டிசம்பர் 06, 2017

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி ... பகுதி - 2

Image result for இயேசு தான் கடவுள்

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி ...
(பகுதி - 2)

உபாகமம்: 6:4-9 - "இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக."

வெளிச்சத்தில் இருக்கும் நம்மை இருளுக்குள் இழுக்க, நமது தேவனைக்குறித்தும், நமது பரிசுத்த வேதாகமத்தைக்குறித்தும் சந்தேகங்களை எழுப்புவார்கள். நாமோ சத்தியத்தை அறிகிற அறிவில் வளர்ந்து சத்தியத்தில் ஸ்திரமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம் தேவனைக் குறித்து அறிகிற அறிவில் வளர வேண்டும். நம்மைச் சார்ந்திருப்போரையும் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரச் செய்து விட்டால் இருளில் இருப்போர் வெளிச்சத்தின் பிள்ளைகளை அணுகும்போது தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

இயேசு, தான் ஒரு "கடவுள் " என்பதை நிரூபிக்கும் வேத வசனங்களும், விளக்கங்களும்:


யோவான் 13:14  - “ஆண்டவரும் போதகருமாகிய நானே”

 
1. யாருடையபெயரில் க்கள் அனைவரும்
தொழுதுகொள்ளகூடி ருகிறார்கள்? ...   இயேசுவின் பெயரில்

இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" மத்தேயு 18:20

2.
தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய
பிரசன்னம் அங்கு இருக்கும்? ...    இயேசுவின்

இயேசு கூறினார்: “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…” அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்." மத்தேயு 18:20

3.
தூதர்களை அனுப்புவது யார்? ... இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; … மத்தேயு 13:41

இயேசு கூறினார்: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு
புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்மத்தேயு 24:30 ,31

4.
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? ... இயேசுவிற்கு

இயேசு கூறினார்: வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மத்தேயு 24:31

5.
இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல்
யாருடைய பிரசன்னம் இருக்கும்? ... இயேசுவின்

இயேசு கூறினார்: … இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்... மத்தேயு 28:20

6.
சொர்க்கத்தில் இருப்பவர் யார், அங்கிலிருந்து வருபவரும் யார்? ...   இயேசு

இயேசு கூறினார்: பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான
மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13

7.
சொர்க்கத்தில் இருப்பவர் யார்? ...    இயேசு

இயேசு கூறினார்:   நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; …. யோவான் 6:51

இயேசு கூறினார்:   நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. : யோவான் 8:23

இயேசு கூறினார்: நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு
உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன். யோவான் 16:28

8.
நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? ...   இயேசுவிடம்

இயேசு கூறினார்: …மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15

இயேசு கூறினார்: நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை,….. யோவான் 10:28

9.
யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? ... இயேசு மூலமாக

இயேசு கூறினார்: நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், … யோவான் 10:9

10.
நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? ...  இயேசு

இயேசு கூறினார்: இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35

11.
கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு
எழுப்புவார்கள்? ... இயேசு

இயேசு கூறினார்: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், … கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். யோவான் 6:40-44

12.
நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: ஜீவ அப்பம் நானே. யோவான் 6:48

13.
யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை ? ... இயேசுவின்

இயேசு கூறினார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 13:31

14.
நித்திய வாழ்வை தருபவர் யார் ? ... இயேசு

இயேசு கூறினார்: என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோவான் 6:57

இயேசு கூறினார்: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்யோவான் 8:51

15.
நித்திய ஜீவன் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நானேஜீவனுமாயிருக்கிறேன்; யோவான் 14:6

16.
நாம் அவரது பணிக்காகநம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? ... இயேசு

இயேசு கூறினார்: என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். மத்தேயு 10:39

17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? ... இயேசுவிடம்

இயேசு கூறினார்: தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37

18.
யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? ... இயேசுவிடம்

இயேசு கூறினார்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் யோவான் 7:38

19.
உலகத்தில் ஒளி யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். யோவான் 9:5 , 8:12

20.
பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:34, 36

21.
பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? ... இயேசுவிற்கு

இயேசு கூறினார்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டும். மத்தேயு 9:6

22.
நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:58

23.
உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; யோவான் 11:25

24.
ஆண்டவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13

25.
நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில், யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? ... இயேசு

இயேசு கூறினார்: …ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். யோவான் 14:2

26.
யார் க்களுக்கு ழியாகஇருக்கிறார்? ... இயேசு

இயேசு கூறினார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

27.
யார் உண்மையாகஇருக்கிறார்? ... இயேசு

இயேசு கூறினார்: நானேசத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

28.
ல்லனிகளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நான் மெய்யான திராட்சச்செடி, …. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனி கொடுக்கமாட்டீர்கள்யோவான் 15:1-4

29.
யாருடையதுணையில்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? ... இயேசுவின்

இயேசு கூறினார்: … என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5

30.
மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17, 18

31. யார் மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர்? ... இயேசு

இயேசு கூறினார்: …. நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்….. வெளி 2:23

32.
மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனைதருபவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: …… அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்வெளி 2:23

33.
மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: …. அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்மத்தேயு 26:63,64

34.
ஓய்வு நாளின் ஆண்டர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார். மத்தேயு 12:8

35.
உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது …. மத்தேயு 19:28

36.
தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்.
மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, மத்தேயு 25:31,32

இயேசு கூறினார்: ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:36

இயேசு கூறினார்: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல
எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான் 5:22,23

இயேசு கூறினார்: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்யோவான் 10:30

பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:8 ,9

மனித வடிவில் வந்த இறைவன் தான், "இயேசு" என்று ஏன் கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்?

