மேல் விருப்பமில்லாமல் போகாதபடி என் செவியை விருத்தசேதனம் பண்ண ஒப்புவிக்கிறேன் (எரே: 6:10)

  18.  இரத்தஞ் சிந்துவதற்கான யோசனைகளை கேளாதபடி, செவியை அடைத்துக் கொள்ள கிருபை தாரும் (ஏசா: 33:15)

  19.  துர் உபதேசங்களுக்கும், கள்ளத்தீர்க்கதரிசிகளின் சத்தத்திற்கும் செவி கொடாதபடி எங்களை காத்துக் கொள்ள கிருபை தாரும் (ஏசா: 36:18)

  20.  செவிகள் திறந்திருந்தும் கர்த்தரின் வார்த்தையை கேளாதே போகிற நிர்விசாரமான செவியை என்னிலிருந்து கிருபையாய் விலக்கியருளும் (ஏசா: 42:20)

  21.  எக்காள சத்தத்திற்கு செவி கொடுக்கிற செவிகளாக மாற்றியருளும் (எரே: 6:17)

  22.  குறிகாரருக்கும், சொப்பனக்காரருக்கும், நாட் பார்க்கிறவருக்கும், சூனியக்காரருக்கும், கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாதிருக்க அர்ப்பணிக்கிறேன் (எரே: 27:9)

  23.  மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவி கொடுக்க எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம் (மீகா: 6:9)

  24.  மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்திற்கும், வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போகாதபடிக்கு காத்துக் கொள்ளும் (1தீமோ: 4:1)

  25.  குற்றத்தை உணர்த்துகிற சகோதரனுக்கு செவிகொடுக்க கிருபை தாரும் (மத்: 18:15)

  26.  தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்கு செவி கொடுக்கிறான் (யோவா: 8:47)

  27.  தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்கு சித்தமானதை செய்கிறவனுக்கு அவர் செவி கொடுப்பார் (யோவா: 9:31)

  28.  நான் கர்த்தருடைய ஆடு; நான் அவரது சத்தத்துக்கு செவி கொடுப்பேன்; அவர் என்னை அறிந்திருக்கிறார்; நான் அவரின் பின் செல்லுவேன் (யோவா: 10:27)

  29.  தேவனுக்கு செவி கொடுப்பதைப்பார்க்கிலும் மனிதனுக்கு செவி கொடுப்பது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்காது என்பதினால் நான் மனிதனுக்கு செவி சாய்க்காதபடி என்னை காத்தருளம் (அப்: 4:19)

  30.  சத்தியத்திற்கு விலகி கட்டுக்கதைகளுக்கு விலகிப்போகாதபடி காத்தருளும் (2தீமோ: 4:4)

  31.  செவியில் வரும் வியாதிகள் நீங்க மன்றாடுகிறோம்: காது வலி, சீழ் வடிதல், செவிட்டுத் தன்மை, காதடைப்பு, செவி புண்கள், செவி கட்டிகள் போன்றவை குணமாக ஜெபிக்கிறோம்.

  d)   வாய்:

1.   ஆகாமிய உதடுகளை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 8:7)

2.   விவாதிக்கிற உதடுகளை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 18:6)

3.   பொய் பேசாதிருக்கிற வாயாக மாற்ற ஒப்புவிக்கிறேன் (சங்: 63:11)

4.   பரஸ்திரீகளின் வாயில் விழாதபடிக்கு என்னை தப்புவியும் (நீதி: 22:14)

5.   தற்புகழ்ச்சியை பேசாத வாயாக மாற்றும்படி ஒப்புவிக்கிறேன் (நீதி: 27:2)

6.   என் மாம்சத்தை பாவத்திற்குள்ளாக்க என் வாய்க்கு இடங்கொடாதிருக்க கிருபை தாரும் (பிர: 5:6)

7.   தீட்டும் அசுத்தமாயிருக்கிறதொன்றும் என் வாய்க்குள் போகாதபடி என் வாயை காத்துக் கொள்ள கிருபை தாரும் (அப்: 11:8)

8.   வாய்க்கு கடிவாளம் போட்டு முழு சரீரத்தையும் கர்த்தருக்குள் கட்டுப்படுத்த கிருபை தாரும் (யாக்: 3:3)

9.       இறுமாப்பானவைகளை பேசாதிருக்கவும், தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்யாதிருக்கவும் என் வாய்க்கு காவல் வைப்பீராக (யூதா: 1:16)

10.  சபித்தலும் கசப்பும் வாயிலிருந்து புறப்படாதிருக்க கிருபை தாரும் (ரோம: 3:14)

11.  வாய்ச்சாலகனாய் இராதபடி உதவி செய்யும் (யோபு: 11:2)

