இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி … பகுதி
– 3
ஏசாயா: 9:2 – “இருளில் நடக்கிற
ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில்
குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது”.
இருளில் வாழும் கூட்டத்தில் இருவகை
உண்டு. 1. அறியாமலே இருளில் இருப்போர் 2. அறிந்தும் இருளில் இருப்போர்
1. அறியாமலே
இருளில் இருப்போர்:
1.
இந்துக்கள் 2. முஸ்லீம்கள் 3.
நாஸ்திகர்கள் 4. புத்த மத மற்றும் ஜைன மதத்தினர் 5. சீக்கியர் 6. பார்சி இனத்தவர்
2. அறிந்தும்
இருளில் இருப்போர்:
1.
கத்தோலிக்கர்கள் 2.யெகோவா விட்னஸ் 3.
துர் உபதேசிகள் 4. கள்ளத்தீர்க்கதரிசிகள் 5. பின்மாற்றக்காரர் 6. யூதர்கள்
இருளில் நடக்கிற ஜனங்கள் என்றும், மரண
இருளில் குடியிருக்கிறவர்கள் என்றும் வேதம் இவ்விரு கூட்டத்தைக் குறித்து
கூறுகிறது. ஆனால், ஒரு நல்ல செய்தி என்னவென்றால் … இவ்விரு கூட்டத்திற்கும் தேவன் வெளிச்சத்தை
பிரகாசிக்கப் பண்ணுகிறார். எப்படியாகிலும் இவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக
இவர்கள்மேல் வெளிச்சத்தை பிரகாசிக்கப் பண்ணுகிறார். அவர்கள் அந்த வெளிச்சத்தை
விசுவாசித்துப் பின்பற்றி வருவார்களானால் … மெய்யாகவே இரட்சிப்பையும் மீட்பையும்
பெறுவார்கள்.
அதற்கு அவர்களுக்கு வெளிச்சத்தைக்
காண்பிக்கக்கூடிய மனிதர்கள் தேவனுக்குத் தேவை. சத்தியத்தை அறிந்த தேவனுடைய
பிள்ளைகள் சுவிசேஷத்தின் ஒளியை அவ்விருகூட்டத்திற்கும் கொண்டு செல்ல முன்வர
வேண்டும். அதற்கு முதலில் நாம் சத்தியத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். அதோடுகூட,
அவ்விரு கூட்டத்தின் நம்பிக்கைகளையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் நன்கு
அறிந்திருத்தல் அவசியம்.
அதனோடு நமது பரிசுத்த வேதத்திலிருந்து எவ்வளவு
தூரமாயிருக்கிறது? எவ்வளவு வித்தியாசப்படுகிறது? எவ்வளவு உண்மைக்கு தூரமாக
விலகியிருக்கிறது? மெய் தெய்வத்தையும், பரலோக பாக்கியத்தையும், பரிசுத்த
வாழ்வையும் விட்டு விலகியிருக்கும் வித்தியாசத்தையும், அதனால் ஏற்படும்
விளைகளையும் நாம் முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். இவைகளில் பரிசுத்த
வேதாகமம் எவ்வளவு மேன்மையானது, உயர்ந்தது, விலையேறப்பெற்றது என்பதை நாம் முதலில்
ருசித்திருக்க வேண்டும்.
மாற்றுக் கருத்துடையோருக்கு
விளக்கமளிப்பதற்கு முன்பு, நாம் நமது சத்திய வேதத்தின் மகத்துவங்களையும், அதன்
உண்மைத்தன்மையையும், சத்தியத்தின் ஆழங்களையும், அடிப்படை அஸ்திபார உபதேசத்தில்
ஸ்திரத்தன்மையோடும், மூலஉபதேசங்களையும் இடறலின்றி கற்றறிந்திருக்க வேண்டும்.
அனுதின வேதவாசிப்பும், ஜெபவாழ்வும், விசுவாச வாழ்வும், பக்தி வைராக்கியமும்,
பரிசுத்தமும், சாட்சி நிறைந்த வாழ்வும் நம்மில் காக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், சபை சரித்திரமும், வேதாகம
சரித்திரமும், வேதாகம பின்னணியும், ஓரளவுக்கு தெரிந்தவர்களாக தகுதிப்படுத்திக்
கொள்ள வேண்டும். அதற்கான ஆவிக்குரிய நூல்கள், சரித்திர புத்தகங்கள்
சேகரிக்கப்படவும், அதை வாசித்து தக்க சமயத்தில் எடுத்துரைக்கவும் ஆயத்தமாயிருக்க
வேண்டும்.
