" நீ ஆயத்தப்பட்டு, உன்னுடனே கூடிய உன் எல்ல கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, நீ அவர்களுக்கு காவலாளனாயிரு (எசே 38 : 7)
காவல் துறைக்கான ஜெபக்குறிப்புகள்
1. காவல்துறையில் தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும்.
2. காவல்துறை குடும்பத்தினருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும்.
3. காவல்துறை குடும்பத்தினர் மனம்திரும்பி, இரட்சிக்கப்பட வேண்டும்.
4. காவல்துறை குடும்பத்தினர் பரிசுத்தமாக்கப்பட்டு தேவனுடைய வருகைக்கு ஆயத்தமாக்கப்பட வேண்டும்.
5. காவல்துறை குடும்பத்தினர் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.
காவல் துறை ஊழியத்தின் அவசியம்
சமுதாயத்தில் மக்களுக்கு சேவை செய்கிற முக்கியமான, மகத்துவமான பணி காவல்துறையின் பணி, மக்கள் சமாதானமாக, அமைதியாக, பாதுகாப்புடன், வாழ இரவும் பகலும் 24 மணி நேரமும் கண்விழிப்பு, வெயில், மழை, பசி, தாகம், விமர்சனங்கள், என்று சோர்ந்து போகாமல் மக்களுக்காக, அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், தாக்குதல்கள், ஆபத்துகள், என்றும் பாராமல் தன்னுயிரையும் கொடுக்க ஆயத்தமாக செயல்படுகிற காவல்துறையினரின் பணி அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களது பணி சிறக்க செவ்வையாய் செய்யப்பட இவர்களுக்காகவும் இவர்களது குடும்பத்தினர்களுக்காகவும், கர்த்தரும், இரட்சகரும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்திலே நாம் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கறையற்ற, ஒரு பாவமும் இல்லாத இயேசுவிடம் இவர்களுக்காக நாம் ஜெபிக்கும் பொழுது கறையற்ற ஒரு பரிசுத்தமான காவல்துறையாக தேவன் காவல்துறையினரை மாற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார். காவல்துறையினருக்காக பாரத்துடன் திறப்பின் வாசலிலே நின்று ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியமாகவும், தேவனுக்குப் பிரியமானதாகவும் இருக்கிறது.
இவர்களுக்காக ஜெபிக்கவும், தேவ ஊழியத்தை செய்யவும் தேவன் ஏற்படுத்தி தரும் ஊழியம் தான் "பரிசுத்த சேனை ஜெபஐக்கியம்". நெகேமியா இடிந்து போன எருசலேமை எடுத்து கட்டியது போல நாமும் இடிந்து போன காவல்துறையினரின் ஆவிக்குரிய வாழ்வை எடுத்து கட்ட வேண்டும் என தேவன் விரும்புகிறார். "எழுந்து கட்டுவோம் வாருங்கள்" (நெகேமியா 2:18) என்று சொல்லி அந்த நல்ல வேலைக்கு அனைவரும் கைகளை திடப்படுத்தினது போல, நாமும் இணைந்து ஆவிக்குரிய எருசலேமை காவல்துறையில் கட்டி எழுப்ப வேண்டும். உங்கள் கரங்களை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
1. காவல்துறை குடும்பத்தினருக்காக பாரத்தோடு ஜெபிக்கிற ஜெப ஊழியம்.
2. "எழுந்து கட்டுவோம் வாருங்கள்" புதிய ஜெபக்குழுக்களை காவல்துறையினருக்காக உருவாக்கும் பணி
3. தேவன் தந்த ஜெபக்குழுக்களை பலப்படுத்துகிற பணி
4. ஜெபகூடாரங்களை ஏற்படுத்தும் பணி
5. ஜெபகூட்டங்கள் நடத்தும் பணி (வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, வீட்டுஜெபக்கூட்டங்கள்)
6. காவல்துறையினருக்காக தேவஊழியர்கள் மூலமாக தேவன் கொடுத்த தேவசெய்திகளை கேஸ்ட் மூலமாக காவல்துறை குடும்பத்தினருக்கு வழுங்கும் "ஒளிநாடா(கேஸட்)" பணிகள்.
7. கடிதம், இ-மெயில் மூலமாக ஊழியப்பணிகள்.
8. காவல்துறையில் சாட்சியாக பணியாற்றியவர்கள் எழுதியுள்ள "புத்தகங்கள்" வழங்கும் பணிகள்.
9. காவல்துறை குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கும் "தேவ ஆலோசனை பணி"
10. அழைப்பு தரும் தேவ ஆலயங்களில் சாட்சி பகிர்தல், ஆராதனை மற்றும் தேவசெய்தி பகிர்தல்.
11. காவல்துறை குடியிருப்புகளில் கைப்பிரதி வழங்கும் பணி
12. நற்கிரியை பணிகள், எளியவர்களுக்கு உதவுதல்.
13. காவல்துறை குடும்பத்தினருக்கு இலவச திருமண தகவல் அளிக்கும் பணி.
1. வருடாந்திர சிறப்பு ஜெபக்கூடுகை
2. மாதந்திர ஜெபக்கூடுகை
3. வாராந்திர ஜெபக் கூடுகைகள்
4. வீட்டு ஜெபக் கூட்டங்கள்
5. வீடு சந்திப்பு ஜெபங்கள்
6. காவல்துறை குடும்ப பெண்கள் ஜெபக் கூடுகை
7. உபவாச ஜெபக் கூடுகை
8. வாலிபர்கள் (காவல்துறையினர் பிள்ளைகள்) ஜெபக் கூடுகை
9. சிறு பிள்ளைகள் ஜெபக் கூடுகை
10. ஜெபக்குழு ஊழியர்கள் ஜெபக் கூடுகை
11. ஆயத்த ஜெபக் கூடுகை
12. அனைத்து துறையினர் ஜெபக் கூடுகை
13. வியாதியஸ்தர், பிரச்சனைகள், உள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்லுதல், ஜெபித்தல்.
இப்படிப்பட்ட ஜெபக் கூடுகைகளை நடத்துவதின் மூலமாக "ஆசீர்வாதமான
காவல்துறையை" உருவாக்க முடியும்.
நன்றி: காவல்துறை ஜெப ஐக்கிய ஊழிய தரிசனம் http://www.policefamiliesforchrist.org/