12.  பொல்லாப்பை வாய்க்குள்ளே பதனம்பண்ணி வைத்திராதபடி காப்பீராக (யோபு: 20:12,13)

13.  இயற்கையை தொழுதுகொள்ள என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்யாதிருக்க தேவ பயத்தை தாரும் (யோபு: 31:26,27)

14.  தீர்மானத்தை மீறாதிருக்கிற வாயை தாரும் (சங்: 17:3)

15.  என் வாய் கர்த்தரின் துதிகளைச் சொல்வதாக (சங்: 145:21)

16.  வாயில் வரும் நோய்களிலிருந்து விடுதலை தாரும்:  வாய்ப்புண், பல்வலி, வாய்புற்று, ஈறு வீக்கம், இரத்தம் வடிதல், வாய் நாற்றம், தொண்டை கட்டு, டான்சில் கட்டிகள், தைராய்டு பிரச்சினை, பற்கடிப்பு, சிறுநாக்கு வளருதல், வாய் குளறுதலிலிருந்து சுகம் தாரும்.

e) உதடு:

1. விருத்தசேதனமில்லாத உதடுகளை என்னை விட்டு விலக்குகிறேன் (யாத்: 6:12)
2. என் மனம் பதறி என் உதடுகளால் ஆணையிடாதபடி காத்தருளும் (லேவி: 5:4)
3. உதடுகளினால் செய்த பொருத்தனைகளை மீறாதபடி நிறைவேற்ற கிருபை தாரும் (எண்: 30:6)
4. உதடுகளினால் பாவஞ் செய்யாதபடிக்கு காத்தருளும் (யோபு: 2:10)
5. உதடுகளின் மாறுபாட்டை தூரப்படுத்துகிறேன் (நீதி: 4:24)
6. ஆகாமிய உதடுகளை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 8:7)
7. அசுத்த உதடுகளை என்னை விட்டு அகற்றுகிறேன் (ஏசா: 6:5)
8. பரியாச உதடுகளை என்னை விட்டு விலக்குகிறேன் (ஏசா: 28:11)
9. நியாயக்கேடுகளை என் உதடுகள் வசனிக்காதபடி என்னை விட்டு விலக்குகிறேன் (ஏசா: 59:3)
10. அநிநியாயத்தை என் உதடுகளை விட்டு விலக்குகிறேன் (மல்: 2:6)
11. தீமை சொல்லாதிருக்கிற உதடுகளை எனக்குத்தாரும் (யோபு: 27:3)
12. இச்சக உதடுகளால் இருமனதாய் பேசாதபடிக்கு உதவியருளும் (சங்: 12:2)
13. அந்நிய தேவர்களின் நாமங்களை என் உதடுகளால் உச்சரிக்காதபடிக்கு கிருபைதாரும் (சங்:16:4)
14. கபடமில்லாத உதடுகளால் விண்ணப்பிக்க உதவி செய்யும் (சங்: 17:1)
15. உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக கிருபை தாரும் (சங்: 17:4)
16. நீதிமானுக்கு விரோதமாய் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் என்னை விட்டு நீங்குவதாக (சங்: 31:18)
17. உமது புகழை அறிவிக்க என் உதடுகளை திறந்தருளும் (சங்: 51:15)
18. என் இக்கட்டில் நான் என் உதடுகளை திறந்து என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்கு செலுத்த கிருபை தாரும் (சங்: 66:14)
19. என் உடன்படிக்கையை மீறாமலும் என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருக்க கிருபை தாரும் (சங்: 89:34)
20. உதடுகளை விரிவாய் திறவாதபடிக்கு, என் உதடுகளின் வாசலை காத்துக் கொள்ளும் (நீதி: 13:3 ; சங்: 141:3)
21. செவ்வையானவைகளை பேசுகிற உதடுகளாக மாற கிருபை தாரும் (எரே: 17:16)
22. அறிவைக் காக்கவும், உத்தம காரியங்களை வசனிக்கவும் என் உதடுகளுக்கு உதவியருளும் (நீதி: 5:2 ; 8:6)
23. உதடுகளில் ஞானம் வெளிப்பட, உதடுகளை அடக்க உதவியருளும் (நீதி: 10:13 ; 19)
24. திவ்விய வாக்கு பிறக்கும் உதடுகளை தந்தருளும் (நீதி: 16:10)
25. அறிவைக்காக்கும் உதடுகளைத் தாரும் (மல்: 2:7)
26. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை எப்போதும் உமக்கு செலுத்த அர்ப்பணிக்கிறேன் (எபி: 13:15)
27. உதடுகளில் வரும் பெலவீனங்களை மாற்றும்: பனி வெடிப்பு, உதட்டு புண், கொப்புளங்கள், வீக்கம், எச்சில் புண் இவைகளை குணமாக்கும்

f) நாவு:

1. நாவிலுள்ள அக்கிரமம், பொல்லாப்பை என்னைவிட்டு அகற்றுகிறேன் (யோபு: 6:30; 20:12)
2. இச்சகம் பேசும் நாவை என்னை விட்டு விலக்குகிறேன் (சங்: 5:9)
3. நாவிலுள்ள தீவினையை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 10:7)
4. புறங்கூறும் நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 15:3)
5. மாறுபாடுள்ள நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 15:4)
6. கேடுள்ள நாவு, புரட்டு நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 17:4; 17:20)
7. மரணநாவின் அதிகாரத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 18:21)
8. முகஸ்துதி பேசுகிற நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 28:23)
9. வஞ்சனை நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (ரோம: 3:13)
10. பெருமை பேசும் நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (யாக்: 3:5)
11. சற்ப்பணையை பிணைக்கும் நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 50:19)
12. என் நாவு பாவஞ்செய்யாதபடிக்கு கடிவாளத்தினால் அடக்கி வைக்கிறேன் (சங்: 39:1)
13. கபடு செய்ய தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல உள்ள நாவை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 52:2)
14. இருநாக்கு என்னை விட்டு விலகுவதாக (1தீமோ: 3:8)
15. அநீதி நிறைந்த உலகமாக என் நாவு மாறிவிடாமலும், என் முழு சரீரத்தையும் கறைபடுத்திவிடாமலும், என் ஆயுள் சக்கரத்தை கொளுத்தி விடாமலும் இருக்க என் நாவை நான் கட்டுப்படுத்த எனக்கு தயவாய் கிருபை தாரும் (யாக்: 3:6)
16. என் நாவை கடிக்காதபடிக்கு காத்துக் கொள்ள கிருபைதாரும் (வெளி: 16:10)
17. நாவில் வரும் வியாதிகளை சுகமாக்கும்: புண், கொப்புளம், மந்தநாவு, தடித்தநாவு சுகம் தாரும்

g) கழுத்து:

1. வணங்கா கழுத்துள்ளவனாயிராதபடி காத்துக்கொள்ள கிருபை தாரும் (யாத்: 33:3)
2. விசுவாசியாமற்போகும் கடின கழுத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (2ராஜா: 17:14)
3. இறுமாப்புள்ள கழுத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 75:5)
4. கிருபையும் சத்தியத்தையும் கழுத்திலே பூட்டிக் கொள்ள அர்ப்பணிக்கிறேன் (நீதி: 3:3)
5. கழுத்திலுள்ள கட்டுகளை கட்டவிழ்கிறேன் (ஏசா: 52:2)
6. சுமக்ககூடாதிருந்த நுகத்தடியை பிறர்மேல் சுமத்தாதபடி கிருபை தாரும் (அப்: 15:10) 
7. கழுத்தில் வரும் பிரச்சினைகளை சுகமாக்கும்: கழுத்து வலி, கழுத்து கட்டி, கழுத்து சுளுக்கு, …

h) நெஞ்சு: 

1. நெஞ்சில் உள்ள மதியீனத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 22:15)
2. நெஞ்சில் கோபம் குடியேறாதபடி என்னைக் காத்துக் கொள்ள கிருபை தாரும் (பிர: 7:9)
3. கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சம் என்னை விட்டு விலகுவதாக (பிர: 7:26)
4. பெருமையான நெஞ்சின் வினையை என்னை விட்டு அகற்றுகிறேன் (ஏசா: 10:12)
5. புத்தியற்ற பெருநெஞ்சை என்னை விட்டு அகற்றுகிறேன் (யோபு: 11:12)
6. பிறனை இரகசியமாய் அவதூறு பண்ணுகிற பெருநெஞ்சை அகற்றுகிறேன் (சங்: 101:5)  
7. மேட்டிமையான பெருநெஞ்சை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 101:5)
8. நெஞ்சில் வரும் பெலவீனங்களை நீங்க வேண்டுகிறேன்: நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல், …

i) இருதயம்:

1. கடின இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (யாத்: 7:14)
2. மேட்டிமையான இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (உபா: 8:14)
3. இறுமாப்புள்ள இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 131:1)
4. கர்வமுள்ள இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (2ராஜா: 14:10)
5. மாறுபாடான இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 101:4)
6. கொடுமையை யோசிக்கும் இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 24:2)
7. துராலோசனையை பிணைக்கும் இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 6:18)
8. துணிகரமான இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (பிர: 8:11)
9. மிருக இருதயத்தை என்னைவிட்டு அகற்றிப்போடுகிறேன் (தானி: 4:16)
10. திருக்குள்ளதும் மகாகேடுள்ளதுமான இருதயத்தை என்னைவிட்டு அகற்றுகிறேன் (எரே: 17:9)
11. மூடத்தனமாய்பேசும் இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறேன் (ஏசா:32:26)
12. உணர்வற்ற இருதயத்தை என்னைவிட்டு அகற்றுகிறேன் (ரோம: 1:21)
13. சகோதரர்மேல் மேட்டிமை கொள்ளும் இருதயத்தை என்னைவிட்டு அகற்றுகிறேன் (உபா: 17:18)
14. கற்பனையைவிட்டு வலதுஇடது புறம் சாயாதிருக்கிற இருதயத்தை தந்தருளும் (உபா: 17:18)
15. வேசியின் வழியில் சாயாத இருதயத்தை எனக்குத் தாரும் (நீதி: 7:25)
16. பின்வாங்கிப்போகாத இருதயத்தை தந்தருளும் (உபா: 17:17)
17. ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயத்தை என்னைவிட்டு அகற்றுகிறேன் (எபி: 3:12)
18. வஞ்சிக்கப்படாத இருதயத்தை தந்தருளும் (உபா: 11:16)
19. நரகலான விக்கிரகங்களை என் இருதயம் பின்பற்றாதபடிக்கு ஒப்புக்கொடுக்கிறேன் (எசே: 20:15)
20. என் இருதயம் செல்வத்தினால் மேட்டிமையாகாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (எசே: 28:5)
21. என் அழகினால் என் இருதயம் மேட்டிமையாகாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (எசே: 28:17)
22. என் வளர்த்தியில் என் இருதயம் மேட்டிமையாகாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (எசே: 31:10)
23. காலத்தையும் நியாயத்தையும் அறிகிற இருதயத்தை தாரும் (பிர: 8:5)
24. பலவிதமான அந்நியபோதனைகளால் அலைப்புண்டு திரியாதிருக்கிற இருதயத்தை எனக்கு கிருபையாய் தந்தருளும். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினால் இருதயம் ஸ்திரப்பட உதவி செய்தருளும் (எபி:13:9)
25. சத்துருக்களை கண்டு துவளாமலும், பயப்படாமலும், கலங்காமலும் தத்தளிக்காமலும் இருக்கிற இருதயத்தை தாரும் (உபா: 20:3)
26. பலட்சயமான இருதயம் என்னைவிட்டு நீங்கக்கடவது (புல: 1:22)
27. என் இருதயமே என்னை குற்றவாளியாக தீர்க்காதபடிக்கு சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் (1யோவா: 3:21)
28. போதகத்தை மறவாமலும், கட்டளைகளை காக்கவும் தக்க இருதயத்தை தாரும் (நீதி: 3:1)
29. ஞான எழுப்புதல் அடையும் இருதயமாக மாற்றியருளும் (யாத்: 35:26)
30. அனல் உள்ள இருதயத்தைத் தாரும் (சங்: 39:3)
31. கொழுந்துவிட்டு எரிகிற இருதயத்தை உனக்குத்தாரும் (லூக்: 24:32)
32. என் இருதயம் நல் விசேஷத்தினால் பொங்கும்படி செய்தருளும் (சங்: 45:1)
33. உமது கற்பனைகளை கைக்கொள்ளும் இருதயமாக மாற்றியருளும் (உபா:5:29)
34. மனப்பூர்வமாய் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கிற இருதயத்தை தாரும் (நியா: 5:9)
35. பொருளாசையை சாராத இருதயத்தை எனக்குத் தந்தருளும் (சங்: 119:36)
36. என் இருதயம் நிணந்துன்னிக் கொழுக்காதபடிக்கு கிருபை தாரும் (சங்: 119:70)
37. உமது வசனத்திற்கு பயப்படுகிற இருதயத்தை எனக்குத் தாரும் (சங்: 119:161) 
38. கர்த்தருடைய வழிகளில் உற்சாகமடைகிற இருதயமாக மாற்றியருளும் (2நாளா: 17:6)
39. என் இருதயம் என் கண்களை பின்தொடராதபடி கிருபை தாரும் (யோபு: 31:7)
40. இருதயத்தில் வரும் வியாதிகளை குணமாக்கும்: இருதய வியாதி, மாரடைப்பு, இருதய விரிசல், இரத்த அழுத்தம், இருதய ஓட்டை, அதிவேகமான துடிப்பு, வால்வு பிரச்சினை, இருதய கோளாறுகளை குணமாக்கும்

j) கைகள்: 