தீத்து: 1:9 – “ஆரோக்கியமான உபதேசத்தினாலே
புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான்
போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக் கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்”
2தீமோத்தேயு:
4:2 – “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு;
எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு”
இருளிலிருப்போர்
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களை தவறாக ஒப்பிட்டு இடறலை விசுவாசிகள் முன்பாக வைப்பார்கள்.
அதற்குரிய பதிலும் சத்தியத்தையும் நாமும் நமது விசுவாசிகளும் அறிந்திராவிட்டால் நாமும்
இடறிப் போக நேரிடும்.
இருளில் இருப்போர் நமக்கு
முன் வைக்கும் இடறல்களில் ஒன்று:
உபாகமம்: 18:15 – “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்
போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச்
செவிகொடுப்பீர்களாக.”
- என்கிற வசனத்திலிருந்து சொல்லப்பட்ட அந்த தீர்க்கதரிசி முகமதுநபி தான் என்றும் வலியுறுத்துவார்கள்.
- என்கிற வசனத்திலிருந்து சொல்லப்பட்ட அந்த தீர்க்கதரிசி முகமதுநபி தான் என்றும் வலியுறுத்துவார்கள்.
இந்த உபாகமம்: 18:15 ஆம் வசனம் யாருக்கு யாரால் கொடுக்கப்பட்டது?
அல்லது சொல்லப்பட்டது? உரைக்கப்பட்டது? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவனாகிய கர்த்தரால், மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட
தேவனுடைய வார்த்தை.
இஸ்ரவேல் ஜனம் என்று சொல்லும்போது யாக்கோபின் பிள்ளைகளான 12 பேரைக்
குறிக்கும். 12 பேரும் கோத்திரப் பிதாக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களின் சந்ததியைத்தான்
“இஸ்ரவேல்” என்றும், “இஸ்ரவேல் ஜனம்” என்றும் வேதம் குறிப்பிடுகிறது.
12 கோத்திரங்கள்:
1.
ரூபன்
2. சிமியோன் 3. யூதா 4. செபுலோன் 5. இசக்கார் 6. தாண் 7. காத் 8. ஆசேர் 9. நப்தலி
10. எப்பிராயீம் 11. மனாசே 12. பென்யமீன்
இப்படியிருக்க
…
மோசே
சொன்ன வார்த்தையின்படி பார்ப்போமானால் … “என்னைப்
போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக
உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்;” – என்று சொல்வதை கவனியுங்கள். இதன்
பொருள் என்ன?
12 கோத்திரத்தாரைத்தான் யூதர்கள் என்கிறோம். மோசே ஒரு லேவிக் கோத்திரத்தைச்
சேர்ந்தவன். ஒரு யூதன். (யாத்திராகமம்: 2:1). எனவே, அவனைப்போல மோசேயைப் போல ஒரு தீர்க்கத்தரிசியை
எழும்பப் பண்ணுவார். யாருக்காக? “உனக்காக”. அதாவது, இஸ்ரவேல் ஜனத்திற்காக. வேறு எந்த
இன மக்களுக்காகவும் அல்ல. யார் நடுவே எழும்பப் பண்ணுவார்? “உன் சகோதரரிலிருந்து”. அதாவது,
இஸ்ரவேலின் சகோதரர்கள் யார்? 12 கோத்திரர்களே. அப்படியானால், அந்த 12 கோத்திரங்களின்
சந்ததியிலிருந்து, “என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக
உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்;” என்பதுதான் இதன் பொருள்.
உலகில் உள்ள வேறு ஜனத்திலிருந்தோ, இனத்திலிருந்தோ, வேறு மார்க்கத்திலிருந்தோ
அல்ல. யூதர்கள் தங்கள் சகோதரர்கள் எனக் குறிப்பிடுவதும் ஏற்றுக் கொள்வதும் தங்கள்
12 கோத்திரங்களைச் சார்ந்தவர்களைத்தான். வேறு யாரையும் அவர்கள் ஏற்பதில்லை.