இந்த கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் புதிதாக கண்டு பிடிக்கவில்லை. இயேசு தானே "இறைவன்" என்பதை பலமுறை சொல்லியுள்ளார்

  யோவான். 10:30 - ல் இயேசு சொல்வதைக் கவனியுங்கள். “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். இது இயேசு தம்மை கடவுள் என்று சொன்னார் என்பது போல காணப்படாமல் இருக்கிறது. ஆனால் இந்த வாக்கியத்திற்கு யூதர்களின் பிரதிபலிப்பைப் பாருங்கள், நற்கிரியைகளினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறதினாலேயே உன்மேல் கல்லெறிகிறோம்”.

யூதர்கள் இயேசு தன்னை கடவுளென்று சொல்வதாக உணர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து வருகிற அந்த வசனங்களில் இயேசுகிறிஸ்து, நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லவுமில்லை. 

ஆகவே நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதின் மூலமாக, தான் கடவுளென்பதை இயேசுகிறிஸ்து அறிவுறுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

யோவான். 8:58 - ல் இன்னுமொரு உதாரணத்தைப் பார்க்கிறோம். மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்கு சொல்லுகிறேன். ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்றார். இந்த இடத்திலும் யூதர்கள் இயேசுவின் மேல் கல்லெறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் கல்லெறிய முயற்சி செய்தார்கள்.

யோவான்: 1:1 சொல்கிறது. “அந்த வார்த்தை தேவனாயிருந்தது”. யோவான். 1:14 ல் “அந்த வார்த்தை மாம்சமானார்” என்று குறிப்பிடுகிறது. இவைகள் இயேசுவே மாம்சத்தில் வெளிப்பட்ட கடவுள் என்பதைக் குறிப்பிடுகிறது. 

அப்போஸ்தலர்:  20:28 ல் தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்து கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு என்று எழுதுகிறார். 

சொந்த இரத்தத்தினாலே சபையை யார் விலைக்கிரயமாக வாங்கினார்? 

“இயேசுகிறிஸ்து”. அப். 20:28 ல் தேவன் வாங்கினாரென்று அறிக்கையிடுகிறது. “ஆகவே இயேசுவே கடவுள்”.

இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா “என் ஆண்டவரே! என் தேவனே” என்று யோவான்: 20:28 சொல்லுகிறதைப் பார்க்கிறோம். இயேசுகிறிஸ்து அந்த வார்த்தையை திருத்தவில்லை. 

(தீத்து 2:13) நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து வருவதற்கு காத்திருங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்துகிறது (II பேதுரு 1:1). 

எபிரேயர். 1:8ல் பிதாவாகிய தேவன், இயேசுவைக் குறித்து: “தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உம்முடைய இராஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது” என்று சொல்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலனாகிய யோவானை நோக்கி, தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக என்று தேவதூதன் சொல்வதாக பார்க்கிறோம். பரிசுத்த வேதாகமத்தின் பல பகுதிகளில் இயேசுகிறிஸ்து ஆராதிக்கப்படுவதைப் பார்க்கிறோம் (மத். 2:11, 14:33, 28:9, 28:17), லூக். 24:52, யோ. 9:38). அவரை ஆராதித்ததற்காக ஒருவரையும் இயேசு கடிந்துகொள்ளவில்லை. அவர் தேவனாக இல்லாமல் இருப்பாரேயானால், தன்னை ஆராதிக்கக் கூடாதென்று ஜனங்களுக்கு சொல்லியிருப்பார். இவைகள் மட்டுமன்றி, இயேசுவின் தேவத்துவத்தைக் குறித்து, பல வேத வசனங்கள் குறிப்பிடுகிறது.

மிக முக்கியமான காரணமென்னவெனில், இயேசு தெய்வமாக இல்லாவிட்டால், அவர் தெய்வமென்று சொல்லப்படாவிட்டால், அவரது மரணம் முழு உலகத்தின் பாவத்திற்கும், விலைக் கிரயமாக செலுத்தப்பட்டிருக்க முடியாது (I யோ. 2:2). தேவன் மாத்திரமே, இப்படிப்பட்ட நித்திய விலைக்கிரயத்தை செலுத்த முடியும். தேவன் மாத்திரமே உலகத்தின் பாவத்தை சுமந்து (II கொரி. 5:21) மரித்து உயிரோடெழும்ப முடியும். அவர் பாவத்திற்குமேல், மரணத்திற்கு மேல் வெற்றி சிறந்து, தேவனாக நிருபித்தார்.

►இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு மனுகுலத்தின் இரட்சகராகத்தான் வந்தார்.தன்னுடைய தெய்வத்துவத்தை பல இடங்களில் வெளிக்காட்டியுள்ளார்

►இயேசு கிறிஸ்து ஒரேபேறான குமாரன்(3:16)

►இயேசு கிறிஸ்துவிற்க்கு ஜீவனை கொடுக்கவும் எடுக்கவும் அதிகாரம் கொடுக்கபட்டுள்ளது(யோவான் 5:19_23)

►இயேசு கிறிஸ்து என்னை கண்டவன் பிதாவை கண்டான்(யோவான் 14:9)

►ஆபிராகாமிற்க்கு முன்பே இருக்கிறேன் (யோவான் 8:58)

►இயேசு கிறிஸ்து இறுதி நாளின் நியாதிபதியாக இருக்கிறார் (மத்தேயு 25)

►வானத்தில் இருந்து வந்தார்(யோவான் 6:38)

►உலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தேன் (யோவான் 17:5)

►தேவாலயத்திலும் பெரியவர் (மத்தேயு 24:1)


யோவான் : 10:32,33 - "... நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் ..."


தொடரும் ...