1. அக்கிரம கைகளை என்னைவிட்டு அகற்றுகிறேன் (யோபு: 11:14)
2. என் கைகளிலுள்ள நியாக்கேடுகளை என்னைவிட்டு அகற்றிபோடுகிறேன் (சங்: 7:3)
3. தீவினையுள்ள கைகளையும், பரிதானம் நிறைந்த கைகளையும் என்னை விட்டு அகற்றுகிறேன் (சங்: 26:10)
4. கொடுமை என் கைகளில் இராதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (யோபு: 16:17)
5. கைகள் இரத்தத்தத்தாலும், விரல்கள் அக்கிரமத்தாலும் கறைபடாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (ஏசா: 59:3)
6. ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொள்ளாதபடி எனக்கு கிருபை தாரும் (யோபு: 31:7)
7. குற்றமில்லாமையிலே என் கைகளை கழுவ எனக்கு கிருபை தாரும் (சங்: 26:7)
8. திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டாதபடிக்கு கிருபை தாரும் (யோபு: 31:21)
9. என் சகோதரனுடைய இரத்தத்தை என் சிந்தாதபடிக்கு ஒப்புவிக்கிறேன் (ஆதி: 4:11)
10. இளைத்துப்போன என் கைகளை திடப்படுத்தும் (யோபு: 4:3)
11. பெலவானின் கைக்கும், வாயிலிருக்கும் பட்டயத்திற்கும் தப்புவியும் (யோபு: 5:15)
12. சத்துருக்களின் கைக்கும் என்னை துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னை தப்புவியும் (சங்: 31:15)
13. துன்மார்க்கனுடைய கைக்கும் நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் தப்புவியும் (சங்: 71:4)
14. முதிர்ந்த வயதில் என்னை தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் (சங்: 71:9)
15. எங்கள் கைகளின் கிரியைகளை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும் (சங்: 90:17)
16. என் கைகளின் பிரயாசத்தை நான் சாப்பிட கிருபை தாரும் (சங்: 128:2)
17. ஓசையுள்ள கைத்தாளங்களோடும், பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் உம்மை நான் துதிப்பேன் (சங்: 150:5)
18. குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை என்னை விட்டு அகற்றுகிறேன் (நீதி: 6:17)
19. வேத பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவனாக மாற்றும் (நீதி: 28:7)
20. சிறுமையானவர்களுக்கு கையை திறக்கவும், ஏழைகளுக்கு கரங்களை நீட்டவும் கிருபை தாரும் (நீதி: 31:20)
21. இடறல் உண்டாக்காத கைகளை தந்தருளும் (மத்: 18:8)
22. எங்ககைகளினாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்ய கிருபை தாரும் (அப்: 5:12)
23. என் கைகளை சுத்தகரிக்கிறேன் (யாக்: 4:8)
24. உம்முடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருக்க ஒப்புவிக்கிறேன் (1பேது: 5:6)

25. கைகளில் வரும் பிரச்சினைகளை குணமாக்கும்: 


k) கால்கள்: 

1. என் கால்கள் வழுவாதபடிக்கு கிருபை தாரும் (2சாமு: 22:37)
2. என் கால்கள் உமது நெறியை பின்பற்ற ஒப்புவிக்கிறேன் (யோபு: 23:11)
3. என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் தப்புவியும் (சங்: 73:2)
4. என் கால்கள் தீங்கு செய்ய ஓடாமலும், இரத்தஞ்சிந்த தீவிரிக்காமலும் காத்துக்கொள்ள கிருபை தாரும் (நீதி: 1:16)
5. என் கால்கள் என் வீட்டிலே தங்கி தரித்திருக்க கிருபை தாரும் (நீதி: 7:11)
6. என் கால்கள் சமாதான பாதையில் நடக்க கிருபை தாரும் (ஏசா: 41:3)
7. பொல்லாப்புக்கு என் கால்களை தப்புவியும் (ஏசா: 59:7)
8. மேய்ச்சல்களில் மீதியானதை கால்களால் குழப்பி விடாதபடிக்கு கிருபைதாரும் (எசே: 34:18)
9. கால் ஊனமானதை செலுத்தாதபடிக்கு கிருபைதாரும் (மல்: 1:3)
10. என் கால் எனக்கு இடறலாயிராதபடிக்கு கிருபை தாரும் (மாற்: 9:45)
11. சுவிசேஷகனுடைய பாதங்களை எனக்கு தந்தருளும் (ஏசா: 52:7)
12. கால்களில் வரும் பிரச்சினைகள் தீர உதவி செய்யும்: சேத்து புண், கால் வெடிப்பு, கால் சுளுக்கு, கால் ஆணி, குதிகால் வலி, முழங்கால் வலி, நகசுத்தி, பாத எரிச்சல், 

தானியேல் ஜெபம்


“என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணி, பாவ அறிக்கை செய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும், கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங்கள் பாஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம் பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே … சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற் போனோம். ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் … இந்நாட்களில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது. ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ் செய்தபடியால், நாங்களும் … எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். வெருக்கு விரோதமாக நாங்கள் கலகம் பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு எங்களுக்கு முன்பாக வைத்த நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற் போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. ஆண்டவரே உமது சர்வ நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமுமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும், எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம். இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப் பண்ணும். என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத்திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே”  (தானி: 9:4-10; 16-19).