காரியம் இப்படியாயிருக்க …
இருளில் இருக்கும் இஸ்லாமியர், சத்தியமறியாத அப்பாவி விசுவாசிகளையும்,
வேதமறியாத விளையாட்டுப்பிள்ளைகளான வாலிபர்களையும், வாலிபப்பிள்ளைகளையும் வஞ்சிக்கும்படியான
இடறல்களை இவ்விதமாக கூறி வஞ்சிப்பதை நாம் கேள்விப்படுகிறோம். அதற்காக ஜெபித்தால் மட்டும்
போதாது. போதிக்கப்படவும் கற்பிக்கவும் வேண்டும்.
இந்த முகமதுநபி யார்? ஒரு யூதனா? இல்லை இஸ்ரவேலனா? அல்லது 12 கோத்திரங்களில்
ஒருவனா? கானான் நாட்டைச் சார்ந்தவரா? இதில் எதுவும் இல்லை. அரபு தேசத்தில் கி.பி.
620 ல் பிறந்த ஒரு அரேபியன். புறஜாதியான். அவரது கடவுள் எது? அல்லா என்கிறார். அப்படியிருக்க,
கர்த்தர் யூதனாகிய மோசே மூலம் பன்னிரு கோத்திரங்களுக்கும் சொன்ன ஒரு வார்த்தையை, தனக்குரியதாக்கிக்
கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்ன?
பிறப்பிலும், இனத்திலும், மார்க்கத்திலும் எவ்வித சம்பந்தமும் இல்லாத
முகமது நபி எப்படி இந்த வசனத்தை தனக்குரியதாக்கி பேசுகிறார்? இதிலிருந்தே நாம் அறிந்து
கொள்ளலாம் - இவன் ஒரு மோசடிக்காரன் என்று. தனக்குரிமையில்லாததை தனக்குரியது என்று சொல்கிறவன்
வேறு யாராக இருக்க முடியும்?!
பைபிளை மாற்றி திருத்தி
எழுதிக் கொடுத்தவன் அல்லா எனக்கூறும் முகமது நபி … அல்லா எழுதாத பைபிள் வாசகத்தில்
உள்ள வசனத்தில் உள்ள தீர்க்கதரிசி தான்தான் என சொல்லி திரிவதின் இரகசியம் என்ன? எதன்
அடிப்படையில் இதைக் கூறுகிறார்? இதற்கு ஆதாரம் என்ன?
பைபிள் தவறு என்று சொல்லுகிற முகமது, இந்த வசனம் சரி என ஒத்துக்
கொள்கிறாரா? இந்த வசனம் சரி என்று ஒத்துக்கொண்டால் … வசனத்தின்படி “கர்த்தர்” தான்
தெய்வம். அல்லா தெய்வம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறாரா? தான் ஒரு யூதன் இல்லையென்றும்,
தன்னைக் குறித்து இந்த வசனம் சொல்லப்படவில்லையென்றும் முகமது நபியும், அவரது கொள்கையாளர்களும்
ஒத்துக் கொள்கின்றனரா?
இந்த வசனம் சரி என்றால், இதற்கான விளக்கமும் சரி என்றால் தான் ஒரு
மோசடிக்காரன் என்பதை ஒப்புக் கொள்கிறாரா? கேள்விகள் நிறைய உண்டு. பதில்தான் அவர்களிடத்தில்
இல்லை.
இதைவிடக் கொடுமை இன்னொன்று இருக்கிறது. அது என்னவென்றால் …
இருளில் இருப்போர் நமக்கு
முன் வைக்கும் இடறல்களில் இரண்டாவது:
முகமது
நபியை இருளில் இருக்கும் இன்றைய இஸ்லாமியர்கள், பரிசுத்தாவிக்கு இணையாக ஒப்பிடுவது
கொடுமையிலும் கொடுமை. அபத்தத்திலும் அபத்தம். அவர்கள் பரிசுத்த தெய்வத்தையும் அறியவில்லை.
பரிசுத்த ஆவியையும் அறியவில்லை என்பதற்கு இதைவிடச் சான்று வேறில்லை.
இதிலிருந்து
என்ன தெரிகிறது என்றால் …
வேதாகமத்தை
இழிவுபடுத்த வேண்டுமென்று முடிவெடுத்த பின்னர் எந்த வசனத்தை எந்த அசுத்தமானதோடு ஒப்பிட்டால்
என்ன?! என்ற முடிவிற்கு வந்த விட்டதால்தான். பரிசுத்த வேதாகமத்தை பொய்யானதாகவும், மாற்றப்பட்டதாகவும்
கூறினால்தான் குரானை அவர்களால் வளர்க்க முடியும் என்கிற நிலைப்பாடு அவர்களுடையது. அவர்களுக்கு
வேறு வழியில்லை. நமக்கு அப்படியில்லை.
திருத்தப்பட்டது
… திருத்தப்பட்டது என்று திரும்ப திரும்ப சொல்கிற இவர்கள் கூற்றை நன்கு கவனியுங்கள்.
பைபிளிலிருந்து திருத்தி எழுதப்பட்டது குரானா? குரானிலிருந்து திருத்தி எழுதப்பட்டது
பைபிளா? என்று அவர்கள் சொல்வதை கவனியுங்கள்.
அவர்கள் சொல்வது இதுதான்: “பைபிளிலிருந்து திருத்தி முகமதுவால் எழுதப்பட்டது குரான்தான்” என்பார்கள். அப்படியிருக்க, பைபிள் எப்போது? எங்கே? திருத்தி எழுதப்பட்டது? அவர்கள் வாயே அவர்களை காட்டிக் கொடுப்பதை கவனியுங்கள். இதைக் குறித்து விளக்கமாக “இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி … பகுதி – 1” ல் விளக்கமாக எழுதியுள்ளேன். வாசித்தறியுங்கள். ( Link: https://nesarin.blogspot.in/2017/12/blog-post.html )
அவர்கள் சொல்வது இதுதான்: “பைபிளிலிருந்து திருத்தி முகமதுவால் எழுதப்பட்டது குரான்தான்” என்பார்கள். அப்படியிருக்க, பைபிள் எப்போது? எங்கே? திருத்தி எழுதப்பட்டது? அவர்கள் வாயே அவர்களை காட்டிக் கொடுப்பதை கவனியுங்கள். இதைக் குறித்து விளக்கமாக “இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி … பகுதி – 1” ல் விளக்கமாக எழுதியுள்ளேன். வாசித்தறியுங்கள். ( Link: https://nesarin.blogspot.in/2017/12/blog-post.html )
இருளில் இருப்போர் நமக்கு
முன் வைக்கும் இடறல்களில் மூன்றாவது:
உன்னதப்பாட்டு
புஸ்தகத்தை மாம்சீகக் கண்ணோட்டத்தில் விமர்சிப்பது. நாம் ஆவிக்குரியவர்கள்.
1கொரிந்தியர்:
2:6-15 – “தேறினவர்களுக்குள்ளே
ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய
இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன்
நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான
தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை;
அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன்
தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை,
காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன்
அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும்,
தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன்
மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும்
தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால்
எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே
பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த
ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே
சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை
ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள்
ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை
அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்…” என்று
வேதம் கூறுகிறது.
ஆகவே, நாம் ஆவிக்குரியவர்கள்.
ஆவிக்குரியவன்
எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். உன்னதப்பாட்டு புத்தகம் நமக்கு கூறுவது
என்ன? அது மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள உறவை சித்தரிக்கிறது. மணவாளன்
இயேசுவுக்கும் மணவாட்டி திருச்சபைக்கும் ஒப்பாக ஒப்பிடப்படுகிறது என்பதை
ஆவிக்குரியவர்களான நாம் அதை அறிவோம். முழுவதும் மாம்சீக கண்ணோட்டத்தில் காணும்
எவருக்கும் இது தவறானதாகவே காணப்படும்.
இருளில் இருப்போர்களின்
சந்தேகக் கணைகளுக்கும், கேள்விகளுக்கும் அளவே இருக்காது. அவை ஒவ்வொன்றிற்கும்
விளக்கம் தரவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. இம்மூன்று பகுதி கட்டுரைகளும் நமக்கு
வலியுறுத்தப்படும் செய்தியின் சாராம்சத்தை அறிந்து, உணர்ந்து, அதை அறியாத
விசுவாசிகளுக்கும், புரியாத பிள்ளைகளுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களது விசுவாச
பலவீனத்தை சரிப்படுத்தி, சத்தியத்தின்மேல் ஊன்றக்கட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
ஏனென்றால்,
நம்முடைய குழந்தைகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்று வருகிறார்கள். அவர்களின்
அறியாமையை இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பரிசுத்த வேதாகமத்தை அவமாக்கி,
பொய்யானதென்று தவறான தகவல்களை கூறி, கடவுளைப்பற்றி சந்தேகத்தை கிளப்பி விட்டு, பின்மாற்றமடையச்
செய்கிறார்கள். இந்த ஆபத்திலிருந்து கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் காத்துக்
கொள்ள வேண்டும். தவறினால், நம் பிள்ளைகள் கண்களிருந்தும் குருடர்களாக, ஆக்கினைக்கேதுவாக, போகக்கூடிய சூழல் ஏற்படும். எச்சரிக்கையாயிருங்கள். அநேக பள்ளி கல்லூரிகளில் கிறிஸ்தவ
பிள்ளைகளுக்கு எதிராக “லவ் ஜிகாத்” என்கிற பெயரில் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
கவனமாயிருங்கள். காத்துக் கொள்ளுங்கள்.