வேதத்தில் உள்ள கடின சொற்களுக்கு விளக்கம்

Image result for difficult of the bible

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சில கடின சொற்களுக்கு பொருள் விளக்கம்

* அகத்தியம்   -   (எஸ்தர்:  4:8)   -   கட்டாயம், அவசியம்

* அகரதமான   -   (ஏசா 14:15)   -   ஆழமான

* அசங்கியம்   -   (எஸ்றா 9:11)    -   அருவருப்பு, தூய்மையின்மை

* அசம்பி   -   (1 சாமு 21:5)   -   பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு)

* அஸ்திராயுதம்   -   (எரே 50:25,51:20)   -   அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.

* அஞ்சிக்கை   -   (ஓசி 3:5)   -   அச்சம், பயம்

* அசூசம்   -   (புலம்பல்)   -   தீட்டு

* அசுப்பு   -  (யோபு 9:23, எரோ 4:20)   -   சடுதியாக, திடீரென வருதல்

* அபரஞ்சி பூஷணம்    -  (நீதி 25:12)   -   புடமிடப்பட்ட பொன்

* அழுங்கு   -  (லேவி 11:30)   -   எறும்பு தின்னும் ஒருவித விலங்கு

* அழிம்பு   -   (எரே 6:7)   -   கொள்ளையும், சூறையாடுதலும்

* ஆரோகணம்    -  (சங் 120-134)   -   இசையில் மேலேறும் ஓர் சுருதி

* இதமியம்   -   (நியா 18:20)   -   மகிழ்ச்சியோடு உடன்படுதல்

* ஈசல் போடுதல்   -    (எரேமியா: 25:9)   -   விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)

* இளக்கரிப்பு   -  (ஏசா 42:4)   -   சோர்ந்து போதல்

*  உக்கல்   -   (ஆப 3:16)   -   உறுத்துப் போதல்

* உசாவு துணை   -   (யோபு 26:3)   -   உற்ற துணைவன்

* உம்பிளிக்கை   -   (எஸ்றா 9:12)    -   மானியமாக கொடுக்கப்பட்ட பொருள். ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்)

* உறுமால்  -   (அப் 19:12)   -   கைக்குட்டை துணி

* ஒற்தலாம்  -   (மத் 23:23,லூக் 11:42)   -   ஒரு தானிய வகை. (புதினா)

* கடாட்சம்  -   (உன் 8:10)   -   அருட்பார்வை, கருணை பெறுதல்

* ஏகோபித்து   -   (நியா 20:1)   -   ஒருமித்து

* கட்டியக்காரன்  -   (தானி 3:4)   -   அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்

* கலாதி   -    (எஸ்றா 4:15)   -   கலகம், சண்டை, புரட்சி

* கலிக்கம்  -   (வெளி 3:18)   -   கண்ணிலிடும் மருந்து

* கிரியிருப்பவர்கள்   -   (2 இராஜா 14:14)   -   பிணைக் கைதிகள்

* கறளை    -  (எரே 48:6)   -   பிரயோஜனமில்லாத

* காங்கை   -  (ஏசா 25:5)   -  வெப்பம்

* காய்மகாரம்   -   (1சாமு 18:9)   -   பொறாமை

* கிரியாப்பிரமாணம்    -  (ரோம 3:27)  -   செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்.

* கிரித்தியங்கள்   -   (நியா 2:19)   -   தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்

* குருக்கு   -   (ஆதி 3:18)   -   நெருஞ்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்)

* குங்கிலியம்   -   (யாத் 30:34)   -   ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது)

* குலாரி வண்டில்  -  (ஏசா 66:20)  -   மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு

* கொறுக்கை   -   (ஏசா 19:6)   -   கோரைப்புல் / நாணல்

* கொடி மாசி   -  (யோபு 38:37)  -   நிலையற்று அலையும் மேகங்கள்

* கும்பு   -  (எசே 7:14)  -   ஜனக்கூட்டம்

* கொம்மை   -  (நெகே 3:1,11)  -  இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்.

* கோரி   -  (யோபு 21:32)  -   கல்லறை, சமாதி

* சாமாசி பண்ணும் தூதன்   -  (யோபு 33:23)  -  மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்

* சம்பாரம்   -  (எசே 24:10)   -  உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.

* சலக்கரணை  -   (2 இராஜா 4:13)   -   கரிசணையோடு

* சளுக்கு   -  (எரே 5:28)  -   நயமாக பேசுதல்

* சன்னது   -  (எஸ்றா 7:11)  -   ஆவணம், கடிதம், அரசாணை

* சர்ப்பனை  -   (அப் 25:3)  -   வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி

* சன்னதக்காரன்  -   (உபா 18:11)  -   பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்

* சுயம்பாகி   -  (ஆதி 40:1)  -  சமையற்காரன்

* சீதளம்  -   (ஆதி 8:22)  -   பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்

* சிரேஷ்டம்   -  (நாகூம் 3:8; எசேக்: 23:7  -  தலை சிறந்தது.

* சொகுசா   -  (எசே 1:4,8:2)  -  துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்.

* சுணை   -  (எரே 51:27)  -  கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு.

* தகசுத்தோல்   -  (யாத் 25:5,26:14)  -  கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு)

* தஸ்திர அறை  -  (எஸ் 6:1)  -  பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை

* தர்ப்பணம்  -  (யாத் 38:8  -   கண்ணாடி (வெண்கல கண்ணாடி)

* தாக்கீது -   (தானி 6:7,8,12)   - ஆணை.

 - Selected -

அக்டோபர் 26, 2015

பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான ஜெபம்

Image result for பரிட்சை எழுதும் மாணவர்கள்

பரிட்சைக்கு ஆயத்தப்படும்போது செய்ய வேண்டிய ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே,

நீர் மிகுந்த இரக்கமுள்ளவர் என்பதையும், உம்மைத்தேடி வருகிற எவரையும் நீர் புறம்பே தள்ளுவதில்லை (யோவா: 6:37) என்ற அருள் வாக்கையும் நம்பி உம்மிடம் வந்து மன்றாடுகிறேன். நான் எதிர்நோக்கியிருக்கும் பரிட்சைகளை குறித்த என்னுடைய கவலைகளையும், பயங்களையும் நீர் அறிந்திருக்கிறீர்.

எனவே, என் இருதயத்தையும், ஆத்துமாவையும் உம்முடைய தெய்வீகபிரசன்னத்தினால் நிரப்பி, என் வாழ்க்கையின் தேவனாய் இரும். தயவாக என் பெலவீனங்கள், கவனக்குறைவுகள், பயங்கள், பரபரப்புகள், தடைகள் யாவையும் எடுத்துப்போட்டு, பரிட்சைக்கு ஆயத்தப்படும் இந்த நாட்களில் முழுகவனத்தையும் என்னுடைய பாடங்களில் செலுத்தி, நேரத்தை வீணாக்காமல் படிக்க, “எனக்கு பயமுள்ள ஆவியை கொடாமல், பலமும், அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை கொடுத்து என்னை ஆசீர்வதியும்” (2தீமோ: 1:7).

 “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்: 32:8) என்றபடி, எந்த பாடத்தை எப்படி படிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுத்தாரும். என் பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு தெரியாத பகுதிகளை சொல்லித் தாரும்.

 “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூர்ணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக்: 1:5) என்ற வசனத்தின்படி தெய்வீக ஞானத்தையும், ஞாபக்தியையும் எனக்குத் தாரும். நான் படிப்பதெல்லாம் அப்படியே என் மனதில் தங்கவும், அவை பரிட்சை நேரத்தில் என் ஞாபகத்திற்கு வரவும், எனக்கு விசேஷித்த ஞாபகசக்தியைத் தாரும்.
 நீர் என் மன்றாட்டைக் கேட்டதற்காக நன்றி. இந்த ஜெபத்தை ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் ஏறெடுக்கிறேன் எங்கள் நல்லப்பிதாவே. ஆமென்!

பரிட்சை நாட்களில் செய்ய வேண்டிய ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே!

“ஜெபத்தைக் கேட்கிறவர்” என்ற நாமத்தை நீர் கொண்டிருப்பதால் உம்மிடத்தில் நம்பிக்கையோடு வருகிறேன் (சங்: 65:2). நான் இப்பொழுது எழுதப்போகும் பரிட்சைக்கு தேவையான ஞானம், ஞாபக சக்தி, ஆரோக்கியம், தைரியம்  நீர் எனக்கு அளித்து, உதவி செய்யும்படி மன்றாடுகிறேன். இந்த ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்று அனுபவிக்க தடையாக உள்ள என் பாவங்கள் யாவையும் உம் இரத்தத்தால் கழுவி, என்னை தூய்மைப்படுத்தும். என்னை உம் பிள்ளையாக மாற்றியிருக்கிறபடியால் உமக்கு நன்றி.

 “என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” என்ற உமது வாக்குப்படி, உம்பிரசன்னத்தால் என்னை நிரப்பும். என்னோடு வாரும்.