அன்பான
தேவஜனமே! ஆவிக்குரிய பெற்றோர்களே!
வாராம்
தவறாமல் ஒழுங்கும் கிரமுமாக சபை ஆராதனைக்குச் செல்லுங்கள். ஆவிக்குரிய காரியங்களில்
மற்றும் சபைக் காரியங்களில் ஆர்வமாக பங்குபெறுங்கள். அதைப் பார்க்கின்ற நம்பிள்ளைகளும்
அதில் அதிக கவனம் செலுத்தி தேவனுக்குப் பிரியமாக நடந்து கொள்வார்கள். ஆவிக்குரிய ஐக்கியத்தை
வாஞ்சியுங்கள். ஐக்கியத்தில் பங்குகொள்ள ஊக்கமளியுங்கள். வீடுகளில் விடுமுறைநாட்களில்
பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு பிடிக்கும் வகையில் தனித்தோ அல்லது குடும்ப ஜெபநேரங்களிலோ
தேவ ஆலோசனை கொடுங்கள்.
வாரம்
தவறாமல் சபையில் நடக்கும் வேதபாட வகுப்புகளில் நீங்களும் கலந்து கொண்டு பிள்ளைகளையும்
பங்குபெறச் செய்யுங்கள். அது அவர்களை சத்தியத்தில் ஊன்றக் கட்ட உதவி செய்யும். வேதபாட
வகுப்புகளில் குறிப்பேடு வைத்து முழுவதையும் எழுதி குறிப்பெடுக்கச் சொல்லுங்கள். சந்தேகம்
ஏற்படின் உடனே பிள்ளைகளுக்கு விளக்கமாக பொறுமையோடு சொல்லி தாருங்கள். உங்களுக்கே ஒருவேளை
தெரியாதிருந்தால் … தயக்கமின்றி, தாமதமின்றி போதகரோடு தொடர்பு கொண்டு சந்தேகத்திற்கான
தீர்வை உடனடியாக தெரிந் கொண்டு, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
வேதத்தை
வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். வேதத்தை தியானிக்க கற்றுக் கொடுங்கள். விடுமுறை நாட்களில்
இவ்வளவு அதிகாரங்கள் வாசித்தால் இந்த பரிசு உனக்குத் தருவேன் என கூறி, சிறுசிறு பரிசுகள்
வழங்கி ஊக்கப்படுத்துங்கள். அன்புடன் கண்டிப்பும் செலுத்துங்கள்.
கவனமாயிருங்கள். பிள்ளைகளை
ஜெபத்திலே கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுங்கள்.
பிள்ளைகளின்
தாலந்துகளை கண்டறிந்து, அவர்கள் தங்கள் தாலந்துகளை சபையில் பயன்படுத்த போதகரிடம் அனுமதி
கேட்டு செயல்பட செய்ய வாய்ப்பு ஏற்படுத்துங்கள். ஜெபத்தில் உருவாக்குங்கள்.
மாற்று
மார்க்கத்தாரோடு பள்ளி கல்லூரிகளில் பழகும்போது மிக கவனமாக இரு என்று கற்றுக் கொடுங்கள்.
வீடு வந்ததும் தினமும் நடப்பது, நடந்தது பற்றி விசாரியுங்கள். அனைவரையும் நேசிக்க வேண்டும்.
ஆனால், நம்மை யாரும் வஞ்சித்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.
நாம் தேவனுக்கு எவ்வளவு விசேஷமானவர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
தெய்வ
பயத்திலும், இரட்சிப்பிலும், விசுவாசத்திலும், கற்பிலும், பரிசுத்தத்திலும் தேவநாம
மகிமைக்காக வாழும் முறைகளை போதியுங்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும்
கிறிஸ்து இயேசுவுக்குள் காத்துக் கொள்வாராக. ஆமென்! அல்லேலூயா!