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா: 41:10) என்று எழுதியிருக்கிறபடியே, இன்று நான் தேர்வு எழுதப்போகும் அறையில் உம் பிரசன்னத்தை அதிகமாக உணர, எனக்கு உம் அருள் தாரும். உம் வார்த்தையின்படியே, என் கரத்தை உம் வலதுகரத்தினால் தாங்கும். அப்பொழுது என்னால் முழு நிச்சயத்துடன் என் பரிட்சைகளை எழுதமுடியும். எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கவும், ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த பதிலை அதுவும் கொடுக்கப்படுகிற நேரத்திற்குள் முழுமையாக எழுதி முடிக்கவும் உதவி செய்யும்.

 என் தேர்வையும், அதின் முடிவுகளையும் உம்முடைய வல்லமையுள்ள கரங்களில் ஒப்படைக்கிறேன். “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதி: 21:31) என்ற வாக்கின்படி, எனக்கு ஜெயம் தாரும். இப்பொழுதும் என் ஜெபத்தைக் கேட்கிறதற்காக நன்றி.

இந்த விண்ணப்பங்களையெல்லாம், எனக்கு ஜெயம் கொடுக்கப்போகிற ஜெயக்கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கிறேன் எங்கள் நல்லப்பிதாவே. ஆமென்.


அக்டோபர் 16, 2015

ஆத்துமாக்கள் சபையில் நிலைநிற்க

Image result for soul winning

ஆத்துமாக்கள் சபையில் நிலைநிற்க

“நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்” (கொலோ: 4:12)

(ஒவ்வொரு சபைப் போதகப்பிதாக்களும், சபைமக்களும் இவ்வேதவசனத்தை அறிக்கையிட்டு ஜெபிக்கும்படி அன்பாய் கேட்கிறேன்)

1.   “இஸ்ரவேலை சிதறடித்தவர் அதைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக்காப்பார்” (எரே: 31:10)

2.   “பாபிலோன் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்” (எரே: 50:8)

3.   “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி, அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும், தேசங்களிலிருந்து சேரவும் பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல்மலைகளின் மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன். அவைகளை நல்லமேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக் கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எசேக்: 34:11-15)

4.   “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ண வேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனுஷரைப் பெருகப் பண்ணுவேன்” (எசேக்: 36:37)

5.   “யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க்கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும். தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா: 2:12,13)

6.   “கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக” (மீகா: 7:14)

7.   “யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை” (2நாளா: 34:33)

8.   “எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும், கலகமாகவும் பேசினோம்; கள்ள வார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்” (ஏசா: 59:12,13)

9.   “கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியி னாலே, கொஞ்சக்கால மாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்” (லூக்: 8:13)

10. “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர் களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” (எபி: 10:38,39)

11. “தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகித் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும், புத்தியும் உள்ளவர்ளெல்லாரும், தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு, தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின்படி நடந்து கொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும், சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும், தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும் … ஆணையிட்டு பிரமாணம் பண்ணினார்கள்” (நெகே: 10:28-31)

12. “தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னை விட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்;” (2தீமோ: 4:10)

13. “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான்” (நீதி: 18:1)

14. “அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள்; ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களா யிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார் களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்” (1யோவா: 2:19)

15.   “கடைசிகாலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே” (யூதா: 18,19)

16. “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்;உம்முடைய வசனமே சத்தியம்” (யோவா: 17:17)

17. “பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொள்ளும். நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களைக் காத்துக் கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களை காத்துக் கொண்டு வந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை” (யோவா: 17:11-12)

18. “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவா: 17:15)

19. “ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், … நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்” (யோவா: 17:23,24)

20. “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்” (யோவா: 17:26)

21. “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; … ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; … நீங்கள் என் அன்பிலே நிலைத்திருங்கள்” (யோவா: 15:4,6,9)

22. “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுப்பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத்: 10:22)
23. “நீங்கள் என் உபதேசத்திலே நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” (யோவா: 8:31)

24. “பர்னபா … தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில்  மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்” (அப்: 11:23)

25. “சீஷருடைய மனதை திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்” (அப்: 14:22)

26. “ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய். அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே ” (ரோம: 11:22,23)

27. “அவனவன் தான்அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்” (1கொரி:7:20)

28. “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள்” (1கொரி: 16:13)

29. “நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்” (கொலோ: 1:22)

30. “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு” (1தீமோ: 4:15)

31. “உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ள வளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்” (1தீமோ:5:5)

32. “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2தீமோ: 1:5)

33. “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக் கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிரு ந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்”  (யாக்: 1:25)

34. “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்” (1யோவா: 2:6)

35. “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவா: 2:17)

36. “அவருடைய கட்டளைகளை கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்” (1யோவா: 3:24)

37. “எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும்செய்யுங்கள்”(பிலி:2:16)

38. “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே” (உ.பா:1:15)


39. “என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக் கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு” (எரே: 6:26)